பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 18, 2008

திமுக X பாமக

பாமக நீக்கம் - கலைஞர் பேட்டி

கேள்வி:- இன்றைக்கு உயர்நிலை செயல் திட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவிற்கு பிறகு-ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து பா.ம.க வை வெளியேற்ற வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் நீங்கள் கேட்பீர்களா?

பதில்:- அப்படி நாங்கள் கேட்பதாக இல்லை.

கேள்வி:- எப்போதோ ஜனவரி மாதத்தில் பேசிய பேச்சுக்கு இப்போது நடவடிக்கையா என்று டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே?

பதில்:- ஜனவரியில் கொலை நடக்கிறது. அதை கண்டுபிடிக்க மாட்டோமா? நடவடிக்கை எடுக்க மாட்டோமா?

கேள்வி:- உங்களை ஜி.கே.மணி நேரில் சந்தித்ததாகவும், நீங்கள் குறுந்தகட்டை (சி.டி.) அவருக்கு போட்டுக் காட்டியதாகவும் சொல்கிறார்களே?

பதில்:- அது தவறான செய்தி. அந்த குறுந்தகட்டை கடந்த 13-ந் தேதி மதியம் தான் நம்முடைய ஆற்காடு வீராசாமி அன்றைய தினம் திருமணத்திலே பேசிய பிறகு-அதனை எனக்கு போட்டுக் காட்டிய பிறகு தான் அதைக்கேட்டேன். அதற்கு முன்பு அந்த வாசகங்களை நான் படித்தேன். சில வார பத்திரிகைகளில் வந்தது. அதைத்தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. பொருளாளர் ஆற்காடு வீராசாமி திருமணத்திலே எனக்கு முன்பு உணர்ச்சி வயப்பட்டு பேசிய பிறகு தான் அந்தக் குறுந்தகட்டைப் பெற்று போட்டுப்பார்த்தேன். அதிலே என்னென்ன இருக்கின்றது என்பதை இந்த தீர்மானத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

கேள்வி:- ஏற்கனவே நீங்கள் ஜி.கே.மணிக்கு அந்த குறுந்தகட்டை போட்டுக் காட்டியதாக சொல்கிறார்களே?

பதில்:- இல்லை, கிடையாது. மணி அப்படி பொய் சொல்ல மாட்டார். அவர் பொய் சொல்லக் கூடியவர் அல்ல.

கேள்வி:- டாக்டர் ராமதாசுக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதியதாக பத்திரிகைகளுக்கு சொல்லியிருக்கிறாரே?

பதில்:- ஆமாம், அந்த கடிதத்தை நீங்கள் திருப்பி படித்துப்பார்த்தால் நான் எவ்வளவு நாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி:- ஏற்கனவே உங்களுக்கு தகவல் தெரிந்திருக்கிறது என்று அந்த கடிதத்திலே உள்ளதா?

பதில்:- அதைப்பற்றி இல்லை. பொதுவாக அந்த மாவட்டத்தில் கலவரமாக இருக்கிறது. காவல் துறை அதிகாரி பற்றி புகார் சொல்லி, அவரை மாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டபடி அவருடைய பேச்சைக் கேட்டு உடனடியாக அந்த அதிகாரியை மாற்றினேன். இந்தத் தீர்மானத்திலே அதெல்லாம் இடம் பெற்றுள்ளது.

கேள்வி:- பா.ம.க.விற்கு பதிலாக வேறொரு கட்சி ஏதாவது உங்கள் அணிக்கு வருமா?

பதில்:- அப்படி கட்சிகள் வந்தே ஆக வேண்டுமென்றும் எதுவும் கிடையாது.


கேள்வி:- மத்திய அமைச்சரவையில் பா.ம.க வினர் தொடர்வார்களா? அதை நீங்கள் அனுமதிப்பீர்களா?

பதில்:- மத்திய மந்திரி அன்புமணி மீது எனக்கு அன்பு உண்டு. அன்புமணிக்கும் எனக்கும், தி.மு.க.விற்கும் எந்த விரோதமும் இல்லை.

