பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 10, 2008

1, 2, 3

அணுசக்தி ஒப்பந்தம் - ஆதரவு, பிளவு...

பிளவு
அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

95 வயது மூத்த தலைவரான மேற்கு வங்க முன்னாள் முதல்- மந்திரி ஜோதிபாசு, "காங்கிரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறக்கூடாது'' என்பதில் தீவிரமாக இருந்தார்.

அவருக்கு ஆதரவாக சீதாராம் எச்சூரி பேசி வந்தார். அவர்கள் கருத்தை பிரகாஷ் காரத் ஏற்காததால் மார்க்சிஸ்ட் தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆதரவை வாபஸ் பெற பிரகாஷ் காரத் உறுதியான முடிவு எடுத்த போது சீதாராம் எச்சூரி அதிருப்தி அடைந்தார். இதனால் அவர் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள் வதைத் தவிர்த்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சீதாராம் எச்சூரி திடீரென லண்டன் புறப்பட்டு சென்றார். தனிப்பட்ட பயணமாக அவர் சென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதம் கொடுக்கும்போது உடன் செல்வதை தவிர்க்கவே அவர் வெளிநாடு சென்றதாக தெரிகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும்போது இவர் இடது சாரிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வருவாரா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

சீதாராம் எச்சூரியை "காங்கிரஸ் ஆதரவாளர்'' என்று இடது சாரி கட்சி தலைவர்களே கடந்த 4 ஆண்டுகளாக கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
பாராளு மன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்டுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எல்லாரும் பேட்டி கொடுத்தப்படி உள்ளனர்.
பாராளுமன்றத்தில் பரி பூரன மெஜாரிட்டி இருப்பது போல இவர்கள் பேசினாலும், மனதுக்குள் உள்ளூர கலக்கத்தில்தான் இருக்கிறார்கள். கடைசி நேரத்தில் யாராவது காலைவாரி விட்டு விடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.
குறிப்பாக சமாஜ்வாடி கட்சியின் 39 எம்.பி.க்களில் 7 பேர் ஆதரவு கிடைக்குமா என்பதில் இன்னமும் விடைகிடைக்கவில்லை.
மெஜாரிட்டியை நிரூபிக்க காங்கிரசுக்கு 272 எம்.பி.க்கள் தேவை. இந்த மேஜிக் நம்பரை நெருங்கியும், நெருங்காமலும் காங்கிரஸ் உள்ளது. 280 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்துவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறினாலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரே உள்ளடி வேலையை காட்டி விடக்கூடும் என்ற பயமும் உள்ளது.
இதனால் ராஷ்டீரிய லோக் தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ம.தி.மு.க. (2), மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஓட்டை உறுதி செய்யும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.இன்று மாலை பிரதமர், பிரதீபா பாட்டீலை சந்தித்து பேச இருக்கிறார். 7 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று ராஷ்டிரபதி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாதி கட்சி அரசுக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளது.

எனவே அரசுக்கு போதிய எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது எனும் நம்பிக்கை ஜனாதிபதிக்கு ஏற்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு உத்தரவிட மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் இந்த வகையில் செயல்பட்டதை அவர் முன்னு தாரணமாக கொள்வார் என்று கூறப்படுகிறது.

எனினும் பிரதமர் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரதமர் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றாலும், தமது அரசு கவிழாது என்று கூறியிருக்கிறார்.


இடதுசாரிகள் இதுநாள் வரை கோரி வந்த சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடனான இந்தியா பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய வரைவு ஒப்பந்தத்தின் (Draft agreement) முக்கிய அம்சங்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.


123 புரியாதவர்களுக்கு 123 கார்டூன்

2 Comments:

அவனும் அவளும் said...

பொறுத்து இருந்து பாப்போம் என்ன நடக்குதுன்னு. ஆட்சி கவிழாம இருந்தா நல்லது.

Anonymous said...

nan adikiramathiri adikiran ni aluvuramathiri aluvu makkal ellam muttalkal ethu yaro election tholiviel sonnathunko