பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 09, 2008

மோடிக்கு அமெரிக்கா மீண்டும் விசா மறுப்பு


குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிக்க அமெரிக்கா மீண்டும் மறுத்து விட்டது.

கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்கா செல்ல சுற்றுலா விசா கோரி மோடி விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி அவருக்கு விசா தரக் கூடாது என மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மோடிக்கு விசா தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது.

இதற்கு பாஜக கடும் மற்றும் இந்திய அரசு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார் மோடி. நியூஜெர்சியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள குஜராத் கலாச்சார மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள சுற்றுலா விசா கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அவருக்கு விசா வழங்கக் கூடாது என்று முன்பு எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் காரணம் காட்டி மீண்டும் மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி பெலிஸ் கெயர் கூறுகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனவே குடியேற்ற சட்டத்தின் கீழ் சுற்றுலா விசா வழங்க இயலவில்லை என்று மோடிக்குத் தெரிவித்து விடுமாறு அமெரிக்க குடியேற்றத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களை பொய் என்று நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் தான் சுற்றுலா விசாவில் அமெரிக்க வர தகுதியானவர் என்பதை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அவர் நிரூபிக்க வேண்டும் என்றார் கெயர்.

அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன். - துக்ளக் ஆண்டு விழாவில் மோடி

6 Comments:

Seetha said...

இட்லிவடை,

எனக்கு மோடிக்கு விசா மறுத்ததைகுறித்து ஒன்றும் இல்லை.அதே நேரம் அமேரிக்கா ஒன்றும் வள்ளலும் இல்லை.

ஆனால் எனக்கு இட்லிவடை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது..40 நிமிடம் முன்பு.ஒரே ஆச்சரியம்..ஆனால் முன்பு ஒரு முறை வேறு கோளாறு நடந்ததால் இதுவும் அது தான் என்று நினைத்து சமாதானம் ஆனேன்.நன்றி.

Ravi said...

Its irony that a country is refusing visa to Modi on ground of human rights violation when its leader (Bush) invaded Iraq without the UN approval and US is a country which has a terrific track record of human rights violations. So the statement made by the US ministry seems like a big joke (but I am hardly able to laugh at that joke)!

Anonymous said...

check today's Dinamani cartoon 1..2..3 is very nice.

Anonymous said...

It is not surprising. So long as there are some persons here as well as in America who go by the
name of human rights activists, often meddling in and poking their
nose on affairs India in order to get some political and economic
mileage, and who are nothing but
opinionated busybodies, America,
why, all of Europe and even the
entire world may paint India and
Indians in the darkest shade. For
over six years such people have
unleashed the calumny of carnage
on Narendra Modi. Let the West
search its conscience how it has
fared in all these centuries, as
stated by Ravi. Violence and cruelty have always been their
trademark. My regret is that Mr.
Modi applied again for visa. With
all his achievements and self respect, he had better refrained from it.

BTW, I too could not view your blog yesterday for over a couple of hours. Hope it is a passing
phase.

TTPM sangam said...

மோடி விசா கேட்டு தற்சமயம் அப்ளிகேஷன் போடாத நிலையில், பல செய்தி ஊடகங்கள் இப்படி விசா மீண்டும் மறுப்பு என்று தலையங்கம் இடுவது, மோடி மீதான அவர்கள் வெறுப்பைக் காட்டுகிறது.

ரிப்போர்ட்டரின் கேள்விக்கு அமேரிக்க தூதரகத்தின் நிலையை மறுபரிசீலணைக்கு உட்படுத்த முடியாது என்று விளக்கியுள்ளது. அதைச் சொல்லாமல் மீண்டும் மறுப்பு என்றால் என்னமோ மோடி அப்ளிகேஷன் போட்டு மறுபடிவும் விசா மறுக்கப்பட்ட பிரம்மையை அது உண்டாக்குகிறது.


செய்திகளைத் திரிப்பதில் இந்திய செக்குலர்வாதிகளுக்கு இணை யாரும் இல்லை.

Anonymous said...

The news should read that such and such group has requested to deny the visa again and not already denied again.

Namo PM/HM aanadhukkappuram eppadi visa illainnu solraangannu paappom.