பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 18, 2008

திமுக, பாமக - கடிதங்கள், அறிக்கைகள், பேச்சுக்கள்

எச்சரிக்கை: கேவலமான வார்த்தைகள் ( மற்றும் கொள்கைகள் )இருக்கலாம்...

திருமண விழா பேச்சு - ஆற்காடு வீராஸ்வாமி
இந்தத் திருமணத்திற்கு வரத் தயாராக இருந்த நேரத்தில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க., தொண்டர் என் வீட்டுக்கு வந்தார். என்னிடம் ஒரு கடிதத்தையும், "சிடி'யையும் கொடுத்து, "எங்கள் மாவட்டத்தில் நடக்கிற அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுங்கள்' என்றார். அந்த "சிடி'யின்படி, பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் குரு பேசியது இதுதான் சிவசங்கரின் (தி.மு.க., எம்.எல்.ஏ.,) அப்பாவாலேயே ஒன்றும் முடியவில்லை. நேற்று வந்த சின்னப் பையன் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் எடுபிடி. இவனுக்கு எடுபிடி பெரம்பலூர் கலெக்டர். எங்கள் மாவட்டச் செயலர் வைத்தி மீது பொய் வழக்கு, நீ போடச் சொன்னாயோ? அல்லது உன் தலைவர் கருணாநிதி போடச் சொன்னாரோ? நீ எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போடு. எங்கள் கட்சிப் பொறுப்பாளர் மீது வழக்குப் போட்டால், இந்த அமைச்சர் ராஜாவோ, சிவசங்கரோ, நீங்க யாரும் உயிரோடு இருக்க முடியாது. உங்கள் குடும்பத்தையே உயிரோடு எரித்துவிடுவோம்.


பெரம்பலூர் கலெக்டர் மாமா வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். அந்த மாமா சொல்லி இந்த போலீஸ்காரன் பொய் வழக்குப் போடுகிறான். போலீஸ் எங்கள் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். ஊரில் ஒரு பஸ் கூட ஓடாது. எரித்துவிடுவோம். மாநாட்டுக்கு வசூல் பண்றதா சொல்றான். சென்ற மாதம் கூட தி.மு.க.,காரன் மாநாடு போட்டானே அவன் வசூல் பண்ணவில்லையா. அதேபோல தான் நாங்களும் வசூல் செய்தோம். மிரட்டித்தாண்டா வசூல் செய்தோம். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆபீசை மூடி விடுவேன். வைத்தியைக் கைது செய்திருந்தால் ஆண்டிமடம் தொகுதியில் இந்நேரம் இடைத்தேர்தல் வந்திருக்கும். இனிமேல், தி.மு.க.,காரன் எந்தப் பொதுக் கூட்டத்திலும் தாக்கிப் பேசினால் அத்தனை பேரையும் வெட்டிக் கொளுத்துங்கடா. நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் கருணாநிதி நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாது. ஆற்காடு வீராசாமி ஆந்திராவில் இருந்து வந்தவன். நாங்கள் தமிழகத்தில் எல்லா ஜெயிலையும் பார்த்துவிட்டோம். இன்னும் டில்லி திகார் ஜெயில் தான் பார்க்கவில்லை. அதற்கும் தயாராக இருக்கிறோம். 2011ல் தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியமைக்கும். இதை கருணாநிதியோ, ஜெயலலிதாவோ யாராலும் தடுக்க முடியாது. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., தான் இருக்கிறது. வன்னியர் சங்கம் இல்லை. என்னை மிரட்டிப் பார்க்காதே. மீதம் உள்ள என் சகோதரர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துவிடுவார்கள். நாங்கள் உன் கூட்டணியில் இருப்பதைப் பற்றி கவலைப்படவில்லை. இன்றைக்கு வேண்டுமானாலும் வெளியே போய் விடுவோம். அதனால் நஷ்டம் உனக்குத் தான். (முதல்வர் கருணாநிதி பற்றி ஒருமையில் பேசியவையும் இடம்பெற்றுள்ளன.)இப்படியெல்லாம் குரு பேசியுள்ளார்.


