பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 05, 2008

காடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்

வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு கைது செய்யப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்தெரிவித்திருக்கிறார்."இது கருணாநிதியின் பழி வாங்கும் ராஜ தந்திரம். அவரை நள்ளிரவில் கைது செய்து போல என்னை கைது செய்து உள்ளனர்" - காடுவெட்டி குரு

உள்ளம் கொதிக்கத்தான் செய்யும். அதன் விளைவாக தங்களது எதிர்ப்பையும் கண்டனத் தையும் வெளிப்படுத்த அவர் கள் துடிப்பது இயற்கை.

ஆனால் அத்தகைய எந்த சூழ்நிலையிலும் சட்டத்துக்கு விரோதமான வன்முறை நிகழ்வதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் அவர்கள் கவன மாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. சமூக விரோத சக்திகள் புகுந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது. - ராமதாஸ்

பா.ம.க.வினர் இதை கண்டித்து அறவழி போராட்டங்கள், உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம் கண்டன போஸ்டர் ஒட்டியும் வெளிப்படுத்தாலம். மாறாக பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் மற்றும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட கூடாது. - ஜி.கே.மணி
( அவர் என்ன சொல்லவருகிறார் என்று நமக்கே புரிகிறது, தொண்டர்களுக்கு புரியாதா ? )
கைது
ன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 18-ந் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

காடுவெட்டி குருவுடன் மேலும் 11 பாமக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காடுவெட்டி குரு கைது செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சில கிராமங்களில் கடைகள் அடைக்கப் பட்டன. பெரம்பலூரில் கல்வீச்சில் பஸ் கண்ணாடி சேதமடைந்தது.
.
கடந்த 30-4-2008ல் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குணசேகரன் பாமகவில் இருந்து விலகி, அண்மையில் அதிமுகவில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து பல இளைஞர்களை அதிமுகவில் சேர்த்ததால் ஆத்திரமடைந்து காடுவெட்டி குரு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் குணசேகரன் கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக காமராஜ், ராமச்சந்திரன், வீரப்பன் ஆகிய மூன்று பேர் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார்கள். இதில் முதலாவது குற்றவாளியாக புகார் கூறப்பட்டிருந்த காடுவெட்டிகுரு கைது செய்யப்படவில்லை.

இந்தநிலையில் இன்று அதிகாலை திருச்சி சரக டிஐஜி சந்தீப்ராய் ரத்தோடு தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்ஆனந்த் சின்ஹா, அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீஸ் படை காடுவெட்டியில் உள்ள காடுவெட்டி குருவின் வீட்டை இன்று அதிகாலை சுற்றி வளைத்தது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த காடுவெட்டி குருவை தட்டிஎழுப்பி போலீசார் கைது செய்தனர். காடுவெட்டி குருவின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அவருடன் பாமக துணை பொதுச் செயலாளர் பாலு, அரியலூர் மாவட்ட தலைவர் மணிமாறன், செயலாளர் வைத்தி உள்பட 11 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

18-ந் தேதி வரை காவல்
இன்று காலை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். காடுவெட்டி குருவை 18ந் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி ஜீவானந்தம் உத்தரவிட்டார்.ராமதாஸ் அறிக்கை:
வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குருவை காவல் துறையினர் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கைது செய்திருக்கிறார்கள். ஊரில் அவர் இல்லாத நேரத்தில் நடந்ததாக எச்சரிக்கப்பட்டுள்ள ஒரு சம்பவத்தை சித்தரித்து அதில் அவரை இணைத்து பொய் புகார் கொடுக்கச்செய்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைப் பாமக வன்மையாகக் கண்டிக்கிறது.

கைது செய்யப்பட்டால் உடனடியாக ஜாமீனில் விடக்கூடிய குற்றப்பிரிவின் கீழ் முதலில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பின்னர் கொலை முயற்சி புகார் சேர்க்கப்பட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் குருவை ஜாமீனில் எளிதில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்.

