பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 31, 2008

நக்மா மீது வழக்கு போடும் பி.ஜே.பி

நான் காணாமல் போன ஆடல்லவோ? கர்த்தர் என்னைத் தேடுகிறார்'' என்று கிறிஸ்துவப் பெண்ணாக மாறி, மதப்பிரசாரத்தில் இறங்கிய நடிகை நக்மாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறி இருக்கிறது. நக்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.கிறிஸ்துவ மதபோதகர்களில் மிகவும் பிரபலமானவர் மோகன் சி.லாசரஸ். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இவர் நடத்தும் பிரசங்கத்துக்கு எக்கச்சக்கக் கூட்டம் கூடும். கடந்த 29.06.08-ம்தேதி, திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமாவடியில் இவர் வழக்கம்போல `இயேசு விடுவிக்கிறார்' கூட்டத்தை நடத்தியபோது, அதைக் கேட்க வந்த கிறிஸ்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கே மேடையில் வெள்ளைப் புறாவாக வீற்றிருந்தவர் நடிகை நக்மா. `ஸ்டைலு ஸ்டைலுதான்' என்று சூப்பர் ஸ்டாருடன், சொக்க வைக்கும் விதத்தில் ஆட்டம் போட்ட நடிகை நக்மா, ஏதோ ஞானப்பாலில் குளித்தவர் போல அங்கே கிறிஸ்துவ மதப்பிரசாரமும் செய்தார். `இஸ்லாமியப் பெண்ணான தான் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டது எப்படி?' என்பதோடு கிறிஸ்துவ மதத்தின் சிறப்புகளை அவர் நெக்குருக விளக்கியபோது, `உச்' கொட்டாத கிறிஸ்துவர்களே இல்லை. அந்த அளவுக்கு உள்ளம் உருக்கும் விதத்தில் நக்மாவின் பேச்சு இருந்தது.

நக்மாவின் இந்த மதப்பிரசங்கம்தான் அவரை இப்போது சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. நாலுமாவடியில் நக்மா நடத்திய பிரசங்கம் பற்றிய செய்தி மறுநாள் நாளிதழ்களில் வெளியாக, அதைப் படித்துப் பார்த்த பி.ஜே.பி.யினர் கடும் காட்டமாகி இருக்கிறார்கள். குறிப்பாக, பி.ஜே.பி. வழக்கறிஞர் பிரிவின் நெல்லை மாவட்டத் தலைவர் வக்கீல் அருள்ராஜ் இதில் செமை காட்டமாகி விட்டார்.

நக்மாவின் பேச்சு அடங்கிய முழு சி.டி.யை வாங்கிப் போட்டுப் பார்த்த அவர், பி.ஜே.பி.யின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் ஷ்ரீதர் மூர்த்தியிடம் அதுபற்றிப் பேசியிருக்கிறார். இந்த ஷ்ரீதர் மூர்த்திதான் மதானி விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு போட்டிருப்பவர். நக்மாவின் பேச்சைக் கேட்ட அவரும், இதற்காக நக்மா மீது வழக்குத் தொடரலாமே என கிரீன் சிக்னல் கொடுக்க, உற்சாகமானார் வக்கீல் அருள்ராஜ்.

உடனடியாக இவர் நடிகை நக்மாவின் முகவரியைத் தேடி அலைந்திருக்கிறார். இரண்டு வாரம் தேடியும் நக்மாவின் மும்பை முகவரிகிடைக்கவில்லை. ``அதனாலென்ன? நடிகர் சங்கத்துக்கு அனுப்பினால் அவர்கள் நக்மாவுக்கு அதை ஃபார்வர்ட் செய்து விடுவார்கள்'' என சில சீனியர்கள் ஐடியா கொடுக்க, உடனே சென்னை தி.நகரில் உள்ள `தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க அலுவலக' முகவரியிட்டு நக்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் வக்கீல் அருள்ராஜ். கடந்த 23-ம்தேதி மாநிலச் செயலாளர் ஷ்ரீதர் மூர்த்தி இதற்காகவே நெல்லை வந்து நோட்டீஸுக்கு இறுதி வடிவம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

இது பற்றி வக்கீல் அருள்ராஜிடம் பேசினோம்.

``நடிகை நக்மா யாருங்க? அடிப்படையில் அவர் ஒரு முஸ்லிம். அவர் திடீர் என்று நாலுமாவடியில் போதகர் மோகன்.சி.லாசரசின் `இயேசு விடுவிக்கிறார்' பிரசங்கக் கூட்டத்தில் கிறிஸ்துவ பிரசங்கம் செய்யப்போவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்த உடனேயே எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ஏனென்றால், மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் சூத்ரதாரியாகச் செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமோடு இணைத்துப் பேசப்பட்டவர்தான் இந்த நடிகை நக்மா. தவிர, குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.ஐ. அவரையும் விசாரித்திருக்கிறது.

எனவே, ஒரு தேசத் துரோகியோடு இணைத்துப் பேசப்பட்ட நடிகை கிறிஸ்துவப் பிரசங்கம் செய்ய வருகிறார் என்றவுடனேயே நாங்கள் அலெர்ட் ஆகிவிட்டோம். பி.ஜே.பி. தொண்டர்கள் இரண்டு பேரை கிறிஸ்துவர்கள் போல அந்தக் கூட்டத்திற்கு அனுப்பினோம். அவர்கள் நக்மாவோட பேச்சை அப்படியே டேப் பண்ணிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய்த்தான் அவர் மீது வழக்குப் போட முடிவு செய்தோம்'' என்றார் அவர்.

`வழக்குப் போடும் அளவுக்கு அப்படிஎன்ன பேசிவிட்டார் நக்மா?' என்ற கேள்வியை வக்கீல் அருள்ராஜிடம் கேட்டு வைத்தோம். சிவகாசி பட்டாசாகச் சீறினார் அவர்.

``நடிகை நக்மாவின் கிறிஸ்துவ மதப்பிரசங்கம் பிற மதத்தினரின் மத உணர்வை ரொம்பவே புண்படுத்துகிற மாதிரி இருக்கிறது. `உலகில் இயேசு மட்டும்தான் கடவுள், மற்றவர்கள் கும்பிடுவதெல்லாம் வெறும் சாத்தான்களும், பேய்களும்தான்' என அவர் பேசியிருக்கிறார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 295(ஏ)-படி தண்டனைக்குரிய குற்றம். தவிர, `கேன்சர், பக்கவாதம், பிரஷ்ஷர், ஆண்மைக் குறைவு என எல்லா நோய்களும் அற்புத சக்தி மூலம் தீரும்' என அவர் பேசியிருக்கிறார். நக்மா டாக்டருக்குப் படித்தவரல்ல. அப்படி இருக்கும் போது நோய் தீர பிரிஸ்கிரிப்ஷன் கொடுப்பது ரொம்பத் தவறு. எனவேதான் நடிகை நக்மா மீது `தி டிரக்ஸ் அண்ட் மேஜிக் ரெமடீஸ் ஆக்ட் 1954'ன் கீழ் வழக்குத் தொடர முடிவு செய்திருக்கிறோம். அற்புத சக்தி மூலம் நோய் தீரும் என அவர் பேசியிருப்பது ஓர் ஆட்சேபத்துக்குரிய விளம்பரம்.

இது பற்றி இன்னும் பத்து நாட்களுக்குள் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு, `இனி இது போன்ற மத பிரசங்கங்கள் செய்வதில்லை' என அறிவிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். பதில் வராவிட்டால் உடனடியாய் ஐகோர்ட்டில் வழக்குப் போடப்போகிறோம். நடிகை நக்மாவின் மதப்பிரசங்கத்தை பி.ஜே.பி தடுத்து நிறுத்தும்'' என்றார் ஆவேசமாய்.

கிறிஸ்துவ மத போதகர் மோகன்.சி.லாசரசுக்கும் இதே போல நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறதாம். `இயேசு அழைக்கிறார், இயேசு நேசிக்கிறார், இயேசு விடுவிக்கிறார்' என்பதெல்லாம் இருக்கட்டும், இயேசு வழக்கிலும் சிக்க வைப்பார் போலிருக்கிறதே!
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

14 Comments:

அவனும் அவளும் said...

நல்ல முயற்சி. இதுபோல பல நல்ல விஷயம் மூலமா தமிழ்நாட்டுல பா ஐ க முன்னேற்றம் அடைய இட்லிவடை சார்பா என்னோட வாழ்த்துக்கள் தெரிவிச்சுக்கறேன்.

பழைய CD எல்லாம் வாங்கி பாத்து வேற எதாவது நடிகர் நடிகைகள் இது மாதிரி பேசி இருந்தா அவங்க மேலயும் வழக்கு போட முயற்சி எடுக்கணும். அது மூலமா
தமிழ்நாட்டுல பா ஐ க முன்னேற்றம் அடைய இட்லிவடை சார்பா என்னோட வாழ்த்துக்கள் தெரிவிச்சுக்கறேன்.

