பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 16, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-07-08

இந்த வாரம் இட்லிவடை - முனி சாட்

bgmuni: ஹலோ இட்லி நலமா?
bgmuni is online.

me: நல்லாவே இருக்கேன் :)

bgmuni: நாம‌ என்னிக்கு ந‌ல்லா இல்லாம‌ இருந்தோம்? நாட்டைப் பத்தி பேசுவோம்.

me: ந‌ம்ப‌ நாட்டுக்கு என்ன‌? இந்தியா ஒளிர்கிற‌து. :)

bgmuni: அதுசரி. டெல்லி நிலவரம் பத்தி ஏதாவது தெரியுமா?

me: அது ஒரு வ‌யித்தெரிச்ச‌ல். ஒரு எம்.பியா இருந்திருந்தா இன்னேரம் அட்லீஸ்ட் 20 கோடி சம்பாதிச்சிருப்பேன். எதுக்கும் ஒரு குடிப்பினை வேணும் முனி.

bgmuni: அடுத்த ஜென்மத்துலயாவது நீ சுயேட்சை எம்.பியா இருக்க வாழ்த்த‌றேன். இப்ப‌ நில‌வ‌ர‌த்தைச் சொல்லு

me: வெயிட்.
Sent at 15:01 PM on Wednesday.

me: தற்போதைய நிலவரம் இது:

WITH NDA - 259

Bharatiya Janata Party 130
Communist Party of India-Marxist 43
Bahujan Samaj Party 17
Shiv Sena 12
Biju Janata Dal 11
Communist Party of India 10
Janata Dal - United 8
Shiromani Akali Dal 8
Telugu Desam Party 5
All India Forward Bloc 3
Telangana Rashtra Samithi 3
Revolutionary Socialist Party 3
Janata Dal-Secular 1
Trinamool Congress 1
Assom Gana Parishad 2

WITH UPA - 255

Congress 153
Samajwadi Party 36
Rashtriya Janata Dal 24
Dravida Munnetra Kazhagam 16 -1
Nationalist Congress Party 11
Lok Janshakti Party 4
Marumalarchi Dravida
Munnetra Kazhagam 2
Kerala Congress 1
Indian Union Muslim League 1
Pattali Makkal Katchi 6
People's Democratic Party 1
Sikkim Democratic Front 1
Marumalarchi Dravida Munnetra Kazhagam 2


bgmuni: மீதம் இருக்கறவங்க? இப்ப சொச்ச மிச்சமும் மிச்ச சொச்சமும்தானே ரொம்ப முக்கியம். :)‌

me: UNDECIDED மொத்தம் 29 சீட் இருக்கு. :)

Independents 6
Jharkhand Mukti Morcha 5
Janata Dal-Secular 2
All India Majlis-e-Ittehadul Muslimeen 1
Bharatiya Navshakti Party 1
Mizo National Front 1
National Loktantrik Party 1
Rashtriya Lok Dal 3
Nagaland People's Front 1
National Conference 2
Republican Party of India 1
Others- 5
Sent at 15:15 PM on Wednesday.

bgmuni: இவங்க‌தான் இப்ப ஹீரோக்கள்னு சொல்லு.

me: ஆமாம் இல்லையா பின்ன? தெலுங்கானா கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கனவே நிராகரிச்சிடுச்சு. அதனால அவங்க கட்சி எம்.பி.க்கள் 3 பேரும் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்த்து வாக்களிப்பாங்கன்னு தெலுங்கானா கட்சித் தலைவர் சந்திரசேகர், அறிக்கை.

bgmuni: ஓ. சரி அப்ப மூணு ஓட்டு போச்சு

me: நம்பிக்கை வாக்கெடுப்புல‌ காங்கிரஸ் அரசுக்கு எதிரா வாக்களிக்க சிரோன்மணி அகாலிதளம் முடிவு செஞ்சிருக்காம்.

bgmuni: பிரதமர் ஒரு சீக்கியர்னு ஜாதியை இங்கே கொண்டு வந்தாங்க. ஆனா எந்தப் பருப்பும் வேகலை போலிருக்கு. அந்த 8 எம்.பிக்களின் ஓட்டும் காலி.

me: யோவ் முனி, சீக்கியம்கறது மதம்யா. நீயும் தமிழ்ப்பதிவுகள் படிச்சு படிச்சு ஜாதி எது மதம் எதுன்னு கூடத் தெரியாம கலங்கிப்போயிருக்க.