கேள்வி:- இங்கே கூட்டணியில் இல்லை என்கிறீர்கள். அங்கே மத்திய அரசில் மட்டும் கூட்டணியா?

பதில்:- இந்தக் கேள்வி, எங்கள் கூட்டணியிலிருந்து விலகியவர்களிடம் கேட்க வேண்டியது.


கேள்வி:- குறுந்தகடையொட்டி காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

பதில்:- எனக்குத் தெரியாது. சட்டப்படி எதுவும் நடக்கலாம்.

கேள்வி:- காடுவெட்டி குருவைப்பற்றி பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படியிருந்தும் அவர் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பதில்:- இந்த கேள்வி உங்களை போன்ற ``அறிவு ஜீவி''களிடமிருந்து வரட்டும் என்று காத்திருந்தோம்.


கேள்வி:- டாக்டர் ராமதாஸ் மீண்டும் உங்களிடம் இதைப்பற்றி பேச முற்பட்டால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

கேள்வி:- ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரிடம் இந்தப்பிரச்சினை பற்றி சொன்னீர்களா?

பதில்:- அவர்கள் கேட்கவும் இல்லை, அதனால் நான் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவும் இல்லை.

கேள்வி:- இதற்கு பிறகு, இவ்வளவு பிரச்சினை ஆன பிறகு, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தக் கூட்டணி வர வாய்ப்பிருக்கிறதா? ``மறப்போம், மன்னிப்போம்'' என்று அவர் சொன்னாரென்றால் அதை ஏற்றுக் கொண்டு அடுத்த தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா?

பதில்:- ``மறப்போம், மன்னிப்போம்'' என்று அவர் சொல்ல முடியாது, நாங்கள் அல்லவா சொல்ல வேண்டும்.

கேள்வி:- கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு இருக்கிறதா? மன்னிப்போம் வேண்டாம், மறந்து விடுவோம், ஒன்றாக இருப்போம் என்று சொன்னால், பா.ஜ.க போன்ற கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக மறுபடியும் அவர்கள் கூட்டணியில் சேருவதை நீங்கள் பரிசீலிப்பீர்களா?

பதில்:- பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதிலே நீங்கள் பிடிவாதமாக இருக்கின்ற காரணத்தால் - இந்த யோசனையை நீங்கள் டாக்டர் ராமதாசுக்கு சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி:- இந்தப் பிரச்சினை குறித்து மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துவீர்களா?

பதில்:- இது தி.மு.க விற்கு ஏற்பட்ட ஒரு அவமானகரமான நிகழ்ச்சி. அந்த களங்கத்தை இப்போது நாங்களே போக்கிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான். வேறு யாருக்கும் பிரச்சினை உருவாக்க விரும்பவில்லை.

கேள்வி:- இன்றைய முடிவு ஏகமனதான முடிவா?

பதில்:- ஆமாம்.

கேள்வி:- ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாவட்ட ஆட்சித்தலைவரை ``குரு'' கேவலமாகப் பேசியிருக்கிறார். அதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?


பதில்:- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த விஷயத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வார்களேயானால் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.


கேள்வி:- சுகாதாரத்துறை, ரெயில்வே துறை போன்றவற்றில் தமிழக திட்டங்களுக்கு பாதிப்பு வருமா?

பதில்:- தண்டவாளத்திலிருந்து ரெயில் கீழே இறங்கி விடுகிறது என்ற பாதிப்புகளைத் தவிர வேறு எந்த பாதிப்பும் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் ரெயில்வே துறையைப் பொறுத்து அங்கேயிருக்கின்ற பெரியவர் லல்லுவும் சரி, இங்கேயுள்ள துணை மந்திரியும் சரி, சுகாதாரத்துறை மந்திரியும் சரி நல்லவர்கள் என்பது என் கருத்து.

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் உங்களைப்பற்றி மதிப்பெண் போட்டது மாதிரி, அவருடைய தோழமையை குறித்து நீங்கள் எவ்வளவு மதிப்பெண் தருகிறீர்கள்?

