பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 03, 2008

திருவள்ளுவராக ரஜினி !

இன்று DC பத்திரிக்கையில் வந்த செய்தி - ரஜினி திருவள்ளுவராக நடிக்க போகிறார்.

50 கோடி செலவில் தயாராகும் செயின்ட் தாமஸ் படத்தில் சூப்பர் ஸ்டார் திருவள்ளுவராக நடிக்க இருக்கிறார். கூடவே விக்ரம், விஜய், அஜித் ஆகியோரும் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்களாம்.

3/7/08 மாலை 5.00 சாந்தோமில் - "புனித தோமையார்" திரைப்படத் துவக்க விழா கலைஞர் தலைமையில் நடக்கிறது.

இந்த படத்துக்கு திரைக்கதை மற்றும் ஆராய்ச்சியாளர் பால்ராஜ் "இந்த திரைபடத்தில் உள்ள ஒரு முக்கிய காட்சியில் புனித தோமையரும் திருவள்ளுவரும் சந்திக்கும் காட்சி வருகிறது, அதற்கு ரஜனி காந்த் பொருத்தமானவராக இருப்பார் என்று எண்ணினோம், அதை பற்றி ரஜினியிடம் பேசி வருகிறோம்" என்கிறார்.

இந்த படத்தை தமிழிலும் மலையாளத்திலும் முதலில் தயாரிக்கிறார்களாம். Passion of the christ படத்தில் இயேசுவாக தோன்றியவரை இந்த படத்திலும் இயோசுவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

திருவள்ளுவர் பற்றிய பழைய செய்திகள்...

* அறுபதுகளில் "மேஜர்' சுந்தரராஜன் திருவள்ளுவராக நடிக்கப்போவதாக செய்திகள் வந்தன. படம் வரவேயில்லை. சாமா திருவள்ளுவராக நடித்துக்காட்டினார். பல குறட்பாக்களையும் பாபநாசம் சிவன் எளிமையான வருகளில் அைமத்த தர்மோபேதசப் பாடல்களையும் பாடி நடித்தார் சாமா. "தீமை செய்தல் எளிது, நன்மை செய்தல் அருது, தீயவருக்கு அறிவு புகட்டல் பெருமை, அன்றி தீமை செய்தல் எளி'... படமோ பாடல்களோ புழக்கத்தில் இல்லை... திருவள்ளுவர் வெற்றி பெற்றதாகவும் செய்திகள் இல்லை.

* கேள்வி: திருவள்ளுவராக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
கமல்: திருவள்ளுவர் ஒரு சிக்கலான வரலாறு. அவர் கிருஸ்துவரா? ஜைன மதத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்விகள் எல்லாம் கூட உண்டு. அவரை எப்படி சித்தரிப்பது என்பதில் குழப்பங்கள் உள்ளன.
( 2005 )

* ரஜினிகாந்த் நிலம் வாங்கியது தொடர்பான சர்ச்சையில், ரஜினி வாங்கியதாக சொன்ன நிலம் ஆரணிபகுதியில் உள்ள திருவள்ளுர் மாவட்டம்!

படம்: ரஜினி திருவள்ளுவராக நடித்தால் எப்படி இருக்கும் என்று நம்ம கற்பனை :-)

11 Comments:

சினிமா நிருபர் said...

கலக்கலான படம் போட்டிருக்கிறீர்கள் இட்லிவடை. பாராட்டுகள்.

Boston Bala said...

Maan... wahta body!

மருதநாயகம் said...

ரஜினி வள்ளுவர் எப்படி தமிழ் பேசப் போகிறார் என்பதை நினைத்தால் இப்பவே கண்ண கட்டுதே

Anonymous said...

mudhala vthirukural fulla pala idangala vedathaium, yaagam galaium parati pesudhu. Pala kuralgal Bhagawath githaiyai translate panna mathiri kooda iruku. Idhula valluvar samanar, charistian nu yaar kilapi vittanu therla. verum vakram.

Also thiruvalluvar nu oru kevalamana padathai arimugam panni vechu, adhuku silai edukaren nu kodi kanakula waste panni kazhagam adikira koothu.
Unmayil oru lady oda painting ku thaadi meesai ellam pottu idhu dhan valluvarnu kilapi vittadhu bharathi dasan nu naan dinamani la padichen. Paithyakara desam, paithiyakara thalaivargal.

Seetha said...

முடி அலங்காரம் அவருடய கதானாயகிகள் போல இருக்கு....

நாரத முனி said...

தலைவா , அதே விழாவிலே கருணாநிதி கடவுள பத்தி மதுர ஆதீனம் ரேஞ்சுக்கு பேசிருக்கரே, அத பத்தி உங்க பஞ்சோட செய்தி போடுவீங்கன்னு பாத்தா.... Please refer to today's dinamalar for the news!,

Anonymous said...

50 கோடி செலவில் சர்ச் படமெடுக்கிறது.ஷங்கரே பரவாயில்லை போலிருக்கிறது.

Anonymous said...

ரஜினி திருவள்ளுவராகவா- என்ன கொடுமை இது.

Prasanna said...

Hi Idlyvadai

If you dont mind can i use image(what a fanatastic imagination) in my blof-ofcourse with due acknowledgements

IdlyVadai said...

Prasanna - You can use it !

Prasanna said...

Thiru Idlyvadai avargale

Naandri