பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 20, 2008

தயாநிதியின் நிலை

சன் நியூஸ் தொலைக்காட்சியில் தயாநிதி மாறன் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்குகிறார் இன்னும் சில நிமிடங்களில்..

Updates follow...

எராலமான தொண்டர்கள் குவிந்துள்ளார்கள் - சன் நியூஸ்

காயப்படுத்தினாலும் கண்ணியம் காப்பேன் ஏன் என்றால் நான் முரசொலி மாறன் மகன் - தயாநிதி மாறன்

I dont know why I was asked to resign from my minister post

நான் என்ன 12 தொகுதிகளில் ( மு.க.அழகிரி போல் ) கட்சிக்கு எதிராக செயல்பட்டேனா ? நான் கட்சிக்கு என்ன துரோகம் செய்தேன் ?

தொண்டர்கள் கோஷம் - "தலைவா தனி கட்சி ஆரம்பி"

நான் மனிதனா இல்லை மனிதனில்லையா என்று தீர்மானிப்பது மக்கள் தான் :-) அவர் மாதிரி பதில் சொன்னால் எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

கலைஞர் டெல்லி சென்றிருந்தால் மத்திய அரசுக்கு இந்த நிலமை வந்திருக்காது

பொறுமை காப்பது பலவீனம் இல்லை, என் பலம்

necular deal is good for the country.

கலைஞர் டிவியில் ஜெயலலிதா பாட்டு வருவதில்லையா ? அதே போல் அதான் தினகரன், சன் டிவியில் ஜெ பற்றி செய்தி வருகிறது.

முழு வீடியோ இங்கேபேட்டி

கேள்வி:- மீண்டும் கலைஞ ருடன் சேருவீர்களா?

பதில்:-கலைஞர் பிறந்த நாளில் வாழ்த்து பெறு வதற்காக சென்ற போது என்ன காரணத்தினாலோ அனுமதிக்க மறுத்து விட் டார்கள். ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இதுவரை நான் என்ன தவறு செய்தேன், எதற்காக மந்திரி பதவியில் இருந்து விலக சொன்னார்கள் என்று காரணம் தெரியவில்லை. கலைஞர் நினைத்தாலும் அவருடன் இருப்பவர்கள் ஒன்று சேர அனுமதிக்க மாட்டார்கள்.

கே:- அதற்கு என்ன காரணம்?

ப:- அவர்களையே கேளுங்கள்.

கே:- சமாதான முயற்சிக்கு மு.க.அழகிரி குறுக்கே நிற்கிறாரா?

ப:- இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்? வில்லை. காரணம், அவரைப்பற்றி குறை கூற விரும்பவில்லை. நான் தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டேனா?, தி.மு.க. வேட்பாளர்களை தோற் கடிக்க 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினேனா? முன்னாள் சபாநாயகரை தோற்கடித்தேனா? என்றும் கட்சிக்கு நன்றி உள்ளவனாக இருந்து வருகிறேன்.

கே:- வருகிற தேர்தலில் போட்டியிட உங்களுக்கு சீட் கிடைக்குமா?

ப:- நான் எதையும் எதிர் பார்க்கவில்லை.

கே:-நீங்கள் திடீர் என்று இப்படி அறிவிக்க காரணம் என்ன?

ப:- ஊடகங்களில் பல விதமான சந்தேகங்கள் வந்து விட்டன. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

கே:- இந்த சூழ்நிலைக்கு யார் காரணம்?

ப:- அவர்களிடமே கேளுங்கள்.

கே:- நீங்கள் மனிதனே இல்லை என்று மு.க.அழகிரி கூறி இருக்கிறாரே?

ப:- நான் மனிதனாப இல்லையா? என்று மனிதாபி மானம் உள்ளவர்களும், மக்களும் தீர்மானிப்பார்கள். அவர் சொல்கிறார் என்? தற்காக நானும் பதில் சொன்னால் எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.

