பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 30, 2008

விஜயகாந்த் ஸ்பெஷல்

விகடன், கல்கியில் வந்த விஜயகாந்த் பேட்டிகள்...

விகடன் பேட்டி
''தலைநகரம், கொலை நகரமாகிவிட்டது போல தொடர்ச்சியாகக் குற்றங்கள்... காவல் துறையின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா?''

''அட, போங்க சார்! இதே கலைஞர் முன்னாடியே சொன்ன மாதிரி காவல் துறையின் ஈரல் கெட்டுப்போய் ரொம்ப நாளாச்சு! இருக்கிற கொஞ்ச நல்ல ஆபீஸர்களையும் சுயமா இயங்கவிடாமத் திட்டமிட்டுத் தடுக்குது இந்த அரசு. பிடிக்காதவங்களை உளவு பாக்குறதுக்கு மட்டும்தான் காவல் துறையை கரெக்ட்டாப் பயன்படுத்துறார் கலைஞர். மீட்டிங் போட்டுப் பேசினா மட்டும் போதுமா? சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போனதுக்கும் பொறுப்பேத்துக்குங்க. இனிமே இப்படி நடக்காம இருக்க என்ன செய்யப்போறீங்கன்னு மக்களுக்குச் சொல்லுங்க. இப்போ அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு இன்ச்சிலும் ஊழல் நடக்குது. கலைஞர் எப்போ ஆட்சிக்கு வந்தாலும், சட்டம் ஒழுங்குக்கு கேடுதான். அது இப்போ இன்னும் மோசமாகிருச்சு. ஆனா இதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம விழாக்களுக்குப் போகவே கலைஞருக்கு நேரம் சரியா இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி '100-க்கு 100'னு பாட்டெல்லாம் பாடி இவங்களே இவங்க 'சாதனை'களைக் கொண்டாடினாங்க. ஆனா, இந்த 100/100 ஆட்சியில சட்டம்-ஒழுங்கு சைபராகிடுச்சே. நாளுக்கு நாள் நிர்வாகம் மோசமாகி, கட்சிக்குள்ளேயே கெட்ட பெயர் வாங்கின ஒரே ஆட்சி, உலகத்திலேயே இப்போ தி.மு.க. மட்டும்தான்!''

''சென்னையிலேயே இனி மின்வெட்டு உண்டுன்னு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்திருக்கிறாரே!''

''நல்ல கூத்து. அவர்தானே முன்னாடி எல்லாத்தையும் மறுத்தார். இப்போது அவர் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கார். கரன்ட் கட் பற்றி கேட்ட தன் மனைவியைக் காசிக்கு அனுப்பிவெச்சதாச் சொல்றார் அமைச்சர். அங்கே எல்லாம் பயங்கர மின்வெட்டாம். ஓஹோ... அப்படியே உங்கள் மனைவியை குஜராத் வழியா வரச் சொல்லியிருக்கலாமே. அங்கே மின்வெட்டே இல்லையே. பல முறை அமைச்சராக இருந்தவர் இப்படிக் கூச்சமே இல்லாமப் பேசலாமா? மக்கள் இருட்டில் தவிக்கவா இவரை அமைச்சராக்கி இருக்காங்க. நீதி, நேர்மை, குறைந்தபட்ச வேலைத்திறனை நாம் அமைச்சர்களிடம் எதிர்பார்ப்பது தவறா? இதைக் கேட்டா... பழி சொல்வது, கண்டபடி ஏசுவதுன்னு இதுதாங்க இந்த ஆட்சியாளர்களின் பண்பாடு... பக்குவம்... அரசியல் நாகரிகம்!''

''ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்காக நீங்கள் போராட்டம் நடத்தியதைக் கண்டித்து உங்களை பைத்தியக்காரன் என்று பேசியிருக்கிறார்களே!''

