பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 18, 2008

கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது

புதிய சட்டசபை கட்டிடம்: கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது-அருகில் புதிதாக கட்ட ஏற்பாடு

சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டிடம், தலைமைச் செயலகம் கொண்ட வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்படு கின்றன.

இங்கு இருந்த சி.பி.சி.ஐ.டி. அலுவலக கட்டிடம் சமீபத்தில் இடிக்கப்பட்டது. இது போல பழைய எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதி, அரசு தோட்டத்தின் உள்ளே இருக்கும் பழைய கட்டிடங்கள் ஆகியவையும் இடிக்கப்படுகின்றன.

புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கு வசதியாக கலைவாணர் அரங்கமும் இடிக்கப்படுகிறது. 1957-ம் ஆண்டு இதே இடத்தில் இருந்த அரங்கம் `பாலர் அரங்கம்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் புதிதாக கட்டப்பட்ட கலைவாணர் அரங்கத்தை 29.1.74 அன்று முதல்-அமைச் சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

கலைவாணர் அரங்கில் அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதம் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பலர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். எனவே செப்டம்பர் மாதத்துக்குப்பிறகு கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது.

தற்போது கலைவாணர் அரங்கம் இருக்கும் இடத்தில் சட்டமன்ற வளாக பூங்கா அமைக்கப்படுகிறது. என்றாலும் புதிய கலைவாணர் அரங்கம் கட்டப்படுகிறது. இதே வளாகத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் அருகே உள்ள காலி இடத்தில் இது கட்டப்படுகிறது.

3 ஆயிரம் இருக்கைகளுடன் புதிதாக கட்டப்படும் கலைவாணர் அரங்கம், நவீன வசதிகளுடன் உருவாகிறது. இந்த அரங்கத்திலும், அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப் படும். புதிய சட்டமன்ற வளாகத்துடன் புதிய கலைவாணர் அரங்கமும் திறக்கப்படுகிறது.

0 Comments: