பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 22, 2008

இட்லிவடை பதில்கள் - 22-07-08

இந்த வாரம் சில கேள்விகளுக்கு பதிலகள்

ராமபத்திரன் கேள்விகள்
1. இலக்கியவாதிகள் எல்லாம் சினிமாவுக்குப் போய்விட்டால் இலக்கிய உலகில் இனி சுவாரசியமான சண்டைகளே இருக்காதா?

சினிமா உலகில் இனிமேல் டூப் இல்லாமல் நிறைய சண்டைகள் பார்க்கலாம்.

2. கவர்ச்சி நடிகைகள் பிற்காலத்தில் தம் பேத்திகளுடன் உட்கார்ந்து தாங்கள் நடித்த படங்களைப் பார்க்க நேர்ந்தால் பேத்திகள் என்ன கேட்பார்கள்? பாட்டிகள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்?

"டிரஸ் எல்லாம் போட்டு நடிச்சீருக்கீங்க உங்களுக்கு கூச்சமா இல்லையா பாட்டி ?" என்ற டைப் கேள்விகளுக்கு பாட்டிகள் நிச்சயம் பதில் சொல்ல முடியாமல் தவிப்பார்கள்.

3. குமுதத்தில் வெளியாகும் சுஜாதாவின் கதை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

அது சுஜாதாவுடைய கதை. சுஜாதாவின் கதையாக இருந்தால், சுஜாதா ரிரைட் செய்திருப்பார்.

4. கனிமொழி, தமிழச்சி, அழகிரியின் மகள், கவிதா கணேசு, பிரேமலதா விஜயகாந்த் - எதிர்காலத்தில் மக்களை அதிகம் கவரக்கூடிய பெண் அரசியல்வாதி யார்? வரிசைப்படுத்தவும்.

சரத்குமார் மகள் வரலட்சுமி.

5. இட்லிவடை இலக்கியம் படிப்பதில்லையா? இங்கே இலக்கியப் பதிவுகளே வருவதில்லையே, ஏன்?

இட்லிவடையில் கலைஞர் கவிதை, அறிக்கை எல்லாம் வருது, அது உங்களுக்கு இலக்கியமா தெரியலையா ? மற்ற இலக்கியங்கள் வராததற்கு காரணம் இட்லிவடை டிசண்டான சைட்.

6. நீங்கள் காதலித்திருக்கின்ரீர்களா?
காதலித்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் பெண்கள் தான் தினமும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

7. பாலா-அமீர்-சசிக்குமார் ரேட்டிங் போடவும். யார் டாப்?
பாலாவிடம் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. சமயத்தில் ரசிக்கலாம், சமயத்தில் எரிச்சல் வரலாம். அமீரின் ஸ்டைல் முழுக்க முழுக்க ரிதம் based. தாளம் தப்புவதே இல்லை. அத்தனை பர்ஃபெக்‌ஷன் பின்னொருநாள் திகட்டுமோ என்னவோ. சசிக்குமார்? மதிப்பிட அவகாசம் வேண்டும். ஆனாலும் எடுத்து எடுத்து நினைத்துப்பார்க்கும்போது ஒரு பரவசத் தித்திப்பு முதல் படத்திலேயே இருக்கிறது. அழகிய பிசிறுகள் கொண்ட ஒரு நல்ல கவிதை சுப்ரமணியபுரம்.

8. நமீதாவின் இடத்தை நிரப்பவல்லவர் யார்?

எந்த இடத்தை என்று சரியாக சொல்லவும்.

ஷங்கர் அர்ஜீன் கேள்விகள்
வயதில் மிகவும் இளையவனான எனக்கு சமகால அரசியலைவிட இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் நிலவரங்கள், அப்போதைய சுவாரசியமான விஷயங்களை அறிந்து கொள்ள ஆவல். கீழ்கண்ட கேள்விகளும் அவை சார்ந்தவையே. பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்.

9. எம்ஜிஆர் ஆட்சிக்காலம் பொற்காலமாக இருந்ததா?
பொற்காலமா தெரியாது. ஆனால் பொன் வாங்க அப்போது இத்தனை அவஸ்தை இல்லை. நானும் உங்களை போல ச்சின்ன பையன் தான் :-)

10. எம்.ஜி.ஆர் - கலைஞர் எதிர்கட்சியினராக இருந்தபோது யாருடைய பேச்சு ஓங்கி இருந்தது.? கலைஞரின் வார்த்தை ஜாலங்களை எம்ஜிஆர் எப்படி எதிர்கொண்டார்.?

