பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 07, 2008

புனித தோமையார் - சுப்ரமணிய சுவாமி அறிக்கை

ஜனதா கட்சித் தலைவர் டாக்டர். சுப்ரமணிய சுவாமியின் அறிக்கை – 8 ஜூலை 2008

புனித தோமையரின் (st. Thomas) கற்பனையாய் திரிக்கப்பட்ட பதினாறாம் நூற்றாண்டு கிருத்துவப்பிரச்சார நடவடிக்கைகளை சித்தரிக்கும் ஒரு மெகா திரைப்படத்திற்கு ஆதரவு அளிப்பதாய் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் சமீபத்திய அறிவிப்பும், அதே சமயம் இந்து புனித யாத்திரைக்காரர்களுக்கு தங்குமிடங்களும், பிரயாண வசதிகளும் அமைக்க அமர்நாத் கோயில் வாரியத்திற்கான வனநில ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசின் முடிவும் இந்துக்களை முற்றுகையிட்டு அழிக்க தொடரும் கொடிய ரகசிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கைகளை நான் கடந்த மூன்று ஆண்டுகளாக எச்சரித்துவருகிறேன் (பார்க்க என் நூல் : Hindus Under Siege: The Way Out)

பதினாற்றாம் நூற்றாண்டின் இடையில் இரு பெரும் இந்துவிரோத கொடுமைகள் வெளிநாட்டினரால் அரங்கேறின. இந்தியாவிவை ஆக்கிரமித்த கொள்ளையன் பாபரின் அல்லக்கையால் அயோத்தியில் அழிக்கப்பட்ட ஸ்ரீராம ஜன்ம்பூமி கோயில் முதலாவது இந்துவிரோத கொடுமை. போர்த்துகீசிய காட்டுமிராண்டிப் படைகள் பழம்பெரும் சிவன்கோயிலை அழித்தது இரண்டாவது வன்முறையாகும். இந்து சமுதாயம் இந்த பண்பற்ற கூட்டங்களை எதிர்கொள்ள அறிந்திருக்கவில்லை. ஆகவே, இந்த பேரழிவிற்கும், புனிதங்களை கெடுத்ததற்கும் மௌன சாட்சியாகவே இருந்துவிட்டது.

ஆனால், இந்நிலை இன்று மாறிவிட்டது. இந்துக்கள் விழித்தெழுந்துவிட்டார்கள். அதன் விளைவாக, இன்று அயோத்தியில் கோயிலை மீண்டும் எழுப்ப உறுதிகொண்ட ராமஜன்ம்பூமி இயக்கம் உள்ளது. கருணாநிதி-சோனியா கூட்டணியின் சேதுசமுத்திரம் திட்டத்தின்மூலம் ராமர்பாலத்தை அழிக்கும் முயற்சியும் இந்துக்களால் எதிர்க்கப்பட்டது. இந்த இரு தலைவர்களும் டெல்லியிலும், சென்னையிலும் ஆட்சியில் இருந்தபோதிலும், இவர்கள் உச்சநீதி மன்றத்தில் இந்த திட்டத்திற்கு ஆதரவாக சரியான வாதங்களை வைக்க இயலாமல் போயினர். இந்துக்களின் எதிர்ப்பு நிலைபெற்று, இன்று அந்த திட்டம் மீண்டும் வரைபடத்திற்கே சென்றுவிட்டது.

ஆகவே, இந்துக்களின் சார்பாகவும், தன் மூதாதையர்கள் இந்துக்களே என்று பெருமைகொள்ளும் மற்றவர்களின் சார்பாகவும், இந்த இரு தலைவர்களையும் நான் எச்சரிக்கிறேன். பழம்பெரும் சிவ ஆலயத்தை சிதைத்து சாந்தோம் தேவாலயத்தை எழுப்பிய போர்த்துகீசியர்களின் வன்முறையை நியாயப்படுத்தும் குறிக்கோளுடன், தமிழகத்தில் புனிததோமையரின் புரட்டு வரலாற்றை ஆதரிக்கும் முயற்சியை கைவிடுங்கள்.

