பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 02, 2008

திமுக திமுதிமு வீழ்ச்சி

திமுக திமுதிமு வீழ்ச்சி என்ற தலைப்பில் கல்கி கட்டுரை

திமுகவில் 1940 முதல் 2008 வரை நடந்த சில முக்கிய நிகழ்வுகள். இந்த தகவல்களில் தப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது, இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம்....

பெரியாரை விட்டுப் பிரிந்து வந்து தி.மு.க. என்ற தனி இயக்கத்தைக் கண்ட போது, “வெட்கப்படுகிறோம்; வேதனைப் படுகிறோம்; விரட்டப்படுகிறோம்” என்றார் அண்ணாதுரை. இன்று இதே மனநிலை யில்தான் இருக்கின்றனர் தி.மு.க. மூத்த உடன்பிறப்புகள். தி.மு.க. என்ற கட்சி ஒரு குடும்பத்துக்குள் சிறைவைக்கப்பட்டிருக் கிறது என்பது அவர்களது வருத்தம். எப்படி நிகழ்ந்தது இந்த வீழ்ச்சி? சற்றே பின் னோக்கிச் செல்வோமா?

1940களில்...
தி.மு.க. என்ற இயக் கத்தைத் துவங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம், அண்ணா தலைமையில் நீதிக்கட்சி பிரமுகர் சண் முகம் பிள்ளை வீட்டில் 1949ஆம் ஆண்டு செப்டெம் பர் 17ஆம் தேதி நடக்கிறது. அதில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் ‘இளமை பலி’ கதையின் மூலம் 1942ல் அவருக்கு அறிமுகமாகிறார் கருணா நிதி. தம் எழுத்துத் திறமைக்காக 1946ல் பரியெரால் குடியரசு பத்திரிகையின் துணை ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்.

அடுத்த நாள் ராபின்சன் பூங்கா கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டுவிட்டு அன்றிரவே, சேலம் மாடர்ன் தியேட்டர் ஸுக்குக் கதை - வசனம் எழுதப் புறப் பட்டுவிடுகிறார் கருணாநிதி.

தி.மு.க.வின் பொதுச் செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்படுகிற போது, கருணாநிதி பிரசாரக் குழு உறுப்பினர்.

1950களில்...
தமது பேச்சு, எழுத்துத் திறமை, திரை யுலகச் செல்வாக்கு இவற்றின் மூலம் 1952ல் செயற்குழு உறுப்பினராக உயர்கிறார் மு.க.
1953ல் கல்லக்குடி போராட்டம். டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றக்காரிே, இரயில் தண்ட வாளத்தில் தலை வைத்துப் படுத்ததால், கட்சிக்குள்ளும் பொது மக்கள் மத்தியிலும் கருணாநிதியின் செல்வாக்கு வளர்கிறது.

1957 - குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக கருணாநிதி தேர்வு. இந்தக் கால கட்டத்தில் திரைப்பட வசனங்கள் மூலம் கருணாநிதியின் புகழ் மேலும் பரவ, அவரைச் சுற்றி ஒரு குழு உருவாகிறது.
கருணாநிதி ஙண் ஈ.வெ.கி. சம்பத் பனிப்போர் உச்சம். 1959 வேலூர் பொதுக் குழுவில் சம்பத் தாக்கப்படுகிறார்.

1960களில்...
1960ஆம் ஆண்டு உட்கட்சித் தேர் தலில் குழு மனப்பான்மையை கருணாநிதி ஊக்குவிக்கிறார் என்ற கிசுகிசு எழ, ‘குமுதம்’ அண்ணா
வின் நாற்காலிக்குக் கீழ் கருணாநிதி வெடி குண்டு வைப்பதாக ‘கார்ட்டூன்’ போடுகிறது!

ரந்த திரா விட நாடா... தனித் தமிழ் நாடா? என்ற கருத்து மோதல் கட் சிக்குள் ஏற்பட, தனித் தமிழ்நாடை முன்னிலைப்படுத்திய சம்பத்,
கட்சியை விட்டு விலகுகிறார்.

கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதியின் செல்வாக்கு மேலும் வளர்கிறது.

கட்சிக்குள் கோஷ்டிகள் செயல்பாடு கள் உச்சத்துக்கு வர அண்ணா, கருணா நிதியை அழைத்து, “உன்னால் கட்சிக்கு நன்மையும் உண்டு. தீமை களும் உண்டு” என்று கடிந்து கொள்கிறார்.
1962-63ஆம் ஆண்டு திராவிட நாடு காரிேக்கை யைக் கைவிடுகிறது
தி.மு.க.

