பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 03, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 07-07-08

இந்த வாரம் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்...

அன்புள்ள இட்லிவடை,

நலமா ?

வரவர அரசியல் செய்திகளிலிருந்து சினிமாவுக்கு மாறிவிட்டாய். சரி, தமிழ்நாட்டில் இரண்டும் இரட்டைப் பிள்ளைகள்தானே.

முதலில் ஒரு மகிழ்ச்சியான செய்தி. எனக்கு இருக்கும் லட்சியம் தான் லட்சிய தி.மு.க. கட்சித் தலைவர் விஜய டி. ராஜேந்தருக்கும் இருக்கிறதாம். சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில், "எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசை இல்லை" என்று கூறியிருக்கிறார். அவர் இதைச் சொல்லும் போது கொஞ்சம் கூட சிரிக்காமல் சொன்னது தான் ஆச்சரியம். அப்பறம் அவர் பத்திரிக்கை பேட்டி ஒன்று சமீபத்தில் பார்த்தேன் நீ அதை பார்த்தாயா ? நாலே நாலு நிமிஷத்துல முடிஞ்சு போச்சுதி.மு.க. இப்போது அ.தி.மு.க. ஆகி விட்டது. அதாவது அழகிரி தி.மு.க. முரசொலியில் கலைஞர், இனிமேல் மாறன் சகோதர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று சொல்லிவிட்டார். மாறன் சகோதர்களுடைய அடுத்த காய்நகர்த்தல் என்ன என்று எல்லோரும் தலையைச் சொறிந்துகொண்டிருக்க, அவர் பா.ஜ.க பக்கம் திரும்பினாலும் திரும்புவார் என்கிறார்கள் பார்க்கலாம். இதை பற்றி ஜூவி இப்படி எழுதியிருக்கு

"கருணாநிதி நானே ஒரு பத்திரிகையாளர் என்பார். ஆனால், அவரை விமர்சித்து எழுதினால் கோபம் கொண்டுவிடுவார். 'இந்து' பத்திரிகையை 'மவுன்ட்ரோடு மஹாவிஷ்ணு' என்று கிண்டல் செய்வார். அதே 'இந்து'வில் தி.மு.கவுக்கு சாதகமாகச் செய்தி வந்தால் 'இந்து பத்திரிகையே பாராட்டிவிட்டது' என்று முரசொலியில் மறுபதிப்பு செய்து சந்தோஷப்படுவார். குறிப்பிட்ட ஒரு தமிழ் நாளிதழை 'யாரும் படிக்காதீர், வாங்காதீர்' என்று அறிக்கையாக வாய் மலர்...ந்தார். அதை 'வாங்க மாட்டோம்' என்று உறுதிமொழிக் கடிதம் அனுப்பியவர்களின் பட்டியலை எல்லாம் முரசொலியில் தினம் வெளியிட்டார்கள். இப்போது கருணாநிதி தவறாமல் அந்தப் பத்திரிகையையும் படித்துவிட்டு, அதிகாரிகளையும் கட்சிக்காரர்களையும் கேள்விகளால் துளைக்கிறாராம். 'கலைஞர்' தொலைக்காட்சியின் முக்கிய விளம்பரதாரராகவும் இருக்கிறது அந்த நாளிதழ்."


இப்பொழுதெல்லாம் டிவியில் மது, சிகரேட் உபயோகிக்கும் சினிமா காட்சிகளில் 'எச்சரிக்கை' லேபிள் போடுகிறார்கள். ஆனால் சன் குழும சேனல்களில் மட்டும் இது மிஸ்ஸிங். இது ஏன் அன்புமணி கண்ணில் இன்னும் படவில்லை?

முதலமைச்சர் கருணாநிதியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி திடீரென சந்தித்துப் பேசியுள்ளார், அணுசக்தி ஒப்பந்தம், கம்யூனிஸ்டுகள் ஆதரவு வாபஸ் பற்றியெல்லாம் பேசியிருப்பார்கள் என்று நீ நினைத்தால் அது தான் கிடையாது; அவர் சம்பந்தியுடன் ஏதோ லடாயாம். ஈ.வி.கே.எஸ் ஒரு மீட்டிங்கில், இன்னும் இரண்டு வாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி காலியாகப் போகிறது என்று சொன்னதை மக்கள் டிவி திரும்ப திரும்ப காண்பித்ததின் விளைவு.

