பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 08, 2008

நோபல் மானியம்

2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளுக்கான குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான
70 தமிழ்த் திரைப்படங்களுக்கு மொத்தம் 4 கோடியே 90 இலட்ச ரூபாய் அரசு மானியம் வழங்கி முதலமைச்சர் கலைஞர் ஆணை யிட்டுள்ளார். படங்களின் விவரம் விவரம்...


2005ஆம் ஆண்டுக்கான மானியத்திற்காக 45 திரைப்படங்களையும், 2006ஆம் ஆண்டு மானியத்திற்காக 49 திரைப்படங்களையும், ஆக மொத்தம் 94 திரைப்படங்களைத் தேர்வுக் குழுவினர் பார்வையிட்டு, 2005ஆம் ஆண்டிற்கு 34 திரைப்படங்களும், 2006ஆம் ஆண்டிற்கு 36 திரைப்படங்களும் அரசு மானியம் பெறுவதற்குத் தகுதிவாய்ந்த திரைப்படங்களாக அரசுக்குப் பரிந்துரை செய்தது.

தேர்வுக்குழு வழங்கிய பரிந்துரைகளை ஏற்று, அதன்படி 2005ஆம் ஆண்டிற்கு,

1.கஸ்தூரி மான்,
2. வெற்றிவேல் சக்திவேல்
3.டான்சர்,
4. பொன்மேகலை,
5. 6.2",
6. மண்ணின் மைந்தன்,
7. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி,
8. ஹக்ஷஊனு , ( என்ன படம் என்று தெரியலை )
9. அயோத்தியா,
10. மந்திரன்,
11. அறிவுமணி,
12. பவர் ஆப் உமன்,
13. அன்பே வா,
14. ஸாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி,
15. இங்கிலீஷ்காரன்,
16. ஆயுள்ரேகை,
17. காதல் எப்எம்,
18. வணக்கம் தலைவா,
19. ஆதிக்கம்,
20. கலையாத நினைவுகள்,
21. பெருசு,
22. பெண் நிலா,
23. ப்ளஸ் கூட்டணி,
24. சூப்பர்டா,
25. காற்றுள்ளவரை,
26. உன்னை எனக்கு புடிச்சிருக்கு,
27. றெக்கை,
28. வரப்போகும் சூரியனே,
29. ஒருத்தி,
30. அலையடிக்குது,
31.உள்ளக்கடத்தல்,
32. ரைட்டா தப்பா,
33. செல்வம்,
34. அந்த நாள் ஞாபகம்

2006ஆம் ஆண்டிற்கு,

1. தகப்பன் சாமி,
2. காதலே என் காதலே,
3. கிழக்கு கடற்கரை சாலை,
4. இலக்கணம்,
5. குருஷேத்திரம்,
6. மறந்தேன் மெய் மறந்தேன்,
7. செங்காத்து,
8. தூத்துக்குடி,
9. ஆட்டம்,
10. தொடாமலே,
11. நாகரீக கோமாளி,
12. காசு,
13. ஆச்சார்யா,
14. ஒரு காதல் செய்வீர்,
15. அடைக்கலம்,
16. மண்,
17. மழைத்துளி மழைத்துளி,
18. பாசக்கிளிகள்,
19. ஜெயந்த்,
20. அழகிய அசுரா,
21. கணபதி வந்தாச்சி,
22. பிரதி ஞாயிறு 9 முதல் 10.30 வரை,
23. சுயேட்சை எம்.எல்.ஏ.,
24. மது,
25. ஆவணி திங்கள்,
26. திருடி,
27. அமிர்தம்,
28. கலிங்கா,
29. கைவந்த கலை,
30. இளவட்டம்,
31. கொக்கி,
32. மனதோடு மழைக்காலம்,
33. என் காதலே,
34. இது காதல் வரும் பருவம்,
35. டான்சேரா,
36. சாசனம்

- ஆகிய 36 திரைப்படங்களுக்கும், ஆகமொத்தம் 70 திரைப்படங்களுக்கு 7 இலட்ச ரூபாய் வீதம், 4 கோடியே 90 இலட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கிட முதலமைச்சர் கலைஞர் நேற்று ஆணையிட்டுள்ளார்.

