பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 12, 2008

ஒபாமாவை சந்தித்தார் வைகோ

கலைஞர் என்ன நினைப்பார் ? ஜெ என்ன நினைப்பார் ?

தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமாவை சிக்காகோவில் நடைபெற்ற விழா ஒன்றில் சந்தித்துள்ளார். ஒபாமாவுடன் சிறிது நேரம் சந்திப்பு நிகழ்த்திய வைகோ ஒபாமாவை அவரது தைரியத்துக்காகவும், பேராற்றலுக்காவும் பராட்டியுள்ளார். ஒபாமாவிடம் பேசிய போது வைகோ கூறியதாவது : தங்கள் தைரியமும், ஆற்றலும் எல்லைகள் கடந்து உங்களுக்கு ரசிகர்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரான ஒபாமாவை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் வைகோ. அந்த புத்தகத்தின் தலைப்பு - நம்மால் முடியும் -. ஆங்கிலத்தில் எழுதப்‌பட்டுள்ள இந்த புத்தகத்தில் ஒபாமாவின் தைரியத்தையும், உறுதியையும் பற்றி வைகோ எழுதியுள்ளதாக. மேலும் அந்த புத்தகத்தில் ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தவர் ஆட்படுத்தப்பட்ட கொடுமைகள் குறித்தும் விவரித்துள்ளார் வைகோ. வைகோவின் புத்தகத்தில் ஒபாமா, நம்மால் முடியும் வைகோ என்று கையொப்பமிட்டதாக ம.தி.மு.க., வின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

4 Comments:

Anonymous said...

Perhaps vai.ko thinks he has a bright future in U.S politics than
in T.N politics :)

சந்திரமௌளீஸ்வரன் said...

ஒபாமாவுக்கு நேரம் நல்லால்லே போலிருக்கு

நாரத முனி said...

போச்சு போச்சு அடுத்த மீடிங்க்ள " கரும்பு தோட்டத்தின் வழியாக நடந்து சென்றானே என்னுடைய கருப்பு தோழன் ஒபாமா...." வைகோ ஆரம்பிச்சுடுவாரே...

r said...

வைகோவின் புத்தகத்தில் ஒபாமா, நம்மால் முடியும் வைகோ என்று கையொப்பமிட்டதாக ம.தி.மு.க., வின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


-----------------------------------
Obama Tamil la kai ezhuthu pottaraa ??? Solradhu thelivaa sollunga Vai Ko !!!!!!!

R.Gopi, Dubai