பதில்:- நான் அந்த பரீட்சை பேப்பரையே படித்துப்பார்க்க விரும்பவில்லை. நான் இப்போதும் அவரை ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் மதிக்கிறேன்.

கேள்வி:- ஆடு பகை, குட்டி உறவு என்பது சரிப்பட்டு வருமா?

பதில்:- அதற்குள் சாப்பாட்டு ஞாபகமா?


கேள்வி:- இன்றைய முக்கிய கூட்டத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வரவில்லை?

பதில்:- அவர் வெளிநாடு சென்றிருக்கிறார். நேற்றைய தினம் என்னிடம் தொலைபேசியிலே பேசினார். நாளை (இன்று) சென்னை திரும்புவதாக தெரிவித்தார்.ராமதாஸ் அறிக்கை
தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு மேற்கொண்டுள்ள முடிவை பார்க்கையில், "இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்கிறார்கள்'' என்ற புகழ்பெற்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. தி.மு.க. எடுத்துள்ள இந்த முடிவுக்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினையில் எங்கள் தரப்பு வாதங்களையும், அதில் உள்ள நியாயங்களையும் ஏற்கனவே, தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியபடி இந்த விவகாரம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடித்து வைக்கப்பட்டுவிட்ட விவகாரம். இன்னும் சொல்லப்போனால் கலைஞரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விவகாரம். ஆனாலும், ஆறு மாதங்கள் கழித்து அதனை பிரச்சினையாக்கி, அரசியலாக்கியிருக்கிறார்கள்.

தனிமனித விவகாரங்களை, தனிமனிதர்கள் மீது ஏற்படும் கோபதாபங்களை அரசியலாக்கி அதை முன்னிறுத்தி கசப்பான அரசியல் முடிவுகளை அறிவிப்பது என்பது தி.மு.கழகத்துக்கு புதிதல்ல. முன்பு ஒரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக தோழர் என்.சங்கரய்யா பொறுப்பேற்று செயல்பட்டுக்கொண்டு இருந்தபோது அவர் மீது ஏற்பட்ட தனிப்பட்ட கோபத்தின் காரணமாக, அந்தப்பொறுப்பில் அவர் இருக்கும் வரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளமாட்டோம் என்று அறிவித்து செயல்பட்டது தி.மு.க. இப்போது அந்த சரித்திரம் திரும்பியிருக்கிறது. தி.மு.க. இன்னமும் மாறவில்லை என்பதை மீண்டும் அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கிறது.

கூட்டணி என்கிறார்கள். தோழமைக் கட்சி என்கிறார்கள். ஆனால் முடிவை மட்டும் அவர்களே மேற்கொள்கிறார்கள். ஏன் என்று கேட்டால் நடப்பது தி.மு.க.ஆட்சிதானே என்று முதல்-அமைச்சரே சொல்கிறார். தி.மு.க.ஆட்சியில் தி.மு.க.வினர் முடிவு எடுக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளையும் நட்புக்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால் பிறகு நட்புக் கட்சிகள் தனியாக ஏன் கட்சி நடத்திக்கொண்டு இருக்க வேண்டும். கட்சிகளை கலைத்துவிட்டு தி.மு.க.வோடு இணைந்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக "வாழ்க'' என்று குரல் கொடுத்துக்கொண்டுதானே இருக்க வேண்டும்.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது என்பதைத்தான் அவர்கள் இன்று மேற்கொண்டுள்ள முடிவு எடுத்துக்காட்டுகிறது. அதற்கு எப்போதோ நடந்துவிட்ட ஒரு நிகழ்வை இன்னும் சொல்லப்போனால் எப்போதோ முடித்து வைக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வை காரணமாகக்காட்டி பிரச்சினையை திசைதிருப்பி பா.ம.க மீது பழி சுமத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு முடிவை தி.மு.க. எடுத்துவிட்டதே என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஏனெனில் தி.மு.க.வின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை. இதுவரையில் எங்களைச்சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள் நின்று செயல்பட்டுக்கொண்டிருந்தோம்.