சாந்தோம் தேவாலயம் மறைந்து அங்கே கபாலீச்சரர் கோயில் மீண்டும் எழுப்பப்படவேண்டும். நடுநிலையான, பண்பட்ட கிருத்துவர்களின் உதவி கிட்டினால் அவர்களுடனும், இல்லையேல் அவர்களை மீறி கட்டாயமாகவும், இந்துக்கள் இதை செய்துமுடிப்பர். இந்து சின்னங்களை புரட்டு வரலாற்றின் மூலமாக அசுத்தப்படுத்தி அழிக்க முயல்பவர்கள், 83 சதவீத இந்துக்களின் ஒற்றுமையில் மத-சுனாமியில் அடித்துச்செல்லப்படுவார்கள் என்பதை உணரட்டும்.
( Source : http://hindutva97.blogspot.com/2008/07/st-thomas-myth.html )

22 Comments:

ஜயராமன் said...

புனித தோமையரின் வரலாற்றை படிக்கும் நமக்கு தலை சுற்றுகிறது.

இவரது அடக்க தேவாலயம் மட்டுமே உலகில் 6 இடங்களில் இருக்கிறது. இவர் தான் தசாவதாரம் எடுத்த முதல் உலகநாயகன் என்று நினைக்கிறேன். எல்லா ஊர்காரர்களும் தாமஸ் எங்கள் ஊருக்கு வந்தார் என்று கதை சொல்கிறார்களாம். போப்பாண்டவர் வேறு இந்த குட்டையை நன்றாக குழப்பி விட்டிருக்கிறார். இந்நிலையில் இது ராமநாராயணால் எடுக்கப்பட வேண்டிய ஒரு மாயாஜால அம்மன் கதை. இதில் ஒரு சிட்டிகை கூட ஆதாரம் கிடையாது. கலைஞர் டிவியில் மஞ்சள் மகிமை மாதிரி ஒரு கற்பனை மூடநம்பிக்கை கதையாக இதை போடலாம். மற்றபடி யாரும் இதை சீண்டுவார்கள் என்று தோன்றவில்லை.

நன்றி

ஜயராமன்

நாரத முனி said...

அடடே , இந்த அரிசி மூட்டை குடுத்து மாத்துவானுகளே அந்த கலாச்சாரத்த தோமையார் தான் ஆரம்பிச்சார?? கரீட்டுபா... நல்ல காலம் அப்போ RSS இல்ல , இல்லன்ன மஞ்சள் மாரியப்பன் "தோமையாரை கொன்றது...." அப்டீன்னு ஆரம்பிச்சுடுவாரு...

Anonymous said...

"சாந்தோம் தேவாலயம் மறைந்து அங்கே கபாலீச்சரர் கோயில் மீண்டும் எழுப்பப்படவேண்டும். நடுநிலையான, பண்பட்ட கிருத்துவர்களின் உதவி கிட்டினால் அவர்களுடனும், இல்லையேல் அவர்களை மீறி கட்டாயமாகவும், இந்துக்கள் இதை செய்துமுடிப்பர்"

இப்படியே போனால் முடிவே கிடையாது. படத்தயாரிப்பை
எதிர்ப்பது சரி, வழிபாட்டுத்
தலங்களை மாற்ற முடியாது.

Anonymous said...

இது தன்மானம் பிறந்த இடம் -தமிழ்நாடு.
செய்து பார் எழுதுகோல் புலியே.
ஆசிட் மூஞ்சிக்கு ஆள் மாறாட்டம் நடக்கலாம். வாலைச் சுருட்டு.

ஜயராமன் said...

//// இது தன்மானம் பிறந்த இடம் -தமிழ்நாடு. செய்து பார் எழுதுகோல் புலியே. ஆசிட் மூஞ்சிக்கு ஆள் மாறாட்டம் நடக்கலாம். வாலைச் சுருட்டு. /////

தன்மானம் பிறந்த இடம்தான். ஆனால், அதைப் புதைத்து பல வருடங்கள் ஆகிறது. தன்மானம் வாழும் இடம் இல்லை இது.

பதவிக்காக எல்லா சுயகொள்கைகளையும் காற்றில் விட்டு, மஞ்சள் துண்டை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு, அறுபது மாசம் காவிச்சட்டை, அறுபது மாசம் கதர்சட்டை என்று வேடம் போட்டு, அப்பாவி தமிழர்களை என்றும் பெருகிவரும் தன் குடும்ப கொள்ளைக்கு ஓட்டும், கூச்சலும் போடும் மந்தைக்கூட்டங்களாக மாற்றி இந்த தன்மானத்தை புதைத்த இடத்தில் புல் முளைத்து விட்டது.