அத தவிர இந்த விசயத்த பரப்பி விட்டதுக்காக இட்லிவடைக்கு என்னோட வாழ்த்துக்கள்.

IdlyVadai said...

//இந்த விசயத்த பரப்பி விட்டதுக்காக இட்லிவடைக்கு என்னோட வாழ்த்துக்கள்.//

நீங்க வேற நக்மா படம் நல்லா இருக்கேனு இந்த செய்தியை போட்டேன் :-)

Anonymous said...

எனவேதான் நடிகை நக்மா மீது `தி டிரக்ஸ் அண்ட் மேஜிக் ரெமடீஸ் ஆக்ட் 1954'ன் கீழ் வழக்குத் தொடர முடிவு செய்திருக்கிறோம். அற்புத சக்தி மூலம் நோய் தீரும் என அவர் பேசியிருப்பது ஓர் ஆட்சேபத்துக்குரிய விளம்பரம்.

அப்படியானால் எத்தனை இந்து சாமியார்கள்/சாமியாரிணிகள் மேல்
இதே போல் வழக்குத் தொடர வேண்டும்.நக்மா மீது போடப்படும் வழக்கு அபத்தமானது.நீதிமன்றத்தில்
தள்ளுபடியாகும். ஏனெனில்
நக்மா எதையும் விற்கவில்லை,
மந்திர தாயத்து,மருந்து என்று
வியாபாரம் செய்யவில்லை. நான்
நோயைத் தீர்க்கிறேன், சிகிச்சை
அளிக்கிறேன் என்றெல்லாம்
வாக்குறுதி தரவில்லை,பணம்
வசூலிக்கவில்லை, எதையும்
விற்பனைக்கு விடுக்கவில்லை.
கடவுளை கும்பிட்டால்,பிரார்த்தனை
செய்தால், நோய் தீரும் என்று
சொல்வதெல்லாம் இந்த சட்டத்தின்
கீழ் வராது.இது கூடத் தெரியாத
மூடர்கள்தான் இந்த வக்கீல்கள்
என்பது வெட்கக்கேடு.
இதையும் ஒரு செய்தியாக வெளியிடும் ரிப்போட்டர் ஆசிரியர்,செய்தியாளர்களுக்கு
அறிவே கிடையாதா?

enRenRum-anbudan.BALA said...

இ.வ,
//நீங்க வேற நக்மா படம் நல்லா இருக்கேனு இந்த செய்தியை போட்டேன் :-)
//
உங்க பதில் நல்லா இருக்கு :) ஆனா, நக்மா படம் சகிக்கலை, வெளுத்து அனிமிக்கா இருக்காங்க !

enRenRum-anbudan.BALA said...

//இதையும் ஒரு செய்தியாக வெளியிடும் ரிப்போட்டர் ஆசிரியர்,செய்தியாளர்களுக்கு
அறிவே கிடையாதா?
//
அனானி,
கூல் :) இதை விட கேவலமான / காலணா பெறாத விஷயங்கள் கூட மீடியாவில் வரத்தானே செய்யுது !!!

IdlyVadai said...

//உங்க பதில் நல்லா இருக்கு :) ஆனா, நக்மா படம் சகிக்கலை, வெளுத்து அனிமிக்கா இருக்காங்க !//

எ.அ.பாலா கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு பர்க்கவும் :-)

Anonymous said...

If Jesus only is Lord, then who r others. Nagma should be sent out of country. Not fit to be in India at all.

Anonymous said...

எ.அ.பாலா கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு பர்க்கவும் :-)

இ.வ கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு பார்தது நக்மாவை நயன் தாரா என்று நினைத்து ஏமாந்து
விட்டீர்களா :).

Anonymous said...

nayan tara nu sona parava illa, mother theresa nu soluida poraru

அவனும் அவளும் said...

இட்லிவடை, கலக்கறீங்க.

Anonymous said...

http://specials.rediff.com/movies/2008/jul/31sli3.htm

இட்லிவடை, இதைக் கூலிங்கிளாஸ் போடாமல் பார்க்கவும் :)

Anonymous said...

ஆனா, நக்மா படம் சகிக்கலை, வெளுத்து அனிமிக்கா இருக்காங்க !

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்காங்களோ என்னவோ :).

Anonymous said...

"ஆனா, நக்மா படம் சகிக்கலை, வெளுத்து அனிமிக்கா இருக்காங்க !

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்காங்களோ என்னவோ :)."

---Excellent Comment..soon everyone will like this, because of the inflation..

shan said...

Ethu Madham sammandhapatta vishiyam.kettavangala erukavanga nallavangala maara kudathanu sattam eruka enna pongaiya poi velaiya parunga