இன்னும் மோசமாகப் பேசியிருக்கிறார். நம் கூட்டணியில் ஒரு கட்சி. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இப்படி உங்களையும், எங்களைப் பற்றி பேசியதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், உங்களுக்காக எதையும், தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும்போது சாராயத்தைத் தொழிலாகக் கொண்டுள்ள ஒருவர் தி.மு.க.,வை மிரட்டுகிறார் என்றால் நீங்கள் முதல்வர்; சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர். இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு நாம் ஆட்சியில் இருக்க வேண்டுமா? பா.ம.க., இல்லாவிட்டால் நாம் ஆட்சியில் இல்லையென்றாலும் நான் கவலைப்படவில்லை. தயவுசெய்து இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள். ஒன்று சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் பா.ம.க.,வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடுங்கள்

திருமண விழா பேச்சு - கலைஞர்
""வெட்டுவர், குத்துவர் என்ற அச்சுறுத்தல் இன்று நேற்றல்ல, என் ஆரம்ப கால அரசியலிலேயே கேட்டு பழகிப்போன வார்த்தைகள்,'' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நேற்று திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: பா.ம.க., கூட்டத்தில் ஒருவர் பேசிய விஷயங்கள் குறித்த "சிடி'யை ஆற்காடு வீராசாமி காட்டினார். அதிலுள்ள வாசகங்களை எல்லாம் சொன்ன காரணத்தால், நான் வீராசாமியை நம்புகிறேன். அது உண்மையாகத் தான் இருக்கும். வீராசாமியின் தலையை வெட்டினால் என்ன? அல்லது ஆண்டிமடம் தி.மு.க., எம்.எல்.ஏ., சிவசங்கரின் தலையை வெட்டினால் என்ன? மத்திய அமைச்சர் ராஜாவின் தலையை வெட்டினால் என்ன? எல்லா தலைகளை வெட்டும் போதும் வழிகிற ரத்தம் தான் என் தலையை வெட்டினாலும் வழியும். இவ்வளவு பெரிய பாதகத்தை, படுகொலையை செய்யத் தயாராக இருக்கிற ஒரு கட்சியின் பெரிய பிரமுகர்; குரு என்ற நண்பர்; காடுவெட்டி குரு என்கின்றனர். அவர் மரம் வெட்டினாலும் சரி, மனிதர்களை வெட்டினாலும் சரி. ஆனால், பா.ம.க.,வின் தளபதி என்பர். அந்தத் தளபதியே போருக்குத் தயாராகிவிட்டார். வெட்டுவர், குத்துவர் என்ற அச்சுறுத்தல் இன்று நேற்றல்ல, என் ஆரம்ப கால அரசியலிலேயே கேட்டு பழகிப்போன வார்த்தைகள். "எங்கள் பேச்சை ஒட்டுக் கேட்கின்றனர்' என ராமதாஸ் சொல்லியிருக்கிறார். என்ன சாட்சி இதற்கு? ஒட்டுக் கேட்பதற்கு எத்தனையோ இடங்களில் இருந்து அனுமதி பெற்றாக வேண்டும். மத்திய சர்க்கார், அங்கிருந்து அனுப்புகிற அதிகாரிகள், அந்த அதிகாரிகளிடம் இருந்து பெறுகிற உத்தரவுகள், அனுமதிகள் இவ்வளவிற்கும் பிறகு தான் டெலிபோனில் ஒருவர் பேசினால் அதை ஒட்டுக் கேட்க முடியும்.


ஓட்டு கேட்பது சாதாரணம். அதை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், ஒட்டுக் கேட்பது அவ்வளவு சாதாரணமல்ல. வீராசாமி காட்டிய "சிடி'யில் உள்ள விஷயங்கள் எவ்வளவு ஆபத்தானவை, எப்படிப்பட்ட கொலை சதி நடைபெற்று அந்தச் சதியின் காரணமாக வெளியானவை. அந்தச் சதிக்கு உடந்தையாக உட்கார்ந்து பேசியவர்கள் யார் யார்? இவை எல்லாம் அவர் அந்த "சிடி'யை என்னிடம் தந்த பிறகு, அதை நம் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் வைத்து, ஒலிபெருக்கச் செய்து, அதன் பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை நாம் எடுப்போம். அந்த நடவடிக்கை, நான் முதல்வர் என்கிற முறையில் அல்ல. பொதுவாக யாராக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கு அமைதி இவைகளுக்காக பாடுபடுகிற அடிப்படையில் அதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி காவல்துறையினரிடம் கொடுத்து, எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கட்சியோடு எவ்வளவு நாள் உறவு என்று வீராசாமி கேட்டார். இன்னும் நான்கைந்து நாட்களில், கடலூர் மாநாடு முடிந்த பிறகு, உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, இவர்களோடு உறவு நீடிக்க வேண்டுமா? என்ற கேள்விக்கான பதிலை ஐந்தாறு நாட்களில் அளிப்பேன். இவ்வளவு வன்முறைகளை, கடுமையான சொற்களை தாங்கிக் கொண்டு தான் ஒரு கூட்டணியில் இருக்க வேண்டும் என்றால், அதை விட அவமானம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. அந்த அவமானத்தை எப்படி துடைப்பது என்பதற்கு அந்தக் கூட்டத்தில் முடிவெடுப்போம்.



