பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 26, 2008

காடுவெட்டி குரு - ஆடியோவும், அறிக்கையும்

கிழே இருக்கும் இரண்டு ஒலித் துண்டுகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் திரு.காடுவெட்டி குரு பேசியது. சென்சார் ஆனது என்று தெரிகிறது.

ஆடியோ பகுதி - 1 ( MP3 கோப்பு )
ஆடியோ பகுதி - 2 ( MP3 கோப்பு )

இந்த மாதிரி எல்லா கட்சி கூட்டங்களில் அரசியல்வாதிகள் இப்படி தான் பேசுகிறார்கள். நமக்கு தான் கேட்க குடுப்பினை இல்லை. அமைச்சர் வளர்மதி, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் பேசவில்லையா? எல்லா கழக கண்மணிகளும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் பேசுவார்கள், வளர்ந்த விதம் அப்படி, வளர்த்த விதம் அப்படி. ஏன் ஓக்கேனக்கல் பிரச்சனையின் போது நடிகர் சத்தியராஜ் தமிழ் உணர்ச்சியுடன் பேசவில்லையா ?

ஏகைதட்டி விசில் அடிக்க ஒரு கூட்டம் இருக்கும் போது, இந்த மாதிரி பல காடுவெட்டி, மரம்வெட்டி, செடிவெட்டி என்று முளைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

இவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாக்கடை அடைப்பு இருக்க தான் செய்யும்.

இந்த மாதிரி காடுவெட்டி தலைவர்களை எல்லாம் பக்கத்தில் இருப்பதால் தான் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று அடிக்கடி ராமதாஸ் அறிக்கை விடுகிறார் போலும். இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இரு கட்சிகளுக்குள் மட்டும் ஒலிபரப்பப்பட்டு சேந்தியில் ஏத்தியிருந்த வசனங்களை இப்போது வாரிசு செய்த அரசியலுக்காக தூசிதட்டி எடுத்து, ஊருக்கே ஓதிக் காண்பித்தாகிவிட்டது. ஊர்சிரித்துப் போய்விட்டது. ஆனால் வேறு வழியில்லாமல் மீண்டும் கழகமும் பாட்டாளிப் பட்டாளமும் இணையவேண்டிய நெருக்கடியில், ஓதிய கேசட்டை மீள்வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் கழகங்கள் இருப்பதால் கழக தலைவர்கள், உடன்பிறப்புக்கள், கண்மணிகள், மொழிகள், விழிகள் எல்லாம் கீழே உள்ள பகுதியை, அறிக்கையாகவோ, தொண்டர்களுக்கு கடிதமாகவோ, பிரித்து போட்டு உரைநடை கவிதையாகவோ யூஸ் செய்யலாம். எனக்கு ஆட்சோபனை இல்லை..

மாதிரி அறிக்கை கீழே...

"கூட்டணி உடைப்புக்குமுன் ஒரே ஒரு முறை மோசமான ஒலிப்பேழையில் மட்டும் முன்பு கேட்டிருந்த தம்பி காடுவெட்டியின் பேச்சை மீண்டும் ஒருமுறை தெளிவான ஒலிப்பேழையில் கேட்க விழைந்தேன். அந்தத் தெள்ளமுதத் தமிழ்ப் பேச்சு பிறகு என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. கேட்டேன். அதிர்ந்தேன். அப்போதுதான் எம் திராவிட மக்களின் குரலை ஒத்தெடுத்த என் பாட்டாளியின் குரலும் தமிழும் என்னை யோசிக்கவைத்தது. எங்கள் கூட்டணியை உடைக்க எத்தனித்த எதிர்க்கட்சி எத்தர்களின் சதி விளங்கியது. கேட்க கேட்க என்னருமைத் தம்பிகளாம் வெற்றி கொண்டான், இப்பொழுது எதிர் முகாமில் இருக்கும் தீப்பொறியார், நன்னிலம் நடராசன் ஆகியோரால் மட்டுமே இது போன்ற வீர உரைகளை நிகழ்த்த இயலும் என்று இறுமாந்திருந்த எனக்கு ஒரு இனிய ஏமாற்றம், அதிர்ச்சி, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அன்றே அண்ணா , எனதருமை அண்ணா சொன்னார், இதோ மாற்றான் தோட்டத்தில் ஒரு மல்லிகையைக் கண்டேன் மனம் குளிர்ந்தேன், காதுகளில் தேன் பாய்கிறது தம்பி.

வெறும் பஜனை மடங்களிலும் உபந்யாசங்களிலும் வெட்டித் தமிழ் பேசிப் பொழுதைக் கழித்து, சர்க்கரைப் பொங்கலும் தயிர்சாதமும் வாழ்வாகிப் போன நாறவாயர்களை-- தன்னையும் தமிழர்கள் என்று சொல்லித் திரியும் ஆரிய வந்தேறிப் பார்ப்பனர்களை-- எங்களைத் துண்டாட நினைத்த எதிர்க்கட்சி சதிகாரர்களை ஒன்றுதான் கேட்க நினைக்கிறேன், "என்றைக்காவது உங்களால் இந்த மாதிரியான வார்த்தையணியை என் தமிழன்னைக்குப் பூட்டி அழகுபார்க்க முடியுமா?"

மயிரு... போன்ற வார்த்தைகளை உங்கள் ஆயுளில் என்றாவது உபயோகித்திருப்பீர்களா? எத்தனை கோபமும் ஆத்திரமும் கையாலாகத்தனமும் வந்தாலும், "அபிஷ்டு, நாசமாப் போய்டுவ" வுக்கு மேல் தமிழை உங்களால் யோசிக்க முடிந்திருக்கிறதா? வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறதா? ஆனால் தம்பி காடுவெட்டி தன் பேச்சால் தமிழை செம்மொழி ஆக்கியுள்ளார். ஒரு மொழியின் வளர்ச்சி அந்த மண்ணின் மைந்தர்களின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. அந்த வகையில் காடுவெட்டியின் குரலிலும் மொழியிலும் அவரை வளர்த்தெடுத்த நண்பர் ராமதாசின் செயல்பாடுகளிலிம் என் தமிழன்னையை கண்டு நெகிழ்கிறேன். இதைத்தான் திரையுலகப் பகுத்தறிவு நட்சத்திரம் எனதருமைத் தம்பி கமலஹாசன், 'தமிழை யாராவது தெலுங்கு பேசறவங்க வந்து காப்பாத்துவாங்க' என்று முன்னறிந்து சொல்லியிருக்கிறான். பெரியாராக நடித்த சத்தியராஜ் பற்றி கேட்கவே வேண்டாம்.

டாஸ்மாக் கடையில் எந்த பார்ப்பான் வந்து குடிக்கிறான்? என்று தம்பி தைரியமாக கேள்வி கேட்க்கிறார், இந்த மாதிரி பார்பானை தைரியமாக கேள்வி கேட்கும் தைரியம் கழக உடன்பிறப்புக்களை தவிர வேற யாருக்கு வரும் ?

அதனால் இவன் தான் தமிழன், இவர்தான் நமக்குத் தேவை. உடன் பிறப்பே ஓடி வா, நம் அன்புத் தம்பி காடு வெட்டியைக் கட்டி அணைப்போம் வா, மயில் போல் ஆடி வா, குயில் போல் கூவி வா, குரங்கு போல் தாவி வா, ஆனை போல் அசைந்து வா, கரடி போல் கத்தி வா, மீன் போல் நீந்தி வா, பறவை போல் பறந்து வா, தவளை போல் தத்தி வா, காடு வெட்டியைக் காண வா, குருவைக் குசிப் படுத்த வா, அலை கடலென திரண்டு வா, குருவைப் போலக் குடித்து வா,. வெட்டி போல வெட்டியாக வா, காடு போலக் காட்டானாக வா, மான் போல் துள்ளி வா, மாடு போல் மயங்கி வா தவறிப் போயும், மறந்து போயும் மனிதனாக மட்டும் வந்து விடாதே என் மறத் தமிழனே. வா, நாம் காடு வெட்டியை ஆரத் தழுவி முத்தம் கொடுத்து வரவேற்போம். வா, வா, வா.................