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பாளையங்கோட்டையில் மு.க. தனிமை சிறைவாசத் தில் இருக்க,
இந்திய அள வில் தி.மு.க.வின் பெயரும் கட்சிக்குள் மு.க.வின் செல் வாக்கும் மேன்மேலும் கூடுகின்றன.

1967ஆம் ஆண்டு தேர்தலில் வென்று, அண்ணா முதலமைச்சராக, கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சர். முரசொலி மாறன் எம்.பி. ஆகிறார்.

23 மாதங்களே ஆட்சியில் இருந்த அண்ணா, உடல்நலக் குறைவால் இறந்து போக, சீனியாரிட்டிபடி நாவலர் நெடுஞ் செழியன் முதல்வராக வரவேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர்., சத்தியவாணிமுத்து, மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம் ஆகி யோர் ஆதரிக்க, கருணாநிதி முதல்வரா கிறார்.

அண்ணா இறந்த நான்கே மாதங் களில், நாவலருக்குப் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துவிட்டு, தலைவரா கிறார் கருணாநிதி. அதுவரை பரிெயாருக் கென ஒதுக்கி வைக்கப்பட்ட பதவியை கருணாநிதி ஏற்கிறார்.

1970களில்...
1971ல் இந்திரா காங்கிரஸோடு கூட்டணி. 180 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற, மீண்டும் கருணாநிதி முதல்வர்.

கட்சியில் எம்.ஜி.ஆர். செல்வாக்கும், புகழும் கூடுகின்றன.

1972ல், கட்சிக் கணக்கைக் கேட்ட எம்.ஜி.ஆர். பிரிந்து சென்று
அ.தி.மு.க. வைத் துவக்குகிறார்.

எமர்ஜென்ஸி காலகட்டம். கருணா நிதி சிறை செல்லவில்லை. ஆனாலும், கட்சியைக் கட்டிக் காத்ததில் அவருக்குப் பெரும்பங்குண்டு.
மு.க. ஸ்டாலின் ஒரு வருட எமர் ஜென்ஸி மிசா சிறைவாசத்தில்
இருக்க, அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்ப மாகிறது.

1977ல் கருணாநிதி தலைமைக்குச் சவால்கள் எழுகின்றன.
திருப்பரங்குன்றம் பொதுக் குழுவில், கருணாநிதிக்கு எதிராகக் கையெழுத்து வேட்டை நடத்தியவருள் துரைமுருகனும் ஒருவர். நாவலரும் கட்சியைவிட்டு விலகுகிறார்.

1980களில்...
மு.க.ஸ்டாலின் கட்சியின் இளைஞர ணிச் செயலாளராக நியமிக்கப்பட, இன்று வரை அதே பொறுப்பில் தொடர்கிறார்.
கட்சியின் மாவட்ட அளவிலும் வாரிசுகள் இடம்பெற ஆரம்பிக்கின்றனர். மு.க. அழகிரி மதுரைக்கு இடம் பெயர் கிறார்.
எம்.ஜி.ஆர். இறந்தபிறகு அ.தி.மு.க. பிளவு பட, 13 வருட வனவாசத்துக்குப் பிறகு, 1989ல் ஆட்சிக்கு வருகிறார் கருணாநிதி.

1990களில்...
வை.கோ.வின் ஆளுமை, பேச்சுத் திறன் அவருக்குத் தனியாக தொண்டர் வட்டத்தை உருவாக்குகிறது. ‘அவரால் என் உயிருக்கு ஆபத்து’ என்று உளவுத் துறை அறிக்கையை கருணாநிதி காட்ட, கட்சியை விட்டு வை.கோ. வெளியேறுகிறார்.

கட்சியில் செங்குத்தான பிளவு. ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் வை.கோ.வோடு செல்கின்றனர்.

ஆட்சி அதிகாரம் என்பதை மட் டுமே குறிக்கோளாகக் கொண்டு தி.மு.க. செயல்பட ஆரம்பிக்கிறது.

1980களில் மதுரைக்குப் போன அழகிரி, அதன் சுற்று வட்டாரங்களில் ஆதிக் கம் செலுத்த, அவ ருக்கு ஆதரவு - எதிர்ப்பு கோஷ்டிகள் உருவாகின்றன.

