பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 11, 2008

நாகரிகமான பேச்சு சில சாம்பிள்கள்

கேள்வி:- "குரு எந்த வகையில் நாட்டின் பாதுகாப் புக்கு தீங்கு விளைவித்துள்ளார்? அவர் எந்த வழிகளில் ஊறு விளைவித்தார்'' என்று பா.ம.க. தலைமை கேட் கிறதே?

பதில்:- பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்தக்கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனைப்படிக்கும் பொது மக்களுக்கும், அவருக்கும் நினைவூட்டுகிற வகையில் குரு பேசிய பேச்சின் சில முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே மீண்டும் ஒருமுறை தெரிவிக்கின்றேன். இதைப்படித்து பார்த்து விட்டு, குரு மீதான நடவடிக்கை சரியா? தவறா என்பதை நடுநிலை யாளர் தெரிந்து கொள்ளட்டும். ( முழு கேள்வி பதில் அறிக்கை இங்கே )


கேள்வி: எது நாகரிகமான பேச்சு ?
பதில்: கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே...


சில சாம்பிள்கள்...

* வரவேற்றுப் பேசிய பொன்முடி, "திராவிட இயக்கத்தின் பரிணாம
வளர்ச்சி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு, மீண்டும் சனாதனத்தை-உயர்
ஜாதி ஆதிக்கத்தை-நிலை நாட்டிட ஜெயலலிதா துடிக்கிறார்" என்று
குறிப்பிட்டதோடு, சங்கர மடத்தில் ஜெயலலிதாவுக்கு மட்டும் நாற்காலி
தந்ததையும் விமர்சித்தார். பொன்முடி பேச்சில் மட்டுமில்லாமல், வேறு
பலரின் பேச்சிலும் "வர்ணாசிரம எதிரிப்பு " என்கிற பெயரோடு பிராமண
எதிர்ப்பு கடுமையாகக் காணப்பட்டது.

* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை
தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.

* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை
படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே "தலைவரையும்
அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்
காட்டினார்" என்றும் குறிப்பிட்டார்.

* கோவை மணியன், " தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை ஏற்பட கேரளத்து
ஐயபப சாமிதான் காரணம். தமிழகத்திலிருந்து 5 லட்சம் ஐயப்ப பக்தர்கள்
தலா 4 கிலோ அரிசியோடு சபரிமலை போகிறார்கள். ஆக, வருடத்திற்கு
20 லட்சம் கிலோ அரிசி கேரளாவிற்குப் போய்விடுகிறது. அடுத்த முறை
முதல்வரானதும் தலைவர் இதைத் தடைசெய்யவேண்டும்" என்றார்.


* துரைமுருகன் ரேசன் கார்டு, அரசு ஊழியர் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு
"இது குரங்கு சேஷ்டை, பைத்தியக்கார அறிவிப்பு" என்று விமர்சித்தார். மேலும்
"சூத்திர ஜாதியில் பிறந்ததால் மாயாவதி வழக்கை 5 மாதத்தில் முடிக்க நீதிமன்றம்
உத்தரவிடுகிறது. ஆனால் இது "அவாளு"க்கு மட்டும் பொருந்தாது போலும்.
இமயம் முதல் குமரி வரைக்கும் இந்தப் பூணூல் தொடர்பு மிக அடர்த்தியாக
உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

* வெற்றி கொண்டான், " இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்
பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்... அம்மா அப்பா
உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்
கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா "
என்றவர், " அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..
பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த
ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.
அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!" என்று குறிப்பிட்டார்.

* முக ஸ்டாலின் துவக்கத்தில் நீதிக்கட்சிக்கும் முந்தைய காலம் தொட்டு
கழக வரலாற்றை விவரித்து, தொண்டர்களைச் சலிப்படைய வைத்த
போதிலும், போகப் போக நடப்பு அரசியலின் விறுவிறுப்பைக் கூட்டிக்
கொண்டார். மிகக்கோர்வையாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்த
பேச்சின் இறுதியில், "நான் உங்களுக்குக் கட்டளையிடப் போவதில்லை;
உத்தரவிடப்போவதில்லை. உங்களோடு இணைந்து போராட்டக் களத்திற்கு
வருகிறேன்" என்று முடித்த போது, பெரும் ஆரவாரத்தோடு கைதட்டியது
தொண்டர் கூட்டம்.

* கருப்பசாமி பாண்டியன், "பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை
தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை
நடத்தினார். இறுதியாக, "அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை
வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்
சுபாவம்" என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.

* ஆலடி அருணா "முந்நூறு எம்பிக்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தும்,
வைகோவைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வரவில்லை. ஆனால், ஜெயலலிதா மீது
16 வழக்குகள் அமலாக்கப் பிரிவில் பதிவான நிலையிலேயே கிடக்கின்றன.
இதற்குக் காரணம் தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பதா,
பிரிட்டிஷ் இராஜ்யம் போய் பிராமின் இராஜ்யம் வந்துவிட்டது என்பதா?"
என்றார்.

* பரிதி இளம்வழுதி, " கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்
பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு
முன், குண்டம்மாவிற்குப் பின்!" என்று விளக்கம் அளித்தார்.

* அன்பழகன், "வயதில் என்னைவிட இளையவரான கலைஞர், தனது
வயதை விட முதுமையாகத் தோற்றமளித்தாலும், மனதளவில் அவர்
இன்னமும் ஸ்டாலினுடன் போட்டி போடத் தயாராயிருக்கிறார்.
பிராமணரிடத்தில் பகையிருக்கத் தேவையில்லை. அதற்காக
பிராமணீயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஐயரும் அவரவர்
கொள்கையைப் பின்பற்ற உரிமையுண்டு. துக்ளக்காகவும்
இருக்கலாம். அது அவரவர் உரிமை " என்றார்.

* சரத்குமார், "இந்திராகாந்தியின் அடக்குமுறையையே சந்தித்தவர்
கலைஞர். இந்திரா காந்தியின் கால் செருப்பு வாரிலுள்ள தூசுக்குக்
கூட சமமாகாதவர் ஜெயலலிதா" என்று சாடினார்.

* நெப்போலியன், "சமத்துவபுரம் வேண்டுமா, சசிகலா வேண்டுமா;
உழவர் சந்தை வேண்டுமா, ஊழல் மந்தை வேண்டுமா" என்று
வரிசையாக ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பட்டியலிட...
பலத்த கரகோஷம் கிடைத்தது.

* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு
"ஆண்டியும் போண்டியும்" என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.
இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்
புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்
சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்
தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.

உதாரணத்திற்குச் சில வசனங்கள்...

** "ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.
என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!"

** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது
மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: " அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா
அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி
பதவியை விட்டு எடுத்துடுவாங்க"

** "ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?"

"யாரு? அந்த...... குச்சியிலே கோவணம் கட்டியவனா?"

** "நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க
என்ன சொன்னாலும் நடக்கும்... அவங்களைத் தள்ளிக்கிட்டு
வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை
வெச்சுச் செய்யுங்க.."

(சுசி என்ற பெயருடைய அந்தச் 'சின்னம்மா' வருகிறார்)

சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: "இந்த மாதிரி ஒரு
ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை."

சின்னம்மா (சுசி) கூறுவது:

"...கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த
அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே"

** ஒருவர்; " என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்
பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?"

மற்றொருவர்: " எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!"

** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)
"உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்"

ஆண்டி" உம்..

போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே
வைக்கணும்

** ஆண்டி : "லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு
குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது... கும்பகோணம்
மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச
மாதிரி இருந்தது"

** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)

சாமியாடுபவர்: "எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே
வெச்சியாடா? "

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா... புடுங்குறேன்
புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா.....
.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே... ஊத்தினியாடா?

சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..

எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:

" எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்
கலைச்சிடுவாங்க"

( நன்றி: துக்ளக் 1.10.03 )

9 Comments:

ப்ரியா said...

இட்லி வடை,

கடந்த ஒரு வருடமா உங்க பதிவு தொடர்ந்து படிக்கிறேன்.
Silent ஆ...
அப்பப்போ அனானி யா கமெண்ட்ஸ் கூட போட்ருக்கேன்.(என்ன கமெண்ட்ஸ் னு, சொல்ல மாட்டேன்)

கலக்குறீங்க.

உங்க favourite விஜயகாந்தோட ரமணா ACF மாதிரி, முகம் காட்டாமல் பிண்றீங்க....

என்னைக்காச்சும் மாட்டுனீங்க..........பசங்களா....உங்களுக்கு அன்னைக்கு சங்கு தான்.

இந்திய குடிமகன் said...

உங்கள் வலைப்பூ மிகவும் வித்தியாசமாக உள்ளது.

அவனும் அவளும் said...

நான் கடந்த 2 வருடங்காலக அனானியாகவும், கடந்த சில தினங்களாக இந்த பெயரிலும் பின்னூட்டம் அளித்து வருகிறேன்.

முதல்முறையாக எனது பின்னூட்டத்தை தாங்கள் இன்று பிரசுரிக்கவில்லை.

ஏன் ?

Seetha said...

இட்லிவடை, எனக்கு அதிமுக, திமுக எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..ஆனால் ஒரு பெண் என்ற முறையில் என்னால் இந்தப்பதிவைப்படிக்க முடிஅயவில்லை..சில பகுதிகள் மிகவும் கேவலமாக உள்ளது..என்ன செய்வது.இதையும் ஞாயப்படுத்தவௌம் மக்கள் உள்ளார்கள்..ஜெயலலித திரு கருணாதினியை கேவலமாக விமர்சித்தால அதுவும் தகாததுதான்..

Anonymous said...

one of the question answered by cho:

கே : "தமிழர்களின் பெருமையை இழக்கக் காரணமானவர்களை அடையாளம் காண வேண்டும்' – என்கிறாரே கருணாநிதி?

ப : நாடு விடுதலை பெற்றால் கூட தமிழகம் பிரிட்டிஷாராலேயே ஆளப்பட வேண்டும் என்று கோரப்பட்டதும்; கம்பராமாயணம், திருக்குறள் போன்றவை கேவலமாக இகழப்பட்டதும்; ஊழல், ஒரு வாழ்க்கை முறையாகியதும்; மேடைப் பேச்சில் அநாகரிகமும், அசிங்கமும் பெருமளவு தலைதூக்கியதும்; ஜாதித் துவேஷம் பரவியதும்; ஒரு கட்சித் தலைவர் நினைத்தால் தன் குடும்பத்தில் பலரை எந்தவித நியாயமான காரணமுமின்றி, பெரிய பதவிகளை வகிக்கச் செய்ய முடியும் என்ற நிலை தோன்றியதும்; குடும்பச் சண்டைகள் அரசு பிரச்சனைகளாக மாறியதும்; தெய்வ நம்பிக்கை இகழப்பட்டதும்; பெருவாரியான ஹிந்துக்களின் மனம் புண்படப் பேசுவது பகுத்தறிவு என்ற நிலை தோன்றியதும்; அரசியலில் புகுந்தால், ஆண்டியும் தனவான் ஆகலாம் என்ற வழிமுறை வந்ததும்... இன்னும் இதுபோன்ற பல சிறப்புகள் ஏற்பட்டதும்தான், தமிழர்களின் பெருமையை குலைக்கச் செய்த விஷயங்கள். இவற்றிற்கு காரணமானவர்கள் யார் என்று தேடி முதல்வர் அலைய வேண்டியதில்லை. கழக சரித்திரத்தைப் பார்த்தால் போதும்; அடையாளம் தெரியும்.

Anonymous said...

i think this one already pointed in this blog:

கே : "ராமதாஸ் ஒரு மோசடித் தலைவர்' – என்றும்; "இவரை அரசியல் தலைவராக, யாரும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' – என்றும் தி.மு.க.வின் வெற்றிகொண்டான் விமர்சித்துள்ளது பற்றி?

