பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 21, 2008

ஜனநாயக விபச்சாரம்

"ஒரு நல்ல விஷயத்துக்காகப் போராடி அதனால் இந்த அரசு கவிழுமேயானால், அதற்காக நாம் வருத்தப்படத் தேவையில்லை" - ராகுல் காந்தி

மாயாவதியைப் பழி வாங்கக் காங்கிரஸின் துணையை நாடியிருக்கிறார் முலாயம்சிங் யாதவ்.

அண்ணன் முகேஷ் அம்பானியை பழி வாங்க அனில் அம்பானி இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறார்.

நான் காயப்பட்டாலும் கண்ணியம் காப்பேன், என்னைக் களங்கப்படுத்த நினைத்தாலும் என் கடமையைச் செய்வேன். காரணம் நான் முரசொலி மாறனின் மகன் - தயாநிதி மாறன்.

என் மகன் குமாரசாமிக்கு மத்திய மந்திரி பதவி அளிக்க வேண்டும் - தேவேகவுடா

குருவின் விடுதலைக்கும் நாங்கள் போடும் ஓட்டுக்கும் சம்பந்தம் இல்லை - ராமதாஸ்கேட்ட விலை தரப்பட்டதால் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 5 எம்.பி.க்கள் அரசை ஆதரிக்கிறார்கள்.

உறுப்பினர்கள் விலை பேசப்படுகிறார்கள் என்றால், "பிரதமர்' பதவி விலை பேசப்படுகிறது என்று அர்த்தம். பிரதமர் பதவிக்கு விலை தரப்படுகிறது என்றால், ஜனநாயகம் விலைபோகிறது என்று அர்த்தம்.

- செய்தி
( இதற்கு பேர் தான் ஜனநாயக விபச்சாரம்)

மக்களவையில் நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பதிவாகும் எனக் கருதப்படும் வாக்குகள் விவரம்...

மொத்தம் இடங்கள்...............545
காலியிடங்கள் ..........................2
மக்களவைத் தலைவர்...............1

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி.... 266

காங்கிரஸ்...............................151
சமாஜவாதி..............................35
ராஷ்ட்ரீய ஜனதா தளம்............24
திமுக .......................................16
தேசியவாத காங்கிரஸ்...............11
பாமக........................................6
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா....5
லோக் ஜனசக்தி ........................ 4
போட்டி மதிமுக........................2
எம்ஐஎம் ...................................1
பிஎன்பி ....................................1
பிடிபி .......................................1
எஸ்டிஎஃப் ...............................1
ஐயூஎம்எல்................................1
ஆர்பிஐ ....................................1
போட்டி பாஜக.........................2
போட்டி ஐக்கிய ஜனதா தளம்....2
சுயேச்சைகள்.............................2

எதிர்க்கட்சிகள்......................265

பாஜக.........................................128
மார்க்சிஸ்ட்.............................41
பகுஜன் சமாஜ்..........................17
சிவசேனை................................12
பிஜு ஜனதா தளம்.....................11
இந்திய கம்யூனிஸ்ட்..................10
ஐக்கிய ஜனதா தளம் ...................6
சிரோமணி அகாலி தளம்............8
தெலுங்கு தேசம்.........................5
போட்டி சமாஜவாதி..................4
பார்வர்ட் பிளாக்........................3
ஆர்எஸ்பி ..................................3
மதச்சார்பற்ற ஜ.தளம்.................3
ராஷ்ட்ரீய லோக் தளம்...............3
தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி....3
மதிமுக.......................................2
அசாம் கண பரிஷத்....................2
போட்டி காங்கிரஸ்....................2
கேரள காங்கிரஸ்........................1
சுயேச்சை...................................1

முடிவு செய்யாதவை...............10

மதி கார்ட்டூன்ஸ்


இட்லிவடை சர்வே


கடைசி செய்தி:
ஜெ கொடநாடு எஸ்டேட்டில ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

10 Comments:

தம்பி said...

இட்லிவடையண்ணே!

கர்நாடகாவிலே 2 மாசம் முன்னாடி ஜனநாயக விபச்சாரம் நடந்ததேண்ணே! அப்ப கண்ணை மூடிகிட்டீங்களா அண்ணே!

IdlyVadai said...

தம்பி,
அது சின்ன லெவல் விபச்சாரம்,
இது பெரிய லெவல் விபச்சாரம்
அவ்வளவு தான்.

Anonymous said...

//ஜெ கொடநாடு எஸ்டேட்டில ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்//

ஒரு MP கிடையாது. அப்பறம் வேற என்ன பண்ணுவாராம்?

Anonymous said...

விபச்சாரம் என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பதை கண்டிக்கிறேன்.
இங்கு நடப்பது ஒட்டு பேரம்.விபச்சாரம் என்பது ஒரு சேவை,அவ்வளவுதான். அரசு இருப்பதை அது தீர்மானிக்கவில்லை.
எனவே வேறு வார்தையை பயன்படுத்தவும்.விபச்சாரத்தை
சட்டரீதியாக அங்கீகரிக்கும்
நாடுகளும் உண்டு.

Narayan said...

Congi style Democracy....

Accepting Bellary MP resignation
Accepting MDMK/BJP defectors’ votes
Denying all Congi defectors’ votes.

Congis seem to be in full swing in their democrazy. Looks like MMS will get the final wire transfer from CIA in his personal deal.

Arun said...

//ஜெ கொடநாடு எஸ்டேட்டில ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்//

ரெஸ்ட் எடுத்து டய்ர்ட் ஆயி ரெஸ்ட் எடுக்கராங்களாம்!!

இவங்க எல்லருக்குமா சேத்து ஒரு அந்நியன் வந்தா தேவல.. யாரு கண்டா.. அப்பிடி ஒருத்தன் வந்தா, அவனுக்கு ஒரு விலை குடுப்பானுங்க..

Anonymous said...

அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் சரி வெற்றி பெறாவிட்டாலும் சரி. அத்வானியின் பிரதமர் கனவு கலையப்போவது உறுதி. 3 வது அனி பலமாக அமைவதால் நிச்சயம் அத்வானி பிரதமாராக வாய்ப்பே இல்லை.

Anonymous said...

இட்லி வடைக்கு கேள்விகள்.
1) அணு ஒப்பந்தத்தை ஆதரிக்கிறீர்களா?
2) மர்ம யோகி, கல்கியின் "பார்த்திபன் கனவு" நாவலை தழுவியதா?

நாரத முனி said...

அனானி அண்ணாச்சி, முழிச்சுகோங்க.
(மூன்றாவது அணியினர் : " டேய் ஜெய் சுக்கு இன்னுமாடா ஊர் நம்மள நம்பிகிட்டு இருக்கு)

Anonymous said...

நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் மீன்டும் பேச்சு வார்த்தை நடத்தி அனு சக்தி ஒப்பந்தம் நிறை வேற்றப்படும். உங்க அத்வானி சொன்னதுதான்.

பாவம் அத்வானிக்கு இப்ப எதுக்கு பார்லிமென்ட்ல இருக்கோம்னு மறந்துருக்கும் போல இருக்கு.
அத்வானி ஒரு ஞாபக மறதிக்காரர்னு ஜெ. சரியாத்தான் சொன்னாங்கப்பு

நாரதா இந்த ஒன்னே போதும். உங்க டயலாக் ரீபீட்டு அப்பு.