பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 07, 2008

தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிக்கு புதிய தலைவர் - தங்கபாலு

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரான தங்கபாலு தற்போது சேலம் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கபாலுவிற்கு ஆல் தி பெஸ்ட்.

5 Comments:

ஜயராமன் said...

என்ன கணக்கோ தெரியவில்லை.

ராமமூர்த்தி வன்னியரை அடக்க இன்னொரு வன்னியர் கிருஷ்ணசாமிக்கு பரிவட்டம் கட்டினார்கள். இப்போது நாயுடுகளின் காலம் போல இருக்கிறது. இது விஜயகாந்த்துக்கா இல்லை வைக்கோவிற்கா - யாருக்கு வலை என்பது புரியவில்லை.

ஆனால், இலவு காத்த கிளியாய் இந்த வாசன் கூட்டம்தான் ஏங்கிக்கிடக்கிறது.

தங்கபாலுவின் மெகா டிவியில் இனிமேல் காங்கிரஸின் வேட்டி கிழிப்பு ரியாலிட்டி காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பப் படுமா?

நன்றி

ஜயராமன்

நாரத முனி said...

அடபாவிங்களா காங்கரஸ் கட்சில மேடைக்கி கீழ ஒக்காந்து இருக்கறவங்கள விட மேடை மேல ஒக்காந்து இருப்பவங்கதான் ஜாஸ்தி.
இவருதான முன்ன ஜெயா காங்கரஸ் கோஷ்டிக்கி தலைவரா இருந்தாரு ???

நாரத முனி said...

அடபாவிங்களா காங்கரஸ் கட்சில மேடைக்கி கீழ ஒக்காந்து இருக்கறவங்கள விட மேடை மேல ஒக்காந்து இருப்பவங்கதான் ஜாஸ்தி.
இவருதான முன்ன ஜெயா காங்கரஸ் கோஷ்டிக்கி தலைவரா இருந்தாரு ???

சந்திரமௌளீஸ்வரன் said...

பொம்மை எதுவானா என்ன

ஆட்டி வைக்கிற கயிறு டெல்லி தானே

தமிழ்நாடு காங்கிரஸ் என்பது ஒரு மாயப் பெயர்..

ஆல் இந்தியா காங்கிரஸ் - தமிழ் நாடு ஆபிஸ்

அவ்வளவே

Anonymous said...

இட்லி வடையாரே,

தமிழ் நாடு காங்கிரஸ் (தங்கபாலு)கோஷ்டிக்கு அவரு ரொம்ப நாளாவே தலைவரா இருக்காரு, இப்ப தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிக்கு தலைவரா ஆக்கியிருக்காங்கன்னு தெரிகிறது :) தலைப்பை மாத்துங்க.

கி அ அ அனானி