தோழமை என்கிற உணர்வு அவ்வப்போது குறுக்கிட்டதால், சில பிரச்சினைகளில் சுதந்திரமாக எங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியாமல் இருந்து வந்தது. இப்போது, "இலக்குமணன் கோடு'' என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை. மக்கள் பிரச்சினைகளுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் இன்னும் அதிகமாக குரல் கொடுப்போம். எங்கள் பயணம் நேரானது. லட்சியம் உறுதியானது. அதில் இருந்து கிஞ்சித்தும் மாறமாட்டோம்.

2 Comments:

Anonymous said...

தீர்மானத்தில் பரபரப்பு தகவல்கள் காடுவெட்டி குரு பேசியது என்ன?


சென்னை, ஜூன் 18: திமுகவில் கொந்தளிப்பு ஏற்படும் அளவுக்கு பா.ம.க. பிரமுகர் காடுவெட்டி குரு என்ன பேசினார் என்ற தகவல் திமுக உயர்மட்ட குழு தீர்மானத்தில் இடம் பெற்றிருந்தது. அது வருமாறு:

2008ம் ஆண்டு சிறப்பான ஆண்டா அமையப் போகிறது. சிவசங்கருடைய (ஆண்டிமடம் திமுக எம்.எல்.ஏ.) அப்பாவாலேயே ஒன்றும் முடியவில்லை. இவன் நேற்று வந்த பையன். மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் எடுபிடி. இவனுக்கு எடுபிடி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர். எங்க மாவட்ட செயலாளர் வைத்தி மீது பொய் வழக்கு நீ போடச் சொன்னாயோ அல்லது உனது தலைவர் கருணாநிதி போட சொன்னானா, நீ எந்த வழக்கு வேண்டுமானாலும் போடு. என்னை ஒரு ...... புடுங்க முடியாது.
எங்க கட்சி பொறுப்பாளர்கள் மீது வழக்கு போட்டால் ராஜாவோ, சிவசங்கரோ, நீங்க யாரும் உயிருடன் இருக்க முடியாது. குடும்பத்தையே உயிரோடு எரிச்சுருவோம். பெரம்பலூர் கலெக்டர் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த மாமா சொல்லி இந்த போலீஸ்காரன் பொய் வழக்கு போடுகிறான்.

ஒரு போலீஸ்காரன்கூட பொண்டாடிக்கிட்ட படுக்க முடியாது. ஊரில் ஒரு பஸ் ஓடாது. எரிச்சுருவோம். மாநாட்டுக்கு வசூல் பண்றதா சொல்றான். திமுககாரன் வசூல் பண்ணலையா? அதேபோல நாங்களும் வசூல் செஞ்சோம். மிரட்டிதாண்டா வசூல் செஞ்சோம். உன்னால என்ன புடுங்க முடியும்? பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆபீசை மூடிடுவேன்.


டேய் சிவசங்கர்.. நீ சின்ன பையன். உன் அப்பனை கேளுடா. நீ மட்டும் வைத்தியை கைது செய்திருந்தால் ஆண்டிமடம் தொகுதியில் இந்நேரம் இடைத்தேர்தல் வந்திருக்கும்.

