பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 25, 2008

பாலசுப்பிரமணியனுக்கு உதவிகள் வந்து சேர்ந்தது !

இன்ஜினியரிங்கில் சீட் கிடைத்தும் தீப்பொட்டி ஒட்டும் மாணவன் என்ற செய்தியை இங்கே பதிவு செய்தேன். இன்றைய தினமலரில் மாணவர் பாலசுப்பிரமணியனுக்கு உதவிகள் வந்து சேர்ந்தது என்று செய்தி வந்திருக்கிறது.

இட்லிவடை வாசகர்கள் அந்த மாணவனுக்கு உதவினார்கள். அவர்களுக்கு என் நன்றி. 1995 பதிவில் அட்லீஸ்ட் ஒரு உபயோகமான பதிவு போட்டேன் என்ற திருப்தியுடன்

இட்லிவடை.

ஸ்ரீவில்லிபுத்தூர்:அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ.,படிக்க இடம் கிடைத்தும் படிக்க பணமின்றி தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்ட மாணவர்,தினமலர் செய்தியின் எதிரொலியால் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(17).பிளஸ் 2 தேர்வில் 1106 மதிப்பெண் பெற்றார். இயற்பியலில் 199, வேதியியலில் 197, கணிதத்தில் 192 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்தார்.


கட் ஆப் மதிப்பெண் 195 பெற்று திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரி யில் பி.இ., "எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்'படிக்க இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், குடும்பம் மிக ஏழ்மை நிலையில் இருந்ததால் கல்லூரி விடுதிச் செலவு, புத்தகங்கள் உட்பட செலவுக்கு பணம் இல்லாததால் இடம் கிடைத்தும் படிக்க முடியாமல் தீப்பெட்டி ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.


இதுகுறித்து, கடந்த 17ம் தேதி தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, அவருக்கு பலர் நிதி உதவி செய்ததை அடுத்து, தற்போது அவர் திரு நெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் இந்த மாணவரின் எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
( நன்றி: தினமலர் )

9 Comments:

enRenRum-anbudan.BALA said...

Great work (for a change:)) IV,

Glad to see that a very deserving student got the help to pursue his dream !

venkatramanan said...

இட்லிவடை!
வலைப்பதிவின் வீச்சு மற்றுமிய்ருமுறை 'தமிழகத்தில்' நிரூபிக்கப்பட்டுள்ளது! ஆனால் தினமலர் அதை வசதியாக மறைத்து விட்டதென்று நினைக்கிறேன்!
மிகவும் நன்றி & வாழ்த்துக்கள்!
தொடரட்டும் இதுபோன்றவை!

//1995 பதிவில் அட்லீஸ்ட் ஒரு உபயோகமான பதிவு போட்டேன் என்ற திருப்தியுடன்//
முதலில் 1995ஐ வருடம் என்றெண்ணி குழம்பி விட்டேன்! அப்புறம்தான் தெளிவானேன்! அப்போ 2000த்தை நோக்கியா?! வாவ்! அதற்கு இன்னொரு வாழ்த்துக்கள்!

Vijay said...

Good Job!

Ram said...

Any arts college student, who has admission, and waiting for some help.

Please post such stories.

Let us all help!

Anonymous said...

Venkat... you r 50% correct.... bala got nearly 70% of amt for his studies with help of our idlyvadai blog... Mr.Suresh contribution was higest in it. I think dinamalar is not aware of the blog activities we performed for helping bala.... their agent contacted bala yesterday (caz they published the first news on last week Thursday edition) to cross check with bala abt his admission and now they again published the good news.....

-Vignesh
( Comment edited )

மடல்காரன் said...

Great Job. IV..

Keep on Moving.. successfully towards 2000th Post !

anbudan, Balu K.

Arunvijai said...

Well done Idly!

DreamIndia2020 said...

Dream India 2020 has contributed 15,000 Rs

ச.சங்கர் said...

நல்ல செய்தி. வாழ்த்துக்கள்.

தமிழ் வலையுலகம் நல்ல விஷயங்களுக்கும் பயன் படுத்தப் பட முடியும் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு. தினமலர் வலைப் பதிவில் வாயிலாக உதவி வந்ததாகவும் ஒரு வார்த்தை குறிப்பிட்டிருக்கலாம்.:)

கல்விக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.