பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 16, 2008

குமுதம் மீது விஜயகாந்த் வழக்கு

தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று பேசவில்லை: விஜயகாந்த் மறுப்பு

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் பேசாத ஒன்றை பேசியதாக கூறி அவதூறு செய்தி வெளியிட்டதாக ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏட்டுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் வக்கீல் நோட்டீசும் அனுப்பி இருக்கிறார்.
.
அறிக்கை:

கடந்த 13-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தேமுதிக சார்பில் ராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதைக் கண்டித்து மிகப் பிரம்மாண்டமான முறையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமான அளவில் மீனவர்கள் பங்கு பெற்ற அந்த ஆர்ப்பாட்டத் தைப் பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக் காட்சிகளும் அவற்றை தத்ரூபமாக வெளியிட்டன. ஆனால் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை நான் அங்கு பேசாததை விஷமத்தனத்தோடு பேசியதாக வெளியிட்டிருக்கிறது.

இந்த வாரம் 20.07.08 தேதியில் வெளியிடப்பட்டுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் முதல் பக்க அட்டையிலேயே எனது புகைப்படத்துடன் ‘ஆளும் திமுகவினரை சுட்டுத் தள்ள வேண்டும்!’ என்று நான் பேசியதாக தலைப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகை யின் உட்பகுதியில் வந்துள்ள செய்தியிலும் ‘தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் திமுகவினரைச் சுட்டுத் தள்ள வேண்டும் ’ என்று நான் முழக்க மிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேற்கூறியவாறு நான் அங்கு பேசாததாது மட்டுமல்ல, எங்குமே பேசக்கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நான் பேசாத சிலவற்றை ராமேசுவரத்தில் பேசியதாக செய்தி வெளியிட்டிருப்பது, வேண்டு மென்றே திட்டமிட்டு திரித்து வெளியிட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதற்கும், நாட்டு மக்களிடையே கலவரத்தைத் தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

பத்திரிகை விற்க வேண்டும் என்கின்ற வெறும் வியாபார நோக்கில் மட்டும் இந்த செய்தி வெளியிடப் பட்டதாக நான் கருதவில்லை. கடந்த 6.07.08 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் கூட இதே போன்று அட்டையில் என புகைப்படத்தைப் போட்டு, ‘தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த்!’ என்று தலைப்பிட்டு நடக்காத சம்பவத்தை நடந்தது போல் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இப்பொழுதும் அதைவிடப் பெரிய தவறை மீண்டும் செய்துள்ளது. எந்த பத்திரிகையும் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதையும் விமர்சனம் செய்வதையும் நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.

ஆனால் உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுகட்டி வெளியிட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. வேண்டுமானால் அந்த பத்திரிகை ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படட்டும். ஆனால்பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

அவதூறு செய்திகளை தொடர்ந்து பரப்புவதும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதும், தனிப்பட்ட முறையில் மக்களிடம் என்னைப் பற்றி தவறான கருத்தை பரப்ப முயலுவதும் தொழிலாகக் கொண்டுள்ளதால், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் மீது சட்டப்படி அவதூறு வழக்கு தொடர்வதற்கு அந்த பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

6 Comments:

Anonymous said...

குமுதம் ரிப்போர்டர் அதனால்தான் ஆன்லைனில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை.

கேப்டன் வெளிப்படையாக கருத்துக்கள் பேட்டியில் கூறுவதால் ஜூ.வி மற்றும் ரிப்போர்டர் தங்களது சர்குலேசனுக்காக அவரை பயன்படுத்திக் கொள்கின்றன.

அவர்களுக்கு இந்த நோட்டீஸ் தேவைதான்.

Kalyan said...

I think Vijaykanth is right here..
.. Atleast this guy talks .. Am not sure of his actions.. I have some respect for him .. He will become another guy if hez in alliance with DMK/ADMK

The best strategic move would be if he can join with BJP and contest 50% of the seats... and he can win atleast 10 Seats

sarthappan said...

Everybody knew 'Drinker' vijayakanth.
Jaya/kalanger told ealier also..
he never spent evening /noon without drink.
The whole cine industry know about it.
So take it easy guys
Sathappan

Tamilan said...

Vijaykanth Should avoid drinking whil going for the meetings. What he can do with Kumutham (Tamil) Magazine?.

Anonymous said...

The point is he is drinking or not, but what he mean. I think he is he is right here...

Atleast he "only" drinks, not like other leaders, drinking also having legal and illegal wifes!!!!!

venky said...

hai all,

vijayakanth is correct here,who s not drinking now a days ,,ke s drinking wine r alcohol..but karuna,jaya they r drinking people blood .think abt it and talk favour of vijayakanth pls.