பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 23, 2008

ராமர் பாலத்தை ராமரே சிதறடித்துவிட்டார் !

சேது சமுத்திரத் திட்டத்துக்காக எந்தப் பாலத்தையும் (ராமர் பாலம்) நாங்கள் இடிக்கவில்லை. அப்படி எந்தப் பாலமும் அங்கில்லை. அந்தப் பாலத்தை ராமரே தனது அம்பால் சிதறடித்துவிட்டதாக கம்ப ராமாயணம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. இதனால் எந்தப் பாலத்தையும் உடைக்க வேண்டிய அவசியமே இல்லை என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராமர் பாலத்தை சேதப்படுத்தக் கூடாது என்று கூறி பாஜக, இந்து அமைப்புகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையடுத்து அந்தப் பாலத்தை இடிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் முடங்கின.

மேலும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற 8 மாற்றுப் பாதைகள் இருந்தாலும் ராமர் பாலத்தை இடிப்பதிலேயே அரசு குறியாக உள்ளது. இதனால் அந்தப் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி இந்து அமைப்புகள் சார்பில் மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில்,

ராவணனிடம் இருந்து தனது மனைவி சீதையை மீட்க இலங்கைக்கு செல்வதற்காக, வானர சேனைகள் உதவியுடன் ராமர் பாலத்தை கட்டினார் ராமர் என்பது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையாகும். எனவே, ராமர் பாலத்தை காக்க அதை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தன.

மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நரிமன் வாதாடினார்.

அபபோது பேசிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். மத நம்பிக்கையும் முக்கியம், இயற்கையும் (biosphere) முக்கியம். இயற்கைக்கு கொஞ்சம் சேதம் ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை, நம்பிக்கைகள் புண்படும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்றனர்.

நீதிபதி ரவீந்திரன் கூறுகையில், இந்த விஷயத்தில் பிரச்சனையே இல்லை. அதை அரசே தேவையில்லாமல் கிளப்பக் கூடாது. வேறு பாதையே இல்லை என்றால் பரவாயில்லை. மாற்றுப் பாதைகளும் வழிகளும் இருக்கையில் ராமர் பாலத்தை சேதப்படுத்தித்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன் என்றார்.

இதற்கு பதிலளித்த நரிமன், அந்தப் பாலத்துக்கு யாரும் போய் வழிபாடு நடத்துவதில்லை. அது இப்போது வழிபாட்டுத் தலமாகவும் இல்லை. ஆனாலும் நீதிமன்றத்தின் யோசனையை ஏற்கிறேன். இதை நிச்சயம் மத்திய அரசிடம் எடுத்துரைப்பேன் என்றார்.

இதையடு்த்துப் பேசிய நீதிபதிகள், மத நம்பிக்கைகளையும் மதித்து பாதையை கொஞ்சம் மாற்றினால் நல்லது. ஆனால், இந்த பாதை மாற்றம் தொழில்நுட்பரீதியாக, அறிவியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, குறிப்பாக, அரசியல்ரீதியாக சாத்தியமா என்பதை அரசு ஆராய வேண்டும் என்றனர்.

'பாலத்தை ராமரே சிதறடித்துவிட்டார்':

அதற்குப் பதிலளித்த நாரிமன், சேது சமுத்திரத் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக எந்தப் பாலத்தையும் (ராமர் பாலம்) நாங்கள் இடிக்கவில்லை. அப்படி எந்தப் பாலமும் அங்கில்லை.

அந்தப் பாலத்தை ராமரே தனது அம்பால் சிதறடித்துவிட்டதாக கம்ப ராமாயணம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வருவதற்காக போடப்பட்ட பாலத்தை, இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய பின்னர் ராமர் இடித்து விட்டதாக கம்ப ராமாயாணம் தெரிவிக்கிறது.

எனவே எந்தப் பாலத்தையும் இடிக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம் எந்தப் பாலமும் அங்கு இல்லை.

ராமரால் சிதறடிக்கப்பட்ட பாலத்தை நிரூபிக்க தொல்பொருள் துறைக்கு நீண்ட அவகாசம் தேவைப்படும்.

இந்த அரசு நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை கடல் வழியே இணைக்க ஒரு கால்வாயை அமைக்கிறது. இதன் மூலம் கப்பல்களுக்கு 424 கடல் மைல் தூரமும் 30 மணி நேரமும் (இலங்கையை சுற்றி வர ஆகும் தூரம்-நேரம்) மிச்சமாகும்.

இத் திட்டத்தால் தமிழகமும் நாடும் பெரும் வளம் பெரும் என்று நாரிமன் தெரிவித்தார்.

11 Comments:

Narayan said...

I for one don't believe in such fictious epics despite being a religious person. But why the heck we should demolish a belief billions of people believe in, especially when there are other options to do it. Just the handiwork of manja thundu to demolish every inch of what is left of India and its Dharma.

Just imagine tomorrow Centre says we will implement this faster under a different Shipping minister. Manja thundu will threaten withdrawal immediately. After all he is yet to receive the final payment from the Japanese lenders for this mega-size Veeranam project.

Anonymous said...

வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும், ராமர் தான் கட்டிய அணையை தானே அழித்துவிட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக,
இலங்கையிலிருந்து விபீஷணன் அளித்த புஷ்பக விமானத்தில் திரும்புகையில், வானில் பறந்தவாறே, பூமியில் தாங்கள் வசித்த பஞ்சவடி, பரத்வாஜரை சந்தித்த

இடம்... போன்ற பலவற்றை ராமர் ஸீதைக்குச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது, தான் (வானரர்கள் உதவியுடன்) கட்டிய அணையைச் சுட்டிக்காட்டி, "அதோ!