bgmuni: :)

me: சரி விடு. அணுசக்தி ஒப்பந்தத்தை ஒத்துண்டா முஸ்லிம்களோட ஓட்டுக்களை இழந்துடுவீங்கன்னு கம்யூனிஸ்டுகள் சொல்றாங்க‌ளே அது மாதிரியா?

bgmuni: அணுசக்திக்கும் அல்லாவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த அழகுல இவங்க பி.ஜே.பியை மதவாத சக்தின்னு சொல்றாங்க.

me: கூத்து என்னன்னா சோம்நாத் சாட்டர்ஜி மதவாத சக்திகளோட நான் ஓட்டுப் போடணுமா? அதனால‌தான் நான் ராஜிநாமா செய்யலைன்னு சொல்றாரு.

bgmuni: பொழைச்சுப்பாரு. உள்ளூர்ல ராமதாஸ் என்ன செய்யிறாரு?

me: அவர்மட்டும் உள்ளூர்லயே சும்மா இருந்திண்டிருப்பாரா? காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்புச் ச‌ட்டத்தின் கீழ கைது செய்யப்பட்டு சிறையில் இருக்காரோன்னோ? அதைச் சாக்கா வெச்சுண்டு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமைல‌, 6 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் 3 பேர் எல்லாரும் டில்லி போறாங்க. அங்க‌ மத்திய மந்திரி சிவராஜ் பாட்டிலை சந்திச்சு, காடு வெட்டி குரு கைது செய்யப்பட்டதை கண்டிச்சு மனு கொடுக்கிறாங்களாம். கூடவே 'அன்பா' ஏதாவது பேரம் பேசினாலும் பேசுவாங்க. ;‍)

bgmuni: சிபு ஷோரென் திரும்ப மந்திரிப் பதவி கேட்டதா செய்தி வந்திருக்கே?

me: ஆமாம் எல்லோரும் பேரம் பேசும் போது இவர் மட்டும் சும்மா இருப்பாரா? சிபு ஷோரென், மத்திய அமைச்சரவையில‌ தனக்கு திரும்ப‌ இடம் கொடுத்தா நம்பிக்கை ஓட்டெடுப்புல ஆதரவாக வாக்களிக்கறதா சொல்லியிருக்கார்.

bgmuni: அப்ப பேரத்துல படியற தொகையைவிட மத்திய அமைச்சரவை இடம் அதிகம் சம்பாதிக்கும்னு சொல்லு. ;‍‍‍‍)

me: பின்ன? இவரை நிலக்கரி அமைச்சரா ஆக்கி நம்நாட்டு மூஞ்சில காங்கிரஸ் கரியைப் பூசினாலும் ஆச்சரியப் படக்கூடாது.

Sent at 3:25 PM on Wednesday

bgmuni: தன் 'கை' கறைபட்டாலும் பரவாயில்லை, நாட்டு மூஞ்சிலே கரி பூசியே தீருவேன்னு இருந்தா என்னதான் செய்யமுடியும்? அது சரி, சதா தூங்கிண்டே இருக்கற தேவ கவுடா என்ன சொல்றாரு?

me: அவர் பாதித் தூக்கத்துல திடீர்னு முழுச்சிகிட்டு, "கடந்த சில நாட்களாக தேசிய அரசியலில் நடைபெற்று வரும் சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன. ஒரே இரவில் கட்சியின் கொள்கைகள் மாறுகின்றன. கார்ப்பரேட் சக்திகள் வெளிப்படையாகவே அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நானும் 10 மாதங்கள் பிரதமராக இருந்தவன் தான். எனது அரசை பா.ஜ.,வும் காங்கிரசும் சேர்ந்து கவிழ்த்தன..." ன்னு ஏதேதோ புல‌ம்பிண்டிருக்கார். எப்படியும் அவர் அரசுக்கு எதிரா ஓட்டுப் போட போறார்னு தகவல்கள் வருது. ஆனால் அதுக்கு உண்மையான காரணம் அவர் க‌ட்சிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் போதிய ஒத்துழைப்பு த‌ர‌லைங்க‌ற‌துதான்.

bgmuni: தயாநிதி பத்தி கூட நேத்தி டி.ஆர்.பாலு ஏதோ சொன்னாரே, அவர் என்ன செய்யப் போறாரோ?