ஆசிட்டை கொட்டுவோம், அரிவாளை தீட்டுவோம் என்னும் அராஜக கலாசாரம் மட்டுமே இவர்களின் பதில். மூளைகெட்ட இந்த முரட்டுக்கூட்டம் கருத்துக்களை ஆராயும் பண்பை மறந்து பல ஆண்டுகள் ஆகிற்று.

தாடிக்கார தலைவன் இன்று சிலையால் தெருவோரம் ஏங்கி நிற்கிறான். அவன் வளர்த்த குஞ்சுகள் இன்று தங்கள் இலவச தொலைப்பெட்டியில் குத்தாட்டத்துடன் மஞ்சள் மகிமை பார்த்து அம்மனுக்கு ஆரத்தி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடங்க வேண்டியது ஏதுமில்லை. இவர்களின் மானம் அடங்கி மாமாங்கமாய் விட்டது.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

well said Jayaraman....

geeyar said...

ஐயா வணக்கம். எங்களுக்கு பாபர் மசூதியும் தேவையில்லை, ராமனும் தேவையில்லை. சாந்தோமும் வேண்டாம் கபாலீஸ்வரனும் வேண்டாம். தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் மூவருமே வெளியேருங்கள். நாங்கள் நிச்சயம் நலமுடனே இருப்போம். நிச்சயம் நாங்கள் உலகம் போற்ற உயர்வோம்.

சங்கு மாமா said...

பால் பவுடர் குடுத்து... அண்ணாச்சி பாண்டியனை பால் பாண்டியன் (Paul Pandian) ஆக்கின கும்பல் தானே இது... இந்த கிறிஸ்துவ பெயர்களை தமிழாக்கம் செய்து..குப்பையை கிளறிய வீரமாமுனிவர் வழி வந்த கும்பல்.. (வீரமாமுனி ஸ்டைல் தமிழாக்க உதாரணம் : தாமஸ் = தொமய்யர், (அய்யங்கார் ??), செபஸ்டியன் = செவுத்தியான், ஜோசப் = யூசாப்பு..(ரோசாப்பூ ??), டேவிட் = தாவீது.., இப்படி பல குழப்படிகள் செய்த பெருமை வீரா'ஸ் முனியை சாரும்)


இப்போ அதே டானிஷ் மிஷன் துட்டு வெச்சினு..படம் எடுக்குராங்களாக்கும்...இவிங்க தான் பாக்கி..ம்ம் ...ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. நடக்கட்டும்..

சுல்தான் said...

உடைக்க போறேன்னு தெனாவெட்டா சொல்றவனுக்கு ஆசிட் ஊத்தறதா பதில் சொல்றது தப்பில்ல பழங்களா.

ஜயராமன் said...

/// உடைக்க போறேன்னு தெனாவெட்டா சொல்றவனுக்கு ஆசிட் ஊத்தறதா பதில் சொல்றது தப்பில்ல பழங்களா ///

இன்னும் பழுக்காத சுல்தான் ஐயா,

தமிழ்நாட்டில்தான் தன்மானம் பிறந்தாமாம்! அதனால, அவர்களுக்கு இழைத்த அவமானத்தை களைய அந்த இடத்தை இடிக்கப்போகிறார்களாமாம். அதுதானே தன்மானமுள்ளவர்களுக்கு மரியாதை.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்திவந்த எத்தனையோ அராஜகங்களுக்கு நீதி கேட்டு நாம போராடலியா அதுபோல அவிங்க நீதி கேக்குறாங்க. தன்மான திராவிடன் இடிக்காவிட்டால்தான் அவமானம்!

என்னைக்கேட்டால் அங்கே டிராபிக் ரொம்ப இடுக்காய் இருந்து தினசரி ஜாம் ஆகிறது. இந்த தேவாலயத்தை கொஞ்சம் நகர்த்தி வைத்தால் டிராபிக் ஒழுங்காய் போகும். சு.சுவாமி அதைச் செய்யலாம்.

நன்றி

ஜயராமன்

ஜயராமன் said...

