பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 26, 2008

தி.மு.கழகத்திற்கும் `தினகரன்’ இதழுக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை

விரும்பிய சேனலை பார்க்க முடியவில்லை’ மரண பயத்தில் மதுரை மக்கள் - ஜெயலலிதா அறிக்கை ( தினகரன் )
தி.மு.கழகத்திற்கும் `தினகரன்’ இதழுக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை - கழகத்தினருக்கு ஓர் அறிவிப்பு ( முரசொலி )
தினகரனில் ஜெ அறிக்கை

சென்னை, ஜூன் 25: மதுரை மாவட்ட மக்கள் அஞ்சி, நடுங்கி, அடிமைகள் போல் வாழ்கின்றனர். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அனைத்து டி.வி. சேனல்களையும் பார்ப்பதற்கும் அங்குள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும் நியாயமான வழிமுறையை சுயநலமின்றி வகுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதுரையை தலைமையிடமாக கொண்டு ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை மு.க.அழகிரி தொடங்கி இருக்கிறார். அதை விரைவில் தென்மாவட்டங்கள் முழுவதும் விஸ்தரிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்துக்கும், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மதுரை மக்கள் அனைத்து சேனல்களையும் பார்க்க முடியவில்லை. அங்குள்ள கேபிள் ஆபரேட்டர்கள் ராயல் கேபிள் விஷனில் இணையுமாறு ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுகிறார்கள் என்றும், இதுகுறித்த புகாரை காவல் துறையினர் வாங்க மறுக்கின்றனர் என்றும் தகவல்கள் வருகின்றன.
மதுரையில் நிலவும் பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது, Ôஅரசு கேபிள் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கி நடத்த இருக்கிறது. அதன்மூலம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்Õ என்று கூறினார். மாறன் குடும்பத்துடன் பிரச்னை ஏற்பட்ட ஒரு சில மாதங்களிலேயே இரண்டு டிவி சேனல்களை ஆரம்பித்த கருணாநிதிக்கு, அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தொடங்க என்ன தடை இருக்க முடியும்? ஏன் இதில் தாமதம்? எல்லாம் சுயநலம்தான்! அப்படி அரசு கேபிள் கார்ப்பரேஷன் வந்தாலும் அதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தன்னுடைய மகனை மீறி தைரியமாக செயல்படக்கூடிய நிலைமையில் முதல்வர் இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் அநியாயமான விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வு, மறைமுக பேருந்துக் கட்டண உயர்வு, தொடர் மின்வெட்டு. பணவீக்கம் அதிகரிப்பு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என பல்வேறு துன்பங்களை தமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கவலையை மறந்து ஏதோ சிறிது நேரமாவது டிவியில் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியை பார்த்து பொழுதை கழிப்போம் என்றால், அதற்கும் வழியில்லாத நிலை தற்போது மதுரை மாவட்டத்தில் உருவாகி இருக்கிறது.
Ôமுன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலைÕ, Ôதினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு, அதன் காரணமாக மூன்று பேர் மரணம்Õ ஆகிய நிகழ்ச்சிகளின் காரணமாக பொதுமக்களும், கேபிள்டிவி ஆபரேட்டர்களும் செய்வதறியாமல் திகைக்கின்றனர். மரண பயம் அவர்களை தற்போது கவ்விக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அஞ்சி, நடுங்கி அடிமைகள் போல அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், மாநாடு என்ற போர்வையில் ஆங்காங்கே, அரசு பஸ்களை மாநாட்டுக்கு பயன்படுத்தியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும் பொதுமக்களை முதல்வரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே கருணாநிதிக்கு நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமானால், மதுரை மாவட்ட மக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அனைத்து டிவி சேனல்களையும் கண்டு மகிழ்வதற்கும் அங்குள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும் நியாயமான வழிமுறையை சுயநலமின்றி வகுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.முரசொலி அறிவிப்பு
"மரண பயத்தில் மதுரை மக்கள்" என்ற தலைப்பில் இன்றைய "தினகரன்" நாளேட்டில் மிகப்பெரிய தலைப்பிட்டு, அரைப் பக்கச் செய்தியாக அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையொன்று தி.மு.கழக அரசுக்கும், தி.மு.கழகத்திற்கும் எதிரான பொய்ச் செய்திகள் கொண்டதாக வரிக்கு வரி விஷம் கக்கிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அந்த அறிக்கையில் எந்த விதமான உமியளவு உண்மையும் கிடையாது, தேவையில்லாமல் அரசுக்கு அவப் பெயர் வர வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏனைய நாளேடுகளில் பெரும்பான்மை ஏடுகள் ஜெயலலிதாவின் அறிக்கையை முழுமையாக வெளியிடவில்லை என்கிறபோது, "தினகரன்" நாளிதழ் மட்டும் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பதிலிருந்து - பல முறை அறிவுறுத்தியும் கேளாமல் நடந்து கொள்ளும் அந்த ஏட்டின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே தி.மு.கழகத்திற்கும் "தினகரன்" இதழுக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், கழகத் தோழர்கள் யாரும் அந்த இதழில் விளம்பரங்களோ, செய்திகளோ தரத் தேவையில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