ராமதாஸ் அறிக்கை ( 17/6/08 )

மாநில வன்னியர் சங்கத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.குரு ஒரு கூட்டத்தில் பேசும்போது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அவரது அந்தப்பேச்சுக்கு பின்னால் சதி இருப்பதாகவும் 13.6.2008 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, முதல்-அமைச்சர் கருணாநிதி குற்றம் சுமத்தியிருந்தார்.

அதே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அந்தத் திருமண நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த அன்று காலையில்தான், யாரோ ஒருவர் குரு பேசியதாகச் சொல்லப்படும் சி.டி.யைக் கொடுத்துவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு அன்றைக்கே நான் விளக்கம் அளித்திருந்தேன்.

வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு பேசியதாகச் சொல்லப்படும் கூட்டம் சாதாரணமாக நடந்துள்ள தெருமுனைப் பொதுக்கூட்டமல்ல. அது மாவட்ட பா.ம.க. பொதுக்குழுக்கூட்டம். அதுவும் 6 மாதத்திற்கு முன்பு 6.1.2008 அன்று நடைபெற்றுள்ள கூட்டம். 6 மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் குரு பேசியிருப்பதைப் போன்று குற்றம் சுமத்துவதும், அதற்குப் பின்னால் ஏதோ சதி இருப்பதாகச் சொல்வதும், ஏன் என்று விளங்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.

அத்துடன் குரு பேசியதாகச் சொல்லப்படும் சி.டி. புதியதல்ல என்றும், ஏற்கனவே பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலரிடம் அந்த சி.டி. போட்டுக் காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் விளக்கியிருந்தேன்.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் குரு உள்ளிட்ட பா.ம.க. முன்னணியினர் மீது வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குகள் போடப்பட்டு வருவது குறித்து 10.3.2008 அன்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். 11.3.2008 அன்று முதல்-அமைச்சரிடம் அந்த கடிதம் அளிக்கப்பட்டது. அந்த கடிதம் கிடைத்த ஓரிரு மணிநேரத்திற்குள்ளாக முதல்-அமைச்சர் கருணாநிதி அவரது கைப்பட எனக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

கலைஞர் கடிதம்

அன்புக்கும், மதிப்புக்கும் உரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களின் 10.3.2008 தேதியிட்ட கடிதம் கண்டேன். அதில் கண்டுள்ள தகவல்களை அலட்சியப்படுத்தாமல் கண்ணும் கருத்துமாய் எல்லாவற்றையும் விசாரித்து அறிந்து, எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது பற்றியெல்லாம் எந்த விதமான நோக்கும், போக்கும் கடைபிடிக்க விரும்பாமல் இருசாராரிடையே கோபத்தையும், கொந்தளிப்பையும் தணித்து, ஒற்றுமையை ஏற்படுத்தவே முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

நண்பர் குரு போன்றவர்களின் வசைமாரிகளைத் தாங்களே பொறுத்துக் கொள்ள வில்லை என்பதையும், இத்தகைய தாக்குதல்களை என்மீது நடத்தவிடாமல் தாங்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டீர்கள் என்பதும் எனக்கு மன ஆறுதல் அளித்த செய்திகளாகும்.

நம்பிக்கையூட்டும் நிலையில் இருந்து நான் என்றும் நழுவிப் போகமாட்டேன். காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்தும், அந்த வட்டாரத்தில் எழுந்துள்ள தேவையற்ற பூசல் குறித்தும், தாங்கள் எழுதியுள்ள விவரங்களை மனதில் வைத்து, பொதுவில் நமது நட்பும், தோழமையும் இருசாராரிடமும் அன்பான அமைதியும் காண முயற்சி மேற்கொள்வோம்


நான் என்னுடைய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்த பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்புக் காவல்துறை உயர் அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக வேறொரு அதிகாரி உடனடியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடிதத்தில் நான் தெரிவித்திருந்த புகார்கள் நியாயமானவை என்றதால்தான் முதல்-அமைச்சர் கருணாநிதி அன்று நடுநிலையோடு நின்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், குரு மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, குறைந்தது 15-க்கும் மேற்பட்ட முறை நேரில் வலியுறுத்தியிருக்கிறார். குருவை முதல்-அமைச்சரிடம் அழைத்து வந்து சந்திக்கச் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அப்போதெல்லாம் குருவை அழைத்து வாருங்கள் என்று முதல்-அமைச்சர் மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். குரு மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்றதும், முதல்-அமைச்சரிடம் நேரில் குருவை அழைத்துப் போவதாகவும் ஜி.கே.மணி திட்டமிட்டிருந்தார்.