சீ யார்? ஐயா,

/// எங்களுக்கு பாபர் மசூதியும் தேவையில்லை, ராமனும் தேவையில்லை. சாந்தோமும் வேண்டாம் கபாலீஸ்வரனும் வேண்டாம். தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் மூவருமே வெளியேருங்கள். ////

மசூதியும், கோவிலும் தேவையாய் இருக்கிறவன் எப்படி வெளியேற முடியும்? மசூதியை தூக்கிக்கொண்டா? அதனால் நீங்கள்தான் வெளியேற வேண்டும். வேண்டுமானால், பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போக ஒரு ஒட்டகம் கூட இலவசமாக ஜகாத் ஏற்பாடு பண்ணலாம்.

நன்றி

ஜயராமன்

ஜயராமன் said...

சீ யார்? ஐயா,

/// எங்களுக்கு பாபர் மசூதியும் தேவையில்லை, ராமனும் தேவையில்லை. சாந்தோமும் வேண்டாம் கபாலீஸ்வரனும் வேண்டாம். தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் மூவருமே வெளியேருங்கள். ////

மசூதியும், கோவிலும் தேவையாய் இருக்கிறவன் எப்படி வெளியேற முடியும்? மசூதியை தூக்கிக்கொண்டா? அதனால் நீங்கள்தான் வெளியேற வேண்டும். வேண்டுமானால், பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போக ஒரு ஒட்டகம் கூட இலவசமாக ஜகாத் ஏற்பாடு பண்ணலாம்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

//இவரது அடக்க தேவாலயம் மட்டுமே உலகில் 6 இடங்களில் இருக்கிறது. இவர் தான் தசாவதாரம் எடுத்த முதல் உலகநாயகன் என்று நினைக்கிறேன். எல்லா ஊர்காரர்களும் தாமஸ் எங்கள் ஊருக்கு வந்தார் என்று கதை சொல்கிறார்களாம். //

இன்னும் விட்டா 1ம் நூற்றாண்டிலேயே வந்து விட்டதால் இவர்தான் திருவள்ளுவர் என புதுக்கதை ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடுவார்கள் மஞ்சள் துண்டும் எதாவது உளறிக்கொட்டி ஆமோதித்து விட்டால் இன்னும் ஆபத்துதான்.

Anonymous said...

கிறிஸ்துவ மதம் எப்படி வேரூன்றியதேன்பது எல்லாருக்கும் தெரியும் - டானீஷ் மிஷன் பணம் இப்போது சினிமாவாக எடுக்கப்படுகிறது, அவ்வளவு தான். கலைஞர் இதே போல ஒரு முருகன் படம் எடுத்தால் துவக்க விழாவிற்கு வருவாரா? அப்போது பகுத்தறிவு குறுக்கே நிற்கும்!

r said...

Dagalti kalaignara porutha varaikkum Hindus are Thieves (idhu avare sonnadhunga).

So, if you start a movie on Lord Muruga or Lord Krishna, he will say PAGUTHARIVU THADUKKIRADHU, AGA ARIVU AATTAAI PODUGIRADHU, SITRARIVU SIKKU PIDIKKIRADHU, PERARIVU PAEN EDUKKIRADHU etc.,

Also very recently he uttered some nonsense statement :

Naan Eagadasi Nombugalin mel nambikkai vaithu Viradham iruppadhillai, adhil enakku nambikkaiyum illai, aanal, Muslims Ramzan nombugalin mel nambikkai undu. adhu udalayum manadhaiyum nangu sutham seyyum.

Indha KERAGAM pidichavan ippadi thaan pesuvaan, naamalum kaadhula vangittu avanukke VOTE pottu marupadiyum CM aakkuvom.

geeyar said...
This comment has been removed by a blog administrator.
geeyar said...

ஐயா படம் எடுக்கிறதுதான் எடுக்குறீங்க திருவள்ளூவர் கன்யாகுமரியில் பிறந்த நாடார் என்பதை மறந்திடாதீங்கோ. அப்புறமா அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்த ஒரு பாதிரியாரோட டைரிக்குறிப்பு இன்றுவரை பத்திரமாக இருக்கிறது. அதுபற்றிய விரிவான விளக்கம் வேண்டுமெனில் காத்திருங்கள் விரைவில் தருகிறேன்.

ஜயராமன் said...

சீ யார் ஐயா,

//// விருந்திற்கு வந்தவர்களே, விருந்தாடிக்கு பிறந்தவர்களே இதை சொல்ல உங்கள் நாகூசவில்லையா? ///

உங்கள் விவாதத்தின் தரம் எப்படி என்பதை பல தடவை பார்த்துவிட்டோம். ஜடாயு ஐயாவின் பதிவில் நீங்கள் செய்த உளறல்களும் அதற்கான என் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் அளிக்காமல் நீங்கள் மாயமானதையும் பார்த்துவிட்டோம்.

