பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 30, 2008

முண்டாசு கட்டிய விஜயகாந்த், மூடவுட் ஆன மு.க

கடந்த மூன்று நாட்களாக விஜயகாந்த் x கலைஞருக்கு நடக்கும் பேச்சு போட்டி அறிக்கைகள்....

ஜூலை 27 விஜயகாந்த் பேச்சு
தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டைக் கண்டித்து தேமுதிக சார்பில் தஞ்சாவூரில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் திரண்ட ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,

கர்நாடகத்தில் காவிரி உட்பட மூன்று நதிகள் ஓடுகிறது. ஆனால் நம் மாநிலத்தில் ஒரே ஒரு நதியை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. கர்நாடகா பணக்கார மாநிலமாகவும், தமிழ்நாடு ஏழை மாநிலமாகவும் இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனையை வைத்து கர்நாடகத்தில் அரசியல் செய்கிறார்கள். அதே போல் இங்கும் அரசியல் செய்கிறார்கள்.

தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்குத்தான் திமுக உறவாம். இது எப்படி இருக்கிறது? இலவச டிவி கொடுக்கும் நமது முதலமைச்சர், ஏன் அதற்கான இணைப்பை இலவசமாக கொடுப்பதில்லை?

விவசாயிகளுக்கு விதைப்பதற்கு நல்ல விதையும், விளைந்த விலை பொருட்களுக்கு நல்ல விலையும் கொடுங்கள் என்கிறோம். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் இவ்வாறு கொடுக்க முடியுமா என்கிறார்கள். கண்டிப்பாக நாங்கள் கொடுப்போம்.

விவசாயக் கடனை ரத்து செய்துள்ளோம் என்று மத்திய அரசும், மாநில அரசும் சொல்கிறது. ஆனால், ஏழை விவசாயிகளின் கடனை ரத்து செய்தார்களா? பணக்கார விவசாயிகள் தானே இதில் பலன் அடைகிறார்கள்.

சிறு, குறு விவசாயிகள் என்று கூறும் அரசு, அவர்களுக்கு விவசாயக்கடன் கொடுப்பதே இல்லை. இந்த விவசாயிகள் வங்கிக்கு சென்று கடன் கேட்டாலும் விரட்டப்படுகிறார்கள். இந்த அளவுக்கு மோசமான அரசுதான் இன்று நடந்து வருகிறது.

2 மாதங்களுக்கு முன் உரம் தட்டுப்பாடு இருந்தது. இப்போது உரம் வாங்க ஆள் இல்லை என்று அமைச்சர் சொல்கிறார். விவசாயத்திற்கு தண்ணீரும் கொடுப்பதில்லை, மின்சாரமும் கொடுப்பதில்லை.

நமது முதலமைச்சர் தற்போது டெல்லிக்கு சென்றாரே, ஏன்? நாட்டு மக்கள் பிரச்சனை குறித்துப் பேசவா சென்றார். அவரது பிரச்சனை பற்றி பேச மட்டுமே சென்றார்.

விவசாயிகளை நீங்கள் தேர்தலுக்காக மட்டும்தான் பயன்படுத்துவீர்களா? நாட்டில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வு, மின்சார தட்டுப்பாடு வரும் என்று முன்கூட்டியே மக்களுக்கு தெரிந்திருந்தால் நிச்சயமாக இந்த அரசை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.

மின்சாரத்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் நகர் பகுதிகளில் ஒரு மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 2 மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என்றார். ஆனால் நகர் பகுதியில் 2 மணி நேரமும், கிராமப் பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் தடைப்படுகிறது.

மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கொடுப்பதற்கு தானே அமைச்சராக உட்கார வைத்துள்ளோம். இவ்வாறு மின்சாரத்திற்கு விடுமுறை கொடுத்தால் எதற்காக அந்த பதவி?.

பவர் கட், பவர் கட் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படியே போனால் மக்கள் உங்களின் பவரை ஆஃப் செய்து விடுவார்கள்

ஜூலை - 28 - கலைஞர் கேள்வி பதில் அறிக்கை


கேள்வி :- "விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி'' என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு "தினமணி'' ஒருவரது பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளி யிட்டிருக்கிறதே?

பதில்:- ஆமாம் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் - 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு - விவசாயிகள் கடனை ரத்து செய்ததும் - யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு (ப) வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!

விவசாயிகளுக்காக தி.மு.கழக அரசு செய்தசாத னைகளின் பட்டியல் வேண் டுமா? இதோ :-

இந்தியாவிலேயே முதன் முதலாக 1990இல் தி.மு. கழக அரசு தான் விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின் சாரம்; தொடர்ந்து எத்த னையோ எதிர்ப்புகள், சிரமங்களுக்கிடையிலும் நீடிக்கப்பட்டு அதனால் லட்சக்கணக்கான விவசாயி கள் பயன் பெற்று வருகிறார் கள்.

டிசம்பர் 1996இல் ஏற் பட்ட வெள்ளச்சேதம் காரண மாக விளைபொருள் இழப்புக் காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.

மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச் சேதம் காரணமாக - விவசாயி களுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட் பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அர சினால் ரத்து செய்யப் பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.

இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000/; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000/- நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.

மூன்று குதிரைத்திறன் கொண்ட ஆயில் என்ஜின் களுக்குப் பதிலாக ஐந்து குதிரைத் திறன் கொண்ட ஆயில் என்ஜின்கள் வாங்க சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடு அளவிற்கும், மிகச்சிறு விவசாயிகளுக்கு 30 விழுக்காடு அளவிற்கும், தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இன விவசாயிகளுக்கு 50 விழுக்காடு அளவிற்கும் மானியத் தொகை கழக அரசி னால் வழங்கப் படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப் படும் 13 சதவிகித வட்டி 12 சதவிகிதமாகவும், 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு விதிக்கப் படும் 16 சதவிகித வட்டி 15 சதவி கிதமாகவும் குறைப்ப தென்று 24-10-2000 அன்றைய அமைச்ச ரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக் கப்பட்டுள்ளது.

30-6-99க்கு முன்பு தவணை தவறிய வேளாண்மை சார்ந்த கடன்களுக்கு, 31-7-2000க் குள் வட்டியுடன் கடனைச் செலுத்திய 3,40,727 சிறிய, பெரிய விவசாயிகள் அனை வருக்கும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.

1998-99ல் நடப்புக் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 6.25 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

1999-2000இல் இந்த ஊக்குவிப்புத் தொகை 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை 2,42,817;

நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் வழங் கப்படும் மாத ஓய்வூ தியம் ரூ. 100 என்பது 1997இல் ரூ.150 ஆகவும், 2000-2001இல் ரூ. 200 ஆகவும் தற்போது 2006இல் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 400 ஆகவும் கழக அரசிலே உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த பாதைக்கட்டணம் 2000-2001இல் கழக அரசில் ரத்து செய்யப் பட்டுள்ளது.

விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப்பாதுகாக்க கழக அரசில் திரு.கோலப்பன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு அமைக் கப்பட்டு - அவரது பரிந்துரை களையேற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது.

விவசாயத் தொழிலாளர் களுக்கென்று தனியாக நல வாரியம் ஒன்று தொடங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு 1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேர் இது வரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு -இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 7 விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர் கள் குடும்பங்களுக்கு 159 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 963 ரூபாய் உத வித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தை களை தமிழகமெங்கும் அமைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல விலையிலே விற்கவும், வாங்கிப் புசிப்போர் நியாய விலையிலே அவைகளைப் பெறவும் வழி வகை செய்ததும் தி.மு. கழக அரசு தான்.

2006ஆம் ஆண்டு பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே பிறப் பிக்கப்பட்ட மூன்று ஆணைகளில் ஒன்றே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்தது தான். கடன்களை ரத்து செய்தது மாத்திரமல்லாமல், புதிய கடன்களை அவர்கள் 1500 கோடி ரூபாய் அளவிற்கு பெறவும் நிதி நிலை அறிக்கையிலே வசதி செய்யப்பட்டது.

விவசாயிகளின் கடன் களுக்கான வட்டி வீதத்தை 2006-2007இல் 9 சதவி கிதத்திலிருந்து 7 சத விகிதமாகக் குறைத்து, அதனை 2007-2008இல் 5 சதவிகிதமாக மேலும் குறைத்து, அதுவும் போதா தென்று இந்த ஆண்டு முதல் வட்டி வீதத்தை 5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைத்துள்ள ஆட்சியும் தி.மு. கழக ஆட்சி தான்.

நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப்பண்படுத்தி இலவசமாக
அளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

2008-2009ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள் முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 850 ரூபாய் என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 880 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்து அறிவித்தவுடன், தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய் என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கேள்வி :- காவேரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயிகளை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் தினமணியில் விஷம் கக்கி யிருக்கிறாரே?

பதில்:- காவேரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டு மேயானால் - அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்ட தால்; தமிழக தி.மு.க. அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதி யான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவ சரக்கார அரசியல் வாதி கள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்ச நீதி மன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும் - அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவேரித் தண்ணீரை தமி ழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபர மறிந்த வர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கி றார்கள்.

கேள்வி:- வருமான வரித்துறைக்குப்பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிர முகர் பேசியதாக பிரசுரித் திருக்கிறதே?

பதில்:- வருமான வரிக்குப்பயந்து இப்போது காங்கிரஸ் காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!

கேள்வி :- "ஒகேனக்கல்'' கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப்பிரமுகர் உளறியிருக்கிறாரே?

பதில் :- பாவம்; ஒகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது - ஒகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என் கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிதி ஆதாரத்தைத் தேடிய நேரத்தில் ஜப்பான் நாட்டு உதவியை நாடி யிருந்தோம். அப்போது "பொக்ரான்'' குண்டு பரி சோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.

அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற் கொள்ளப்பட்டு,
அது வும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது
உண்மை. ஆனால் 2006இல் தி.மு.கழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடன் பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித்துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது.

இத்திட்டம் மத்திய அரசு சார்பிலும் - மாநில அரசுகள் சார்பிலும் பேசப்பட்டு - பிரச்சினைகள் இல்லாமல் விரைவில் நிறைவேற்றப்பட்டு - தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச் சினை தீர்க்கப்பட இருக்கிறது.

விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசா யிகளின் நண்பனாகி விட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என் பதையும் எழுதியுள்ளது. "போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்ற வாறு அவர் பேசத் துவங் கினார்.

அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தக வலையே திரும்பத்திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார்.

தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்து கொண்டார். காவிரி பிரச் சினை உட்பட பல தகவல் களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய் தது'' என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந் தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

ஜூலை - 30 - விஜயகாந்த் பதிலடி
தஞ்சையில் விவசாயிகளுக்காக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நான் பேசியதற்கு முதல்வர் கருணாநிதி, தனக்கே உரிய பாணியில் கேள்வி கேட்டு பதிலும் அளித்துள்ளார்.


நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு, மக்களை திசை திருப்பும் வகையில் பதில் அளித்துள்ளார். காவிரி பிரச்னையில், 1971ல் அன்றைய பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சுப்ரீம் கோர்ட்டில் நடுவர் மன்றம் அமைக்க கோரிய வழக்கை கருணாநிதி திரும்பப் பெற்றார். அன்று திரும்ப பெறாமல் இருந்திருந்தால் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, 1974ம் ஆண்டிலேயே தீர்ப்பு கிடைத்திருக்கும். 34 ஆண்டுகளில் கர்நாடகம் பாசனப் பகுதியை அதிகரித்துவிட்டு இன்று தீராத தலைவலியாக ஆகியிருக்காது.இலங்கைக்கு கச்சத்தீவை வழங்க இந்திரா 1974ல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கருணாநிதி உடன்பட்டார். இதனால், இன்று வரை கடலோர மீனவர்கள் உயிருக்குப் போராடுகின்றனர். ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 1998ல் நிறைவேற்ற அனுமதி பெற்றிருந்தும், கர்நாடகம் தனது பெங்களூரு குடிநீர் திட்டத்தை நான்கு ஆண்டுகளில் முடித்துவிட்டது.


தமிழகத்தின் பங்கான ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை இன்று வரை நிறைவேற்றாதது மட்டுமல்ல, சோனியா கேட்டுக்கொண்டதால், தமிழக மக்களின் போராட்டத்தையும் கருணாநிதி ஒத்திவைத்தார்.இதனால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று நான் கூறினால், அதை பிதற்றல் என்கிறார். பிறர் கேட்கும்போது தனது சொந்த நலனை விட்டுக்கொடுக்கலாம்; நாட்டு நலனை விட்டுக்கொடுக்கலாமா?சாதனைகளை மற்றவர்கள் தான் பேச வேண்டும். விவசாயிகளுக்கு அளித்த சலுகைகளை கருணாநிதி பட்டியல் போடுகிறார். பேராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் பட்டியல் எங்கே என விவசாயிகள் கேட்கின்றனர்.


வருமான வரிக்கு பயந்து காங்கிரசார் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பதாக கேலி பேசியுள்ளார். என் சொத்துக்கள் எல்லாம், நான் உழைத்து சேர்த்த சொத்துகள். வருமான வரிக்குப் பயந்து யார் வீட்டு வாசலிலும் காத்துக் கிடக்கவில்லை. ஊழல் செய்து சொத்து சேர்த்தவர்கள் தான் பயப்பட வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து வழக்கிலோ, கோதுமை பேர ஊழலிலோ சிக்கிக் கொண்டு சிறை செல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைமையின் காலில் விழ வேண்டிய அவசியமும் இல்லை. இன்றும் பதவிக்காக டில்லியில் காத்துக் கிடப்பது யார் என்று நாட்டுக்குத் தெரியும்.


எம்.ஜி.ஆர்., ஆட்சியில் வீரப்பன் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது, திருச்செந்தூர் கோவிலில் வேல் காணாமல் போனது என்றும், சுப்பிரமணிய பிள்ளை கொலை செய்யப்பட்டார் என்றும் கூறி கருணாநிதி நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். அப்போது அவராகவே முண்டாசு கட்டிக்கொண்டார். தஞ்சையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தின்போது சில ஏழை விவசாயிகள் தங்களது துண்டுகளை தூக்கி எறிந்து முண்டாசு கட்டிக்கொள்ளச் சொன்னார்கள். அவர்களின் விருப்பத்தின்படி முண்டாசு கட்டினேன்.அவராகவே கட்டிக்கொண்ட முண்டாசு நீதி கேட்கத் தகுதியுடையது என்றால், நான் கட்டிக் கொண்ட விவசாயிகளின் துண்டு நீதி கேட்க தகுதியில்லையா?


கேப்டன் அடிச்சாரு சிக்ஸர்

0 Comments: