பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 22, 2008

தயாநிதி மாறன் பேட்டி - அழகிரி போர்க்கொடி

தயாநிதி மாறனை திமுகவின் அடிப்படை பொறுப்பிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கியதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என்று திமுக கொறடா கட்டளை பிறப்பித்த பிறகு தயாநிதிமாறன் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தது கட்சியின் தலைமைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அண்ணா அறிவாலயத்தி லிருந்து சன் டிவி அலுவலகத்தை காலி செய்யும்போது, கட்டிடத்தை சேதப்படுத்தியிருப்பதை பார்த்து கருணாநிதி அதிர்ச்சியும், கடும் கோபமும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
.
மறைந்த முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை திடீரென அரசியலுக்குக் கொண்டு வந்து எம்பி ஆக்கிய கருணாநிதி, உடனடியாக மத்திய கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி பெற்றுத் தந்தார். அப்போதே மு.க.அழகிரி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக மூன்றாண்டு காலத்திற் கும் மேல் பணியாற்றிய தயாநிதி மாறன் டெல்லி வட்டாரத்தில் திமுகவின் ஏக பிரதிநிதியாகச் செயல்பட்டார். டி.ஆர்.பாலு போன்ற மூத்த அமைச்சர்களுக்கும் மேலாக டெல்லித் தலைவர்களிடம் செல்வாக்கை உருவாக்கிக்கொண்டு செயல்பட்ட இவர் மீது கடந்த ஆண்டு திமுக உயர்நிலைக்குழு திடீர் நடவடிக்கை எடுத்து அவரின் அமைச்சர் பதவியை பறித்தது.

இதற்கு மு.க. அழகிரி தான் காரணம் என்று கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து கருணாநிதி குடும்பத்தின ருக்கும், தயாநிதி மாறன் குடும்பத்தி னருக்கும் இடையே பிளவு உருவாகி றது. ஒரு கட்டத்தில் கருணாந்தியை மாறன் சகோதரர்கள் சந்திக்க கூடாது என்று வெளிப்படையாகவே அழகிரி அறிவித்தார்.

இதனிடையே திமுக எம்பி பதவியில் தொடரும் தயாநிதி மாறன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அழகிரி மீது மறைமுகத் தாக்குதல் தொடுத்தார். திமுக வேட்பாளர்கள் 12 பேருக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தினேனா? முன்னாள் சபாநாயக ரைத் தோற்கடிக்க வேலை செய்தேனா? என்றெல்லாம் பேசியது அழகிரிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் கடந்த மூன்று நாட்களாக சென்னையி லிருந்த அழகிரி, தயாநிதி மாறனை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி யுடன் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டு, நேற்று மதியம் விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்று விட்டாராம்.

தயாநிதியை நீக்கிய பிறகு தான் சென்னை வருவேன் என்று அழகிரி கூறிச் சென்றதாகத் தெரிகிறது. காங்கிரசுக்கு ஆதரவாக திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கட்சிக்கொறடா கட்டளை பிறப்பித்த பிறகு தயாநிதிமாறன் பேட்டி அளித்தது கட்சித்தலைமையை ஆத்திரமடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களைப்போல் இல்லாமல் எம்பிக்களுக்கு இந்த முறை தந்தி அனுப்பப்பட்டது மட்டு மல்லாமல், பதிவு செய்யப் பட்ட தபாலிலும் உத்தரவு அனுப்பப் பட்டதாக கட்சித்தலைவர்கள் தெரிவித்தனர். இதைப்பெற்றுக்கொண்டதற்கு எம்பிக்கள் கையெழுத்துப்போட்டு நகல்களை அனுப்பியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அப்படியிருக்கையில், தயாநிதி மாறன் பேட்டி கொடுத்தது கட்சித் தலைவர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

இது தொடர்பாக அறிவாலயத்தில் கருணாநிதி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினாராம். டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கான வாக்கெடுப்பு முடிந்ததும் ஒரு வார காலத்தில் தயாநிதி மீது நடவடிக்கை வரும். கட்சியிலிருந்து அவர் நீக்கப் படுவார் என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவாலயம் சேதம்

அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் டிவி அலுவலகத்தை முற்றிலுமாக அண்மையில் காலி செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அந்த இடத்தை திமுக தலைவர் கருணாநிதி சென்று பார்த்திருக்கிறார்.

தரையில் இருந்த ஓடுகள் பெயர்க்கப்பட்டு கிடந்தன. சன் டிவி அலுவலகம் இருந்த பகுதியில் உள் அலங்கார கூரை சேதப்படுத்தப்பட்டு, கீழே வாரி இறைக்கப்பட்டு கிடந்தது. கழிவறையைக்கூட சேதப்படுத்தி சென்றிருப்பதைப்பார்த்து கருணாநிதி அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்ததாக அவருடன் சென்ற மூத்த தலைவர் ஒருவர் வேதனையோடு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு செங்கலாக எடுத்து இந்த அறிவாலயத்தை கட்டிய திமுக தலைவர் இப்படிப்பட்ட சேதம் நடந்திருப்பதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்ததாக அந்த பிரமுகர் மேலும் கூறினார். தொண்டர்களிடம் பணம் திரட்டி பல்வேறு இன்னல்களுக்கிடையே கட்டப்பட்ட அறிவாலய கட்டிடத்தில் இத்தகைய அலங்கோலம் செய்தவர்களை மன்னிக்க இயலாது என்றும், இதை திமுக தொண்டர்கள் அறிந்தால் அவர்கள் ஆவேசம் அடைவார்கள் என்றும் அந்த பிரமுகர் கூறினார்.

கருணாநிதி குடும்பத்துடன் ஏற்பட்ட சண்டைக்கு சமரசம் ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த வன்முறை செயல்கள் மூலம் அந்த இணைப்பு பாலத்தையே அவர்கள் எரித்து விட்டு சென்றுவிட்டதாக திமுக புள்ளிகள் வேதனையோடு குறிப்பிட்டனர்.

தொடர்புடைய செய்தி: இங்கே
Yellow

4 Comments:

Anonymous said...

கட்டிடத்துக்கான சேதங்குறித்து வரும் கோபத்தில் பத்தில் ஒரு பாகமாவது தா.கி. கொலையில் வந்தால் தமிழகம் கொஞ்சம் உருப்படும்!

Anonymous said...

எப்படியோ புதுசா ஒரு முன்னேற்ற கழகம் உருவாக போகுது. இந்தியாவிலேயே அதிக கட்சிகள் உள்ள மாநிலம்னு பெருமை நமக்கு வந்தா சரிதான்.

Anonymous said...

No news about dayanidhi maran in dinamalar why.

Any idea vadai

Murali

நாரத முனி said...

அனானி, சன்னுக்கும் தினமலருக்கும் டூ கா னு தெரியாதா?

2011 க்கு இன்னொரு சிஎம் கேண்டிடேட் ரெடி