சினிமா ஒரு வியாபாரம், இதற்கு ஏன் மானியம் ? இந்த தொகையை ஏழைகளுக்கு கொடுத்தால் கலைஞரை பாராட்டலாம்.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி, நீங்க இந்த லிஸ்டில் எவ்வளவு படம் பார்த்திருக்கீங்க ? 50% மேல் என்றால் உங்கள் பெயர் முகவரி தந்தால் மருத்துவ செலவுக்கு மானியம் அனுப்பி வைக்க சிபாரிசு செய்கிறேன்.

15 Comments:

மகேஷ் (Magesh) said...

இந்த லிஸ்டில் 50% மேல் படம் பாத்தவங்கள விடுங்க.. 50% கேள்விப்பட்டிருந்தாலே பெரிய விஷயம்

Guru Prasath said...

Somebody should give subsidy for seeing these movies. What about giving it to the reviewers who recommended this list?

Do all these movies have any worth to receive these subsidies?

ராகவன் பாண்டியன் said...

2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளுக்கான குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட.....வரை சரி... "தரமான" என்று எதை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை!
பட்டியலில் கஸ்தூரிமான்,கொக்கி,சி.அப்பாசாமி போன்றவையே தேருபவை........
கலைஞர் வசனம் எழுதிய திரைப்படங்களுக்கு வேண்டுமானால் கட்சிப்பணத்தை குடுக்கலாமே!

யாத்திரீகன் said...

14. ஸாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி,
15. இங்கிலீஷ்காரன்
18. வணக்கம் தலைவா
5. 6.2"
23. சுயேட்சை எம்.எல்.ஏ
34. இது காதல் வரும் பருவம்

Idhula yethana padangal-ai aruvarupilaama kudumbathoda paarkalaam ? yethana padam ina murasoda pagutharivu padam ?

R A J A said...

//2005ஆம் ஆண்டுக்கான மானியத்திற்காக 45 திரைப்படங்களையும், 2006ஆம் ஆண்டு மானியத்திற்காக 49 திரைப்படங்களையும், ஆக மொத்தம் 94 திரைப்படங்களைத் தேர்வுக் குழுவினர் பார்வையிட்டு,//
intha thervuk kuzhuvil velai kidaikkumaa (enakku odaama oothikkitta padam paakkurathu romba pidikkum.........)

Anonymous said...

Why they didn't include "SIVAJI" in the list. Lot of theatre owner incurred loss by releasing that movie.

IDLY please ask kalaingar to consider.

Muralio

Anonymous said...

14. ஸாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி,
15. இங்கிலீஷ்காரன்
18. வணக்கம் தலைவா
5. 6.2"
23. சுயேட்சை எம்.எல்.ஏ
34. இது காதல் வரும் பருவம்

இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தேர்வுகுகுவிற்கு எவ்வளவு மானியம் கொடுத்தார்கள் ?

எவ்வளவு சமுகசிந்தனை உள்ள படங்கள் ......
என் வரிபணம் எப்பிடியெல்லாம் விரயம் ஆகுதே !!!

IdlyVadai said...

70 படங்களுக்கு மானியம் வழங்கியதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் நன்றி தெரிவித்து இருக்கிறார். ``பாசமுள்ள தாயாக, முதல்-அமைச்சர் வாரி வழங்கி இருக்கிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Rajaraman said...

KADAI THENGAYO VAZHI PULLAIYARO

iDHU THAAN GNABGAM VARUGIRATHU.

KALAIGNAR WILL BE REMMEBERED FOR

HIS EXTREME GENEROCITY TO EVERY

SECTION OF SOCIETY. UNFORTUNATELY

THAT CAME OUT OF tNDU EXCHEQUER

நாரத முனி said...

ஐயய்யோ இந்த லிஸ்ட்ல "மாமனாரின் இன்ப வெறி" , " இருட்டு அறையில் முரட்டு குத்து", " சக்கிரத்தில் ஒரு இன்ப ராத்திரி" போன்ற திரை காவியங்களுக்கு மானியம் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. :(

பான்னாடைங்களா அவன் அவன் " சோத்துக்கு சு.ஊ னு (Sensored) இருக்கும் போது சினிமாக்கு என்ன மானியம் வேண்டிகிடக்கு அதுவும் குப்பை படங்களுக்கு.

காளான் said...

இது தேவையா ? இந்த மானியம் யாரை போய் சேரும் என்பதை பொருத்தது. தொழிலாளர்கள் என்றால், நல்லது தானே ?

Seetha said...

இனிமேல் எந்ஹ்ட கச்சியானாலும் "இலவசம்" அது இதுன்னு ஏதாவது வழங்கறாதானால் சொந்த கட்ச்சியில் இருந்து பணம் குடுக்கட்டும்னு ற்றாஃபிக் ராமசாமி மாதிரி யாரவது பிஐஎல் போடணும்..சாப்பாட்டுக்கு கஷ்ட்டம்..அகதிகள் வறுமை..இப்பிடி என்னேன்வோஒ இருக்கே..இப்பிடியா வரிப்பணத்தை வீணாக்குவாங்க?

We The People said...

Hope this was the deal for re-electing Ramanarayanan as the President of TamilNadu Producers Council ;)

Vazhga Tamil Nadu! Vazhga Udanpirappukkal! ozhiyattum makkal panam :(((

Nallaa irunga deaaaa...

Anonymous said...

இந்த மான்யத்துக்கு தமிழ் பெயர் வேண்டாமாமா? இதெல்லாம் தி மு க காரனுங்க அல்லது அவனுங்க அல்லக்கைங்க எடுத்த சினிமாக்களா இருக்கும். பொதுக்காச எடுத்து பிரிச்சிக்கிடுறானுங்க. பொதுப் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு இதுவும் ஒரு வழி.

அது சரி கஸ்தூரி மான் படம் இந்த லிஸ்டுல இருக்கே? ஜெயமோகன் அதற்கு திரைக்கதை வசனம் எழுதினார் என்ற விஷயம் கருணாநிதிக்குத் தெரியாதா அல்லது ஜெயமோகனும் கருணாநிதியை கலைஞர் என்று அழைத்துக் கை குலுக்கினால் ஷாக் அடிக்குது என்று சொல்லும் ஜால்ரா கும்பலுடன் இணைந்து விட்டாரா? ஆனானப் பட்ட ஜெயகாந்தனே கருணாநிதிக்கு ஜால்ரா போடும் பொழுது அவரது வாரிசு ஜெயமோகன் எந்த மூலைக்கு? என்ன இருந்தாலும் ஜெ மோ அந்த அளவுக்குக் கேவலமாகப் போக மாட்டார் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது, இது ஒரு வேளை படத் தயாரிப்பாளர் காசு கொடுத்து வாங்கிக் கொண்ட மான்யமாக இருக்கும்.

எப்படியோ நல்லா இருந்தா சரி. ஒரு வேளை ஜெயகாந்தன் மகனுக்கு வேலை போட்டுக் கொடுத்து ஜெயகாந்தனை தன் அல்லக்கையாக மாற்றியது போல ஜெயமோகனைக் காக்கா பிடித்து நல்ல பெயர் வாங்கிக் கொள்ள கருணாநிதி செய்யும் வேலையாகவும் இருக்கலாம் யார் கண்டது?

Anonymous said...

intha padmlam pakave illa pa,poster la matum pathu iruken idly vadai, manasu kastama iruku, nama vari pannathai ippati orku alli kodukar kalaigar,public ku koduthu iruntha parava illa

ippatiku
TAX pay ponnum kudimagan