பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 07, 2008

இட்லிவடை பதில்கள் - 07-07-08

கேள்வி பதில்கள் இந்த வாரம்..

கேள்விகள் - பாஸ்டன் பாலா
1. படம் வெளியான பிறகும் ட்ரெயிலர்களில் 'Main Film is yet to be certified' என்று வருகிறதே. உண்மைய சொல்லணுங்கிற எண்ணமா அல்லது சென்சார் எல்லாம் கண்டுக்காதீங்க என்னும் அவமதிப்பா?

அதையெல்லாம் மாற்ற வேண்டுமா என்கிற சோம்பேறித்தனம். அல்ல‌து இன்னும் ப‌ட‌ம் புதுசுதான் என்று சொல்லும் ஜிம்மிக்ஸ். சிகரேட், மது காட்சிகளில் - மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று வருகிறதே அது போல் தான் இதுவும். கண்டுக்காதீங்க.

2. சிட்டி சென்டர் யுவதிகள், ஸ்பென்சர்ஸ் பெண்கள் - நாகரிக ஆடைகளை ஒப்பிடுக.
நம்ம ஊர் பெண்களுக்கு ஜின்ஸ் போன்ற உடை எல்லாம் பொருந்தாது. அது அமெரிக்கா போன்ற நகரத்து பெண்களுக்கு தான் பொருந்தும். அதை எழுதினால் பின் நவீனத்துவம் என்பார்கள் அதனால் அதை எழுதலை.
மனைவியுடன் சென்றால், கும்மிடிபூண்டியில் இருக்கும் பெண்கள் கூட அழகாக தெரிவார்கள். ( கும்மிடிபூண்டி என்று சும்மா பேச்சுக்கு சென்னேன். )


3. கபாலி கோவில், காந்தி சிலை பீச், காமதேனு தியேட்டர் - கடலைக்கு சாலச் சிறந்த இடம் எது?
காந்தி சிலை பீச் தான் பெஸ்ட். அட்லீஸ்ட் காந்திக்கு பிடித்த ஒன்றை அங்கே செய்கிறார்களே என்று சந்தோஷப்படுங்க.

4. பெண்கள் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்தால் மாநகரப் பேருந்தில் கண்டுகொள்வதில்லையே... சென்னையில் சமத்துவம் வந்துடுத்தா?
இல்லையே. என் ந‌ண்ப‌னின் அனுப‌வ‌ம் வேறு மாதிரி இருந்ததாகச் சொன்னானே.

"லேடீஸ் சீட்ல‌ உட்கார்ந்த‌துக்கு ஒரு லேடி என்னை செருப்பால அடிச்சுட்டாங்க இட்லிவடை"

‌"காட்டுமிராண்டித்தனமா இருக்கே. இப்ப‌ல்லாம் லேடீஸ் இதையெல்லாம் க‌ண்டுக்காத அளவுக்கு சமத்துவமும் நாகரிகமும் வந்திடுச்சின்னில்ல நினைச்சேன்?"

"அந்த‌ சீட்ல‌ அவ‌ங்க ஏற்கனவே உட்கார்ந்திருந்த‌தை நான் பாக்க‌லைனான்".

5. ஏசி பேருந்தில் உள்ளே நுழைந்தவுடனே பயணக் கட்டணத்தை சொல்லும் நடத்துநர் தன் கடமையைச் செய்கிறாரா? சாமானியனை மட்டந்தட்டி மதிப்பிடுகிறாரா?
சாவு கிராக்கி, கஸ்மாலம் என்று மாமூல் வாசகங்கங்களை பின்னாடி சொல்லாமல் இருக்க ஒரு முன் எச்சரிக்கையாக அதை சொல்கிறார்.


ஜி. சங்கர்

1. த.சத்தியநாராயணன், அயன்புரம், எம்.சம்பத் வேலாயுதம்பாளையம், ப.மூர்த்தி பெங்களூர் போன்ற கேள்வி கேட்போர்/வாசகர் கடிதம் எழுதுவோர் கடந்த 20- 25 வருடங்களாக எத்தனை பத்திரிக்கைகளைக் காசுகொடுத்து வாங்கியிருப்பர் ? அல்லது கேள்வி/கடிதம் பிரசுரமானால் பத்திரிக்கை இலவசமா ? போஸ்ட்கார்ட் / இன்லண்டு லெட்டருக்கு இவர்கள் எத்தனை செலவழித்திருப்பர் ?

புகைபிடிக்க‌, த‌ண்ணிய‌டிக்க‌ எல்லாம் எப்படி செலவுக் கணக்கு வைத்துக் கொள்வதில்லையோ அதுமாதிரி கணக்குவைத்துக் கொள்ளாத ஒரு போதை செல‌வுப் ப‌ழ‌க்கம்தான் இதுவும். இதிலாவது எழுத்து பிர‌சுர‌மானால் கொஞ்ச‌ம் புக‌ழும், சில நேரங்களில் ஒரு புத்த‌க‌மும் இல‌வ‌ச‌மாக‌க் கிடைக்கும். ம‌ற்ற‌தில் அவையும் இல்லை.