தலைமைக் கழகம்
தி. மு. க.
25. 6. 2008

7 Comments:

Anonymous said...

இட்லி வடைக்கு, தசாவதாரம் சலித்து விட்டதா? துவைச்சு காயப் போட்ட பிறகு அடுத்த மேட்டருக்கு, அதாங்க இரண்டு குடும்பங்களின்(!!) சண்டைக்கு போய்ட்டீங்க?

தசாவதாரம் ஸ்லைடு ஷோ தூக்கீட்டீங்க? நன்றாக இருந்தது. குசேலன் ஸ்டில்ஸ் வந்துருச்சு. இன்னும் பார்க்கவில்லையா?

IdlyVadai said...

அனானி இட்லிவடை பொது மேடை போல் ஆகிவிட்டது.

தசாவதாரம் எனக்கு வந்த இரு கடிதத்தை முனிக்கு fwd செய்தேன். அவ்வளவு தான்.

அதே போல் இன்று காலை ஒருவர் தினகரன் - மாறன் பற்றிய நியூஸ் NDTVஇல் வருகிறது ஏன் இட்லிவடையில் இன்னும் அதை காணோம் என்று செல்லமாக கமெண்ட் போட்டு கோபித்துக்கொண்டார். அதனால் இந்த நியூஸ்.

அதேபோல் மாளவிகா பற்றி நியூஸுக்கு ஏன் கவரேஜ் இல்லை என்று ஒரு ரசிகர் மெயிலில் இப்ப கேட்டிருக்கிறார். என்ன செய்ய ?

IdlyVadai said...

சொல்ல மறந்துட்டேன் குசேலன் ஸ்டில்ஸ கலக்கல். உங்களுக்காக சைடில் சிலைடு ஷோ :-)

IdlyVadai said...

சைடில் சோ கருத்து :-)

Senthil said...

why did not u give the option "fail" in dasavatharam polling..

R A J A said...

//அதேபோல் மாளவிகா பற்றி நியூஸுக்கு ஏன் கவரேஜ் இல்லை என்று ஒரு ரசிகர் மெயிலில் இப்ப கேட்டிருக்கிறார். என்ன செய்ய ?
//
hi..hi..hee.....reporter-la vantha malavika newsa aduthu podapporennu maraimugamaa sollurenga.reporter-la news nallaa irunthathu, aana padam nallaa illa.....nengalaavathu konjam nalla padamaa podunga.....

ஹரன்பிரசன்னா said...

//சொல்ல மறந்துட்டேன் குசேலன் ஸ்டில்ஸ கலக்கல். உங்களுக்காக சைடில் சிலைடு ஷோ :-)
//

குசேலனை படமாக எடுப்பதாகத்தானே சொல்லிக்கொண்டிருந்தார்கள்? இப்போது ஏன் நாடகமாக எடுக்கிறார்கள்?