''1947-ல் கச்சத் தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோதே நமது உரிமைகள் எல்லாமே பறிபோய்விட்டன. மத்திய அரசிடம் தனக்கு வேண்டிய துறைகளை வாங்கும் அளவுக்குச் செல்வாக்குமிக்கவர்தானே கலைஞர். அப்படிப்பட்டவர்கள் கச்சத் தீவை மீட்கப் போராடிஇருக்கலாமே? அதை விட்டுவிட்டு இப்போது தி.மு.க-வே உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்துதானே!

என்னைப் பைத்தியக்காரன்னு சொல்றாங்க. பைத்தியக்காரர்களில் பல வகை உண்டு. பணப் பைத்தியம், பதவிப் பைத்தியம், செங்கோல் பைத்தியம்னு. இதெல்லாம் அவங்கதான். ஆனா, எனக்கு ஏழை மக்கள் மேலே பைத்தியம். உண்மை மேல், நியாயத்தின் மேல் பைத்தியம். யார், யார், எப்படின்னு மக்களுக்கு இப்போ தெளிவாத் தெரியும் சார். வோட்டு கேட்டுப் போவீங்கள்ல... அப்ப மக்கள் கேட்பாங்க சார்!

மத்திய அரசில் இவ்வளவு பலத்தை வெச்சுக்கிட்டு, இந்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை கலைஞர் ரத்து செய்யவெச்சா, அவரை நானும் சேர்ந்து கொண்டாடுவேன். நேபாளத்தில் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிற மாவோயிஸ்ட்டுகள் இந்தோ - நேபாள ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள முடியாதுன்னு சொன்னாங்களே. அது சரி, நாட்டுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள்தான் இதையெல்லாம் செய்வார்கள். இவங்களுக்குதான் அந்த நினைப்பே இல்லையே!

அவங்க குடும்பப் பிரச்னைகள் பற்றித்தான் அதிகம் செய்தி வருது. உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்குது, இன்னும் அவர்களுக்குள் என்னதான் நடக்கும்னு மர்மமா இருக்கு. இதோ இப்போகூட நானும் தயாநிதி மாறனின் பிரஸ்மீட் பார்த்தேன். வருத்தமாதான் பேசுறார். அது போகட்டும், அவங்க உள் விவகாரங்கள் நமக்குத் தேவை இல்லை. ஆனா, எதுவும் கண்ணுக்கு நல்லா இல்லை!''

கல்கி பேட்டி

ராமேஸ்வரத்தில் ஆளும் கட்சியினர் குறித்து நீங்கள் பேசியது பாிெய சர்ச்சை யாகிவிட்டதே?

“பத்திாிகையாளர்கள் எனக்கு நல்ல நண்பர்கள். இருந்தாலும், சில சமயங்களில் என் இமேஜைப் பாதிப்பதுபோல செய்தி கள் வருகின்றன. முன்பு ‘தன்னிலை மறந்த’ விஜயகாந்த் என்று எழுதினார்கள். பொறுத் துக்கொண்டேன். இப்போது நான் பேசாத தைப் பேசியதாகப் போடுகிறார்கள்.”

நீங்கள் பேசியதற்கு சி.டி. வீடியோ ஆதாரம் இருக்கிறதாமே...!

“என்னிடமும் சி.டி. இருக்கிறது. நீதி மன்றத்துக்கு வரட்டும்; நிரூபிக்கட்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் பேச்சு வழக்கு மாறுபடும். ராமேஸ்வரத் தில் பேசும்போது, ‘தி.மு.க.’ என்று குறிப் பிட்டேனா?”

உங்களைப் போல கருணாநிதியைப் புகழ்ந்தவருமில்லை; இகழ்ந்தவருமில்லை. ஏன் இந்தத் தடுமாற் றம்?