2. அப்துல் கலாமைப் போலவோ கே.ஆர். நாராயணனைப் போலவோ அல்லது அதற்கு முந்தைய சங்கர் தயாள் சர்மா போலவோ எந்தவிதத்திலும் எந்த சிறப்பும் இல்லாததால்தான் பிரதிபா பாடீலை இந்தியாவில் யாரும் தற்போது அவ்வளவாக தங்கள் கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது பிற திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிடுவதில்லையோ ? இப்படி ஒரு ஜனாதிபதி இந்தக் காலகட்டத்தில் தேவையா ? (சோனியாவுக்கு ஒரு ஆமாம் சாமி தேவைப்பட்டிருக்கலாம் அதற்காக இப்படி ஒருவரா ?)

பிர‌தீபா ப‌ட்டீலின் நேற்றைய நிக‌ழ்ச்சி ‍‍ மும்பை டி.ஒய்.படேல் கல்லூரியில். இவரையும் எல்லோரும் ஆங்காங்கே கூப்பிடுகிறார்கள். ஆனால் ஊட‌க‌மும் ம‌க்க‌ளும் அதற்காகப் புல்ல‌ரிப்ப‌தில்லை என்றுவேண்டுமானால் சொல்லலாம்.

நீங்க‌ள் குறிப்பிட்ட‌வ‌ர்க‌ளைவிட‌ சிற‌ந்த‌ ஜ‌னாதிப‌திகூட‌ பிற்கால‌த்தில் வ‌ர‌லாம். அத‌ற்காக‌ இவரையும் இந்தப் பதவியையும் கால‌ம் ச‌கித்துக் கொள்ள‌த்தான் வேண்டும்.

3. அம்புலிமாமா இன்னும் வெளிவருகிறதா ? விலை எவ்வளவு ? 10ரூ? 15ரூ ? விக்ரமாதித்யன் வேதாளம் எல்லாம் இருக்கிறதா ? துப்பறியும் சாம்பு கார்டூன் தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளதா ?

அம்புலிமாமா வெளிவருகிறது. தி.நகர் விட்கோ பக்கத்தில் உள்ள பெட்டி கடையில் 15ரூக்கு விற்கிறார்கள். என்ன இருக்கு என்பதை புத்தகம் வாங்கி பாருங்க. துப்பறியும் சாம்பு கார்ட்டூன் புத்தகம் விரைவில் என்று அலயன்ஸ் வெளியிட்ட தேவன் புத்தகத்தில் பார்த்திருக்கிறேன் ( 1990 பதிப்பு ). ஸ்ரீநிவாசனிடம் இதை பற்றி கேட்டால் அதுல அப்படி போட்டிருக்கா ? என்று கேட்டாலும் கேட்பார்.

4. கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு பொழுது எப்படி போகிறது ? தினமும் ஒரு அறிக்கை விடுவதைத் தவிர மீதி நேரத்தை எப்படி செலவழிக்கிறார் ? ஏதேனும் சேதி உண்டா ?

இன்று வந்த செய்தி: கொடநாட்டிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எப்போது சென்னை திரும்புவார் என்று தெரிவிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. நீதிமன்றத்துக்கே இந்த நிலமை உங்களுக்கு எல்லாம் ?

5. தேசிகன் எங்கு இருக்கிறார் ? தேசிகன் பக்கத்தில் பதிவுகளைக் காணோமே ? அமுதனுக்கு அமுதூட்டுவதில் பிஸியா ? இல்லை வெளிநாட்டுப் பயணமா ?

சுஜாதா மரணத்துக்குப் பிறகு தேசிகன் தனது வலைப்பதிவில் எழுதுவதில்லை. உங்கள் கேள்வியை அவருக்கு அனுப்பியதற்கு இன்னும் பதில் இல்லை. இரங்கல் எழுதுவதற்காக வருந்தாமல், உண்மையான வருத்தத்தில் இருக்கிறார் போலிருக்கிறது. கலைக்கவேண்டாம் - குறைந்தபட்சம் இப்போது.

6. தினத்தந்தியில் வரும் எகனாமிக்டைம்ஸ் பக்கம் - தினத்தந்தியின் சாமானிய வாசகர்கள் புரிந்துகொள்ளும் லெவலில் இல்லையே ?

நாட்டின் இன்றைய எகனாமிக் டைம்ஸ் சிதம்பரம் மாமாவே புரிந்துகொள்ளும் லெவலில் இல்லை. சாமானியன் புரிந்துகொண்டுதான் என்ன செய்யப் போகிறான்? அந்த பகுதி தினத்தந்தியின் கிருமி லேயர் வாசகர்களுக்கு.

7. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - இதெல்லாம் உள்ள (திரையில் தான்) தற்போதைய ஹீரோயின் யார் ?

கொல்ல‌ங்குடி க‌ருப்பாயி, பறவை முனியம்மா.. மற்ற ஹீரோயின்கள் திரையில் வந்தால் நமக்கு அந்த உணர்வு வரும்.

8. சாரு நிவேதிதா - ஜெயமோகன் பதிவுகள் எதுவும் எனக்குப் புரிவதில்லை. நான் ஒரு நல்ல தமிழ் வாசகனா ?

போன ஜன்ம புண்ணியம்.

10. சாரு நிவேதிதா போன்றவர்களுக்கு பணக்கார நண்பர்கள் எப்படி கிடைக்கிறார்கள் (தினமும் நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடவும்..இன்ன பிறவுக்கும்)

ப‌ண‌க்கார‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்குக் கிடைக்காத‌ எதையோ (ஊடக‌ப் புக‌ழ்?) அவர்களுக்கு சாரு வ‌ழ‌ங்குகிறார் என்று அர்த்த‌ம். அதுச‌ரி, ப‌ண‌க்கார‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் ஏன் சாருவுக்கு ந‌ண்ப‌ர்க‌ளாக‌ இல்லை, அல்ல‌து எத்த‌னை ஏழைக்கு சாரு, ந‌ல்ல‌ ந‌ண்ப‌ராக‌ இருக்கிறார் என்று மாற்றியும் யோசிக்க‌லாம்.

அனானி கேள்விகள்...

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த லட்சிய தி.மு.க. பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் மீது விஜய டி. ராஜேந்தர் கடும் தாக்குதல் தொடுக்க, மேடை மீது செருப்பு வீசப்பட்டு ஒரே கலாட்டா. பாதியிலேயே கூட்டம் முடிந்துவிட்டது.
What's your view on this news ?

உன் நிற‌ம் க‌ருப்பு
உன‌க்கு விழும் செருப்பு
நீ என்னடா பெரிய ப‌ருப்பு
இனி இல்ல‌டா உன் இருப்பு

அடுத்த கூட்டத்தில் கேப்டன் வந்துவிழுந்த செருப்புகளின் புள்ளிவிபரம் தருவர் என்று எதிர்பார்க்கலாம்.

3 Comments:

Anonymous said...

For the first time, i think i like this post!

mani

Anonymous said...

ஜி. சங்கர்

பதில்களுக்கு நன்றி. மேலும் கேள்விகள்.

(உங்களிடம் கேட்டு பதில் வந்தவுடனேயே தேசிகன் பதிவு போட்டுள்ளாரே - நன்றி)

1. ஜூனியர் விகடன் மற்றும் தமிழ்மணம் முகப்புப் பக்க பட்டை கருப்பு- சிவப்பில் ஒளிருகிறதே ? என விஷயம் ?

2. அமிதாப் மர்மயோகியில் நடித்தால் தமிழில் யார் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும்? அமிதாபின் ஆளுமைக்கு அவரது குரலும் டயலாக் டெலிவரியும் ஒரு காரணம் இல்லையா ?

3. விஜய்டிவியில் மாலை 6 மணி சொற்பொழிவுகள் எப்படி ?

4. விடுதலை, முரசொலி போன்ற பத்திரிக்கைகளின் சர்குலேஷன் எவ்வளவு ? கட்சி ஆபீஸ் தவிர எத்தனை பேர் காசு கொடுத்து வாங்கி படிக்கின்றனர் ?

5. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் இரு பெருந்தலைகளும் தமிழ் திரையுலகில் அவ்வளவாக (சமீப படங்களில்) காணப்படாததின் காரணம் என்ன ?

6. ஜெயமோகன் ஒரு பெரிய மலையாளப் பட லிஸ்ட் கொடுத்துள்ளாரே ? அதில் இட்லிவடையார் எத்தனை படம் பார்த்துள்ளார் ?

7. குமுதத்திலும் ஆ.விகடனிலும் மொத்த பக்கங்களில் எத்தனை சினிமா சம்பந்த செய்திகள்/படங்கள் கொண்ட பக்கங்கள் ?

8. லாலு பிரசாத் பிரதமரானால் நாடு சுபிட்சமாகுமா ?

9. ஸ்டாலினுக்கு என்னதான் உடல் பிரச்னை ? எந்த பத்திரிக்கையிலும் இதன் விபரங்கள் வரவில்லையே ?

10. உங்களை கேள்வி பதில் ஆரம்பிக்கச் சொல்லி, கேள்விகளும் நான் மட்டுமே (பெரும்பாலும் ) கேட்டு வருகிறேனே ? ஏன் ? மற்றவர்கள் இட்லிவடைக்கு கேள்வி கேட்பதில் ஏன் சுணங்கி இருக்கிறார்கள். ? தமிழ்மணத்தில் இ.வ இல்லாதது தான் காரணமா ?

நாரத முனி said...

தேசிகன எதுக்கு இங்க இழுத்தீங்க? சந்தேகம் வரகூடதுனா? LOLZZ