பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 09, 2008

பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ராஜினாமா செய்கிறார்

பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ராஜினாமா செய்கிறார், இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் 272க்கு பதிலாக 273 எம்.பி.க்களின் ஆதரவை பெற வேண்டியது இருக்கும்.

தற்போது மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்து உள்ளன. எனவே சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய சோம்நாத் சட்டர்ஜி முடிவு செய்துள்ளார்.

மத்திய அரசு பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, மத்திய அரசுக்கு எதிராக இடதுசாமி கட்சிகள் ஓட்டுப் போடும் நிலை உள்ளது. சோம்நாத் சட்டர்ஜி கட்சிக்கு கட்டுப்பட்ட நேர்மையான அரசியல்வாதி. ஆகவே மத்திய அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பு சோம்நாத் சட்டர்ஜி தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டால், இடதுசாரி கட்சிகளின் ஓட்டு எண் ணிக்கை 59-ல் இருந்து 60 ஆக உயரும். ஆகவே, மத்திய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 272க்கு பதிலாக 273 எம்.பி.க்களின் ஆதரவை பெற வேண்டியது இருக்கும்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்து கொள்ளும் விதத்துக்கு, பல்வேறு சந்தர்ப்பங்களில் சோம்நாத் சட்டர்ஜி ஸ்கூல் டீச்சர் போல நடந்துக்கொண்டுள்ளார்.மத்திய அரசு தப்புமா?
543 உறுப்பினர்கள் கொண்டுள்ள மக்களவையில் தற்போது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 226 ஆகும். ஆனால் அரசு அமைக்க தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 272. எனவே பெரும்பான்மை பலத்தைப் பெற இன்னும் 46 உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு தேவைப்படுகிறது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் 39 பேர், மதச் சார்பற்ற ஜனதாதளம் உறுப்பினர்கள் 3 பேர் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆதரவு தர எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் சிறிய கட்சிகளின் ஆதரவை திரட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. ஒரு உறுப்பினரைக்கொண்ட தேசிய மாநாட்டு கட்சி, 4 உறுப்பினர்கள் கொண்ட மதிமுக, 3 உறுப்பினர்கள் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, 3 உறுப்பினர்கள் கொண்ட ராஷ்ட்ரிய லோக்தள், 8 உறுப்பினர் கொண்ட அகாலிதள் ஆகிய கட்சிகளை குறிவைத்து காய்களை நகர்த்த முற்பட்டுள்ளது.

4 Comments:

Anonymous said...

enakku inaikku quota padikalana udanae romba tension aiduchu..
Raji

Anonymous said...

சொல்லாமல் கொள்ளாமல் இட்லி கடையை மூடியதற்கு கண்டனங்கள்.

பழைய அமர் சிங்க் சிடி விவகாரக் குப்பையைத் தயவுசெய்து கிளறவும்.

Anonymous said...

ஒன்றும் நடக்கவில்லை.பிளாக்கர்
இந்தப் பதிவு சிலருக்கு மட்டும் என்று
gmail id,password கேட்டது.
நான் கூட ஏதோ ஹாக் செய்துவிட்டார்கள் என்று
நினைத்தேன்.
நிர்வாணச் சாமியார்களை போய்
பார்க்கவில்லையா :)

நாரத முனி said...

மதிமுகக்கு 4 உறுப்பினரா? , 2 தானே? 2 பேருதான் போட்டி மதிமுக ஆச்சே