பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 08, 2008

சனியன் விட்டது

ஏழரை நாட்டு சனியன் முடிவடைய 7 வருஷம் என்று கணக்கு ஆனால் காங்கிரஸுக்கு 4 வருஷம் சில மாதங்கள்...

அமெரிக்காவுட னான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க 7-ந் தேதி வரை கெடு விதித்து இடது சாரிகள் அறிவித் திருந்தனர்.

இதையடுத்து மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி, இடது சாரி கட்சித் தலை வர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

காங்கிரஸ்-இடது சாரிகள் உயர்நிலைக் கூட்டத்தை 10-ந் தேதி கூட்டலாம். அன்று அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கலாம் என்று அந்த கடிதத்தில் பிரணாப்முகர்ஜி குறிப்பிட்டிருந்தார். இதனால் இடது சாரிகள் தங்கள் முடிவை சற்று தள்ளிப் போட வேண்டிய நிலை உரு வாகனது.

இதற்கிடையே நேற்று ஜப்பான் புறப்பட்டு சென்ற பிரதமர் மன்மோகன்சிங் விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும் போது, "அமெரிக்காவுடனானஅணு சக்தி ஒப்பந்தம் நிறை வேற் றப்படும்'' என்று திட்டவட்ட மாக கூறினார். இந்த பிரச்சினையில் இடது சாரி கட்சிகளின் ஆதரவு வாபஸ் ஆனாலும் கவலை இல்லை என்றும் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார் என்றும் கூறினார்.

பிரதமர் மன்மோகன்சிங் கின் இந்த உறுதியான பேச்சு இடது சாரிகட்சித் தலை வர்களிடம் கோபத்தை ஏற் படுத்தியது. அணுசக்தி ஒப் பந்தத்தை நிறைவேற்று வோம் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்து விட்ட பிறகு 10-ந் தேதி ஏன் உயர் நிலைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அது அர்த்தம் இல்லாத கூட்டம் என்று இடது சாரி கட்சி தலைவர்கள் அறிவித்தனர்.

மேலும் 10-ந் தேதி வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே முடிவு எடுக்க இடது சாரி கட்சி தலை வர்கள் தீர்மானித்தனர். அதன்படி இடது சாரிகட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று (செவ்வாய்) கூடி விவாதிக்கிறார்கள்.

இடது சாரி கட்சித் தலைவர் கள் கூட்டம் முதலில் மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்தது. திடீரென அது பகல் 11 மணிக்கு மாற்றப் பட்டது. முக்கிய முடிவு எடுக்கவே இந்த நேர மாற் றம் செய்யப்பட்டதாக தெரி கிறது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

நாளை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் கடிதத்தை அளிக்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாளை நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து கடிதம் கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு இடதுசாரி கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆதரவை விலக்கிக் கொள்ளும் தங்களது முடிவு குறித்து கடிதம் மூலம் பிரணாப் முகர்ஜிக்கு தெரிவிக்கப் பட்டிருப்பதாகவும் பிரகாஷ் கரத் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்று இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், நாளை மறுநாள் கூட்டப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி இடதுசாரிகள் ஒருங் கிணைப்புக்குழு கூட்டம் அர்த்த மற்றதாகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த கூட்டத்தின் மூலம் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்த முயற்சி மேற்கொண்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்படும் என்று ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், தற்போது சர்வதேச அணுசக்தி முகமையை விரைவில் மத்திய அரசு அணுகும் என்று பிரதமரே அறிவித்துள்ள நிலையில், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான தருணம் வந்து விட்டது என்று கரத் குறிப்பிட்டார்.

சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்திய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட இருக்கும் உடன்பாட்டின் வரைவு நகலை இடதுசாரி கட்சிகள் பார்வையிட கோரிக்கை விடுத்தன என்றும், ஆனால் தங்களது கோரிக்கையை அரசு மறுத்து விட்டது என்றும் பிரகாஷ் கரத் தெரிவித்தார்.

1 Comment:

Anonymous said...

வாபஸ் வாங்கியாச்சு. நீங்க அப்டேட் பண்ணிக்கங்க.