பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 16, 2008

இன்றைய அரசியல் நிலவரம்

ஊட்டி கோடநாட்டில், ஜெயலலிதாவை, ஜனதாதள தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று சந்தித்து பேசி வருகிறார். இந்த முக்கிய சந்திப்புக்கு பிறகு, சாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவிருக்கிறார். சிடிக்கள் வெளியிடுவாரா தெரியாது.

பாமக செயற்குழு தைலாபுரத்தில் அவசர செயற்குழு இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. திமுகவுடன் கூட்டணி குறித்து பேசுவதாக செய்தி.
திமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று முதல்வரும், கட்சியின் தலைவருமான கருணாநிதி அறிவித்துள்ளார். பாமக வெளியேறுமா? திமுக வெளியேற்றுமா ? என்று தெரியலை. எது நடந்தாலும் தமிழகத்துக்கு நல்லது தான்.

லண்டனில் சிகிச்சை பெற்று வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க கலாநிதி மாறன் இன்று தமது சொந்த விமானத்தில் இங்கிலாந்து தலைநகர் புறப்பட்டு சென்றார். அவருடன் அவருடைய மனைவியும் சென்றிருக்கிறார். ஸ்டாலினை மாநாட்டுக்கு ஸ்பெஷலாக அழைத்து வர சென்றிருப்பதாக சொல்லுகிறார்கள். சீக்கரம் வந்தால் கயல்விழி, கனிமொழிக்கு பக்கத்தில் இடம் இருந்தால் கிடைக்கும்.

1 Comment:

ஜயராமன் said...

வேறென்ன, கனிமொழி பாஷையில் சொல்வதென்றால் "தமிழ்நாட்டை குஜராத் ஆக்க" ப்ளான் போடறாங்க.

நன்றி

ஜயராமன்