தலைமறைவாக இருந்தவர் என்று சொல்லி, கைது செய்வதற்கான ஆணையை பெற்றிருக்கிறார்கள். மேலிடத்தின் நிர்பந்தத்தின் பேரில்தான் இத்தகைய பிரிவுகள் எல்லாம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

சம்பவம் நடந்ததாக சொல்லப்படும்தினத்தில் குரு அவரது சொந்த ஊரில் இல்லை. வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையிலும், பாமகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையிலும் நாள்தோறும் பல நிகழ்ச்சிகளில் குரு கலந்துகொண்டு வந்திருக்கிறார்.

கட்சியின் பொதுக்குழு, அரசியல் பயிற்சி முகாம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்திருக்கிறார். கைது செய்யப்பட்டதற்கு முதல் நாளில் கூட கோயில் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். ஆனாலும் தலைமறைவாக இருந்தவர் என்ற பொய்யான தகவலை தெரிவித்து அவரை கைது செய்வதற்கான ஆணையை பெறும்படி உள்ளூர் காவல்துறையினரை மாவட்ட காவல்துறை நிர்வாகம் நிர்பந்தம் செய்திருக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் திமுக அரசின் பழிவாங்கும் வெறியையே எடுத்துக்காட்டுகிறது. திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறாரோ அப்போதெல்லாம் வன்னியர் சங்கத்தின் தலைவர் குரு மீது பொய் புகார்களை பெற்று வழக்குப்போட்டு பழி வாங்குவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு வந்துள்ளது.

நள்ளிரவில் என்னை கைது செய்துவிட்டார்கள் என்று முன்பு அலறித் துடித்தவர் திமுக தலைவர். அப்போது அரசியலில் வேறு ஒரு அணியில் இருந்தாலும் ஓடோடி சென்று சிறையில் அவரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.

அதற்கெல்லாம் கைமாறாகத்தான் இப்போது 2 கோடி வன்னிய மக்களின் தளபதியாகவும், பாமக முன்னணித் தலைவராக விளங்கி வரும் குருவை அதே நள்ளிரவு பொழுதில் கைது செய்து அவரது வீட்டின் கதவை உடைத்து திறந்து சோதனை என்ற பெயரில் அராஜகத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் கைது செய்து அவர்களது வீடுகளுக்குள்ளும் புகுந்து சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் வெறியாட்டம் போட்டிருக்கின்றனர். திமுக ஆட்சியின் இந்த அராஜக பழிவாங்கும் நடவடிக்கைகள் எல்லாம் ஒரு "மினி எமர்சென்சி நிலையை' நினைவுபடுத்துவதாக உள்ளது.

எதிர்வரிசையில் இருந்த போதெல்லாம் காவல் துறையின் அடக்கு முறை என்றும், பழிவாங்கும் நடவடிக்ø என்றும், ஜனநாயக படுகொலை என்றும் எதையெல்லாம் சொல்லி வந்தார்களோ அவற்றையெல்லாம் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் திமுக அரங்கேற்றி வந்திருப்பதைத் தமிழகம் கண்டு வந்திருக்கிறது.

பொய்ப்புகாரின் பேரில் குரு கைது செய்யப்பட்டிருப்பதும் அவரைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பாமக முன்னணியினரை வேட்டையாடி கைது செய்து வருவதும், அவர்களது வீடுகளுக்குள் எல்லாம் புகுந்து சோதனை என்ற பெயரில் அராஜகத்தை நடத்தியிருப்பதும் திமுக அரசின் பழிவாங்கும் செயலையும், அதன் ஜனநாயக விரோதப் போக்கையும் எடுத்துக் காட்டுகின்றன. ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த அராஜக பழிவாங்கும் நடவடிக்கைகளை ஜனநாயக சக்திகள் அனைத்தும் கண்டிக்க முன்வரவேண்டும்.

