பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 08, 2008

'ரோபோ'-வில் விக்ரம்

இன்று வந்த செய்தி. இது உண்மையா என்று தெரியவில்லை. அது வரை ரசிகர்கள் அமைதியாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...

இயக்குனர் ஷங்கரின் கனவுத் தயாரிப்பான `ரோபோ' படத்தில் ரஜினி நடிப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லையாம்.

இந்தப் படத்தில் முதலில் கமல் நடிப்பதாக இருந்தது. ஆனால், பின்னர் ரஜினி நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு, தென் ஆப்பிரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட இடங்களில் லொகேஷன் பார்க்க ஒளிப்பதிவாளரும், இயக்குனர் ஷங்கரும் போயிருப்பதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால் தற்போது `ரோபோ'-வில் நடிப்பதற்காக விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம்.

என்றாலும் ரஜினி சொல்லும் பதிலைப் பொறுத்தே விக்ரம் நடிப்பாரா இல்லையா என்பது தெரிய வரும்.

ரஜினி தற்போது `குசேலன்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் உள்ளதால், குசேலன் ரிலீஸ் ஆன பிறகே முடிவை வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்க்கலாம். விரைவில் அதுபற்றி தெரிந்து விடும்.
( Source : http://in.tamil.yahoo.com/, http://tamil.in.msn.com/ )

ரஜினி ரசிகர்கள் யாரும் கலங்க வேண்டாம். சுல்தான் தி வாரியரில் நிச்சயம் ரஜினி தான் :-)

10 Comments:

r said...

ரஜினி ரசிகர்கள் யாரும் கலங்க வேண்டாம். சுல்தான் தி வாரியரில் நிச்சயம் ரஜினி தான்

Nice punch at the endddddddd

Anonymous said...

இந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும்.

பிரம்மாண்டம் என்ற பெயரில் தமிழ்மக்களின் பணத்தை சுரண்ட வரும் 'கருப்புப் பண" ஷங்கர் & கூட்டணி & மக்களின் காசை கூசாமல் நக்கிப் பிழைக்கும் கும்பல் தொடக்கத்திலேயே முறிந்தால் பணவீக்கத்தால் மலைபோல் ஏறி நிற்கும் விலைவாசியால் கஷ்டப்படும் மக்களுக்கும் & நாட்டுக்கும் நல்லது.

சினிமா செய்தியை மட்டுமே ஹைலைட் செய்யும் இட்லிவடையை வன்மையாக கண்டிக்கிறேன். இணையத்தில் மேயும்ப் பொழுது வேறு நல்ல விஷயம் எதுவுமே உங்க கண்களுக்குத் தெரியாதா இட்லி வடை? . முன்பே ரஜினி-கமல் ரசிகர்கள் சண்டைய தொடங்கி நடத்துகிறீகள். தொடரட்டும் "உனது கலைப்பணி'(!! ???!)

Anonymous said...

ரோபோ, யார் நடித்தாலும் படம் புட்டுக்கும்.

ஒரே காரணம்: நம்ம "வாத்தியார்" சுஜாதா ! அவர்கள் இப்பொழுது இல்லை.

ஷங்கர் மைனஸ் சுஜாதா = 'பூஜ்யம்"

முன்பே ரோபோ கதையை ஷங்கர் ஷாருக்கானுக்கு சொன்னபொழுது எப்படியோ 'லீக்' ஆகிவிட்டது. லேட்டஸ்ட் 'LOVE 2050" ஹிந்தி படத்தில் அதிக காட்சிகளை சுட்டு படம் எடுத்திருக்காங்க(source: போன வாரம் குமுதம்). சிபியில் அது மொக்கை படம்னு போட்ருக்காங்க.

ஒரே கதையை மாற்றி மாற்றி பிரம்மாண்டம் என்ற பெயரில் எடுக்கும் ஷங்கரின் "சரக்கு" முன்பே தீர்ந்துவிட்டது. ரோபோ ஷங்கருக்கு ஒரு "வாட்டர் லூ" தான். "ஜிவாஜி" கூட "கவர்ச்சிக் கன்னி" ஸ்ரேயாவின் இடுப்பழகில் "வழுக்கி" விழுந்த இளைஞர்களால் தப்பியது.

"எழுத்துலக ஜாம்பவான்" & திரைவசன மஹாராஜா" "அமரர் சுஜாதா" அவர்களின் அறிவியல் ஆலோசனை மற்றும் துள்ளலான, இளமையான வசனங்கள் இல்லாமல் ரோபோ வெறும் "போகோதான்"!

அடுத்த சண்டைய தொடங்கி வைக்கும் இட்லி வடை வாழ்க !. உங்க ப்ளாக் பொழப்பு சிறக்கட்டும்.

Kalyan said...

Idly vadai, Why are u behind our thalaivar... Robot is destined for rajini, Film is destined to become super hit.. Dont waste ur time on these silly gossips..

Anyways i am an regular visitor to ur blog and enjoy all articles except related to Thalaivar rajini

Anonymous said...

ரோபோ டிஸ்கஷனில் இட்லி வடை
உண்டா இல்லையா :)

Anonymous said...

If Rajini is not going to act in Robot, it is NOT Rajini's loss.

Rajini depends on his fans rather than on directors or Plaster of Paris. So, instead of Robot, he will act in some other project which will come to screen much quickly than Robot.

Actually, if this news is true, it is only POP fans who will be getting jitters because Rajini's new project may release around the time Mokka Yogi will release & make it a damp squib at the BO.

Anonymous said...

As said already, you have no other job IV. U r good at all except Rajni sir. Remember one proverb in tamil "Kaayccha maram thaan kalladi vaangum". It apllies to this post by you. Anyway thnx reminding the non-Rajni Sir fans about Rajni Sir. Shankar (my real name)

Anonymous said...

ஷங்கர் மைனஸ் சுஜாதா = "பூஜ்யம்"

I completely accept it. Sudden DEMISE of WRITER SUJATHA surely have some IMPACT on ROBOT SCREENPLAY. Regarding Scientific fictions script, Sujatha sir is a LEGEND.

உண்மையில் சங்கர் தனது வலது கரத்தை இழந்து விட்டார் என்றே சொல்லலாம். இதை எப்படி ஈடு செய்வார் என்று பார்ப்போம்.

Anonymous said...

Yea, sure. Tamil films will miss Sujatha. He was a smart guy who was very good in copying and translating English sci-fis and western scientific ideas/thoughts to Tamil. Now after seeing Dasa it looks like he has passed the mantle to Kamal. It really does not matter if Rajni acts in it or not. Tamil movies are mediocre in any case.

Rama Karthikeyan said...

Yov...summa irrukara rasigargala enya usupi vudura? Robo la thalaivar illana naangalam chumma vidamatom!

Marmayogila kamal illaiyam....athuku bathila Ajitham....athu theriyuma ? ;)