me: அதுவா, அதுதான் செம காமெடி அறிக்கை. "Dayanidhi Maran is not a child. He is the son of an illustrious leader called Murasoli Maran. He knows how to respond to a crஇசிச்." முன்னாடி அழகிரி, 'திமுகவுக்கு தயாநிதி மாறன் ஒரு இழுக்கு'ன்னு சொன்னார். அப்ப முரசொலி மாறன் பெருமைகள் எல்லாம் பாவம் பாலுவுக்குத் தெரியலை.

bgmuni: போட்டி மதிமுக தலைவருங்க கூட நேத்தி டிவில வந்தாங்க‌

me: ம.தி.மு.க.,வோட அதிருப்தி எம்.பி.க்கள் ரெண்டுபேரும் கொறடா உத்தரவை மீறி, மத்திய அரசுக்கு ஆதரவா பார்லிமெண்ட்ல ஓட்டளிச்சா பதவிப் பறிப்பை சந்திக்க வாய்ப்பிருக்கு. ஆனாலும் அவங்க, 'திமுகவோட வ‌ழிகாட்டுதலில் நாங்கள் செல்வோம்'னு சொல்லிக்கிட்டிருக்காங்க.

bgmuni: திமுக வழிகாட்டுதலா? பேஷ் பேஷ். இவங்க அரசியல் ஆயுசு என்னன்னு கண்ணுல தெரியுது. சுயேட்சை எம்.பிக்கள் என்ன சொல்றாங்களாம்?

me: வேற என்ன, எல்லாரும் மந்திரியாகணுமாம்.

bgmuni: பி.ஜே.பி இதுக்கு என்ன சொல்றாங்க‌?

me: பி.ஜே.பி என்ன செய்ய முடியும்? எடியூரப்பா கர்நாடகத்துல‌ செஞ்ச‌ டெக்னிக் தானே இது

bgmuni: பரதன் 25 கோடின்றாரு. அமர் சிங் 20 கோடின்றாரு. உண்மை நிலவரம் என்னன்னு தெரியலை.

me: நம்ப‌ நாட்டுல ஓட்டுன்னாலே பணம்னு ஆயிடுத்து. 25, 30 கோடிங்கறதெல்லாம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கலாம். ஆனா நிச்சயம் பணம் விளையாட்றதுங்கறது மட்டும் உண்மை. எம்.பிக்கள் எலக்ஷன் முன்னாடி அவங்களோட சொத்துக் கணக்கை காட்டணும். அப்படிக் காண்பிச்சதுல ஒரு சராசரி எம்.பியோட சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? 2 கோடி ரூபாய். பொய்யான சொத்துக் கணக்கே இப்படீன்னா உண்மையான கணக்கை அவங்க சொன்னா எவ்ளோன்னு பாத்துக்கோ.

bgmuni: எப்படியோ இந்தியா ஏழை நாடு. ஆனால் தேர்ந்தெடுக்கப்படறவங்க பணக்காரங்க ஆயிடறாங்க.

me: அப்பத்தானே 'இந்தியா ஒளிர்கிறது'ன்னு சொல்லிக்க முடியும்.

bgmuni: கடைசியா நம்பிக்கை ஓட்டெடுப்புல காங்கிரஸ் வெற்றி பெறுமா?

me: யாருக்குத் தெரியும்? ஓட்டெடுப்புல ஜெயிக்க காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 272 எம்.பி.க்கள் வேணும். ஆனா இப்ப இருக்கற நெலைமைல சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் ஆதரவோட சேர்த்து 260 எம்.பி.க்கள்தான் இருக்காங்க.

bgmuni: அப்ப இன்னும் 12 எம்.பி.க்கள் தேவைப்படறாங்களே..

me: ஆமாம். பயமில்லாம நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்கணும்னா 20 எம். பி.க்கள் வரைக்கும் வேணும். அதனால இன்னும் 20 பேரை தங்களோட‌ பக்கம் இழுக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில இருக்கு.

bgmuni: சரி இந்த அரசியல் 20-20 ல வெற்றி பெற்றவங்க ரெண்டு பேர். ஒன்னு, ம‌ன்மோகன் சிங்; தைரியமா உங்களால முடிஞ்சதை செஞ்சுக்கங்கய்யான்னு சொன்னதுக்கு. ரெண்டாவது சரியான சவுண்ட் கொடுத்த ஸ்பீக்கர் சோமநாத் சாட்டர்ஜி. ஆக மொத்தம் எம்.பிக்களின் ஏலத்தை பார்த்தால் இது கூட ஒரு ஐ.பி.எல் கிரிக்கேட் மாதிரி தான் இருக்கு

me: அதுசரி.