கைது நடவடிக்கைகளும், பழிவாங்கும் அடக்கு முறைகளும் பாமகவினருக்கு புதிதல்ல. ஆனாலும் திமுக அரசு மேற்கொண்டுள்ள இந்த வரலாறு காணாத அடக்குமுறையைக் கண்டு பாமகவினரின் உள்ளம் கொதிக்கத்தான் செய்யும். அதன் விளைவாக தங்களது எதிர்பார்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த அவர்கள் துடிப்பது இயற்கை.

ஆனால் அத்தகைய எந்த சூழ்நிலையிலும் சட்டத்துக்கு விரோதமான வன்முறை நிகழ்வதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. சமூக விரோத சக்திகள் புகுந்து பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துவிடக்கூடாது.

அமைதியான வழியில், அறவழியில் உண்ணாவிரதம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் போன்ற வழிமுறைகளை பின்பற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தலாம். ஆனால் கண்டிப்பாக எங்கும் வன்முறை நிகழ்வுக்கு அவை வழிவகுத்து விடக்கூடாது என்பதில் பாமகவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குருவுக்கு எதிரான இந்த அடக்குமுறை பழிவாங்கும் நடவடிக்கைகளை முறியடிக்க அனைத்து சட்டப்பூர்வமான வழிகளில் பாமக ஈடுபடும். அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன.

திமுக கொண்டாட்டம்
பெரம்பலூர் ஒன்றிய திமுக தலைவர் பெரியசாமி, கவுன்சிலர்கள் பாரி, கனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி உள்பட ஏராளமான திமுக பிரமுகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

பெரம்பலூர் காந்தி சிலை, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை ஆகிய இடங்களில் திமுகவினர் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர். காடுவெட்டி குருவுக்கு எதிராகவும், பாமகவுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
திமுகவினரின்இந்த மகிழ்ச்சி கொண்டாட்டம் பாமகவினரை எரிச்சலடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அப்டேட்ஸ்...
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் சென்னையில் பாமகவினர் போராட்டம், சாலை மறியல், கல்வீச்சு ஆகியவற்றில் இறங்கினர். கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.


வாசகர்களே, அமைதியான முறையில் இந்த கைது நடவடிக்கையை டிவியில் மற்ற நிகழ்ச்சிகள் போல் பார்த்து ரசிப்பதை தவிற நமக்கு வேற வழி இல்லை.

6 Comments:

Anonymous said...

ஒருவன் கேள்வி..
அவரை காடு வெட்டி என்று நூற்றுக்கு 99 முறை சொல்கிறீர்களே
காடுவெட்டி அவர் வாங்கிய பட்டமா?
காடுவெட்டி போராட்டம் செஞ்சதால அவருக்கு சூட்டிய செல்ல பெயரா?
அல்லது காடுவெட்டி என்பது அவர் ஊர் பெயரா?
பசுமைத் தமிழகம்னு முழக்கமிடும் கூட்டத்தில் இந்த 'காடுவெட்டி' என்பது கொஞ்சம் நெருடலான விஷ்யமா இருக்குது.. என்ன நான் சொல்றது..?

Anonymous said...

sir, kaadivetti apadingaradhu general fammily name. So, there is not any need to get angry

mani

சங்கு மாமா said...

"அய்யா அனானி.. "காடு வெட்டி" என்பது அவர் ஊரின் பெயர்...

இந்த கைது பற்றி..இப்போதைக்கு இது தான் சொல்ல முடியும்.. :))

"அட்ரா..அட்ரா.....நாக்க..மு.க.......நாக்க ... மு.க..........நாக்க ... மு.க..."
"அட்ரா..அட்ரா.....நாக்க..மு.க.......நாக்க ... மு.க..........நாக்க ... மு.க..."

Sam said...

Good comment sangu mama

Anonymous said...

For the arrest of Kaaduvetti, it is quite natural that Maramvetti is upset.

நாரத முனி said...

யோவ் யாரைய்யா கைது பன்னினாங்க, காமராஜரைய்யா? இல்ல காந்தியா?
Btw, நம்ம காடுவெட்டியார் சினிமால நடிக்க சொல்லலாம், 'காதல்' தண்டபாணி மாதிரி அப்பாவியா தோற்றம் அளிக்கறாறு..