வைத்தியை உள்ளே அனுப்பி விட்டு நாங்க என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமா. இனிமேல் திமுககாரன் எந்த பொதுக்கூட்டத்தில் தாக்கிப் பேசினாலும் அத்தனை பேரையும் வெட்டி கொளுத்துங்கடா.
இந்த ராஜாவோ, கருணாநிதியோ என் ......கூட புடுங்க முடியாது. நாங்கள் பழைய நிலைக்கு திரும்பினாலும் கருணாநிதி.. நீ நிம்மதியா ஆட்சி செய்ய முடியாது. ஆற்காடு வீராசாமி ஆந்திரால இருந்து வந்தவன். இவனே ஒரு பொறம்போக்கு. இவன் வந்து நம் வன்னியர் சங்க கல்விக் கோயிலை பொறம்போக்கு நிலத்தில் கட்றோம்னு சொல்றான். தைரியம் இருந்தா ஒரு கமிஷன் போட்டு நிலத்தை சர்வே செய்து பார்.
ஊராட்சி தேர்தலில் திமுககாரன் காட்டிக் கொடுத்ததும் கூட்டிக் கொடுத்ததும் நாட்டு மக்களுக்கு தெரியும். மானங்கெட்ட பயலுகளா! 27 சதவீத இடஒதுக்கீட்டுக்காக போராடுகிற ஒரே தலைவன் இந்தியாவிலேயே நமது மருத்துவர் ஐயாதான் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியே நீ திராவிடம் பேசி எங்களை ஏமாற்றியது போதும். இனி நீ திராவிடம் பேசாதே. வன்னிய சமுதாயத்துகாக மூன்று அமைச்சர்களை கொடுத்திருக்கிறேன் என்று கருணாநிதி சொல்றான். ரெண்டு கோடி மக்கள் உள்ள சமுதாயத்துக்கு மூணு அமைச்சராம். ரெண்டு சதவீதம் உள்ள ஆற்காடு வீராசாமி சமுதாயத்துக்கு மூணு அமைச்சராம். என்னங்கடா உங்க நியாயம்?
அமைச்சர் ராஜா கட்சிக்காக எத்தனை முறை ஜெயிலுக்கு போயிருக்கிறான்? சிவசங்கர் எத்தனை முறை சென்றிருக்கிறான்? தமிழ்நாட்டில் நாங்கள் எல்லா ஜெயிலையும் பார்த்துட்டோம். டெல்லி தீகார் ஜெயில்தான் பார்க்கவில்லை. அதற்கும் செல்ல தயாரா இருக்கிறோம்.


ராஜா.. 1989க்கு முன்னாடி ஒரு திமுககாரன் கூட அவன் கட்சிக்கொடியை கூட கட்ட முடியாது. ஒரு திமுக கொடிக்கம்பம் கூட இல்லை. எல்லாத்தையும் வெட்டி சாய்த்து ஓட ஓட விரட்டினோம். உனக்கு தெரியாவிட்டாலும் பழைய திமுககாரனை கேட்டு தெரிந்து கொள். 2011ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை அமைக்கும். இதை கருணாநிதியோ ஜெயலலிதாவோ யாராலும் தடுக்க முடியாது.
கருணாநிதியே எங்களுக்கு முகவரி இருக்கிறது. உனக்கு இருக்கிறதா? திமுக கூட்டணியில் பாமகதான் இருக்கு. வன்னியர் சங்கம் இல்லை. அதனால் நீ என்னை மிரட்டி பார்க்காதே. நீ எத்தனை வழக்கு போட்டாலும் சந்தோசமா ஜெயிலுக்கு போவோம். ஆனால் மீதமுள்ள என் சகோதரர்கள் என்ன செய்யணுமோ அதை செய்து விடுவார்கள். உன் கூட்டணி பற்றி நாங்க கவலைப்படவில்லை. இன்றைக்கு வேண்டுமானாலும் வெளியே போய்விடுவோம். அதனால் நஷ்டம் உனக்குதான். மருத்துவர் ஐயா டாஸ்மாக் கடைகளை மூட சொல்கிறார். மாசம் 9000 கோடி வருமானம் வருது, அதை எப்படி இழப்பதுனு கருணாநிதி கூறுகிறான். டாஸ்மாக் கடையில் எந்த பார்ப்பான் வந்து குடிக்கிறான்? எந்த பணக்காரன் குடிக்கிறான்? நம்மை போன்ற பாட்டாளி வர்க்கமான ஏழை விவசாயிதானே குடிக்கிறான். அவன் மனைவி பிள்ளைகளை பட்டினி போட்டுட்டு அவங்க தாலிய அறுத்தல்லவா கருணாநிதி சம்பாதிக்கிறான்.
அமைச்சர் ராஜாவுக்கு பூர்வீக சொத்து எவ்வளவு? இன்றைக்கு பல நூறு கோடி சொத்து. எங்கிருந்து சம்பாதித்தான்? ஊரை கொள்ளை அடித்துதானே சம்பாதித்தான்? நாங்க திமுக கூட்டணியில் இருந்தால்தான் ராஜா நீ மந்திரி! எங்களுடைய ஒன்றரை லட்சம் ஓட்டை வைத்துதான் எம்பி ஆகியிருக்கிற. எங்க மாவட்ட செயலாளர் வைத்தி மீது பொய் வழக்கு போட புகார் கொடுத்தது சிவசங்கரனுடைய சொந்தக்காரன். பொய் புகார் கொடுத்து பொய் வழக்கு போட்டிருக்கிறான்.
ராஜாவே.. நீ சொல்லி வழக்கு போட்டாயா? உன் தலைவன் கருணாநிதியை மரியாதையா வழக்கை வாபஸ் வாங்கச் சொல். இல்லையென்றால் போலீசை செயல்பட விடமாட்டோம். எல்லோரையும் வெட்டி சாய்த்து விடுவோம். இந்த மாவட்டமே தீப் பிடித்து எரியும். எங்கள் கட்சி இளைஞர்கள் வெட்டரிவாள், வேல்கம்போடு வீட்டுக்கு ஒருவர் வருவோம். போலீசா நாங்களானு பாத்துருவோம் என்று நேரடியா எச்சரிக்கிறேன்.

