பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 10, 2008

பட்டம் - கவிதை

சில வாரங்களுக்கு முன்பு ஏன் இட்லிவடையில் கவிதைகளே இல்லை என்று ஒருவர் வருத்தப்பட்டார் அவருக்காக இது..

பட்டம் - ஜெயபாஸ்கரன்

மலிவாகவே
கிடைத்துவிடுகின்றன
மனிதர்களுக்கான
பட்டங்கள்.

பெயரின்
வலது பக்கத்திற்கான பட்டங்களுக்கு
நிறையவே பணம் தேவைப்படுவதால்
−டது பக்கம் எழுதிக்கொள்ள
வசதியாக
வாரி வாரி வழங்கப்படுகின்றன
விதவிதமான பட்டங்கள்.

எமது நாட்டில்
பொது வாழ்வில் நுழைந்தவர்களுக்கு
வீரம் தொனிக்கும்
பட்டங்கள் −ல்லாமல்
சாத்தியப்படுவதேயில்லை
வீதிகளில் உலாவருவதற்கும்
மேடைகளில் உரையாற்றுவதற்கும்.

மட்டுமீறிப் புழங்கும்
பட்டங்களின் விளைவாக
பெயருக்குப் பொருத்தமான
பட்டங்களைத் தேடி
படாதபாடு படுகிறேன்
நான்.

பட்டங்களை
நினைவுகூர்ந்து
பெயருக்கு முன்பாக
சேர்க்காமல்
முகவரி எழுதவே
முடியாமற் போய்விட்டது
என்னால்.

உரிய பட்டங்களோடு
முக்கிய பிரமுகர்களின்
முகவரி எழுதிய கையோடு
எனது வீட்டிற்கான
மளிகைச் சாமான் பட்டியலை
எழுத நேரும் சமயங்களில்
என்னால்
தவிர்க்கவே முடியவில்லை...
'வீரச் சீரகம்'
'விவேக வெந்தயம்' என்று
பட்டியல் முழுவதையும்
பட்டங்களோடு
எழுதுவதை...

பிகு1: இந்த கவிதை ஜெயபாஸ்கரன் கலைஞர் டிவியில் ரமேஷ் பிரபா நேமுகத்தில் வாசித்து காண்பித்தார்.
பிகு: இந்த கவிதைக்கும் இந்த பதிவுக்கும், இந்த பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

7 Comments:

அவனும் அவளும் said...

பத்ரி "டாக்டர்" பட்டம் ஏன் போட்டுக்கமாட்டேன்னு சொன்னார்ன்னு ஞாபகம் இருக்கா ? அந்த பதிவுக்கும் லிங்க் கொடுத்து இருக்கலாம்.

Mari said...

ஏன் இதில் இளைய தளபதி மற்றும் ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை குறிக்கவில்லை.

We The People said...

//திமுக அரசு மைனாரிட்டி அரசு. திமுக ஆட்சிக்கு பாஸ்மார்க் போடாததால் கருணாநிதிக்கு என் மீது கோபம். திமுக எப்போதும் பாஸ்மார்க் வாங்காது. 5 ஆண்டுகள் முழுமையாக ஆண்டாலும் திமுக பாஸ்மார்க் வாங்காது.

- ராமதாஸ்//

அட இவரும் ஜெ ரூட்டுல எறங்கிட்டாரா?? இவங்க தொல்ல தாங்க முடியலபா... மைனாரிட்டி, மைனாட்டின்னு கேட்டு கேட்டு காது ஜவ்வு கிழியுது!! :))))

Anonymous said...

http://thatstamil.oneindia.in/news/2008/07/10/tn-arcot-veerasamy-has-links-with-terrorists-says.html

இலவசக்கொத்தனார் said...

இனியும் கவுஜ வந்துதுனா நான் இட்லிவடையைப் புறக்கணிப்பேன். அதுக்குத்தான் அம்புட்டு பதிவுங்க இருக்கே. இங்க எதுக்கு! :(

Anonymous said...

>>>>>
பிகு: இந்த கவிதைக்கும் இந்த பதிவுக்கும், இந்த பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
>>>>>

Nambitaen......
Raji

ச.சங்கர் said...

ஏங்க

ஒரு தமிழன் (இல்லை ஒரே தமிழன்னு சொல்லணுமா) நோபல் பரிசு வாங்குரதுல உங்களுக்கெல்லாம் அவ்வளவு காண்டு ?:)

சரி. முதலமைச்சர் கருணாநிதிக்கு 80க்கும் மேல வயசாகிடுச்சே. இன்னுமா " NO பல்" கிடைக்கவில்லை. எங்க அப்பா 75 வயசிலேயே வாங்கிட்டாரே :)