கே:- காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது கலைஞருக்கு முக்கியத்தும் கொடுத்தார் கள். இப்போது லல்லு பிரசாத்தை முன்னிலைப் படுத்துகிறார்களே?

ப:- கலைஞரை முன்னி லைப்படுத்தாதது எனக்கும் வருத்தம் தான். அவர் மிகப் பெரும் தலைவர். கலைஞர் டெல்லி சென்று இருந் தால் அரசுக்கு ஏற்பட் டுள்ள நெருக்கடியை சுலப மாக சமாளித்து இருப்பார். அவரது அரசியல் அனுபவத்தை டெல்லியில் உள்ளவர்கள் சரியாக பயன் படுத்தவில்லை. கோட்டை விட்டு விட்டார்கள் என்று கருதுகிறேன்.

கே:- நீங்கள் இவ்வளவு நாள் பொறுமையாக இருப்ப தற்கு என்ன காரணம்?

ப:- பொறுமை பல வீனம் அல்ல, பொறுமை காப்பாது கட்டுப்பாட்டை காப்பாற்றத்தான்.

கே:- புதுக் கட்சி தொடங் கப் போகிறீர்களா?

ப:- நான் இன்னும் தி.மு.க.வில் தான் இருக்கி றேன். என்னை சேர்ந்த வர்களும் தி.மு.க. தான். தி.மு.க.வின் சட்ட திட்டங் களுக்கு நானும் கட்டுப்பட்டவன்.

கே:- மத்திய அரசு கவிழ்க் கப்படுமா?

ப:- கவிழ்ப்பது எங்கள் வேலை அல்ல. கவிழக் கூடாது? என்பதற்காகத் தான் வாக்களிக்கச் செல்கி றேன்.

கே:- உங்களுக்கு கொறடா உத்தரவு வந்ததா?

ப:- வரவில்லை. என்ன பழி சுமத்தினாலும் தி.மு.க. வுக்கும், அதன் தலைமைக்கும் கட்டுப்பட்டவன் நான்.

கே:- இதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதா?

ப:- இதற்கு மேல் வளர முடியாது.

8 Comments:

daya said...

dear idly here is the full video of dayanithi maran interview.

http://www.zshare.net/video/156410754235f38c/

Anonymous said...

Quite astonishing to see no digging graves for each other among the Kollakaara plunders even in the heights of war on power control on Southern branch of axis of evil UPA.

Anonymous said...

அணு சக்திக்கு ஆதரவாக துக்ளக் தலையங்கத்தை வெளியிட முடியுமா?
thanks

Anonymous said...

He is waiting for post Jul 22nd developments.Even if the govt. survives UPA cannot win in the 2009polls.DMK led alliance would be weak as left and PMK would be out from the alliance. Congress may dump DMK and join hands with ADMK
and PMK or may go with DMDK.

Anonymous said...

http://ravisrinivas.blogspot.com/2008/07/blog-post_19.html

இட்லிவடையிடம் - விஜயகாந்த் ஆதரவு வலைப்பதிவினை ஆரம்பிக்கப் போகிறீர்களாமே, எந்தப் பெயரில்

Anonymous said...

தாத்தா-பேரன் செண்டிமெண்ட் வைச்சு சன் டிவியில் சீரியல் எதாவது வரப்போகுதா :)

நாரத முனி said...

//காயப்படுத்தினாலும் கண்ணியம் காப்பேன் ஏன் என்றால் நான் முரசொலி மாறன் மகன்//

அது மட்டும் இல்ல சாரே , நீர் கல்யாணம் அய்யரின் பேரனும் கூடத்தான்.

Anonymous said...

கலைஞ்சரை இப்போது யாரும் டில்லியில் மதித்துக் கூப்பிடவில்லை என்கிற உண்மையை எவ்வளவு நாசூக்காக சொல்லியிருக்கிறார்.
இது தாண்டா உள்குத்து