பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 18, 2008

சோம்நாத் சட்டர்ஜிக்கு வைகோ கடிதம்

செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசனை எம்.பி. பதவியில்இருந்து நீக்க வேண்டும்;சபாநாயகருக்கு வைகோ கடிதம்

கடிதத்தில்...

ம.தி.மு.க., தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகும். அந்த கட்சிக்கு நான் (வைகோ) பொதுச் செயலாளராக உள்ளேன்.

செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி., ம.தி.மு.க.வுக்கு தான் பொதுச் செயலாளர் என்று தேர்தல் கமிஷனில் மனு செய்தார். தேர்தல் கமிஷன் விசாரித்து 30-5-08 ல் தீர்ப்பளித்தது. என் (வைகோ) தலைமையிலான கட்சி தான் உண்மையான ம.தி.மு.க. என்று உத்தரவிட்டது. தேர் தல் கமிஷனின் இந்த உத்த ரவு நகலை உங்கள் பார் வைக்கு இத்துடன் இணைத் துள்ளேன்.

இந்த நிலையில் பாராளு மன்றத்தில் வரும் 21,22-ந் தேதிகளில் நம்பிக்கை ஓட் டெடுப்பு நடக்கும் போது மத் திய அரசை எதிர்த்து ஓட்டுப் போட ம.தி.மு.க. முடிவு செய்துள்ளதை உங்கள் கவ னத்துக்கு கொண்டு வருகிறேன்.

ம.தி.மு.க. கட்சி எடுத்துள்ள இந்த முடிவின்படி ம.தி.மு.க. எம்.பி.க்கள் 4 பேரும் அரசை எதிர்த்து வாக்களிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதற் காக 3 வரி கொறடா உத்தரவை பிறப்பிக்க டாக் டர் சி.கிருஷ்ணனுக்கு நான் அதிகாரம் வழங்கி உள்ளேன். அதன்படி ம.தி.மு.க. எம்.பி.க்கள் எல். கணேசன், செஞ்சி ராமச் சந்திரன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எல். கணேசன், செஞ்சி ராமச் சந்திரன் இருவரும் மீறினால் அவர்களை தகுதி இழப்பு செய்து எம்.பி. பதவியை பறிக்க வேண்டும். இந்திய அரசியல் சட்டம் 10-வது பிரிவின் கீழ் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒரு எம்.பி., தானாக முன்வந்து கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தால், ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால், இந்திய அரசியல மைப்பு சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

ஆகையால் தேர்தல் கமிஷன் அளித்துள்ள தீர்ப்புப்படி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சியின் எல்லா முடிவுகளையும் எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது என்பதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

5 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

ஆக இப்ப வரைக்கும் செஞ்சி , எல்.ஜி ரெண்டு பேரும் மதிமுக தான் அப்படினு அர்த்தமாகுதே. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிரா வாக்களிக்கச் சொல்லியிருப்பதாகவும் அப்படி இல்லாம மாத்தி வாக்களிச்சா பதிவியை பறிங்கனும் பிராது கொடுத்திருக்காரே

சந்திரமௌளீஸ்வரன் said...

ஆக இப்ப வரைக்கும் செஞ்சி , எல்.ஜி ரெண்டு பேரும் மதிமுக தான் அப்படினு அர்த்தமாகுதே. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிரா வாக்களிக்கச் சொல்லியிருப்பதாகவும் அப்படி இல்லாம மாத்தி வாக்களிச்சா பதிவியை பறிங்கனும் பிராது கொடுத்திருக்காரே

கலைடாஸ்கோப் said...

இதெல்லாம் இருக்கட்டும்..!
ஆல் நியூ ஆனந்தவிகடன் (வாரா வாரம் இரண்டு புத்தகங்கள். விலை ரூ.15. ஸ்க்ராட்ச் கார்டு சுரண்டிக்கொடுத்தால் வாசனை சோப்பு இலவசம். ஏராளமான பரிசுகள்!) இன்னும் வாங்கவில்லையா, இட்லிவடையாரே?!

IdlyVadai said...

//இதெல்லாம் இருக்கட்டும்..!
ஆல் நியூ ஆனந்தவிகடன் (வாரா வாரம் இரண்டு புத்தகங்கள். விலை ரூ.15. ஸ்க்ராட்ச் கார்டு சுரண்டிக்கொடுத்தால் வாசனை சோப்பு இலவசம். ஏராளமான பரிசுகள்!) இன்னும் வாங்கவில்லையா, இட்லிவடையாரே?!//

வாங்கியாச்சு - பெரிய விகடனை பார்க்கணும், சின்ன விகடனை படிக்கணும்.

வெங்கட்ராமன் said...

பெரிய விகடனை பார்க்கணும், சின்ன விகடனை படிக்கணும்.

அப்ப விகடன்ல படிக்கிற விஷயத்த விட பாக்குற விஷயம் தான் அதிகமா இருக்குதா.

அப்பன்னா இன்னும் அஞ்சு வருஷத்துல படிக்கிற விஷயமே இருக்காதுன்னு நினைக்கிறேன்.