தமிழினக் காவலர் என்றுதான் பேசியிருப் பேன். காலம் செல்லச் செல்ல பல விஷயங் களில் நம் அனுபவம், பார்வை, படிப்புக்கேற்ப கருத்துகளை மாற்றிக் கொள்கிறோம். அரசிய லுக்கு வந்த பிறகு, கலை ஞரைப் பற்றிய என் பார்வை மாறிவிட்டது. தமிழகத்துக்கு எப்போ தெல்லாம் துரோகங்கள் நடந்திருக்கிறதோ அப்போதெல்லாம் கலைஞர்தான் ஆட்சியில் இருந்திருக்கிறார். 1998ல் ஆட்சியில் இருந் தார். அந்தச் சமயம் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுகிற வகையில், இரு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டுவிட்டன. ஆனால், கலைஞர் செய்யவில்லை. கர்நாடகா அப்போதே காவிாி நீரைக் குடிநீர் தேவைக் காக நீண்ட தூரம் எடுத்துச் சென்றுவிட்டது. அப்போது கோட்டை விட்டார் கலைஞர்.”

‘கச்சத் தீவைப் பற்றி விஜயகாந்துக்கு என்ன தாிெயும்’ என்கிறதே ஆளும் கட்சி?

“அவர்களைவிட எனக்கு அதிகமாகவே தாிெயும். மதுரையில் நான் இருந்தபோது, வருடத்துக்கு இரண்டு நாள் கச்சத்தீவில் நடக்கும் திருவிழாவுக்குப் பல வருடங்கள் சென்றிருக்கிறேன். என் வியாபார நண்பர் களுடனும் சென்றிருக்கிறேன். எம்.ஜி.ஆர். கச்சத் தீவைத் தாரை வார்த்தது குறித்தெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். கச்சத்தீவில் கால் வைத்தவன் நான்.”

நீங்கள் ஜெயலலிதா குறித்து மட்டும் விமர்சனத்தைக் கடுமையாக வைப்ப தில்லையே...!

“ ‘இந்த இரு கழகங்களுக்கும் வோட்டு போடாதீர்கள்’ என்றுதான் பேசுகிறேன். ஆட்சியில் இல்லாதவர்களைப் பற் றிப் பேசி என்ன பயன். இரு கழகங்களும் மக்களை நன்றாக ஏமாற்றி வருவதாக நான் சொல்லித்தான் வருகிறேன். தேர்தல் வரும்போது, விமர் சனம் இன்னமும் கடுமையாகும்.”

பாராளுமன்றத் தேர்தலில் என்ன பிரச்னைகளை மக்கள் முன் எடுத்துச் செல்வீர்கள்... கூட்டணி உண்டா?

“இவற்றை நான் முன்கூட்டியே சொல்லிவிட்டால், எதிாி கள் சுதாாித்து விட மாட்டார்களா? தேர்தல் வியூகத்தைப் பற்றிப் பேசமாட்டேன். நாளுக்கு நாள் மாற்றம் நடந்து வருகிறது. தேசிய மாநில அளவில் இப்பொழுது பிாிந்தவர்கள், எப்படி மோதிக்கொள்கிறார்கள் என்று பார்க்கிறார்கள். இதுதான் அரசியல். அப் படிப்பட்ட அரசியலுக்குள் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.”

எப்படிப்பட்டவர்களை வேட் பாளர்களாகத் தேர்ந்தெடுப்பீர் கள்? அவர்களுக்கான அளவு கோல் என்ன?

“சொல்ல வேண்டிய அவ சியம் இல்லை. இவர்கள் தான் வேட்பாளர்கள் என்று அறிவித்துவிட் டால், அவ்வளவுதான். ஆளும் கட்சி அவர்களை டார்கெட் பண்ணத் துவங்கி விடும். போலீஸ் சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கிறார் களோ இல்லையோ, இது போன்ற வேலைகளில் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். அதிகாரத்தைப் பயன் படுத்தி, என்னையே முடக்க பல யுக்திகளைப் போட்டுப் பார்க் கிறது ஆளும் கட்சி.”

தி.மு.க., அ.தி.மு.க. தவிர, மற்ற கட்சிகளில் எந்தக் கட்சியுடன் உங் களுக்குச் சுமுக உறவு இருக்கிறது?

“மற்ற கட்சிகளுடன் சுமுக உறவு இல்லை. இதற்குக் காரணம் அவர்களைப் பற்றிய என் கண் ணோட்டம். இந்தக் கட்சி கள் ஒவ்வொரு கால கட் டத்திலும், தி.மு.க. -அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந் தவை தானே. இரண்டு கழக ஆட்சியும் சாியில்லை என்று விமர்சிக்கும்போது, அவர்களுடன் இருந்த கட்சிகளும் சாி யில்லை என்பதுதானே பொருள். இந்த இரண்டு கழகங்களும் அடிக்கும் அரசியல் கொள்ளைக்கும், அதிகார துஷ்பிர யோகத் துக்கும் கூட்டணி கட்சிக்காரர்களும்தானே உடந்தை. எல்லாம் சுய லாபம்தான் நோக் கம். அதுதான் வெறுத்துப் போய் தனியாய் இருக்கிறேன்.”

பல மேடைகளில் பேசும்போது, ஊழல் பற்றி பேசுகிறீர் கள். ஆனால், ஆளும் கட்சி குறித்து, ஆதார பூர்வமாக ஒரு ஊழலைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லையே?

“எனக்கு நேரம் இல்லை. நோண்டினா பிடித்துவிடுவேன். அர சாங்க அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர், தாசில்தார் ஆஃபீஸ், பொது இடங் கள்... என்று எல்லா இடங் களிலும் ஆளும் கட்சிக் காரர்கள் ஊழல்தான் அல சப்படுகிறது. அதைத்தான் நான் பேசுகிறேன். ஒரு வேளை அடுத்த ஐந்து வருடம் ஆட்சிக்கு வர முடியாதென்று ‘அடிக்கிற கொள்ளை’யை ஓங்கி அடிக்கறாங்க போலிருக்கு. மொத்தமாக வசூல் செய்து போட்டுக்கறாங்க. 2000 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் 5000 பேரை எடுக் கறாங்க. எல்லாம் வசூல் வேட்டைக்குதான்.

மக்களுக்கு நல்லது செய்யணுமே என்ற எண்ணம் கிடையாது. ‘விருத்தாசலத்தில், மருத்துவமனை கட்டுவதற்கு நிலம் கொடுங்கள்’ என்று இரண்டு வருடமாக போராடிக்கொண்டிருக்கிறேன். ஒன்றும் நகரக் காணும்.”

அஅரசு கேபிள் கார்ப்பரேஷன் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

“உங்க முந்தின கேள்விக்கு இந்தக் கேள்வியே நல்ல பதில். இந்த
கேபிள் கார்ப்பரேஷன், ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கப்
போகிறது பாருங்கள்.”

பொன்முடி சொன்ன குற்றச்சாட்டு களுக்கு உங்கள் பதில் வலுவாக
இல்லையே!


“சொந்த சொத்துக் களுக்கும் உறவினர் சொத் துக்களுக்கும் வித்தியாசம் தாிெயாதவ ரெல்லாம் அமைச்சராக இருக்கிறார் கள். என் கல்லூரி அலு வலகமும், என் சகலை நடத்தும் மருத்துவக் கல் லூாி அலுவலகமும், ஒரே கட்டடத்தில் இருந்தால், அதுவும் எனக்குச் சொந்த மாகிவிடுமா? சகலை குடும்பம், ஏற்கெனவே நல்ல வசதியான குடும் பம்; பரம்பரை பணக்காரர். பொன் முடிக்கு என்ன வருமானம்? அவரது மனைவி பெயாில் ஏகப் பட்ட சொத்து இருக் கிறதே! பொன்முடியும் கல்லூாி கட்டுகிறார். இதற்கென்ன சொல்கிறீர்கள்...?”

0 Comments: