பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 25, 2008

ராமர் பாலத்தை ராமரே இடித்தார் என்று கூறுவதா - ஜெ கண்டனம்

ராமர் பாலத்தை ராமரே இடித்தார் என்று கூறுவதா?-மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

உலகெங்கும் வாழும் பல கோடி மக்களால் போற்றி வணங்கப்படும் ராமபிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம் தான். அந்தப் பெயருக்கு வேறு எந்த சிறப்பும் இல்லை என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு கருத்து தெரிவித்திருந்தது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்த வழக்கில் முன்னர் இவ்வாறு தனது நிலைப்பாட்டை தெரிவித்த மத்திய அரசு, ராமர் என்ற எண்ணமே ஒரு கற்பனையின் வடிவம் தான். அப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொல்ல வரலாற்றுச் சான்று ஏதும் இல்லை என்று உச்ச திமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் இந்தக் கூற்று நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, மத்திய அரசு அவசர அவசரமாக தனது பிரமாணப் பத்திரத்தை உடனடியாக திரும்பப் பெற்றது.

ராமர் உருவாக்கிய பாலத்தை அவரே உடைத்துப் போட்டுவிட்டார். இப்போது ராமர் பாலம் என்று எதுவும் இல்லை என்று மத்திய அரசு உச்ச திமன்றத்தில் புதிதாக ஒரு வாதத்தை தற்போது முன் வைத்திருக்கிறது. இல்லாத ராமர் பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே சேது சமுத்திரத் திட்டத்திற்காக பாலம் எதுவும் இடிக்கப்படப்போவதில்லை என்பது மத்திய அரசு தற்போது முன் வைக்கும் வாதம். மத்திய அரசின் இப்புதிய விதண்டாவாதம், நாட்டில் மீண்டும் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ராமர் என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை. அது வெறும் கற்பனை என்று முன்னர் வாதிட்ட மத்திய அரசு, இப்போது ராமர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. தென்னிந்திய நிலப்பரப்பை இலங்கையோடு இணைக்கும் பாலம் ஒன்றினை ராமர் கட்டினார் என்பதையும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

உச்சதிமன்ற வழக்கில் தனது நிலைக்கு வலு சேர்க்க மத்திய அரசு ராமரின் துணையை தற்போது நாடுகிறது. இலங்கையில் இருந்து தாயக நிலப் பரப்பிற்கு திரும்பியவுடன், ராமரே தான் உருவாக்கிய பாலத்தை அழித்துவிட்டார் என்று மத்திய அரசு கூறுகிறது.

ராமபிரான் தன்னுடைய மாய அம்பினை எய்தி பாலத்தை மூன்றாக உடைத்துப் போட்டுவிட்டார் என்று உச்சதிமன்றத்தில் மத்திய அரசசின் வாதம் கூறுகிறது. இதன் மூலம் ராமபிரான் வாழ்ந்தார். அவர் மனித ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட பேராற்றல் உடையவராய் இருந்தார். அம்பு எய்தி பாலத்தையும் உடைத்தார் என்று மத்திய அரசு இப்போது கூறுகிறது.

தான் உருவாக்கிய பாலத்தை ராமபிரான் தானே தகர்த்தார் என்று ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை என்று ராமாயணத்தை கற்றுத்தெரிந்த வல்லுநர்கள் அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது இங்கே நினைவு கூறத்தக்கது.

ராமபிராணைப் பற்றிய புராணத்தின் அனைத்து அம்சங்களையும் மக்கள் நம்பலாம். ஆனால் இந்த ராமர் பாலம் என்பது மட்டும் நம்பிக்கைகளுக்கு உட்பட வேண்டியதில்லை. ஏனென்றால், சேது சமுத்திரத் திட்டத்திற்காக அது இடிக்கப்பட வேண்டி இருக்கிறது என்பதுதான் மத்திய அரசு எடுத்திருக்கும் புதிய நிலைப்பாடு.

1963_ம் ஆண்டு டிசம்பர் மாதம் காஷ்மீரில் ஹஸ்ரத்பல் திருத்தலத்தில் இருந்த புனிதப் பொருள் களவாடப்பட்டதன் எதிரொலியாக பெரும் கலவரம் வெடித்தது. பெரு முயற்சிக்குப் பிறகு அந்தப் புனிதப் பண்டம் மீட்கப்பட்ட பிறகே கலவரம் கட்டுக்குள் வந்தது. களவு போன பொருள் புனிதப் பொருளா? அது உண்மையானதா? தொன்மையானதா? என்ற கேள்விகளுக்குக்கெல்லாம் இடம் கொடுக்காமல், மனவேதனையில் இருந்த இஸ்லாமிய சமூகத்தனரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புனிதப் பொருள் மீட்கப்பட்ட அப்போதைய மத்திய அரசு முயன்றது. அத்தகைய கேள்விகளுக்கெல்லாம் அப்போது இருந்த அரசின் மதச்சார்பின்மை கொள்கையில் அளிக்கப்படவில்லை. அதைப் போலவே, டேன் பிரவுன் எழுதிய தி டாவின்ஸி கோட் என்றற புத்தகம் திரைப்படமாக 2006_ல் திரைக்கு வந்தபோது கிறிஸ்தவ சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாக, திரையரங்குகளில் அப்படம் காட்டப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. கிறிஸ்தவ சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கிறிஸ்தவ தலைவர்களுக்கென பிரத்யேகமாக அந்தப் படம் பலமுறை திரையிட்டுக் காட்டப்பட்டது. தணிக்கைக் குழுவினர் படத்தை நுட்பமாக கவனித்துப் பார்த்தனர்.

காட்சிகள் எதுவும் க்கப்படாவிட்டாலும், இது ஒரு கற்பனையே என்ற சிறப்பு தன்னிலை விளக்கத்துடன் படம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அப்படம் திரையிடப்பட அனுமதி மறுக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பல நாடுகளில் கூட தடை செய்யப்படாத தி டாவின்ஸி கோட் திரைப்படம் இந்தியாவின் பல மாநிலங்களில் திரையிடப்பட தடை இருந்தது. இப்போதுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மதச் சார்பின்மைக் கொள்கை அவ்வாறு அமைந்தது. தடையே இல்லாமல் அப்பட்டத்தை திரையிட அனுமதித்தால் அது தற்போதைய மத்திய அரசின் மதசார்பின்மை கொள்கைக்கு ஒவ்வாததாக இருக்கும்.

இப்படியெல்லாம் நிகழ்ந்திருந்தாலும் இந்துக்களின் உணர்வுகள், கோடானு கோடி இந்துக்களின் இறை நம்பிக்கை என்று வருமேயானால், அதில் ஒரு அக்கறையின்மை மத்திய அரசின் செயல்பாடுகளில் வெளிப்படுகிறது. இந்துக்களை காயப்படுத்தினாலோ, அவர்களின் மத உணர்வுகளைக் களங்கப்படுத்தினாலோ, அதில் இந்த மத்திய அரசுக்கு துளியும் ஆடட்சேபமில்லை. இது என்ன வகையான மதச்சார்பினைக் கொள்கையோ தெரியவில்லையே?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல கட்சிகளுக்கும் இத்தகைய இந்துக்களை பழிக்கும் மதச்சார்பின்மை கொள்கை மிகவும் ஏற்புடையதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாகக தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார். இந்துக்களின் வணக்கத்திற்குரிய இறைவன் பெருமாள், காமத்தில் ந்திக் களித்தவர் என்றும் இப்போது கருணாநிதி கண்டுபிடித்துள்ளார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தன்னைப் போல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் போலும்.

தன்னைப்போல கள்வர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைப்பதது இயல்பானது தானே?

நான் ஓர் இந்தியக் குடிமகள். நான் மதச் சார்பற்ற இந்தியக் குடிமகள். நான் ஓர் இந்துவாகப் பிறந்தேன். நான் கல்வி பயின்றதெல்லாம் புகழ் வாய்ந்த கிறிஸ்தவப் பள்ளிகளில்தான். என் அன்பிற்குரிய நண்பர்களின் பட்டியலில் கிறிஸ்தவர்கள் அநேகம் உண்டு. பல இஸ்லாமியர்களும் உண்டு. எல்லா மதத்தாரையும் சமமாக மதித்து நடக்க வேண்டும் என்பது தான் நான் ஏற்றுக்கொண்டுள்ள மதச் சார்பின்மைக் கொள்கை.

இறைதூதர் முகம்மது நபிகளின் புனிதப் பொருள் மதிப்புக்குரியது. அதனை நான் போற்றுகிறேன். கிறிஸ்தவ பெருமக்களின் விசுவாச வடிவங்களை மதிக்கிறேன், போற்றுகிறேன். அதைப் போலவே ராமர் பாலம் என்று இந்துக்கள் நம்புகின்ற, வணங்குகின்ற புராதனச் சின்னத்தின் புனிதத்தை மதிக்கிறேன், வணங்குகிறேன். அரசாங்கமும், அரசியல்வாதிகளும் மத நம்பிக்கைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. அவற்றில் தலையிடக்கூடாது.

ராமர் பாலத்தை இடித்து கடல் மட்டமாக்கி, அதில் டி.ஆர்.பாலுவின் கப்பல்களை ஓட்டி மகிழ்வதால், இந்தத் திட்டத்தின் செயல் வடிவ யதார்த்தங்களைக் கூர்ந்து நோக்கும்போது, வேறு யாருடைய கப்பலும் அவ்வழியே செல்லப்போவதில்லை என்பதும் உண்மைதான். ஆனாலும் கோடானு கோடி மக்களின் வணக்கத்திற்கும், வழிபாட்டுக்கும் உரிய புராதனச் சின்னத்தை உடைப்பதென்பது, கோடானுக் கோடி இந்த மக்களின் இதயத்தைத் தகர்ப்பதற்கு ஒப்பான் செயலாகிவிடும்.

வருமானம் வரும் என்பதற்காக, சுற்றுலாத் தலங்களையும், கேளிக்கை பூங்காக்களையும் கட்ட இமயமலையை யாரேனும் தகர்க்க நினைப்பார்களா? இமயமலை இயற்கையாக எழுந்தது தானே? அது மனிதரால் எழுப்பப்படவில்லை என்பதற்காக, அதை உடைத்துச் சமவெளியாக்க எந்த அரசும் முயலுமா? அதற்கு ஒப்பானது தான் ராமர் பாலத்தை உடைத்துவிட்டு அங்கே கப்பல்களை உலாவரச் செய்யலாம் என்ற சிந்தனை.

இந்து சமயத்தவரின் எல்லையில்லா சகிப்புத்தன்மையை இந்திய அரசு தனக்கு வசதியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கூட இந்துப் புராதனச் சின்னத்தின் முக்கியத்துவத்தைப் போற்றியுள்ளனர் என்பதை நடுவன் அரசு அறியாதிருக்கிறது என்பதுதான் உண்மை. ராமர் பாலத்தை ஆதாம் பாலம் என்ற பெயரில் அழைப்பது தற்செயலாக நடந்த மொழி பெயர்ப்பு அல்ல. ஆதாம் பிரபு என்றே, இந்திய வைஸ்ராய் ஆதாம் என்றோ யாரும் இருந்ததில்லை அவர்களின் நினைவாக சூட்டப்பட்ட பெயர் அல்ல. ஆதாம் பாலம் என்ற பெயர்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் ரத்னபுரா அருகே ஆதாம்முனை என்ற ஓர் மலை இருக்கிறது. அங்கேயுள்ள மலை உச்சியில், ஒரு கல்லில் பதிந்துள்ள கால் தடத்தை ஸ்ரீபாத் என்று புத்தர் பெருமானின் பாதத்தடமாக மதித்து அதனை புத்த மதத்தவர் வணங்குகின்றனர். அது சிவபெருமானின் பாதத் தடம் என்று போற்றி, சிவபாதம் என்று இந்துக்கள் வணங்குகின்றனர்.

ஏதேன் தோட்டத்தலிருந்து வெளியே அனுப்பப்பட்ட ஆதி மனிதன் ஆதாமின் பாதச்சுவடு அது என்று இலங்கை வாழ் கிறிஸ்தவர்களும் அதற்கு மரியாதை செலுத்துகின்றனர். இலங்கை தீவுதான் முன்னொரு காலத்தின் எழிலார்ந்த ஏதேன் தோட்டம் என்ற சிங்காரத் தோட்டம் என்ற கருத்துக்கு ஆதாம் பற்றிய பழமைச் செய்திகள் வலு சேர்ப்பதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இலங்கையை சொர்க்கத்தீவு என்று இதுவரை கூற இதுவே காரணம்.

பழைய ஏற்பாட்டில் கூறப்படும் ஆதி மனிதன் ஆதாம் நடந்துசென்ற சமுத்திர முகடுதான் இன்று ஆதாம் பாலம் என்று அழைக்கப்படுவதாகவும், அதற்கு ஒரு முக்கியத்துவத்தை அவர்கள் அளிக்கின்றனர். கடற்பரப்பில் காணப்பட்ட முகட்டின் மீது வானர சேனையினர் ராமர் பாலத்தை அமைத்ததாக ராமாயணம் கூறுகிறது. தென்னிந்தியாவின் வனப் பகுதிகளில் வாழ்ந்த மக்களே வானவர்கள் என்று அழைக்கப்பட்டனர். தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் அவர்கள் ஆவர். தென்னிந்திய மக்களின் ஒப்பற்ற கட்டடக் கலை ஆற்றலுக்கும், பொறியியல் வல்லமைக்கும் ஒப்பற்ற சான்றாக விளங்குவது ராமர் பாலம். திராவிட இயக்கங்கள் எல்லாம் எண்ணி எண்ணி பெருமைப்படத்தக்க வரலாற்றுச் சின்னம் இது.

நவீன காலத்தின் செயற்கைக்கோள் படங்களில் கூட தெள்ளத் தெளிவாக பார்க்கக்கூடியதாய் அமைந்துள்ளது இந்தப் பாலம். இது ஒரு மாபெரும் பொறியியல் சாதனை என்றால் அது மிகையாகாது. ஓயாது அடிக்கும் வலிமையான கடல் அலைகளின் அரிப்பை, 20 லட்சம் ஆண்டுகளாக தாங்கி நிற்கும் ஆற்றலோடு உள்ளது.

பண்டைக்கால இந்தியர்களின் பொறியியல் அறிவும், ஆற்றலும் எத்தனை மகத்தானது என்பதற்கான சான்றுகளின் அமைப்பே ஆதம் பாலம், உறுதி, வலிமை, எடையற்ற தன்மைகொண்ட உலோகமல்லாத தக்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகத் தொன்மையான அளப்பரிய, பிரம்மாண்டமான அமைப்பு இந்த ஆதம் பாலம். இதனை உலகப் புராதனச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என்று இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் மால்கம் பி.ஆர்.லைட் என்பவரின் கருத்து கவனிக்கத்தக்கது.

இந்த பாலத்தை இடிப்பதென்பது தென்னிந்திய பண்பாட்டின் மகத்தான படைப்பு ஒன்றை தகர்ப்பதற்கு நிகராகும். தங்களது சொந்த நலனுக்காகவும், குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காகவும், தம் முன்னோரின் மகத்தான படைப்பு ஒன்றை தகர்த்தெறிய தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் வரிந்துகட்டிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

தி.மு.க. தலைவர்கள் சிலரின் வியாபார லாபங்களுக்காக சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் வேதனைப்படச் செய்யும் வண்ணம், சிறப்பு வாய்ந்த இந்தப் பாலத்தை இடித்து மத்திய அரசு சாதிக்க நினைப்பதென்ன? ஏற்கனவே ஒரு பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற்றுக்கொண்ட மத்திய அரசு, மீண்டும் மக்களின் மத நம்பிக்கைகளை சீண்டிப் பார்க்கும் விதண்டாவாதங்களை இப்போது மீண்டும் கூறக் காரணம் என்ன? நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பண பலத்தால் பெற்ற, வீழ்ச்சிக்கு வழிகோலும், போலித்தனமான வெற்றியும், அதனால் ஏற்பட்ட மமதையும் தான் இதற்குக் காரணமா?

அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பால் போன்றவற்றின் விண்ணை முட்டும் விலை உயர்வு, பணவீக்கம், விவசாயத் தொழிலில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி போன்ற எண்ணற்ற ஜீவாதார பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி, மக்களிடையே மத உணர்வு ரீதியான மற்ற பிரச்சினைகளையும், கலவரங்களையும் உருவாக்கும் முயற்சியா? தி.மு.க.வின் தொடர் தூண்டுதலால் மக்களின் உண்மைப் பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு இத்தகைய மக்கள் விரோத செயல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர்ந்து ஈடுபட்டார், அடுத்து வரும் தேர்தலில் மக்கள் அதனை தூக்கி எறிவார்கள்.

ராமர் சேதுவை தகர்த்து மதக் கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அனைத்திந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகம் சகித்துக்கொள்ளாது. அத்தகைய முயற்சி ஏதும் நடைபெற்றால், அதனை எல்லா முறைகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கும் உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பாற்ற உச்ச திமன்றத்தில் போராடுவோம் என்பது உறுதி.

1 Comment:

Anonymous said...

Each floating coral deposit with calcium and sand, is green and has the name ஜெய written on it.

-