அதுதான் நான் கட்டிய அணை! உனக்காக, ஸமுத்திரத்தின் மீது நான் நிர்மாணித்தது இது' – என்று கூறுகிறார்.

அதாவது, ராமர் அயோத்தி திரும்பிய போதும், அந்த அணை அப்படியேதான் இருந்தது. அவராலோ, வேறு யாராலோ அழிக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல. "இந்த மாபெரும் கடலின் கரையில்தான், அணை கட்டுவதற்கு முன் மஹாதேவன் எனக்கு அருள்புரிந்தான். இது "ஸேதுபந்தம்' என்று பெயர்

பெற்று, மூவுலகிலும் வணங்கப்படும். இந்த இடம் புனிதமானதாகவும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் கருதப்படும்' – என்று ராமர், ஸீதையிடம் சொன்னார்

நாரத முனி said...

அத விடுங்கோ சார், நேத்திக்கி ஜெயா டிவில கருணாநிதி, பெருமாள் பட இசை வெளியிட்டு விழால செத்த ஆபாசத்திற்கு ஆதரவா என்னமோ பேசினத காமிச்சா, என்னனு புரியல, உம்ம பாணில அத பப்ளிஷ் பன்னுவேள்னு பாத்தேன், ஒன்னும் காணுமே??

IdlyVadai said...

//அத விடுங்கோ சார், நேத்திக்கி ஜெயா டிவில கருணாநிதி, பெருமாள் பட இசை வெளியிட்டு விழால செத்த ஆபாசத்திற்கு ஆதரவா என்னமோ பேசினத காமிச்சா, என்னனு புரியல, உம்ம பாணில அத பப்ளிஷ் பன்னுவேள்னு பாத்தேன், ஒன்னும் காணுமே??//

பேரனை வாழ்த்துவது ஆபத்தானது என்று பேசினார் என்று தெரியும். இப்ப எல்லாம் சன் டிவி தான் பார்க்கிறேன். ஜெயா டிவி என்று ஒன்று இருப்பதே நினைவில்லை :-)

krubha said...

என்று கடல் கடைந்தது?எவ்வுலகம் நீரேற்றது?
ஒன்றும் அதனை உனரேன் நான் அன்று அது
அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இது நீ
படைத்திடந்து உண்டுமிழ்ந்த பார்.

பொய்கையாழ்வார்.


ஆருயிரேயோ! அகலிடம் முழுதும்
படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேரியரேயோ! பெரிய நீர் படைத்து அங்கு
உறைந்துஅது கடைந்துஅடைத்து உடைத்த
சீரியரேயோ! மனிசர்க்குத் தேவர்
போலத்தே வர்குந்தே வாவோ!
ஒருயி ரேயோ உலகங்கட்குஎல்லாம்!
உன்னை நான் எங்கு வந்து உறுகோ!


நம்மாழ்வார்.

Anonymous said...

// எனது நீண்டகால அரசியல் அறிவை எனது வீட்டில் இருந்தவர்களே சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதில் வடக்கே டெல்லியில் உள்ள அரசியல் தலைவர் பயன்படுத்திகொள்ள தவறிவிட்டார்கள் என்று கூறுவதில் என்ன இருக்கிறது?. //

karuna's interview in Delhi, yesterday.

Bleachingpowder said...

சீதாவை நிலையை காணச்சென்ற அனுமான் ஆகாய மார்க்கமாக இலங்கை சென்றார், மற்றொரு சம்பவத்தில் சஞ்சிவி மலையை வேறு தூக்கி கொண்டு பறந்தார் என்று கதைகளில் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் ராமர் ஏன் கடலில் பாலம் கட்டி இலங்கை சென்றார், அவரும் ஆகாய மார்க்கமாகவே சென்றிருக்கலாமே.

Pls take my comments lightly as I am not here to hurt anyone's sentiments.

சும்மா தோனுச்சு கேட்டேன் அவ்வளவுதான்.

Anonymous said...

இட்லிவடை விசிறியன்..

1) சீதையின் நிலையை காணச் செல்லும்போது பாலம் கட்டவில்லை
2) சஞ்சீவி மலையை தூக்கி போனது லக்‌ஷமணன் நினைவிழந்து இருந்த சமயம். இது போன்ற சமயங்களில் விரைந்து செயல்படவே அப்படி பறந்து வந்தார். (Saving Time.. According to the situation)
எல்லா வானர சேனையையும் கூட்டி செல்வதென்பது அதுவும் by air ..! கொஞ்சம் யோசிச்சு பாருங்க..

Mani said...

Yov Bleaching powederuu...nee bathrom kaluva mattumthan use aava...Ramar manidha uruvathula (avadharam) vandharu...apprum eppadiya avarala parakka mudiyum...idhula keela note vera...(//Pls take my comments lightly as I am not here to hurt anyone's sentiments//)
dont hurt hindus vedikkaiaaga kooda

Bleachingpowder said...

//Yov Bleaching powederuu...nee bathrom kaluva mattumthan use aava...//

அதுக்குதான வந்திருக்கேன்.. உங்களுக்கு நிறைய தேவைபடும்னு நினைக்கிறேன்.

Anonymous said...

Hello BleachingPowder,

இதெல்லாம் கால காலமாக எல்லோராலும் ஏன்னு கேள்விக் கேட்கப்படாமலயே வந்த விஷயங்கள்.... ஆமான்னு தலையாட்டிக்கொள்ள் பழகிக்கணும்..இல்லேன்னா ஒதுக்கி வச்சுடுவா...