இத்தகைய நிலையில் மார்ச் மாதத்திலேயே முடிந்து போன ஒரு பிரச்சினை குறித்து இப்போது மீண்டும் புதிய பிரச்சினை போன்று பேசுவதும், அதை அரசியலாக்குவதும் ஏன் என்று எங்களுக்கு விளங்கவில்லை.

"குரு போன்றவர்களின் பேச்சை (வசைமாரிகளை) தாங்களே பொறுத்துக் கொள்ளவில்லை என்பதையும், இத்தகைய தாக்குதல்களை என்மீது நடத்தவிடாமல் தாங்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டீர்கள் என்பதும் மன ஆறுதல் அளித்த சேதிகளாகும்'' என்று கடந்த மார்ச் மாதத்தில் என் மீது நம்பிக்கை வைத்து மன ஆறுதல் பெற்ற முதல்-அமைச்சருக்கு இப்போது நம்பிக்கை இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை.


காடுவெட்டி குரு பேச்சு

2008ம் ஆண்டு சிறப்பான ஆண்டா அமையப் போகிறது. சிவசங்கருடைய (ஆண்டிமடம் திமுக எம்.எல்.ஏ.) அப்பாவாலேயே ஒன்றும் முடியவில்லை. இவன் நேற்று வந்த பையன். மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் எடுபிடி. இவனுக்கு எடுபிடி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர். எங்க மாவட்ட செயலாளர் வைத்தி மீது பொய் வழக்கு நீ போடச் சொன்னாயோ அல்லது உனது தலைவர் கருணாநிதி போட சொன்னானா, நீ எந்த வழக்கு வேண்டுமானாலும் போடு. என்னை ஒரு ...... புடுங்க முடியாது.
எங்க கட்சி பொறுப்பாளர்கள் மீது வழக்கு போட்டால் ராஜாவோ, சிவசங்கரோ, நீங்க யாரும் உயிருடன் இருக்க முடியாது. குடும்பத்தையே உயிரோடு எரிச்சுருவோம். பெரம்பலூர் கலெக்டர் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த மாமா சொல்லி இந்த போலீஸ்காரன் பொய் வழக்கு போடுகிறான்.

ஒரு போலீஸ்காரன்கூட பொண்டாடிக்கிட்ட படுக்க முடியாது. ஊரில் ஒரு பஸ் ஓடாது. எரிச்சுருவோம். மாநாட்டுக்கு வசூல் பண்றதா சொல்றான். திமுககாரன் வசூல் பண்ணலையா? அதேபோல நாங்களும் வசூல் செஞ்சோம். மிரட்டிதாண்டா வசூல் செஞ்சோம். உன்னால என்ன புடுங்க முடியும்? பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆபீசை மூடிடுவேன்.


டேய் சிவசங்கர்.. நீ சின்ன பையன். உன் அப்பனை கேளுடா. நீ மட்டும் வைத்தியை கைது செய்திருந்தால் ஆண்டிமடம் தொகுதியில் இந்நேரம் இடைத்தேர்தல் வந்திருக்கும்.

வைத்தியை உள்ளே அனுப்பி விட்டு நாங்க என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமா. இனிமேல் திமுககாரன் எந்த பொதுக்கூட்டத்தில் தாக்கிப் பேசினாலும் அத்தனை பேரையும் வெட்டி கொளுத்துங்கடா.
இந்த ராஜாவோ, கருணாநிதியோ என் ......கூட புடுங்க முடியாது. நாங்கள் பழைய நிலைக்கு திரும்பினாலும் கருணாநிதி.. நீ நிம்மதியா ஆட்சி செய்ய முடியாது. ஆற்காடு வீராசாமி ஆந்திரால இருந்து வந்தவன். இவனே ஒரு பொறம்போக்கு. இவன் வந்து நம் வன்னியர் சங்க கல்விக் கோயிலை பொறம்போக்கு நிலத்தில் கட்றோம்னு சொல்றான். தைரியம் இருந்தா ஒரு கமிஷன் போட்டு நிலத்தை சர்வே செய்து பார்.
ஊராட்சி தேர்தலில் திமுககாரன் காட்டிக் கொடுத்ததும் கூட்டிக் கொடுத்ததும் நாட்டு மக்களுக்கு தெரியும். மானங்கெட்ட பயலுகளா! 27 சதவீத இடஒதுக்கீட்டுக்காக போராடுகிற ஒரே தலைவன் இந்தியாவிலேயே நமது மருத்துவர் ஐயாதான் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியே நீ திராவிடம் பேசி எங்களை ஏமாற்றியது போதும். இனி நீ திராவிடம் பேசாதே. வன்னிய சமுதாயத்துகாக மூன்று அமைச்சர்களை கொடுத்திருக்கிறேன் என்று கருணாநிதி சொல்றான். ரெண்டு கோடி மக்கள் உள்ள சமுதாயத்துக்கு மூணு அமைச்சராம். ரெண்டு சதவீதம் உள்ள ஆற்காடு வீராசாமி சமுதாயத்துக்கு மூணு அமைச்சராம். என்னங்கடா உங்க நியாயம்?
அமைச்சர் ராஜா கட்சிக்காக எத்தனை முறை ஜெயிலுக்கு போயிருக்கிறான்? சிவசங்கர் எத்தனை முறை சென்றிருக்கிறான்? தமிழ்நாட்டில் நாங்கள் எல்லா ஜெயிலையும் பார்த்துட்டோம். டெல்லி தீகார் ஜெயில்தான் பார்க்கவில்லை. அதற்கும் செல்ல தயாரா இருக்கிறோம்.


ராஜா.. 1989க்கு முன்னாடி ஒரு திமுககாரன் கூட அவன் கட்சிக்கொடியை கூட கட்ட முடியாது. ஒரு திமுக கொடிக்கம்பம் கூட இல்லை. எல்லாத்தையும் வெட்டி சாய்த்து ஓட ஓட விரட்டினோம். உனக்கு தெரியாவிட்டாலும் பழைய திமுககாரனை கேட்டு தெரிந்து கொள். 2011ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை அமைக்கும். இதை கருணாநிதியோ ஜெயலலிதாவோ யாராலும் தடுக்க முடியாது.
கருணாநிதியே எங்களுக்கு முகவரி இருக்கிறது. உனக்கு இருக்கிறதா? திமுக கூட்டணியில் பாமகதான் இருக்கு. வன்னியர் சங்கம் இல்லை. அதனால் நீ என்னை மிரட்டி பார்க்காதே. நீ எத்தனை வழக்கு போட்டாலும் சந்தோசமா ஜெயிலுக்கு போவோம். ஆனால் மீதமுள்ள என் சகோதரர்கள் என்ன செய்யணுமோ அதை செய்து விடுவார்கள். உன் கூட்டணி பற்றி நாங்க கவலைப்படவில்லை. இன்றைக்கு வேண்டுமானாலும் வெளியே போய்விடுவோம். அதனால் நஷ்டம் உனக்குதான். மருத்துவர் ஐயா டாஸ்மாக் கடைகளை மூட சொல்கிறார். மாசம் 9000 கோடி வருமானம் வருது, அதை எப்படி இழப்பதுனு கருணாநிதி கூறுகிறான். டாஸ்மாக் கடையில் எந்த பார்ப்பான் வந்து குடிக்கிறான்? எந்த பணக்காரன் குடிக்கிறான்? நம்மை போன்ற பாட்டாளி வர்க்கமான ஏழை விவசாயிதானே குடிக்கிறான். அவன் மனைவி பிள்ளைகளை பட்டினி போட்டுட்டு அவங்க தாலிய அறுத்தல்லவா கருணாநிதி சம்பாதிக்கிறான்.
அமைச்சர் ராஜாவுக்கு பூர்வீக சொத்து எவ்வளவு? இன்றைக்கு பல நூறு கோடி சொத்து. எங்கிருந்து சம்பாதித்தான்? ஊரை கொள்ளை அடித்துதானே சம்பாதித்தான்? நாங்க திமுக கூட்டணியில் இருந்தால்தான் ராஜா நீ மந்திரி! எங்களுடைய ஒன்றரை லட்சம் ஓட்டை வைத்துதான் எம்பி ஆகியிருக்கிற. எங்க மாவட்ட செயலாளர் வைத்தி மீது பொய் வழக்கு போட புகார் கொடுத்தது சிவசங்கரனுடைய சொந்தக்காரன். பொய் புகார் கொடுத்து பொய் வழக்கு போட்டிருக்கிறான்.
ராஜாவே.. நீ சொல்லி வழக்கு போட்டாயா? உன் தலைவன் கருணாநிதியை மரியாதையா வழக்கை வாபஸ் வாங்கச் சொல். இல்லையென்றால் போலீசை செயல்பட விடமாட்டோம். எல்லோரையும் வெட்டி சாய்த்து விடுவோம். இந்த மாவட்டமே தீப் பிடித்து எரியும். எங்கள் கட்சி இளைஞர்கள் வெட்டரிவாள், வேல்கம்போடு வீட்டுக்கு ஒருவர் வருவோம். போலீசா நாங்களானு பாத்துருவோம் என்று நேரடியா எச்சரிக்கிறேன்.


டெல்யில் பீஸ்

காங்கிரஸ், இடதுசாரிகள் தவிர்த்து தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார்” என்று மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

நாயுடுவிற்கு உடனடி தேவை 'காடுவெட்டி குரு' அர்ச்சனை.


படம்: குரு என் ஆளு பட ஸ்டில் :-)



குரு அதிரடி பேட்டி

''மாவட்ட பொதுக்குழுவில் நீங்கள் பேசிய பேச்சு கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி தானா?''


''கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வன்னியர் சங்க மாநாட்டுக்காக நான் நன்கொடை வசூலித்ததாக என் மீது தி.மு.க. தரப்பில் புகார் சொன்னார்கள். அதை நிரூபிக்கத் தயாரா? என்று நான் கேட்டபோது, அவர்களிடமிருந்து பதில் இல்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க-வினர்

கூட்டணி தர்மத்தை மீறி நடந்து கொண்டார்கள். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் எங்களுக்குத் தருகிறோம் என்று தி.மு.க. தலைமையால் ஒப்புக் கொள்ளப்பட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளையும்கூட கொடுக்கவில்லை. நாங்கள் ஒருகட்டத்துக்கு மேல் பிரச்னை வேண்டாம் என்று கேட்பதையே விட்டு விட்டோம். இருந்தாலும், எங்கள் கட்சியினர் மீது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பொய் வழக்குகளைப் போட் டார்கள். காவல்துறையிடம் கேட்டால், 'மேலிட உத்தரவு... நாங்கள் நிறைவேற்றுகிறோம்' என்றார்கள். 'மேலிடம் என்றால் சிவசங்கரன் எம்.எல்.ஏ-வா? அல்லது மத்திய மந்திரி ராஜாவா?' என்று கேட்டேன். ஆனால், பதில் இல்லை. அவர்கள் இருவரும்தான் மேலிடம் என்றால், அவர்கள் அதிகாரத்தில் உட்கார நாங்களும்தானே ஓட்டுப் போட்டோம். இதையெல்லாம்தான் நான் உரக்கப் பேசி வந்தேன். இதனால், கோபமான தி.மு.க-வினர் ஆங்காங்கே என்னைப் பற்றியும் எங்கள் அய்யாவைப் பற்றியும் மேடைகளில் வசை பாடினார்கள். அதற்குப் பதிலடியாகத்தான் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடந்த மாவட்டப் பொதுக்குழுவில் நான் பேசிய ஆவேசப் பேச்சு. இதற்காக, ஜனவரி 12-ம் தேதியே என் மீது காவல்துறை வழக்குப் போட்டு விட்டது. ஆனால், மேல் நடவடிக்கை எதுவுமில்லை. அதேநேரம், நான் செய்யாத காரியத்துக்கெல்லாம் என் மீது பொய்வழக்குப் போட்டார்கள். இதைக் கண்டித்து பெரம்பலூரில் ஒரு உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு போலீஸிடம் அனுமதி கேட்டோம். மறுத்து விட்டார்கள். கூடவே, அய்யா மற்றும் என்னுடைய கொடும்பாவிகளை தி.மு.க-வினர் கொளுத்தினார்கள். ஆனாலும், நாங்கள் அமைதியாகத்தான் இருந்தோம். இருந்தும், என் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டன.

'ஏன் இப்படி வழக்கு மேல் வழக்குப் போடுகிறீர்கள். குரு செய்த தவறு என்ன?' என்று கேட்டு எங்கள் அய்யா, ஒரு கடிதமெழுதி ஜி.கே.மணி மூலம் கலைஞருக்கு அனுப்பினார். அப்போது கலைஞர், 'பாருய்யா உங்க ஆளு எப்படியெல்லாம் பேசுறாரு'ன்னு என் பொதுக்குழு பேச்சின் சி.டி-யை ஜி.கே.மணிக்குப் போட்டுக் காண்பித்திருக்கிறார். தொடர்ந்து, நான் ஒரு பெண்ணைக் கடத்தியதாக வழக்குப் போட்டார்கள். ஆனால், அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, 'என்னை யாரும் கடத்தவில்லை' என்று சொன்ன பிறகே, என்னை விடுவித்தார்கள். இதன்பிறகு, திருச்சி காவல்துறை ஐ.ஜி-யாக இருந்த ராஜா அங்கிருந்து மாற்றப்பட, எங்கள் நியாயங்களை கலைஞர் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டதாக நினைத்தோம். அப்போது என்னைக் கூப்பிட்ட அய்யா, 'நீங்கள் ஒருமுறை கலைஞரை சந்தியுங்கள். உங்கள் தரப்பு நியாயங்களை அவரிடமே எடுத்துச் சொல்லுங்கள். சுமுகமாகப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்' என்று சொன்னார். நானும் கலைஞரை சந்திக்கத் தயாரானேன்.

ஆனால், அந்த சி.டி-யை காரணம் காட்டியே சந்திப்புக்குத் தடையாக இருந்தார்கள் போலீஸ் அதிகாரிகள். இப்படியிருக்க, இத்தனை மாதங்கள் கடந்து என் பொதுக்குழு பேச்சை, இப்போது ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று புரியவில்லை. இதனால், போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் கலைஞருக்கு கட்டுப்பட்டுத்தான் போலீஸ் அதிகாரி கள் நடக்கிறார்களா என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது!''

''சரி, ஆற்காட்டாரை ஏன் இத்தனை கடுமையாக விமர்சிக்கிறீர்கள்?''

''எனக்கும் அவருக்கும் வாய்க்கால்-வரப்பு தகராறு இல்லையே. அவர்தான் வம்படியாக வந்து எங்கள் விஷயத்தில் தலையிட்டார். எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் கருத்து மோதல்கள் வந்தபோது ஆற்காட்டாரைப் பற்றி நான் விமர்சித்ததில்லை. ஆனால், வியர்வை சிந்தி நாங்கள் எழுப்பிய கல்விக் கோயில் வளாகத்தில் புறம்போக்கு நிலம் இருக்கிறது என்று அவர் சொன்ன பிறகுதான் அவரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன். அதில், தமிழக அரசு சார்பில் தனியார் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களின் அளவு என்ன என்பதையும் கேட்டிருந்தேன். அதற்குப் பதில் சொல்லாமல் சாதியை இழுத்து விட்டார். இதன்பிறகு, அமைச்சர் துரைமுருகனும் 'வன்னியர்களுக்கு மூன்று அமைச்சர்கள் கொடுத்த ஒரே தலைவர் கலைஞர்தான்' என்று சொன்னார். நானோ, 'பெரும்பான்மை சமூகமான வன்னியருக்கு மூன்று அமைச்சர்கள் என்றால், இரண்டே சதவிகிதம் இருக்கும் தெலுங்கர்களுக்கும் மூன்று அமைச்சர்கள் கொடுத்தவர்தானே கலைஞர்?' என்று கேட்டேன். இதில் என்ன தவறு? ஆந்திராவுக்குப் போய் ஒரு தமிழன் முதலமைச்சராக முடியுமா? ஆனால், தமிழகத்தில் சில தெலுங்கர்கள் முதலமைச்சர் கனவுடன் உலா வருகிறார்கள். ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் ஆற்காட்டாருக்கு என் கேள்வி குடைகிறது.''

''உங்களை கைது செய்யக் காவல்துறை நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது. அதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு விட்டதாக காவல்துறை வட்டாரங்களில் சொல்கிறார்களே?''

''இதற்காக நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். என்னைக் கைது செய்யட்டும்... அதற்காகவே காத்திருக்கிறேன். வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தபோது இதே தி.மு.க. ஆட்சிதான் நடந்தது. அப்போது எங்களுக்குத் தராத தொல்லைகளையா இப்போது தந்துவிடப் போகிறார்கள்? சிறைகளைக் கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. எங்கள் வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்ட பிறகு, சிறையென்ன... வழக்கென்ன? எதனையும் சந்திக்க நாங்கள் தயார்தான். ஆனால், உண்மையை மறைத்து விட்டு போலீஸை வைத்து, பொய்யைப் பரப்ப ஆளும்கட்சி முயற்சிக்கிறது. அதனை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்...''
( குரு பேட்டி நன்றி: ஜூவி )

8 Comments:

KannanS said...

