பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 30, 2008

ஆபீஸ் பையன் பதில்கள்

முரசொலியில் வந்த ஆபீஸ் பையன் பதில்கள்

முரசொலி - 28.7.08
( டாக்டர் ராமதாஸ் அவர்களின் அண்மைக் காலப் பேட்டிகள் நமது ஆபீஸ் பையனை எல்லாம் பதில் சொல்ல வைத்துள்ளது - மன்னிக்கவும். )

டாக்டர் ராமதாஸ் :- "எம்.ஓ.யு. கலைஞர்" என்று நான் கலைஞருக்கு ஒரு பட்டப் பெயர் கொடுக்கிறேன்.

ஆபீஸ் பையன்:- ஜெயலலிதா ராமதாசுக்குக் கொடுத்த "மரம் வெட்டி" என்ற பட்டப் பெயர் போல இது இல்லையே?

டாக்டர் ராமதாஸ் :- கடந்த இரண்டு வருடமாக; தமிழக அரசு ரியல் எஸ்டேட் வியாபாரம்தான் செய்து வருகிறது.

ஆபீஸ் பையன்:- பணக்கார முதலாளிகளை பயமுறுத்தி கமிஷன் வியாபாரம் நடத்துகிறவர்கள்; இப்படித்தான் பிறர் மீது சேறு வாரி இறைப்பார்கள்! மருத்துவக் கல்லூரிக்கு இவர்கள் வாங்குகின்ற கமிஷன் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பா?

டாக்டர் ராமதாஸ் :- குரு பேசியதை ஒட்டுக் கேட்டதற்காக ஒட்டுக் கேட்பு புகழ் கலைஞர் என்று அழைக்கிறேன்.

ஆபீஸ் பையன்:- குருவிற்கு ஆதரவாக எப்போதும் ராமதாஸ் பேசுகிறார் என்பதால், "சண்டியர் புகழ் ராமதாஸ்" என்று நாமும் அழைக்கலாமே?

டாக்டர் ராமதாஸ் :- தமிழகத்தில் உள்ள காலி இடங்களையெல்லாம் டாட்டா, டி.எல்.எப். கம்பெனிகளுக்கு கொடுக் கிறார்களே?

ஆபீஸ் பையன்:- இதே கேள்வியை பல முறை கேட்டு டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டதற்கெல்லாம் நெற்றியிலே அடிப்பதைப் போல விவரமாக முதல்வர் கலைஞர் பதில் அளித்திருக்கிறாரே; அதையெல்லாம் ராமதாஸ் படிக்கிறாரா? இல்லையா?

டாக்டர் ராமதாஸ் :- தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் போட வேண்டும் என்றால் தி.மு.க. வில் 90 சதவிகிதம் பேரை போடலாம்.

ஆபீஸ் பையன்:- தி.மு.க.விலே உள்ள பேச்சாளர்கள் எல்லாம் அவனைக் கொலை செய்வேன், இவனைக் கொலை செய்வேன், எவனும் மயிரைப் புடுங்க முடியாது என்றெல்லாம் வாய்க்கொழுப்பெடுத்தா பேசுகிறார்கள்? கட்சிக்காரனை மரியாதையாகப் பேசச் சொல்லி கண்டிக்க யோக்கியதை இல்லை. இதில் வறட்டு ஜம்பத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

டாக்டர் ராமதாஸ் :- நாங்கள் தி.மு.க. வினரை பல ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க வைத்திருக்கிறோம்.

ஆபீஸ் பையன்:- திண்டிவனம் கொலை வழக்கிலிருந்து தப்பியது மறந்து விட்டதா அய்யாவுக்கு?

டாக்டர் ராமதாஸ் :- தமிழகத்தில் நந்தி கிராமம் வராமல் தடுத்தது பா.ம.க. தான்.

ஆபீஸ் பையன்:- தமிழக அரசின் ஒவ்வொரு சாதனைக்கும் நந்தியாக நீங்களே இருக்கும்போது நந்தி கிராமம் எப்படி வரும்?

டாக்டர் ராமதாஸ் :- தமிழகத்திலே மின்வெட்டு - ஆற்காட்டிற்கு அனைத்து தரப்பினரும் சாபம்!

ஆபீஸ் பையன்:- நீங்கள் ஜெயலலிதா விற்கு கொடுத்த சாபங்களை விடவா? பார்ப்பதற்கு நேரம் கொடுக்காமல் அலைக் கழித்தார் என்று நீங்கள் கொடுத்த சாப அறிக்கைகள் இன்றும் பழைய ஏடுகளில் உள்ளதே?

டாக்டர் ராமதாஸ் :- இசை வேளாளர் சமுதாயத்தை மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நான்தான் காரணம்!

ஆபீஸ் பையன்:- இசைவேளாளர் சமுதாயம் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றது காமராஜர் ஆட்சியிலே இருந்த போதுதான்! பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டாமா?

டாக்டர் ராமதாஸ் :- இட ஒதுக்கீட்டிற் காக பத்து முறை சிறை சென்றிருக்கிறேன்?

ஆபீஸ் பையன்:- தைலாபுரம் போய் வந்ததை எல்லாம் சிறை என்கிறார்போலும்! ஒரே ஒருமுறை ஜெயலலிதா இவரைப் பிடித்து உள்ளே போட்டதும், மனைவியையே ஜெயலலிதாவிடம் சமரசத்திற்கு அனுப்பிய வீராதி வீரர் அல்லவா இவர்?

டாக்டர் ராமதாஸ் :- வன்னியர்கள் யாரும் உயர்ந்த பொறுப்பில் இல்லை.

ஆபீஸ் பையன்:- தேர்வாணையத்தில் வன்னியர் யாரும் உறுப்பினராக இல்லை என்று நீங்கள் கடிதம் எழுதி, ராமசாமி என்பவரை நியமிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியவுடன் அவரை நியமித்து ஆணை பிறப்பித்தவர் கலைஞர் என்பதை அதற்குள்ளாகவா மறந்து விட்டீர். அந்தத் தேர்வாணையத்தின் தலைவராகவே ஒரு வன்னியரைத்தான் கலைஞர் நியமனம் செய்திருக்கிறார். தேர்தல் ஆணையத் தலைவராகவும் பணி நீடிப்பு கொடுத்து ஒரு வன்னியரைத்தான் கலைஞர் நியமித்திருக்கிறார். சேலம், திருநெல்வேலி பல்கலைக் கழகங்களில் வன்னியர்கள்தான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மூன்று அமைச்சர்களாக வன்னியர்கள் இடம் பெற்றிருப்பதே இந்த ஆட்சியிலே தானே?

டாக்டர் ராமதாஸ் :- முரசொலியில் சின்ன குத்தூசி என்ற பெயரில் ஒரு பக்கம் எழுதுவார்.

ஆபீஸ் பையன்:- சின்னக்குத் துhசி "தமிழ் ஓசை பாலா" அல்ல.

டாக்டர் ராமதாஸ் :- நீங்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக வந்திருக்கிறீர்கள். இதுவரை என்ன சாதனை செய்திருக்கிறீர்கள்? மேடை போட்டு பேச நான் தயார், நீங்கள் தயாரா?

ஆபீஸ் பையன்:- உங்களோடு வாதாட முதல்வர் வேண்டாம், நானே தயார்! எப்போது வைத்துக் கொள்ளலாம். வன்னியர் பயன் பெற வேண்டுமென்பதற்காக 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கொடுத்த ஒரு சாதனை போதாதா? கலைஞர்தான் சாதனையே செய்யவில்லையே, பிறகு எதற்காக 2006ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் உறவு கொள்ள வந்தீர்கள்? எப்படியாவது வெற்றி கிடைத்து விடும் என்ற அற்பப் புத்தியினால் தானே? மேடைக்கு மேடை வானளாவ புகழ்ந்தீரே, பாராட்டி கடிதம் எழுதினீரே, ஏடுகளில் எல்லாம் வெளிவந்ததே? அதெல்லாம் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வாய்ஜாலம் காட்டிய வஞ்சகமா?

டாக்டர் ராமதாஸ் :- மரக்காணத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப் போவதாகச் சொல்கிறீர்கள். இதை காதில் பூ வைத்தவன் கூட நம்ப மாட்டான்.

ஆபீஸ் பையன்:- ஆமாம், நீங்கள் நம்பத் தான் மாட்டீர்கள்!

