பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 14, 2008

தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு - கலைஞர் பார்வையில்

தாசாவதாரம் சீஸனில் கலைஞரின் இரண்டு அவதாரம் :-) ( இப்போதைக்கு )

கலைஞர் ஏப்ரல் 15 2008 பேசியது

இந்த காலத்தில் விஞ்ஞானத்தின் வேகமான வளர்ச்சியில் யார் வேண்டு மானாலும், எந்த போனில் வேண்டுமானாலும் டேப் செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. செல்போனில் கூட டேப் செய்கிற முறை வந்திருக்கிறது. இன்றைக்கு கூட ஒரு ஆங்கில பத்திரி கையில் டேப் செய்வது எவ்வளவு சுலபம், தொலை பேசியை ஒட்டுக் கேட்பது எவ்வளவு எளிது என்பதை படங்கள் போட்டே விளக்கி இருக்கிறார்கள். நான் அதற்குள் அதிகம் போக விரும்ப வில்லை.


கலைஞர் ஜூன் 13 2008 பேசியது

...இன்றைக்குக் கூட காலையில் அவர்களுடைய தலைவர் நண்பர் ராமதாஸ் பாட்டாளி மக்களின் கட்சியின் நிறுவனர், எங்களுடைய பேச்சையெல்லாம் ஒட்டுக் கேட்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். என்ன சாட்சி இதற்கு?.

இப்போதெல்லாம் ஒட்டுக் கேட்க முடியாது. ஒட்டுக் கேட்பதற்கு எத்தனையோ இடங்களிலிருந்து அனுமதி பெற்றாக வேண்டும். மத்திய சர்க்கார், அங்கிருந்து அனுப்புகிற அதிகாரிகள், அந்த அதிகாரிகளிடமிருந்து பெறுகின்ற உத்தரவுகள், அனுமதிகள் இவ்வளவிற்கும் பிறகு தான் டெலிபோனில் ஒருவர் பேசினால் அதை ஒட்டுக் கேட்க முடியும்.

ஓட்டுக் கேட்பதென்றால் அது சாதாரணம். யார் வேண்டுமானாலும் ஓட்டு கேட்கலாம். நான் முதலமைச்சராகப் போகிறேன், ஆகவே எனக்கு ஓட்டுப் போடு என்று ஓட்டு கேட்கிற விவகாரம் வேண்டுமானால் இன்றைக்கு சாதாரணம். ஆனால், ஒட்டுக் கேட்பது அவ்வளவு சாதாரணமல்ல.

5 Comments:

Anonymous said...

There is a big difference in the two statements..first Kalaingar talks about TAPE'ing the conversation adn second he talks about TAPP'ing the conversation..

So he is not contradicating.

IdlyVadai said...

அனானி - இரண்டு முறை படித்துப்பார்க்கவும்.

Tapeing, Tapping இரண்டும் ஒட்டுக்கேட்பு தான்.

Anonymous said...

dibility!

Anonymous said...

idlyvadai, i thought you are good in understanding pagadi !

Anonymous said...

Have you read this? Will MK hear this?
http://www.vikatan.com/aval/2008/jun/20062008/avl0402.asp