பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 30, 2008

சன் டி.வி., ஸ்டார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை : அரசு

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு தங்களது சேவையை இதுவரை வழங்காத சன் டி.வி., ஸ்டார் டி.வி. உள்ளிட்ட குழுமங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு கம்பி வட தொலைக்காட்சி நிறுவனம் தற்போது 23 கட்டண சேனல்களையும் சேர்த்து 73 சேனல்களை விநியோகித்து வருகிறது.

இவற்றில், ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ், ஜி ஸ்போர்ட்ஸ், டி.டி.ஸ்போர்ட்ஸ், நியோ ஸ்போர்ட்ஸ் மற்றும் நியோ ஸ்போர்ட்ஸ் பிளஸ், எல்லா தமிழ் சேனல்கள் (விஜய், ஸ்டார் குரூப் டி.வி. மற்றும் சன் டி.வி. குழும சேனல்களை தவிர) ஆகியவை அடங்கும்.

இருப்பினும் தங்களது சேவைகளை அரசு கேபிள் டி.வி.க்கு அளிப்பது தொடர்பாக ஸ்டார், சன் மற்றும் சோனி எண்டர்டைன்மென்ட் ஆகிய ஒளிபரப்பாளர்களிடம் இருந்து இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிறுவனங்களின் இணைப்புகள் சம்பந்தமாக சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தக்க சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 Comments:

Anonymous said...

அமைச்சர் ராஜா கட்டப்பஞ்சாயத்து குறித்து இந்துவில் செய்தி.இது என்ன
விவகாரம்.தமிழ் நாளிதழ்களில் இந்த
செய்தி வெளியாகியுள்ளதா.கீதா ஜீவனை லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க நீதி மன்றம் மறுப்பு.இப்படி
அமைச்சர்கள் இருக்கும் போது கருணாநிதிக்கு யாரையும் குறை கூற
அருகதை இல்லை.

IdlyVadai said...

அனானி

நீங்க சொல்லும் செய்திகள் இங்கே

http://thatstamil.oneindia.in/news/2008/07/30/tn-madurai-hc-dismisses-minister-geetha-jeevans.html
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0807/29/1080729043_1.htm

Anonymous said...

More on TN ministers. It is a front page news in today's Dinakaran. Looks like Dinakaran is targeting each of such 'elements' in cabinet and trying to expose them. Read the Peter Mama in Dinakaran and Teakadai bench in Dinamalar. The shifting of Elcot IAS officer Umasankar is linked to pressure from Madurai.

http://timesofindia.indiatimes.com/Cities/Chennai/TN_minister_in_property_row/articleshow/3303863.cms

http://timesofindia.indiatimes.com/Cities/Chennai/TN_minister_accused_of_caste_slur/articleshow/3299547.cms

http://thatstamil.oneindia.in/news/2008/07/30/tn-minister-facing-abduction-case.html

Anonymous said...

The shifting of Elcot IAS officer Umasankar is linked to pressure from Madurai.

ஜெ காலத்தில் அவர் சுடுகாடு கொட்டகை ஊழலை கண்டுபிடித்தார்
என்பதற்காக பதவியிலிருந்து மாற்றினார்கள்.இப்போது அழகிரி
ஆணையிலா?.

சன் டிவி,ஸ்டார் தர வேண்டும் என்றெல்லாம் கட்டாயப் படுத்த முடியாது. அப்படியே அரசு
பிரச்சினை உருவாக்கினால்
கோர்ட் மூலம் தடை பெறலாம்.