பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 14, 2008

எல்.ஜி., செஞ்சி பதவி பறிபோகும்?

எல்.ஜி., செஞ்சி பதவி பறிபோகும்? - ஜூவி பெட்டி செய்தி

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நிலைக்குமா, நிலைக்காதா? என அதிரடி கவுன்ட்டவுன் ஆரம்பித்திருக்கும் நிலையில் உதிரி எம்.பி-க்களையும் சிறிய கட்சிகளையும் வளைக்கும் குதிரை பேரமும் படுமும்முரமாகி விட்டது.

இந்தக் களேபரத்தில் நான்கு எம்.பி-க்களைக் கொண்ட ம.தி.மு.க-வுக்குள் கூத்து களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.

தலைமை மீது கொண்ட அதிருப்தியால் எம்.பி-க்களான எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும், 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க.' என போர்க்கொடி தூக்கி, போட்டி ம.தி.மு.க-வைத் துவக்கினார்கள். ஆனால் தேர்தல் கமிஷன், வைகோ தலைமையிலான கட்சியே உண்மையானது என கூறிவிட்டது. இவ்வளவு நடந்தும் வைகோ, எதிர்ப்பாளர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கவில்லை. அதனால் இப்போதும் அவர்கள் நாடாளுமன்றத்தில் ம.தி.மு.க. எம்.பி-க்களாகவே இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், 'ம.தி.மு.க. எம்.பி-க்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்' என வைகோ அறிவித்திருக்கிறார். இதுகுறித்து கட்சி கொறடாவும் எம்.பி-யுமான பொள்ளாச்சி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும், 'தி.மு.க-வின் வழியைப் பின்பற்றி காங்கிரஸ் அணிக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவோம்' என்று அறிவித்திருக்கிறார்கள்.

அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்று மூத்த அரசியல்வாதியும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியனிடம் கேட்டோம்.

''ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-யோ எம்.எல்.ஏ-வோ கட்சியின் தலைமையால் வெளியேற்றப்பட்டால், அவர் எந்தக் கட்சியும் சாராதவராகத் தான் கருதப்படுவார். கிட்டத்தட்ட சுயேச்சை எம்.பி. போலதான் செயல்படுவார். அப்படி நீக்கப்படாமல் இருக்கும் எம்.பி-க்கள் அல்லது எம்.எல்.ஏ-க்கள் கட்சியின் கொறடாவுக்குக் கட்டுப்பட்டே நடக்கவேண்டும். இந்திய அரசியல் சாசனம் பத்தாவது அட்டவணையில் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது எல்.ஜி-யும், செஞ்சி ராமச்சந்திரனும் கட்சிக் கொறடா கட்டுப்பாட்டை மீறி வாக்களித்தால் அவர்கள் பதவி பறிபோகும்!'' என்றார் இரா.செழியன்.
( ஓட்டு போட்ட பிறகு பதவி பறிபோனால், இவர்கள் போட்ட ஓட்டு செல்லுமா ? )

இந்நிலையில் யார் உண்மையான ம.தி.மு.க. என்பது தொடர்பாக செஞ்சி ராமச்சந்திரன் தேர்தல் ஆணையத்திடம் பொய்யான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தது குறித்து தனியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருந்தது. செஞ்சியார் சமர்ப்பித்தது போலியான பத்திரங்கள் என்பதை நிரூபிக்க வைகோ சில ஆதாரங்களை தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்திருந்தார். அதை சரிபார்த்த தேர்தல் ஆணையம் அவற்றை அப்படியே வைகோவிடம் திருப்பிக் கொடுத்து விட்டது. ஆனால் மீண்டும் வைகோவிடம் அந்த ஆதாரங்களைக் கேட்டு தேர்தல் ஆணையம் வைகோவுக்கு கடிதம் எழுதியிருக்கிறது, அதில், 'ராமச்சந்திரன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்காக உங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டுகிறோம்' என்று குறிப்பிட்டிருக்கிறது.

( இன்னும் நடவடிக்கை எடுக்கலையா ? அட போங்கப்பா. வைகோ அவர்களே அடுத்த ஒபாமாவை சந்தித்து இதை பற்றி சொல்லுங்க )

1 Comment:

நாரத முனி said...

ஒரு காலத்துல இதே எல்.ஜி தஞ்சாவூர்ல அன்பில் தர்மலிங்கம் வேட்பு மனு தாக்கல் செஞ்சதுக்கு, அதெப்படி திருச்சிக்காரன் தஞ்சாவூர்ல நிக்கலாம்னு குய்யோ முய்யோன்னு கத்தினாரு. இப்போ அவரே திருச்சில நின்னாரு.

என்னமோ போங்க எல்.ஜியாரே , இப்போவே பெட்டி வாங்கி சம்பாதிச்சுடுங்கோ சென்ட்ரல் கவர்மென்ட் எப்போ கவுழும்னு சொல்ல முடியாது. அடுத்த தேர்தல்ல கண்டிப்பா நீர் ஜெயிக்கவும் முடியாது. கருணாநிதியும் உமக்கு சீட் குடுக்க போறது கிடையாது. மூக்குபொடிய வாயில வெச்சுக்க வேண்டியதுதான்.