பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 12, 2008

சோம்நாத்சாட்டர்ஜி திங்கள் கிழமை பதவி விலக வாய்ப்பு

லோக்சபா சபாநாயகர், சோம்நாத் சாட்டர்ஜி விரைவில் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு சோம்நாத் சாட்டர்ஜியை பதவி விலகுமாறு வலியுறுத்தும்படி மார்க்சிஸ்ட் கம்யூ., அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் சோம்நாத் சாட்டர்ஜி திங்கள் கிழமை பதவி விலகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத தொடர்பாக மேற்குவங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இடதுசாரிகள் மத்திய அரசில் இருந்து விலகியதை அடுத்து அரசியல் நாகரிகம் கருதி சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக ஓட்டு போட இவர் பெயரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment:

நாரத முனி said...

அவரு சப்பாத்தி தானே சாப்படராறு?