2000களில்...
தா.கிருட்டிணன் கொலை செய்யப் படுகிறார். மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இவர்களிடையே பனிப் போர் வலுத்து வெளிச்சத்துக்கு வருகிறது. இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட, அழகிரி கட்சியை விட்டே நீக்கப்படுகிறார். பின்பு சேர்க்கப்படுகிறார்!

2001 சட்டமன்றத் தேர்தலில் தோற்றா லும், 2004 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற கூட்டணி வியூகம் உதவுகிறது. முன்பின் அரசியல் பரிச்சயமற்ற மற்றுமொரு குடும்ப வாரிசான தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகிறார். அவருக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பு தந்தாக வேண்டும் என்று
பிடிவாதம் காட்டுகிறது தி.மு.க. தலைமை.

2007ல் அழகிரிக்கு செல்வாக்கு இல்லை என்று மாறன் குடும்ப ஏடான தினகரன் சர்வே வெளியிட, அழகிரி ஆட்கள் மதுரை தினகரன் அலுவலகத்தைத் தாக்க, மூவர் மரணம்.

தயாநிதி மாறன் - அழகிரி உரசல். அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய, கருணாநிதி தமது மற்றொரு வாரிசான கனிமொழியை ராஜ்ய சபா எம்.பி. ஆக்குகிறார். கட்சித் தொடர்பு இன்றி,
கவிஞராக மட்டுமே அறியப்பட்ட கனி மொழி, இரவோடு இரவாக
அரசியல் வாதி ஆகிறார்.

இளமை முதல் கட்சிப் பணிகளில் ஈடு பட்ட மு.க.ஸ்டாலினின் அதிருப்தி அரசல் புரசலாகப் பதிவாகிறது. அவரது திடீர் வெளிநாட்டுப் பயணங்கள், அவ ரது அதிருப்தியின் வெளிப்பாடு என்று தரிய வருகிறது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளியாகக் சேர்க் கப்பட்ட அழகிரியும் மேலும் பலரும், சாட் சியங்கள் இல்லாத நிலையில்
விடுவிக்கப் பட, அரசு மேல் முறையீடு செய்வது குறித்து மௌனம்
சாதிக்கிறது!

மதுரை பகுதியில் அழகிரியின் ஆதிக் கம், அவரை மதுரை ‘முதல்வர்’ என்றே தொண்டர்கள் அழைக்கும் அளவுக்கு வலுக்கிறது.

மாறன் குடும்பத்து சுமங்கலி நெட் வொர்க்குடன் மோதும் வகையில், அழகிரி ஒரு கேபிள் நிறுவனம் தொடங்குகிறார்.

கடலூரில் தி.மு.க. மகளிர் அணி மாநாடு. அழகிரியின் மகள் கயல்விழி, முக்கிய மேடைப் பேச்சாளராக முன் நிறுத் தப்படுகிறார்.

2011 தேர்தல் - சில கேள்விகள்
கருணாநிதி மீண்டும் தேர்தலில் நிற்பாரா?

தி.மு.க. சார்பில் யாரை முதல்வராக முன்நிறுத்துவார்கள்?

அந்த முடிவு எடுக்கப்படும்போது குடும்பச் சண்டை வலுக்குமா?

கடின உழைப்பும் கட்சிக் கோட்பாடு களில் பற்றும் கொண்ட தொண்டர்களும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் ஒத்துழைப்பார்களா?

உட்கட்சி தேர்தல்கள், செயற்குழு, பொதுக்குழு ஆலோசனையின் பரிேல் எடுக்கப்படும் முடிவுகள் என்று ஜனநாயக மரபுகளுக்கிடையே மெள்ள கசிந்து வந்த வாரிசு ஆதிக்கம், உட்கட்சி ஜனநாயகத்தை அச்சுறுத்தும் அளவுக்குப் பெருகியுள்ளதை தி.மு.க. தலைமை உணர்ந்துள்ளதா?

எம்.ஜி.ஆர். வைகோ, போன்றோர் பிரிந்து சென்றதைச் சமாளித்ததுபோல் குடும்ப அரசியல் நெருக்கடியை எதிர் கொள்ள இயலவில்லையே?