இவ்வாறு காடுவெட்டி குரு பேசியிருப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Hariharan # 03985177737685368452 said...

என்னது வாழும் வள்ளுவர் இப்படி "வாளும்" வள்ளுவரா வீராவேசம்!!

//இப்போது, "இலக்குமணன் கோடு'' என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை.//

மருத்துவர் இராமதாஸ் ஐயா இப்படி வாழும் வள்ளுவரை வெறுப்பேற்றலாமா??

ஹூ இஸ் ராமன்? என்று கேட்டு பிரபலம் அடைந்தவர் வாழும் வள்ளுவர்.

அப்படி இல்லாத ஒரு ராமனின் தம்பியாம் இலக்குமணன் போட்ட கோட்டுக்கு என்ன ரெஸ்பெக்ட் இதுநாள்வரையில் பாமகவில் இருந்திருக்க முடியும்னு வாழும் வள்ளுவனார் நெஞ்சுல முள்ளா உறுத்தாதா?

கோடு கீடுன்னு பேசுறதால இந்த மேட்டருக்கு யாரு புள்ளிவைச்ச புள்ளிராஜா? யாரு கோடு போட்டா?

காடுவெட்டி குரு கொலைகாரப்பய அப்படின்னு கண்டுபிடிக்க சிடி சயிண்டிஸ்டு தேவையா?

எல்லாம் சரி காடுவெட்டி குரு கொலைகாரன்னு கழட்டிவிடும் நமது அரசியல் சாணக்கியர் மற்றும் வாழும் வள்ளுவர் தன் மகனான தா.கிருட்டிணனை, தினகரன் ஊழியர் மூவரைக் கொலை செய்த அழகிரிக்கு அதிகாரம்/பதவின்னு கிடைக்க வேண்டி கிடந்து துடித்து நவீன சிபிச்சக்கரவர்த்தி ஆகிறார் வாழும் வள்ளுவர் மு.க!

மிருகங்களை புசித்தல் தவிர்க்க கொல்லாமை சொல்லியவர் ஒரிஜினல் திருவள்ளுவர்!

மனிதர்களை மிருகம் போன்று கொன்று குவித்த மகனின் தந்தையாம் மு. கருணாநிதியை வாழும் வள்ளுவராக்கி திருவள்ளுவரை வாளெடுத்து கொலைசெய்தவராக்கியதுதான் பகுத்தறிவா கூவம் நாறும் தமிழகமே?