பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 04, 2008

கடவுள் ஏற்கும்படி நடந்து கொள்ள வேண்டும் - கலைஞர்

ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையாரின் வாழ்க்கை வரலாறு பிரமாண்டமாக, ஹாலிவுட் முறையில் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. சென்னை மயிலை உயர்மறை மாவட்டம் சார்பில் ரூ.50 கோடி செலவில் அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை-மைலாப்பூரில் உள்ள சாந்தோம் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் இந்த திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை புனித தோமையார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி வழங்கினார். முதல்-அமைச்சர் கருணாநிதி, அதனை சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, கேரளா திருச்சபை வரலாற்று பேராசிரியர் அருட்தந்தை சேவியர் கூடப்புழா ஆகியோரிடம் வழங்கினார்.

வழக்கம் போல் கலைஞரின் (சிறிபான்மை) கடவுள் பேச்சு..மாமனிதரின் சிறப்பு இயல்புகள்

இந்த விழா ஒரு மாமனிதருடைய சிறப்பியல்புகளை வரலாற்று திருப்பங்களை, அவர் புரிந்த தியாகங்களை, அவர் ஆற்றிய தொண்டினை, அரும்பணியினை, மக்கள்பால் அவர் கொண்டிருந்த பேரன்பை விளக்குவதற்காக அதை நிழல்படமாக, பேசும்படமாக, வண்ணப்படமாக, எண்ணக் கருவூலமாக வழங்குவதற்காக தொடங்கப்படுகின்ற விழா ஆகும்.

இந்த விழாவிலே என்னை அழைத்திருப்பதைப்பற்றி நம்முடைய லாரன்ஸ் பயஸ் குறிப்பிட்டார். இவரை அழைக்கிறீர்களே, இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஆயிற்றே, இவரை அழைக்கலாமா என்று சில பேர் சந்தேகப்பட்டதாகச் சொல்லிவிட்டு, அதற்குரிய விடையையும், விளக்கத்தையும் அவரே இங்கே அளித்தார்கள்.

வாழ்த்து

நான் இதற்கு முன்பு இப்படியொரு விழாவில், இது சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விழா. மைலாப்பூரில் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துக்களின் குருநாதர்கள், இந்துக்களின் மரியாதைக்குரியவர்கள், அடிகளார் போன்றவர்கள், சைவ சிலேஷ்டர்கள், வைணவ பெரியோர்கள், கிருபானந்த வாரியார்-இவர்கள் எல்லாம் இணைந்து நடத்திய ஒரு விழாவில், என்னை வாரியாரும், தர்மபுரம் ஆதினகர்த்தரும், குன்றக்குடி அடிகளாரும் மற்றும் சைவ, வைணவப் பெரியோர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.

அதிலே என்னை வாழ்த்தியவர்களில் ஒரு பெரியவர், கடவுளை கருணாநிதி ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், நாம் அவருக்கு இத்தகைய புகழுரையை, வாழ்த்துரையை, பாராட்டுரையை வழங்குவது சரியா என்று சிலர் கேட்கக்கூடும் என்று சொல்லிவிட்டு, அவரே அதற்கு விளக்கமும் அளித்தார். நம்முடைய லாரன்ஸ் பயஸ் போல.

கடவுள் ஏற்கும்படி நடந்து கொள்ள வேண்டும்

நான் இறுதியாக உரையாற்றும்போது, ``கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்கிறாரா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புவதாக சொன்னார்கள். பிரச்சினை அது அல்ல. கருணாநிதி சாதாரணம், உங்கள் கோணத்தில் பார்த்தால் கடவுள், கருணாநிதியைவிட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு பெரியவர், அப்படிப்பட்ட நிலையில் இந்தச் சாதாரண கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்கிறான் என்று சொன்னாலே அது கடவுளுக்கு அவமானம்.

எனவே, கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடந்து கொள்கிறேனா என்பதுதான் முக்கியமே தவிர நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேனா அல்லவா என்பதல்ல பிரச்சினை என்று அன்றைக்கு விளக்கம் அளித்தேன். ஆகவே கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.