எனவே நாங்கள் (அரசியல்) கொள்கையால் கூட்டணியில் இணைந்தோம்; இனி இன்றுமே பிரிக்கமுடியாதவாறு தமிழால் கட்டப்படுகிறோம்."

என்று அறிக்கையில் - - - - - - கூறியிருக்கிறார்.

12 Comments:

நாரத முனி said...

Hilarious..... hahhahaha....

IdlyVadai said...

Ravisankaranand Ramakrishnan the audio is available at
http://idlyvadai2007.googlepages.com/ARIYALUR-p-1.mp3
http://idlyvadai2007.googlepages.com/ARIYALUR-p-2.mp3

Anonymous said...

இன்னிக்கு காலேலேர்ந்து என்டிடிவியில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்ததே - முரசொலியில், மாறன்கள் சம்பந்தம் வேண்டாம் என ஏதோ கடிதம் எழுதியிருப்பதாக - இட்லிவடையில் இன்னும் வெளிவரவில்லையே ஏன் ? (ஜெயலலிதாவின் ஆர்சிவி அறிக்கையை தினகரனில் வெளியிட்டதற்காக)

IdlyVadai said...

அனானி தகவலுக்கு நன்றி. பதிவாகிவிட்டது.

Anonymous said...

Adapaavingala, Ungakitta En Thaai thirunaatai kodutha enna agum? Velangama pogum....Ayya(?) Ramadasu un thalapathi super....
Un arasiyalu super...Mothathula Tamilnattu Arasiyalu superoo super...

Anonymous said...

காடுவெட்டி குரு பேசியதையும், சத்யராஜ பேசியதையும் ஒப்பிடுவது
சரிதான்.மேடை நாகரிகம் என்பதே
பார்பனியம் என்று விரைவில் ஜமாலன், பைத்தியக்காரன்,
பாரி அரசு கும்பல் விரைவில்
எழுதும்.பெரியார் கொச்சைத்
தமிழில்தான் பேசினார் என்று
காரணம் சொல்லும்.

Seetha said...

அப்பாட ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் முத்திரை

Anonymous said...

காடுவெட்டி குருவின் பேச்சை கேட்கணும் என்று திமுகவிற்கு தலையெழுத்து நாங்க ஏன் அதை கேட்கணும் ?

இந்த அறிக்கை நிஜமாகவே நடந்தாலும் நடக்கலாம்...... !

இலவசக்கொத்தனார் said...

// அப்பாட ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் முத்திரை //

அட இதுதான் உங்க முத்திரையா? அப்போ இட்லி வடை யாருன்னு தெரிஞ்சு போச்!! :)))

Anonymous said...

காடுவெட்டியாருக்கு குரல் நன்றாகவே உள்ளது.வில்லன் வேடத்தில் நடிக்க
ஏற்ற உடல்வாகு, குரல் உள்ளவர்.
மத்திய அமைச்சருக்கே சவால் விட்டு
பேசியிருக்கிறார், ஐஏஸ் அதிகாரிக்கு
சவால், மிரட்டல், உன்னால் ஒன்னும் பிடுங்க முடியாது - இப்படிப் பேச தைரியம் அதிகம் வேண்டும். அப்படி பேசியவரை அப்போதே கைது செய்யாமல் இப்போது பிரச்சினையாகுகிறார்கள். இதில்
அவர் திட்டிய ஒரு போலிஸ் அதிகாரியை மாற்றியிருக்கிறார்கள்.
வாழ்க ஜனநாயகம் :(

Anonymous said...

இலவசம்

உங்களுக்குத் தெரிஞ்சதை எங்களுக்கும் சொல்லலாம்ல? அல்லது லேசா க்ளூவாவது கொடுங்க ஐயா? முத்திரையைப் பார்த்தே இட்லி வடையைக் கண்டுப்பிடிக்கும் நீர் பெரிய கொத்தனாராகத்தான் இருக்க வேண்டும் :)))

Anonymous said...

The audio links are not working.