bgmuni: சிறையில சில எம்பிக்கள் இருக்காங்களாமே?

me: ஆமாமாம். ஜெயில்ல இருக்கற எம்.பி.,க்கள், நம்பிக்கை ஓட்டெடுக்கும்போது பார்லிமெண்டுக்கு அழைச்சுண்டு வந்து ஓட்டுப் போட அனுமதிப்பாங்க. ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முகமது ஷகாபுதீன், பப்பு யாதவ், சமாஜ்வாடி கட்சி அட்டிக் அகமது, முகமது அப்சல் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி உமாகாந்த் யாதவ், லோக் ஜனசக்தி கட்சி சூரஜ்மான் சிங்னு மொத்தம் ஆறு எம்.பி.,க்கள் ஜெயில்ல இருக்காங்க.

bgmuni: ஆக நம் நாட்டின் தலைவிதி இந்த மாதிரி கிரிமினல்களின் கையில் இருக்கு. வாழ்க பாரதம்.

me: வாழ்க பாரதம். :) பை

bgmuni: அடுத்த வாரம் சந்திக்கலாம்.
Sent at 15:36 PM on Wednesday

bgmuni is offline. You can still send this person messages as he is a God and he will receive it. But I am not sure if he will reply.

7 Comments:

We The People said...

எம்.பி ரேட்டும் மாறிவிட்டதாக தகவல், 50 கோடி ஆகிவிட்டதாம்.
10 மாதத்துக்கு 50 உங்களால் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டுத்தான் எல்லா எம்.பிகளிடமும் பிரச்சாரம் நடக்குதாம்!!

வாழ்க ஜனநாயகம்!

பினாத்தல் சுரேஷ் said...

அருமையான பார்மட். இதை ரொம்ப ரசிச்சேன்:

bgmuni is offline. You can still send this person messages as he is a God and he will receive it. But I am not sure if he will reply.


ஆனா, ஆப்லைன் மெசேஜுக்கு இட்லிவடையே ரிப்ளை பண்றதில்ல - கடவுளா பண்ணப்போறாரு?

20 கோடியா 25 கோடியான்றதா முக்கியம்? இப்பதான் இன்வெஸ்ட்மெண்ட் ரிட்டர்ன்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு :-)

IdlyVadai said...

//ஆனா, ஆப்லைன் மெசேஜுக்கு இட்லிவடையே ரிப்ளை பண்றதில்ல - கடவுளா பண்ணப்போறாரு?//

அப்படியா ? ( இதுவும் இரு ரிப்ளை தான் :-)

Boston Bala said...

very interesting! good one

இலவசக்கொத்தனார் said...

//bgmuni: அணுசக்திக்கும் அல்லாவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த அழகுல இவங்க பி.ஜே.பியை மதவாத சக்தின்னு சொல்றாங்க.//

ஆகா! முனி இம்புட்டு அப்பாவியா? எப்படி எல்லாம் பேசி நல்லவங்க வேஷம் போடறாங்கப்பா!! :))

இந்த பார்மேட் அட்டகாசம்!! :)

Anonymous said...

யோவ் இட்லிவடை சாக்திரதையா இரு, யாராவது ஒட்டுக்கேட்டு நீ பிளாக்ல போடறத்துக்கு முன்னாடி எம்பி3யா நெட்டிலா போட்டுருவாங்க,
அப்புறம் முனி கோவிச்சுக்கிட்டு மலையேறிடும் :)

Anonymous said...

Idlyvadai Fan..


இந்த முறை முனி அரசியல் மட்டுமே Chat செய்துட்டு போயிட்டாரு.. மற்ற விஷயங்களிலை தெரிஞ்சுக்க நாட்டம் இல்லையா..
அட நீங்களாவது ஞாபகப்படுத்தியிருக்க கூடாதா? இப்பல்லாம் சாமி கூட அரசியல் தெரிஞ்சுக்க அவ்ளோ ஆர்வம் காட்றாரு..
அரசியல் ஒரு சாக்கடைன்னு பலர் சொன்னாலும் ... அத பற்றி தெரிஞ்சுக்க ரொம்பவே ஆர்வாமா இருக்காங்க...
நல்ல மாற்றம்.
முனியே சரணம்
பாடிகாட்-ஆக வரணும்..!
அன்பே முனி
அவன் திருவடி பணி..!
இட்லிவடை அவருக்கு படையல்
அவருக்கு பிடிச்சது அரசியல்..!