தமிழக அரசியல் சமூக வரலாற்றில் பெருமைப்படத்தக்க வகையில்
இடம் பிடித்த ஒரு கட்சியின் கட்டமைப்பும் எதிர் காலமும் கலகலத்துப் போயிருப்பதை மறுக்க முடியுமா?

5 Comments:

Anonymous said...

I happy that DMK is going down..I will be more happy if DMK goes down from the minds of people too..not that family politics..but DMK takes the major share of making Tamilnadu a backward state..

Encouraging castism, rowdies,reliouous groups..all these happened during DMK

Anonymous said...

தி.மு.க கலைஞர் இருக்கும் வரை தான் - அதன் பின்னர் ஸ்டாலினும், அழகிரியும் கொத்து பரோட்டா போல பண்ணிடுவாங்க. கலைஞருக்கு பின் வாரிசுகள் அடித்துக்கொள்வது உறுதி, இதை யாராலும் தடுக்க முடியாது.

அதே சமயம், இந்த கல்கி கட்டுரை என்னமோ தி.மு.க நாட்டுக்கு நிறைய நல்லது பண்ண மாதிரி சொல்லி இருப்பது வருந்த தக்கது. குடும்ப அரசியலுக்கு வித்திட்டு, லஞ்சம் என்ற ராட்சசனை அறிமுகப்படுத்திய கட்சியை ஏன் பாராட்ட வேண்டும் என்று தெரியவில்லை

நாரத முனி said...

என்னத்த சொல்ல 2011 ல திமுக ஜெயிச்சா, தம்பி வா தலைமை ஏற்க்க வா, தளபதியே வான்னு சொல்லுவாரு. தோத்தா நெஞ்சுக்கு நீதி பார்ட் -6 எழுதுவாரு.
நம்ம தமிழ் நாட்டு ஜனங்கள சொல்லணும், " தெரியாத சாமிய விட தெரிஞ்ச சாத்தான் மேல்னு................"

நெல்லை தங்கமுத்து said...

சில கேள்விகளுக்கு பதில்..நான் சொல்கிறேன்..இ.வ அவர்களே..

கருணாநிதி மீண்டும் தேர்தலில் நிற்பாரா?
(edited). எனினும்.. குடும்ப சண்டைகளின் உச்சத்தை பார்த்து விட்டே போவார்.. 2011 ல் கலைஞருக்கு வாய்ப்பே இல்லை..
-----
தி.மு.க. சார்பில் யாரை முதல்வராக முன்நிறுத்துவார்கள்?
--
அந்த முடிவு எடுக்கப்படும்போது குடும்பச் சண்டை வலுக்குமா?

தி மு க 3 அணியாக பிரிய வாய்ப்பு உண்டு..(இப்போது உள்ளுக்குள்ளே இருப்பதாக தெரிகிறது,, பூனை இன்னும் சில ஆண்டுகளில் வெளியே வரும்) ஸ்டாலின் ஒரு அணி, அழகிரி ஒரு அணி.. 3 வது அணி ஒன்றும் உண்டு.. அன்று நாவலர் எப்படி நடத்தப்பட்டாரோ, அப்படியே இன்று பேராசிரியரும்..(அவரும் தென்னை மரம், இவரும் தென்னை மரத்தில் நிற்கும் நிலைமை ஏற்படலாம்..)

குடும்பத்தில்..அழகிரி ஒரு புறம், ஸ்டாலின் மறுபுறம்..அவருக்கு மாறன் சகோதரர்கள் ஆதரவு..கனி மொழி..ரெண்டுங் கெட்டானாக கிடந்தது அல்லாடலாம்..எல்லோருக்கும் பேராசிரியர் ஆமாம் சாமி..போட்டே "தென்னை மரம்" போல நிற்பார்..(edited) வாய்ப்பு உண்டு..

bala said...

இட்லிவடை அய்யா,
தி மு க பிளவு படும் பட்சத்தில்,நம்ம இரட்டை குழல் துப்பாக்கியின் ஒரு குழலான மானமிகு கருப்பு சட்டை எந்த இரட்டை குழல் துப்பாக்கிக்காக ஒரு குழலாக வெடிப்பார்?சென்னைக்கா அல்லது மதுரைக்கா?வைரைமுத்து போன்ற அரசவை கவிஞர்கள், தமிழ்,கவிதை என்றெல்லாம் யாருக்கு ஜல்லி அடிப்பார்?ஏதேனும் புலப்படுகிறதா?நீதிபதி ரகுபதி?

பாலா