பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 25, 2008

தாஜ்மகாலுக்குள் பூஜை

தாஜ் மஹால் காதலர்களை மட்டும் இல்லை, சிவசேனா தொண்டர்களையும் கவர்கிறது. நேற்று சில சிவசேனா தொண்டர்கள் தாஜ்மகாலுக்குள் அதிரடியாக புகுந்து பூஜை நடத்தியதாக தகவல் வெளியானதால் ஆக்ராவில் பரபரப்பு ஏற்பட்டது.

இவர்களும் தீவிரவாதிகள் தான்.

நேற்று மாலை 4-45 மணி அளவில் 4 பெண்கள் உள்பட 7 சிவசேனா தொண்டர்கள் தாஜ்மகாலுக்குள் சென்றனர். ஆக்ரா மாவட்ட சிவசேனா தலைவர் வினு லமானி தலைமையில் சென்ற இவர்கள் அங்கு பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை அவர்கள் மறைத்து உள்ளே கொண்டு சென்றதாகவும், அவற்றை வைத்து பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்கு நின்று இருந்த பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து சென்று 7 பேரையும் கைது செய்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுபற்றி வினு லமானி பின்னர் கூறுகையில், தாஜ்மகால் உள்ள இடத்தில் முன்பு சிவன் கோவில் இருந்ததாகவும், ஆடி மாதத்தையொட்டி அங்கு சென்று பூஜை நடத்த உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார். டிக்கெட் வாங்கி தாஜ்மகாலுக்குள் சென்றதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்த சம்பவத்தை உத்தரபிரதேச கூடுதல் டி.ஜி.பி. பிரிஜ் லால் (சட்டம்-ஒழுங்கு) மறுத்து உள்ளார். வினு லமானி தலைமையில் சிவசேனா தொண்டர்கள் 7 பேர் தாஜ்மகாலுக்குள் சென்றதாகவும், ஆனால் உள்ளே அவர்கள் பூஜை எதுவும் நடத்தவில்லை என்றும் சிறிது நேரத்தில் வெளியே வந்து விட்டதாகவும் கூறினார்.

தாஜ்மகாலுக்குள் சிவசேனா தொண்டர்கள் புகுந்து பூஜை நடத்தியதாக வெளியான தகவலால் ஆக்ராவில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தாஜ்மகாலுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

திங்கட்கிழமை இதே போல் பூஜை நடத்த முயன்ற முயற்சி முறியடிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு தேவை போலீஸ் ஸ்டேஷனில் உச்சி கால பூஜை

4 Comments:

Ram said...

http://www.stephen- knapp.com/ was_the_taj_ mahal_a_vedic_ temple.htm

A coincidence?

Anonymous said...

Blog update twitter ல போட்டு!
Twitter update Blogல போட்டு!!

கஷ்டம் டா!!!

Seetha said...

definitley these fruitloops need poojai at the police station

Anonymous said...

They should fight legally to get back the place and start worship there. That was once a Sivan Kovil. But, we should not start pujai there. We need to purify the place and then start worship. But first we should legally get possession of the taj-tejo mahalayam structure. Muslims should give up claiming such Hindu temples which were destroyed during the foreign occupations.Jai Hind!