கலைஞர் அடுக்கு மொழி 1 மணி நேரப்பேச்சு, எம்.ஜி.ஆர் சோடா குடிக்க வாயை திறப்பதற்கு சமம். எம்.ஜி.ஆர் சூப்ப்ர் ஸ்டார் என்றால் கலைஞர் உலகநாயகன்.

11 .கலைஞர் அப்போதைய தோழர்களின் முதுகில் குத்தியே திமுக தலைமைக்கு வந்தார் என்பது உண்மையா?

ஒரு முறை நாரதர் விஷ்ணுவை பார்க்க வந்தார்
"நாராயணா ! நாராயணா ! உங்க சீட்டுக்கு அடியில் வண்டு" என்றார்.
அதற்கு விஷ்ணு பரவாயில்லை என்று சும்மா இருந்தார். நாரதற்கு ஒரே ஆச்சரியம்.
"ஏன் எழுந்திருக்கவில்லை?" என்று கேட்டதற்கு "நான் எழுந்தால் என் சீட்டில் யாராவது உட்கார்ந்துவிடுவார்கள்" என்றார் விஷ்ணு. இது தான் அரசியலில் முதல் பாடம். முதுகில் குத்துவது எல்லாம் சைடு எஃபெக்ட்

12 .இப்போது இருக்கும் தி,மு.க முன்னணி தலைவர்களில் அந்தக்காலத்தில் கருணாநிதி மீது அதிருப்தியாக இருந்தவர்களைப்பற்றி எழுத முடியுமா?

முடியும், ஆனால் எழுத மாட்டார்கள். அவர்களை தடுப்பது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.

13 . ரஜினிகாந்த் ஆரம்ப நாட்களில் மிகவும் பொறுமை இழந்து காணப்பட்டவராகவும், மனநிலை பிறழ்ந்தவராகவும் சில செய்திகள் படிக்க நேர்கிறது. எப்படி இவ்விதம் மாறினார். ஆன்மிகம் காரணமா? சுவாரசியமான தகவல்கள் ஏதேனும் உண்டா?

ரஜினி ராம்கியிடம் கேட்டுப்பாருங்கள்.

14 . சுப்பிரமணியசுவாமியின் ஆதி என்ன? என்ன செய்திருக்கிறார் இந்திய அரசாங்கத்தில் அல்லது இந்திய அரசாங்கத்திற்காக..?

எனக்கு தெரிந்து எல்லா அரசியல் தலைவர்களுக்கும் தலைவலியும், டீ'யையும் கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான்.

15 . உங்'களை' நேரில் பார்த்து நீங்கள்தானே இ.வ. என்று கேட்கும்போது மிகவும் தயாராக வைத்திருக்கும் புன்னகையும் 'அவங்கதாம்ப்பா' என்று சொல்லிவிடுவதையும் கவனித்திருக்கிறேன். நிற்க.
அ) பெயர் ரகசியத்திற்கு பயம் காரணமா? (கலைஞரிடம் உங்கள் செய்தி விமர்சனங்களின் சுருக்கங்கள் வாரந்தோறும் கொடுக்கப்படுகின்றன என்பதை நீங்களும் அறிவீர்கள்தானே!)

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. பலருக்கு அடிவயிற்றில் கனத்தைக் கொடுப்பதே இட்லியும் வடையும்தானே!

ஆ) அல்லது அடையாளம் தெரிவித்தால் சுவாரசியம் போய்விடும் என்று நினைக்கிறீர்களா?

கொஞ்சம் மறைத்து கொஞ்ம் காமித்தால் - கவர்ச்சி,
நிறையா காமித்தால் - விரசம்.
முழுவதும் காமித்தால் - அசிங்கம்.
முகமூடியை எடுக்காமல் இருக்க இது தான் காரணம் :-)

15.1 இது ஒரு பழைய பதிவின் பின்னூட்டம். சரி பார்க்க இயலுமா?

அந்த பின்னூட்டதுக்கு கீழே ம.வெ. சிவக்குமார், பா.ராவிடம் மன்னிப்பு கேட்டிருக்காரா என்று பாருங்கள் :-)

ஜி. சங்கர் கேள்விகள்
16. ஜூனியர் விகடன் மற்றும் தமிழ்மணம் முகப்புப் பக்க பட்டை கருப்பு- சிவப்பில் ஒளிருகிறதே ? என விஷயம் ?

