பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 12, 2008

தீபாவளி தேதியை மாற்ற முடியுமா– டிராபிக் ராமசாமி கோர்ட்டில் கேள்வி

தீபாவளியை அக்டோபர், நவம்பர் மாதத்திற்கு பதிலாக ஜனவரியில் கொண்டாடுங் கள் என, மக்களுக்கு உத்தரவு போட முடியுமா அரசு?'இப்படி ஒரு கேள்வியை சுப்ரீம் கோர்ட்டில் எழுப்பியவர் தமிழகத்தைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி.தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பான சட்டமும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, தமிழகத் தைச் சேர்ந்த வக்கீலான டிராபிக் ராமசாமி என்பவர் சென் னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந் தார்.வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.அப்போது, டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் எம்.என். கிருஷ்ணமணி கூறியதாவது:


வழக்கமாக சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப் படுகிறது. ஆனால், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. அப்படி ஒரு சட்டம் இயற்ற சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா என, தெளிவுபடுத்த வேண்டும்.தற்போது, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஏதாவது ஒரு தேதியில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.


இந்த தீபாவளியை ஜனவரியில் கொண்டாடும் படி, மக்களுக்கு அரசு உத்தரவு போட முடியுமா? மக்களின் மன நிலையைப் புரிந்து கொள்ளாமல், எந்த கொள்கை முடிவையும் அரசு எடுக்க முடியாது.தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், எந்த நன்மையும் ஏற்படாது. அதற்கு பதிலாக குழப்பம்தான் அதிகரிக்கும். அத்துடன் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையும் மாற்றப் பட்டுள்ளது.


இவ்வாறு கிருஷ்ணமணி கூறினார்.இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டிலேயே மீண்டும் தொடரும்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பின்னர் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் டிராபிக் ராமசாமிக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப் பட்டது.

( நன்றி: தினமலர் )

7 Comments:

Kannan S said...

அவர் கேட்டதுல என்ன தப்பு ?

கவிஞர் காத்துவாயன் said...

//அவர் கேட்டதுல என்ன தப்பு ?//

உடன்பிறப்பு லக்கிலுக், எங்கிருந்தாலும் தயவுசெய்து மேடைக்கு வரவும்!

ravi said...

Read this article 'நடுத்தெரு நாராயணி' by karunanidhi and post your comment on this

http://www.keetru.com/anaruna/jan07/karunanidhi.php

This is story of a woman named narayani,who stays away from celebration on deepavali festival

Anonymous said...

TN is a Loosu Democracy i.e. a Govt of the Loosus, for the Loosus & by the Loossus.

So, the loosu people get what they deserve.

Anonymous said...

Nalla Kelvi

KKvukku nethi adi

Anonymous said...

// This is story of a woman named narayani,who stays away from celebration on deepavali festival //

தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு... அது சரி அறிவற்றோருக்கு இது எப்படி பொருந்தும்..

பி.கு: கதையை எழுதியவரின் சிந்தனைகள் எதை வட்டமிடுகின்றன என்பதை அவர் வரிகளே வெட்டவெளிச்சமாக எடுத்துக்காட்டுகின்றன.

Anonymous said...

டிராபிக் ராம‌சாமி கேட்ட‌து எந்த த‌வ‌றும் இல்லை. நாட்டில் எத்த‌னையோ பிரச்சினை இருக்க‌ சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றிய‌து எந்த பிர‌யோஜ‌ன‌மும் இல்லை