ப : இது உண்மையில் கலைஞரின் விமர்சனம் என்று, ராமதாஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். அதற்கு அன்பழகன், "தி.மு.க. தலைவர் என்றுமே தரம் தாழ்ந்த விமர்சனம் செய்ததில்லை' என்று பதில் அளித்திருக்கிறார். இந்த பதில் சிரிப்புக்குரியது. கலைஞர் சமீப காலத்தில், வைகோ பற்றியும், ஜெயலலிதா பற்றியும் செய்துள்ள விமர்சனங்கள் பல, தரம் தாழ்ந்தவையே எனும்போது, அன்பழகனின் சர்ட்டிஃபிகேட், போலி சர்ட்டிஃபிகேட் ஆகிறது.

உதாரணத்துக்கு, சன் டி.வி.யின் வருமான கணக்கு பற்றி ஜெயலலிதா கேட்டதற்கு, முதலமைச்சர் கருணாநிதி அளித்த "பண்பான' பதில் இது :

""...கருணாநிதி தன் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார் என்று கூறுகிறார்கள். குடும்பம் இருக்கிறது. கட்சி நடத்துகிறேன்.... ஆண்மை இருக்கிறது. மக்கள் இருக்கிறார்கள். இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?

""...கருணாநிதி கணக்கைக் காட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் கஜானாவை கொள்ளையடித்தவர் இன்று கேட்கிறார்... எந்த கணக்கைக் காட்டுவது? வயது கணக்கை காட்டுவதா? பிள்ளைகள் கணக்கை காட்டுவதா....? நீ உன் கணக்கைக் காட்டு பார்க்கலாம்.

""...என் கணக்கு வருமானவரி அலுவலகத்தில் இருக்கிறது. போய் பார்த்துக் கொள். பெட்ரோல் செலவுக்கு வேண்டுமானால் நான் பணம் தருகிறேன். வீட்டுக்கு வந்து கணக்குக் காட்ட வேண்டுமா? வந்தால் என்ன ஆவது? நான் என்னென்ன கணக்கு கேட்பேன் தெரியுமா?''

– (தினகரன் : 28.3.2007)

We The People said...

ஒரு முறை அறிக்கை அம்மா ஒரு அறிக்கை விட்டாங்க, அதில் தைரியம் இருந்தா ஒரே மேடையில் வந்து பேச தயாரா என்று! அதுக்கு நம்ம முதல்வர் சூப்பர் பதில் சொன்னாரு! அதுவும் நல்ல நாகரீக பதில் தானே அதை ஏன் விட்டுவிட்டீங்க??

அவர் பதில:

"அந்த அம்மா என்னை கூப்பிட்டு இருக்கு, இப்ப வயசாயிடுச்சு, இல்லானா கூட யோசிக்கலாம்" அதை கேட்டு பத்திரிக்கையாளர்கள் சிரிக்கறாங்க!!! ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கல... நல்ல நாகரீகம் தான்! வேற என்ன சொல்ல...

அதனால், இங்கே யாருக்கும் யாரையும் கேவலமா பேசராங்க என்று சொல்லும் தகுதி இல்லை!!

Anonymous said...

idly vadai,
I have been reading your blog for a while. I hope lot of people are visiting your blog everyday.So,I would like to suggest you to avoid posting such dirty comments and statements from the so called "politicians". No "political" party in TN has rights to call other's comments as indecent and disrespectful. I hope everyone knows this.So, You don't have to pick dirty comments and dialogues from the so called "play" staged by the so called party members and post it in your blog to prove their quality. Please try to avoid comments that are offensive.

நாரத முனி said...

இட்லிவடை கண்ணு , பாத்தும்மா, குரு கூட ஒக்காசுகரதுக்கு ஆளில்லாம போர் அடிக்குதாம். உம்மையும் உம்ம வலைபூல பின்னுட்டம் எழுதறதுனால எம்மையும் சேர்த்து உள்ள தள்ளிட போறார்.

உள்ள ஒக்காந்து " எருதுக்கு விருது கிடைக்குமா இல்லை சர்ப்பம் தான் கர்ப்பம் தரிக்குமா சந்தர்பம் தான் இடம் கொடுக்குமான்னு..." எதாவது பொலம்ப விட்ராதீங்க