கடவுள் மன்னிக்கமாட்டார்

ஏழையைக் கண்டால் இரக்கம் காட்டு, நோயுற்றவனைக் கண்டால் பரிதாப்படு, உதவிகளைச் செய், நலிந்தோருக்கு நன்மைகளைக் குவித்திடு-இப்படி யார் யார் பாதிக்கப்படுகின்ற மக்கள் இருக்கின்றார்களோ, அவர்களிடத்திலே பணிவு காட்டுவதுதான் கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வதற்காக செய்கின்ற காரியங்கள் ஆகும்.

அதை விட்டுவிட்டு, ஒரு ஏழை அய்யா சாமி என்று கையேந்தும்போது- போடா முட்டாளே என்று அவனை தள்ளிவிட்டு நாம் கடவுளை கும்பிடுவதிலே எந்தவிதமான பயனும் இல்லை. அந்த கைகளை கடவுள் மன்னிக்கமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

என்னைக் கவர்ந்த கொள்கை

புனித தோமையார் எப்படி என்னைக் கவர்ந்தார் என்றால், மத போதனை செய்தார் என்பதற்காக என்னைக் கவர்ந்துவிட்டார் என்று மாத்திரம் நான் சொல்லமாட்டேன். அந்த மத போதனையை இந்தியத் திருநாட்டில் தன்னுடைய தலைக்கே ஆபத்து வந்தாலும்கூட, தன்னுடைய உயிரே போகக்கூடிய அளவிற்கு தியாகம் செய்யக்கூடிய சூழ்நிலை வந்தாலும்கூட, தன்னுடைய உயிரைக்கொடுத்து, தன் கொள்கைக்காக வாழ்ந்தார் என்ற அந்த ஒன்றுதான் அவர் ஆற்றிய எல்லா தொண்டுகளையும்விட தலையாயத் தொண்டாக இருந்து என்னைக் கவர்ந்தது.

வீழ்த்தப்பட்டவரை கொண்டாடுகிறோம்

இந்த காரணத்தால், நான் இந்தக் கதையை படமாக எடுக்கிறார்களே, பெரிய சம்பவங்களில் என்ன வரப்போகிறது என்று புனித தோமையாருடைய கதையை நான் படித்தபோது, அவர் கடைசியாக கொடியவன் ஒருவனால் கொல்லப்பட்டார். சதிக்கு ஆளானார், சதி செய்து கொன்றார்கள், சூழ்ச்சியால் அவரைக் கொன்றார்கள்.

இந்த சென்னை மாநகரத்திலே இருந்து இந்த வட்டாரத்தில் எல்லாம் கிறித்துவ மத போதனையைச் செய்து கொண்டிருந்த அந்த ஆற்றலாளர், அந்த அன்புக்குரியவர் இப்படிக் கொல்லப்பட்டார் என்ற அந்த ஒரு காட்சி மாத்திரமே போதும்-இந்தப் படத்தின் வெற்றிக்கு. தியாக உருவமாக திகழ்ந்த மிகப் பெரும் மனிதர், தோமையார் எனும் பெயருக்குரிய அந்தப் புனிதர் மறைந்த நிகழ்ச்சி நம் மனதைவிட்டு அகலாத நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள் அந்த நிகழ்ச்சியில் அவரை வீழ்த்தியவர்களுடைய பெயர் நமக்குத் தெரியாது. வீழ்த்தப்பட்டவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் வரலாறு, இதுதான் சரித்திரம்.

நிலைக்கும் பெயர் எது?

பாரி மன்னனை அவனுடைய வள்ளல் தன்மையை அவன் ஆற்றிய அரும் கொடைகளை எல்லாம் நாம் அறிவோம். அந்தப் பாரி மன்னன், சோழர், சேரர், பாண்டியர் ஆகியவர்களின் படையெடுப்பால் வீழ்த்தப்பட்டான். பாரி மன்னன் போர்க்களத்திலே உயிர்நீத்தது நமக்குத் தெரிகிறது. வீழ்ந்தவனின் பெயர் நமக்கு ஞாபகம் இருக்கிறது. அவனை வீழ்த்திய சேர, சோழ, பாண்டியனின் பெயர்கள் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது. நிலைக்கும் பெயர் இது, நிலைக்காத பெயர் எது என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே, இந்த கிறிஸ்தவ சமயத்தின் வரலாற்றில் தோமையாரின் புகழ், பெயர் நிலைத்த பெயர், நிலைக்கும் பெயர், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய பெயர். அதைத்தான் படமாக எடுக்க திரைக்காவியமாக வடிக்க நம்முடைய நண்பர்கள் இந்த அமைப்பின் மூலமாக இன்றைக்கு முயற்சியை தொடங்குகிறார்கள். அவர்களுடைய முயற்சி வெல்க, வாழ்க.
( செய்தி: தினத்தந்தி )
ஒன்று நிச்சியமா தெரியுது - கடவுள் இருக்கிறார்!