இப்போதும் இப்படி ஏதோ காழ்ப்பு வெறியில் உளறிக்கொட்டுகிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.

ஏனென்றால், வெளியேறச்சொன்னது நீங்கள். நானில்லை. நீங்கள் எழுதியதாவது...

/// நீங்கள் மூவருமே வெளியேருங்கள். ///

அதாவது, இந்தியாவில் கடவுள் நம்பிக்கையுள்ள அனைத்து மக்களையும் - இந்து, முஸ்லிம் என்று பாகுபாடில்லாமல் எல்லோரையும் வெளியேறச்சொன்னது நீங்கள். அதாவது, இந்தியாவின் - கடவுள் நம்பிக்கையுள்ள - 99 சத மக்களை வெளியேறு என்று அவமானப்படுத்தியது
நீங்கள்.

அதனால், கேவலமாக இதற்கு பதில் சொல்லிக்கொள்ள வேண்டுமானால் கண்ணாடியைப்பார்த்து சொல்லிக்கொள்ளுங்கள். காறி உமிழ வேண்டுமானால், படுத்துக்கொண்டு செய்து கொள்ளுங்கள்.

"சத்யராசை விட கேவலமாக" என்று அந்த நடிகனை அவமானப்படுத்துகிறீர்கள். அந்த கலைஞனாவது காசுக்காக வேடம் போட்டு கேவலமாக பேசுகிறான். ஆனால், நீங்களோ காழ்ப்பிலும், அறியாமையிலும் இந்தியர்களில் 99 சதவீதம் மக்களை கேவலமாகப் பேசுகிறீர்கள்.

விருந்துக்கு வந்தவர்கள் என்று சொல்லி தமிழர்களை அவமானப்படுத்துகிறீர்கள். தமிழன் விருந்தாளிக்கு அடிமையானதாக புரட்டுகதை சொல்லி நம் இனத்தை அவமானப்படுத்துகிறீர்கள்.

என் பதில் உங்கள் வாதத்தின் அநியாயத்தன்மையை சுட்டிக்காட்டியது மட்டுமே. இந்தியாவில் யாருமே வந்தேறிகள் இல்லை. எல்லா இன, மத மக்களும் இங்கு வாழ முழு உரிமை உண்டு. யாரும், யாருக்கும் தயவு செய்யவில்லை.

உங்களைப்போன்ற மூர்க்கமான சிந்திக்கயிய லாதவர்கள் மட்டுமே இந்தியாவில் மத, இன வெறியை தூண்டுகிறார்கள்.

இது மாதிரி ஆபாச (விருந்தாடிக்கு பிறந்தவர்கள்) கருத்துக்களை இட்லிவடை அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

ஜயராமன்

geeyar said...

உங்கள் பார்வையில் நாங்கள் மைனாரிட்டிகளாக தெரிகின்றோம். ஆனால் உங்கள் மாயவலைகளில் இருந்து நிச்சயம் என் திராவிட சகோதரர்களை விரைவில் மீட்டெடுப்போம். அந்த நம்பிக்கை எப்பொழுதும் எனக்கு இருக்கிறது.

ஆரியர்களாகிய நீங்கள் வருமுன்னே நாங்கள் இங்கே வாழ்ந்துவருகின்றோம். அப்படி இருக்கும்பொழுது நீங்கள் எங்களை வெளியேறுங்கள் என கூறியதால் ஆத்திரப்பட்டுவிட்டேன். அதற்காக வருந்துகிறேன்.

ஜீயார் என என்னை அழைப்பதையே விரும்புகிறேன்.

நீங்கள் ஆட்சேபித்த வார்த்தை உங்களை குறிப்பிடவில்லை.

Anonymous said...

mutaa payaa subramaniyaa sami paacha kaatuutu koothadikateeniga mutlaagalaa....

Raj said...

idly vadai oru tharithiram pudichaa paya...iyer thaanaa nee..
nee yaarunuu kandupidichaan unna thookurendaa...soomooga viroothi...
papathi vali vanthaventhaanaa nee...

raj said...

idly vadai... and others...
Taayavuu saithu manithukilungall.
Aathiraathil aarivilanthuviten..
appologies..