பதில்1: முகத்தில் பட்டையை பார்த்தாலே கருப்பும், சிகப்பும் (கோபத்தில்) ஒளிர்வது ஒன்றும் எனக்கு புதுசு இல்லை.
பதில்2: கருப்பு சிவப்பு இருக்குமிடத்தில் கண்டிப்பாகத் தமிழ் இருக்கும். ஆனால் மணக்குமா என்று சொல்வதற்கில்லை.

17. அமிதாப் மர்மயோகியில் நடித்தால் தமிழில் யார் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும்? அமிதாபின் ஆளுமைக்கு அவரது குரலும் டயலாக் டெலிவரியும் ஒரு காரணம் இல்லையா ?

நிழல்கள் ரவி.

18. விஜய்டிவியில் மாலை 6 மணி சொற்பொழிவுகள் எப்படி ?
அந்த சமயத்தில் நான் வீட்டில் இருப்பதில்லை ஆனால் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு சரியா வீட்டுக்கு வந்துடுவேன்.

19. விடுதலை, முரசொலி போன்ற பத்திரிக்கைகளின் சர்குலேஷன் எவ்வளவு ? கட்சி ஆபீஸ் தவிர எத்தனை பேர் காசு கொடுத்து வாங்கி படிக்கின்றனர் ?

விடுதலை பற்றி தெரியாது.
முரசொலி - இரண்டு ஒன்று மு.க, மற்றொன்று ? அது உங்களுக்கே தெரியும்.

20. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் இரு பெருந்தலைகளும் தமிழ் திரையுலகில் அவ்வளவாக (சமீப படங்களில்) காணப்படாததின் காரணம் என்ன ?
Inflation

21. ஜெயமோகன் ஒரு பெரிய மலையாளப் பட லிஸ்ட் கொடுத்துள்ளாரே ? அதில் இட்லிவடையார் எத்தனை படம் பார்த்துள்ளார் ?
எனக்கு பிடித்தது மேலும் கீழுமாக சைடில் ஓடும் அவர் படங்கள். அது மலையளமா என்று தெரியாது.

22. குமுதத்திலும் ஆ.விகடனிலும் மொத்த பக்கங்களில் எத்தனை சினிமா சம்பந்த செய்திகள்/படங்கள் கொண்ட பக்கங்கள் ?

பார்க்க என்னுடைய பழைய பதிவு. தற்போது எப்படி என்று தனி பதிவாக போடுகிறேன்.

23. லாலு பிரசாத் பிரதமரானால் நாடு சுபிட்சமாகுமா ?
நாடு பற்றி தெரியாது, ஆனால் மாடுகள் சுபிட்சமாக இருக்கும்.

அனானி கேள்விகள்

24. அணு ஒப்பந்தத்தை ஆதரிக்கிறீர்களா?
லல்லுவே ஆதரிக்கும் போது நான் ஆதரிக்காமல் இருப்பேனா ?

25. மர்ம யோகி, கல்கியின் "பார்த்திபன் கனவு" நாவலை தழுவியதா?
கல்கியை தவிர, மர்மயோகி பட டிஸ்கஷனில் தமிழ் எழுத்தாளர்கள் முக்கால்வாசி பேர் இருக்கிறார்கள். அதனால் பார்த்திபன் கனவுவாக இருக்க வாய்ப்பில்லை.

3 Comments:

நாரத முனி said...

என்னது கலைஞர் இட்லிவடை படிக்கிறாரா? இன்னுமா உங்க மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயாம இருக்கு??

Anonymous said...

இதுதான் இட்லிவடைன்னு யாராவது போட்டா புடிச்சி உங்களை அம்பலபடுத்திடுவாங்க. அதனாலே நீங்க யாருங்ககர விபரத்தை உடனே
தெரிவிக்கறது நல்லது.

Anonymous said...

'கல்கியை தவிர, மர்மயோகி பட டிஸ்கஷனில் தமிழ் எழுத்தாளர்கள் முக்கால்வாசி பேர் இருக்கிறார்கள். அதனால் பார்த்திபன் கனவுவாக இருக்க வாய்ப்பில்லை'

too many cooks என்ற ஆங்கில சொலவடை :)
மயோ டிஸ்கசனில் இல்லாத எழுத்தாளர்கள் பட்டியல்
தருக