கலைஞர் தன் கேள்வி பதில் அறிக்கையில் சோனியா, மன்மோகன் சிங்கை பற்றி எழுதிய தினமணி தலையங்கத்திற்கு "முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை என்பதா?" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று உன் ரசிகர்களையாவது கேட்டுச் சொல்.

ஏதாவது வங்கியைக் கொள்ளை அடிக்கலாம் என்று இருக்கிறேன். எனக்கு அவசரமாக சில கோடிகள் பணம் வேண்டும். பொட்ரோல் வாங்க இல்லை; உடனே நம்ம இளைய திலகம் பிரபுவை வைத்து சிவாஜி, தசாவதாரத்தை விட பெரிய பட்ஜட் படமாக ஒன்று எடுக்கலாம் என்று இருக்கிறேன். "என் தந்தையின் பிறந்த நாளின்போது என் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன்'' என்று சொல்லும் பிரபுவைத் தடுத்தாட்கொண்டு, தமிழகத்தை உய்விக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.

இந்த ஆங்கில பத்திரிகை, டிவிக்களுக்கு தமிழன் என்ன செய்தாலும் பிடிக்காது தசாவதாரம் படத்தின் 'Outlook' விமர்சனத்தின் ஒரு பகுதி.

Yet, Kamal’s modesty is incomprehensible. The opening flash card: "For the first time in the history of world cinema, one legend in ten roles," insults his versatility and the prosthetic make-up skills of Michael Westmore. Anyone can make out that along with a Chaplin-like George Bush, the cameos of Manmohan Singh, Karunanidhi and Jayalalitha were all Kamal in disguise. He also suppresses the fact that several NASA scientists, Indian policemen and hotel receptionists were him in disguise. The expressive monkey being lab-tested for biological warfare was surely Kamal. I suspect even the 12th-century elephant was him. He suffuses each frame somewhat like the all-pervasive Vaishnav god he upholds in the narrative. Then why be modest and not claim all those roles?


இதை எழுதியது Sadanand Menon என்று போட்டிருக்கிறது. எனக்கென்னவோ பத்ரி இரண்டாம் தடவை தசாவதாரம் பார்த்துவிட்டு இந்த பெயரில் எழுதினாரோ என்று ஒரு சந்தேகம்...

நம் வீரமணி அண்ணன், 'திமுக, அதிமுக எது பகுத்தறிவில் டாப்?' என்ற கேள்விக்கு இப்படிப் பகுத்தறிந்து பதில் சொல்லியிருக்கிறார்.

தமிழர் தலைவர்: .தி.மு.க. என்றால் பகுத்தறிவு இயக்கம் என்பதை அண்ணா அவர்கள் ஏற்படுத்தி இன்றளவும் கலைஞர் அவர்கள் அந்தக் கொள்கையிலேயே வழுவாமல், நழுவாமல் தீவிரமாக இருந்து கொண்டிருக்கின்றார் (பலத்த கைதட்டல்). இதிலே கொண்டு போய் அ.தி.மு.க.வை சேர்ப்பது இருக்கிறது பாருங்கள், அது ரொம்ப சிக்கலான விசயம். அ.தி.மு.க. கட்சிப் பெயரில் அண்ணா இருக்கிறார். பெயரில் திராவிடம் இருக்கிறது. அந்த மாதிரி ரொம்ப கட்சிகள் இருக்கிறது. விஜயகாந்த் கட்சியில் கூட திராவிட கழகம் இருக்கிறது. இதில் தேசியம் இருக்கிறது. முற்போக்கு இருக்கிறது. பிற்போக்கு இருக்கிறது. எல்லா போக்கும் சேர்ந்து கடைசியில் கொள்கைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுமே தவிர வேறு ஒன்றும் இல்லை (கைதட்டல்). ஆகவே அந்த நிலையில்தான் இருக்கிறது. ஆகவேதான் அவர்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை.
அ.தி.மு.க. தலைமையே அப்படி இருக்கிறது...