9 Comments:

நாரத முனி said...

//கடவுள், கருணாநிதியைவிட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு பெரியவர்// ----

உடனே இந்த பி ஜெ பி ஆளுங்க கூட்டனிக்கி தூது போகாதீங்கப்பா.
அவரு சொன்னது ஹிந்து கடவுள் இல்லையாம் இயேசு சாமியாமாம்.
ராமர் தான் இல்ல இயேசு உண்டாமாம்.

btw, படத்துல சுனாமி கவிஞர் பாட்டு எழுதுவாரா?

ஜயராமன் said...

புனித தோமையர் என்பது ஒரு கற்பனை கதை. அம்மாதிரி ஒரு மனிதர் இருந்ததும் இல்லை, அவர் தென்னிந்தியாவுக்கு வந்ததும் இல்லை. இதை கத்தோலிக்க போப்பே ஏற்றுக்கொண்டு இந்த புனைக்கதைகளை மறுத்திருக்கிறார். இதை ராமரை கேள்வி கேட்ட கருநாநிதி போற்றி உளறி இருக்கிறார். இவரின் இல்லாத பகுத்தறிவுக்கு இதுவே சான்று!

சாந்தோம் பாதிரிகள் இன்னும் இந்த பொய்களை கடை விரித்து தங்கள் அறுவடை கொள்முதலை பெருக்கப்பார்க்கிறார்கள். இந்த ஏமாற்றுவேலையை இந்துமத விரோதம் என்கிற ஒரே காரணத்திற்காக தமிழக முதல்வர் உயர்த்திப்பிடிக்கிறார்.

இந்த விழா நடந்த சாந்தோம் தேவாலயம் தான் போர்த்துகீயர்களால் இடிக்க்ப்பட்ட உண்மையில் மயிலை கபாலி கோயில். இதற்கான வரலாற்று மற்றும் அகழ்வாராய்ச்சி சான்றுகள் பல வெளியிடப்பட்டுள்ளன.

அந்த மயிலை இறைவன் இவர்களுக்கு நல்ல உள்ளம் வழங்கட்டும்.

நன்றி

ஜயராமன்
ஜயராமன்

IdlyVadai said...

துக்ளக் ஸீனியர் ஸிட்டிஸன் பார்வையில் வந்த தகவல்...

ஐம்பது கோடி ரூபாய் செலவில் ஸெயின்ட் தாமஸின் வாழ்க்கையைப் படமாக்கப் போவதாக, ஒரு தமிழ்ப் படத் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் கருணாநிதியின் தலைமையில் தொடக்க விழா நடக்குமாம். 26.6.08
தேதியிட்ட "டெக்கான் கிரானிக்கிள்' தினசரியில், தமிழ்ச் செல்வன் என்பவர்
இந்த முயற்சியை ஆட்சேபித்து எழுதியிருக்கிறார்.

செயின்ட் தாமஸ் என்ற பெயரில் பல காலகட்டங்களில், பல பேர் இருந்ததாகவும், அவர்களில் எவரையும் வாடிகன் சபை அங்கீகரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "கி.பி. 52ஆம் ஆண்டு தென்னிந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் ஸெயின்ட் தாமஸ், திருவள்ளுவருடன் வாதாடியதாக இந்தப் படத்தில் ஒரு நிகழ்ச்சி இடம்பெறும்' என்று மேற்படி தயாரிப்பாளர் சொல்லியிருப்பதையும் கண்டிக்கிறார் தமிழ்ச்செல்வன். திருவள்ளுவர், கிறிஸ்தவ மதத்தை ஆதரித்தார் என்று காட்டுவதற்கான முயற்சி இது என்று எழுதியிருக்கிறார்.