"Sathikal illaiyadi paappa.."- bharathi sonnathu..

Anonymous said...

//
காங்கிரஸ், இடதுசாரிகள் தவிர்த்து தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார்” என்று மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

நாயுடுவிற்கு உடனடி தேவை 'காடுவெட்டி குரு' அர்ச்சனை.


படம்: குரு என் ஆளு பட ஸ்டில் :-)//

இத.... இததான் எதிர்பார்த்தோம் :)

Guruprasad said...

to me still the entire episode looks like 2 birds in 1 stone...
bird 1: ramadoss koottani murivu...we all knew it was coming but only the timing was elusive...kalaignar announced that! but has kept the doors open by saying he has anbe for anbumani...
bird 2: DMK family fight came out in the forefront...magalir maanadu, MK Stalin or his family wasnt there...but thats not a sensation because a bigger sensation acheived with PMK-DMK split...divert away people - DMK's , no no, kalaignar's favorite tactic
by the way, saw full text of "kaaduvetty"...
Vetrikondan, amtrum kazhaga peachaalargal pesura alavukku kuda illai KVGuru pesinathu...

We The People said...

//இத்தகைய நிலையில் மார்ச் மாதத்திலேயே முடிந்து போன ஒரு பிரச்சினை குறித்து இப்போது மீண்டும் புதிய பிரச்சினை போன்று பேசுவதும், அதை அரசியலாக்குவதும் ஏன் என்று எங்களுக்கு விளங்கவில்லை.//

எனக்கு வீரபாண்டியகட்டபொம்மன் படத்தில் வரும் ஒரு சீன் நியாபகம் வருது ஏன் என்று தெரியவில்லை!

"நாங்கள் ஒரு நாயை கொள்வதாலும், சட்டப்படித்தான் கொல்வோம்" என்று ஒரு வெள்ளை நீதிபதி கட்டபொம்மனை பார்த்து சொல்வாரே, அது தான் எனக்கு நியாபகம் வருது!

உங்களுக்கு ஏன் என்று புரியுதா??

Anonymous said...

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே , கொஞ்சம் ஆற்காடு வீராசாமி அட்டிச்ச டயலாக் பாருங்கண்ணே! எதோ எங்கயோ ஊர் பேர் தெரியாத வேதாந்தி என்பவர்( ன்) கலைஞர் பத்தி பேசிய பொது நம்ம ஜால்ரா உடனே கொதித்து எழுந்து "கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம் " அறிக்கை விட்டு BJP ஆபீஸ் மேல ரவுடி கும்பல் வைத்து கலாட்டா பண்ணி பேர காப்பாத்திகிட்டார். அவர் அடிச்ச மத்த ஜால்ராக்கள் இதோ "கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு
ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த
இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.
இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும்
உயிரோடுதான் இருக்கிறோம்..."

ஆனா இப்போ ஒரு கட்சியை சேர்த்த ஒருவர் கட்சி போதுகுழுவுல பேசும் போது "நீங்க யாரும் உயிரோடு இருக்க முடியாது. உங்கள் குடும்பத்தையே உயிரோடு எரித்துவிடுவோம்" ன்னு பேசறார்(ன்). எப்போ மட்டும் சட்டம் ஒழுங்குன்னு ஜகா வாங்கறார். ஏங்க எப்ப மட்டும் பா மா கா கட்சி அலுவலகம் முன்னாடி ஒரு காட்டு கட்டலாமே, எதுக்குங்க பதுங்கறீங்க ?

Anonymous said...

The report is not from J.V. It's from kumudam reporter.Please change that..

Anonymous said...

PMK was sent out to accomodate someone in place of them. It could be sarath...

PMK itself wanted to come out of dmk so that it could align with admk

Since inflation could touch double digit upa govt will try to implement nuc deal and will collapse and will try to face election to win sympathy votes

Left actually want upa to implement nuc deal and henceforth see the govt collapse face the election get more seats by campaigning against upa(inflation) again give support to congress after election bargaining for big chunk of money

bjp and admk are sure to combine and are sure to get a majority in tn in parliment elections

DMK govt might be toppled after parliment elections if congress loses elections or congress will share power in tamilnadu...


Everything is going as according to the plan of respective political parties its only us innocent public(who vote for ctv's and money and based on caste) see all this as surprize news..

IdlyVadai said...

//The report is not from J.V. It's from kumudam reporter.Please change that..//

குரு பேட்டி ஜூவியில் வந்தது தான். ரிப்போட்டர் நான் இன்னும் படிக்கலை :-)