டாக்டர் ராமதாஸ் :- உங்கள் அதிகாரிகளுக்கு வகுப்பெடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆபீஸ் பையன்:- வகுப்பெடுத்துக் கொள்ளத்தான் யாரும் தயாராக இல்லை. முதலில் நீங்கள் எப்படிப் பேசுவது, எப்படி அறிக்கை விடுவது, எப்படி பழகுவது என்பதற்கு யாரிடமாவது வகுப்பெடுத்துக் கொள்வது நல்லது.

டாக்டர் ராமதாஸ் :- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆபீஸ் பையன்:- தி.மு.க. பட்டது போதாதா?

டாக்டர் ராமதாஸ் :- பா.ம.க.வின் கொள்கை மற்றும் தி.மு.க.வின் கொள்கை பற்றிப் பேசத் தயாரா?

ஆபீஸ் பையன்:- பா.ம.க.வுக்கு கொள்கையா? பலே! பேஷ்!




தொடர்புடைய ஜூவி கழுகார் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்....

'' 'முரசொலி'யைப் பார்த்தீரா? டாக்டர் ராமதாஸ் மேடையில் பேசியதற்கு வார்த்தைக்கு வார்த்தை 'ஆபீஸ் பையனை' விட்டு பதில் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். எப்போதும் போல கடந்த 26-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. மீது வசைபாடிய டாக்டர் ராமதாஸ், ஆற்காட்டாரை கொஞ்சம் கூடுதலாகவே காய்ச்சி எடுத்துவிட்டார். அதற்கு பதிலடிதான் ஆபீஸ் பையன் பதில்...''

''டாக்டர் அப்படி என்னதான் பேசினார்?''

''பா.ம.க. தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் முடிவதையட்டி சென்னை சைதாப்பேட்டையில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாட்டாளிகளின் சிரமங்களையெல்லாம் பட்டியலிட்ட டாக்டர், அதில் மின்வெட்டை ஹைலைட் செய்தார். 'எனக்குப் பழி, பாவம், சாபம் ஆகியவற்றில் நம்பிக்கை கிடையாது. ஆனால் ஒரு விவசாயி, லேத் பட்டறை தொழிலாளி, மில் தொழிலாளி என பாட்டாளி சமூகத்தின் சாபமெல்லாம் சாமியை சும்மா விடாது. அந்தச் சாமி எந்தச் சாமின்னு உங்களுக்குத் தெரியும்' என்று பெயர் குறிப்பிடாமல் ஆற்காடு வீராசாமியை ஒரு பிடிபிடித்தார். இதற்குத்தான் முரசொலியில், 'நீங்க ஜெயலலிதாவுக்கு கொடுத்த சாபங்களை விடவா?' என்று ஆபீஸ் பையன் மூலமாக டாக்டருக்கு கேள்வி வைத்திருக்கிறது தி.மு.க.''


7 Comments:

Mani-bahrain said...

Let office boy support DMK no problem. But both (DMK AND PMK)are criminals and cheating to the public. We cannot believe.

மாயவரத்தான்.... said...

கருணாநிதியின் இந்த ஆபீஸ் பையன் அவதாரம் தான் அப்படியே பொருந்துகிறது.

அது சரி மொத்தமா பத்து பேரு கூட சீண்டாத பதிரிகை செய்திகளை எடுத்து அளிக்கும் இட்லி வடைக்கு பாராட்டுகள்.

Anonymous said...

அப்படியானால் இத்தனை நாளாய் ராமதாசுக்கு பதில் அறிக்கை விட்டதெல்லாம் ஆபிஸ் பையனா,
கருணாநிதியில்லையா :)

baskar596 said...

கருணாநிதி தான் "ஆபீஸ் பையன்"

Vinavu said...

http://vinavu.wordpress.com

சந்திரமௌளீஸ்வரன் said...

சீக்கிரம் வயித்து வலி மாத்திரை அனுப்பவும்.. சிரித்து சிரித்து வரும் வலிக்கு என்று டாக்டரிடம் சொல்லி கேட்டு வாங்கவும்

டாக்டர் என்றால் (பெரிய அய்யா, சின்ன அய்யா நீங்கலாக என்று வாசிக்கவும்)

Anonymous said...

"ராமன் தேடிய சீதை" பட விழாவில் சேரன் பேச்சினை கவனித்தீர்களா?