(கைத்தட்டல் எங்கிருந்து வந்தது என்று யோசிக்கிறாயா, ஒரு கேள்வி-பதில் அரங்கிலிருந்து.)

இந்த நேரத்தில், முன்பு வீரமணி அவர்கள் ஜெயலலிதாவை எப்படி எல்லாம் புகழ்ந்தார் என்று நினைவுப்படுத்தி, உன் பிபிஐ ஏற்றிக்கொள்ளாத அளவுக்கு நீ அரசியலில் புத்திசாலியாகியிருப்பாய் என்று நம்புகிறேன்.

அப்பறம் பசுபதி குசேலன் படத்தில் 50% நடித்திருந்தார், ரஜினி 25% என்றால் அது ரஜினி படமாக இருக்காது என்று பி.வாசு பசுபதி நடித்த காட்சிகளை 25% சுருக்கியுள்ளார். இதனால்தான் பசுபதி பாடல் வெளியீட்டுவிழாவிற்கு வரவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். குசேலன் ஒரு நண்பனின் கதை, ஆனால் இந்தப் படத்தினால் நண்பர்கள் பகைவர்களாக ஆகிவிட்டார்கள் போலும். இருந்தாலும் இன்று பசுபதி தான் ஷூட்டிங்கில் இருந்தால் வர முடியவில்லை என்று சொல்லியிருக்கார்.

குசேலன் பாடல்களைக் கேட்டேன், ரொம்ப சுமார், அதுவும் சங்கர் மகாதேவன் சினிமா சினிமா என்று பாடும், சே படிக்கும் பாடல் ஐயோ...

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் நவீன கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கருவி, கள்ளக்காதலிக்கு செல்போனில் அனுப்பப்படும் செய்திகளையும், கள்ளக்காதலி அனுப்பும் செய்திகளையும் படித்து விடும். அழிக்கப்பட்ட செய்திகளை கூட அது விடாது. நீங்கள் நடத்தும் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் அது கவனிக்கும். இந்த கருவிக்கு "சிம் கார்டு ரெக்கவரி புரோ'' என்று பெயர். இந்த கருவி கள்ளக்காதலியை தான் கண்டுபிடிக்கும், கள்ளக்காதலனை கண்டுபிடிக்காதா ? எதற்கும் இனிமே எல்லோரும் ஜாக்கிரதையா இருப்பது நல்லது.

போன மாதம் வந்த செய்தி இது. ஆராய்ச்சியாளர்கள் பூச்சியின் கக்காவிலிருது பெட்ரோல் எடுத்திருக்கிறார்கள். நாளை மனிதக் கழிவிலிருந்து பெட்ரோல் எடுக்க ஆரம்பித்தால் இந்த மாதிரி பெட்ரோல் பங்குகளில் கியூவில் நிற்க வேண்டாம். ஆக Crude ஆயில் என்பதற்கு சரியான அர்த்தம் இதுதானா ?.
ஆயில் புல்லிங்க் பற்றி கேள்வி பட்டிருக்கேன், இது ஆயிலிருந்து புல்லிங் :-)

அன்புடன்,
முனி

3 Comments:

Anonymous said...

டி.ஆர் வாழ்க!!!!

keyven said...

இதென்ன டி.ஆர்.. இந்த பிரஸ் மீட் ஐ குழாயடி சண்டை மாதிரி ஆக்கிட்டாரு ?

Anonymous said...

"இதை எழுதியது Sadanand Menon என்று போட்டிருக்கிறது. எனக்கென்னவோ பத்ரி இரண்டாம் தடவை தசாவதாரம் பார்த்துவிட்டு இந்த பெயரில் எழுதினாரோ என்று ஒரு சந்தேகம்..."

நல்லவேளை பாரா எழுதினார் என்று சொல்லவில்லை.மேனன் பத்திரிகையாளர், சந்திரலேகாவுடன்
(நாட்டியக்கலைஞர்) பணியாற்றியவர்.
பத்ரி போல் வயதில் இளைஞர் அல்ல.
இட்லிவ்டை போல் வயதில் மூத்தவர்.
பத்ரி தசாவதாரம் எடுத்தது எப்படி என்று புத்தகம் வெளியிடப்போகிறாராமே? உண்மையா