Anonymous said...

நண்பருக்கு,

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

Anonymous said...

Absolute rubbish. The TN Govt says Valluvar was born in BC 40, so he was already 40 years old by the time Jesus was born. In all probability it is almost 100% sure he wrote the kural before the birth was Jesus. This fact alone is enough to nullify all these stupid christian Kural ideas.

Jesus schoolers say Jesus was crucified in the year 33 AD. By which time Valluvar would have been 73 years old. Even the most basic person would have to admit that the Kural would have been written before this time.

These TN Jesus schoolers claim that Thomas came to India in 52 AD (Which in itself is a impossibility).

Thomas if he ever existed would have taken far more than 19 years to reach the northern borders of India itself let alone TN.

So let us take 52AD as the time he came to TN (which is impossible), by that time Valluvar would be either long gone by or 92 years old.

I don't think I need to say anything more about this pathetic missionary idea about Valluvar & Thomas.

ravi srinivas said...

கலைஞர் ஏற்கும்படி கடவுள் நடந்து கொள்ள வேண்டும்- நாளைய
விடுதலையில் வீரமணி இப்படி எழுதிய அறிக்கை வெளிவரும்,
ஒருவேளை இன்றே வந்திருக்கலாம்.

Anonymous said...

கலைஞர் ஏற்கும்படி கடவுள் நடந்து கொள்ள வேண்டும்- நாளைய
விடுதலையில் வீரமணி இப்படி எழுதிய அறிக்கை வெளிவரும்,
ஒருவேளை இன்றே வந்திருக்கலாம்
:)))

Anonymous said...

I would like to add a little more
information to what Mr. Tamil Chelvan and others others who
have commented upon this piece of news(disinformation).

I would commend for you and your readers a recently published book,
"Expressions of Christianity - With a Focus on India" published by Vivekananda Kendra Prakashan, 5, Singarachari St., Triplicane,
Chennai 600005, which is a compilation of true materials concerning the expressions of Christianity throughout the world,
materials which are the writings of the Church's own missionaries
and western writers, both church
and secular. A really damning
revelation of how Christendom went
about destroying culture after
culture, race after race and country after country. And the
story about St. Thomas coming to India is one such fabrication.

I would commend, for your reading,
Part 3 of this book, entitled "Expressions of Christianity in India and Elswhere in Asia", and
particularly three articles :
(1) Christian Missions in Asia -
by late K. M. Panikkar, renowned historian, statesman and diplomat;(2)Kerala, the Gateway to Indian
Christianity - by Dr. C.I. Issac;
(3) Education in India: Destruction and Change under Missionary and Colonial Influence - by Nivedita Raghunath Bhide.

It will be clear from the first two that the myth of St. Thomas setting foot on Indian soil is pure fabrication, contrary to historical dates and how much of
false evidence had been collected
or fabricated to sustain this myth
by the Portuguese 1500 years later
after the supposed date of arrival of St. Thomas in India.

Thus it is no surprise that the Church here has ventured on producing a movie on St. Thomas
in Tamilagam, his meeting savants
and scholars like Tiruvalluvar et al. And that Mr Karunanidhi participated in that event. After
all Chrisitianity's time tested
methods are propagation, proselytization, constant brainwashing, coercion, inducement
and cruelty, branding all else as
pagans and heathens and exterminating them. The Inquisition of the Middle Ages is
still a chilling reminder of the
atrocities of Christendom, which
had its equivalent cruelty in the
Goa Inquisition too.

Hinduism has withered all storms,
withstood all onslaughts throughout all these many millennia and will sure overcome
this one too. Yet it has to be ever vigilant since the means now
available to Chrisitianity is
modern technology, the incredibly
fast revolution in communication
now in the 21st century.

IdlyVadai said...

சு.சாமி அறிக்கை ஆங்கிலத்தில் இருக்கிறது. அதை தமிழில் எழுதி தந்தால் தனி பதிவாக போடுகிறேன்.