பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 29, 2008

சூரத்தில் 13 குண்டுகள் கண்டெடுப்பு

குஜராத் மாநிலம் சூரத் நகரில் போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் 13 வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மற்ற குண்டுகளை செயலிழக்க செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சனிக்கிழமை மாலை அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வைர நகரம் என போற்றப்படும் சூரத்தில் நாள்தோறும் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் கார்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. நேற்றும் இரண்டு இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று 10 வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூரத்தில் உள்ள வர்ச்சா சாலை மற்றும் மராத்தா சாலையில் 3 குண்டுகளும், லாபேஷ்வர் என்ற இடத்தில் 2 குண்டுகளும், சந்தோஷி நகர், மடவாடி ஆகிய இடங்களில் தலா 1 குண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மடவாடி என்ற இடத்தில் மரம் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லாபேஷ்வர் பகுதியில் காவல் நிலையம் அருகே அனாதையாக கிடந்த ஒரு பையில் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 10 இடங்களில் சூரத்தில் குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அந்த நகரம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டதோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
( மாலை மலர் செய்தி கொஞ்சம் மாற்றங்களுடன் )

2 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

இதென்னடா சோதனை-- ரொம்ப பயமா இருக்கே

Anonymous said...

More bombs are found in Bangalore. They were defused later. The reports are not publicly announced.