பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 13, 2008

தசாவதாரம் - இட்லிவடை விமர்சனம்

கமல் மற்றும் இந்த படத்துக்கு உழைத்த அனைவருக்கும் முதலில் பாராட்டுக்கள். டிசம்பர் 4 2004 அன்று ஆரம்பிக்கும் கதை டிசம்பர் 26 2004 சுனாமியுடன் முடிவடைகிறது.

முதல் காட்சி கடலுக்கு மேல் நாம் படகில் பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது திடீர் என்று நாம் சென்னை நகரத்தின் மீது பறந்து சென்று தில்லையில் ""அடியேன் ராமானுஜதாசன்" என்று கம்பீரமாக சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனைக்கு நடுவே வந்து சேரும் அந்த 10 நிமிஷம் பிரம்மிப்புக்கு குடுத்த காசு இதுக்கே சரியாகிவிட்டது. ( தியேட்டரில் பார்ப்பவருக்கு தான் இந்த பிரம்மிப்பு ஏற்படும். )

மற்றதெல்லாம் ஓசி படம்.
அதன் விமர்சனம் கீழே.

முதல் காட்சியில் ஏற்பட்ட பிரம்மிப்பு நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது. போக போக நாம் சீட்டில் சாய்ந்து உட்கார வைக்கும் காட்சிகள், கடைசியில் சுனாமி வரும் போது, திரும்பவும் சீட் நுனி.

கதை - பையோ கெமிக்கல் வைரஸ் அமெரிக்காவிலிருந்து சிதம்பரத்துக்கு வருது, அது பலர் கை மாறி கோவிந்தராஜன் விக்கிரகத்துகுள் மனநிலை தவறிய கமல் பாட்டி போட அதை துரத்துவது தான் கதை. இந்த சஸ்பென்ஸைவிட அடுத்து எந்த கமல் வரப் போகிறார்
என்ற சஸ்பென்ஸே படத்தில் இருக்கு. முதல் சீனில் கமல் குழந்தை ஒன்று வருகிறது, அது கூட கமலா இருக்குமோ என்று உற்று பார்க்க வேண்டியிருக்கிறது.

திரைக்கதை - மூன்று மணி நேரத்தில், 10 வேஷம் போட்ட கமல் கேரக்டர்கள் எல்லாம் கொண்டு வர வேண்டும், ஒன்றோடு ஒன்றை ஒட்ட வைக்க வேண்டும். திரைக்கதை ஒரு சபாஷ்.

பாடல்கள் - எல்லா பாடல்களும் கதையுடன் வருகிறது தமிழ் சினிமாவிற்கு புதுசு. தனியாக கனவு காட்சி மாதிரி இல்லாமல் இருப்பது ஆறுதல். வாலியின் பாடல்கள் விளங்குகிறது, வைரமுத்து பாடல்களுக்கு பழனியப்பா உரை வேண்டும்.

இசை - சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

நடிப்பு: - ஒரு கமல் இருந்தாலே படத்தில் நிறைய டாமினேஷன் இருக்கும். இந்த படத்தில் 10 கமல். கேட்கவா வேண்டும்.


ஜார்ஜ் புஷ் கமல் - சின்ன சின்ன விஷயம் கூட தெரியாத ஜனாதிபதியாக அவரை காமெடி செய்திருக்கிறார்கள். முதல் காட்சியில் அவரை காண்பித்த போது, மோசமான மேக்கப்பாக இருந்தது, அப்பறம் பழகிவிட்டது.

பாட்டி கமல் - நல்லா நடக்கிறார். சில சீன்களில் கொஞ்சம் வேகமாக நடக்கிறார் :-) கடைசியில் பாட்டில் பாட்டியின் ஆட்டம் கொஞ்சம் ஓவர். மேக்கப் பரவாயில்லை, ஆனால் இந்தியன் சுகன்யாவை நினைவு படுத்துகிறார்.

ஜப்பானிய கராத்தே மாஸ்டர் கமல் - எல்லா சீன்களிலும் ஏதோ ஒரு முகமூடிக்குள்ளிருந்து எட்டி பார்க்கும் உணர்வு நம்க்கு ஏற்படுகிறது. இவருக்கும் CIA கமலுக்கும் நடக்கும் சண்டை கிராபிக்ஸ் கலக்கல்.

வின்செண்ட் பூவராகவன் என்ற தலித் கமல் - பார்க்க திருமாவளவன் மாதிரி இருந்தாலும் வசனம் ராமதாஸோ என்று நினைக்கும் அளவுக்கு மணல் கொள்ளை பற்றி விளாசுகிறார். மேக்கப்+நடிப்பு நல்லா இருக்கு.

அமெரிக்க முன்னாள் CIA கமல் - அமேரிக்க பிளேடு பக்கிரி. எப்போதும் ஓட்டை போட்ட பிளேடை வைத்துக்கொண்டு கமலை துரத்துகிறார். மேக்கப் சுமார் ஆனால் இவர் படம் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பதால் நமக்கு அது அவ்வளவாக தெரிவதில்லை.

8 அடி உயரம் கொண்ட அப்பாவி முஸ்லிம் கமல் - சப்பாத்தி மாவை முகத்தில் பூசிக்கொண்டாரோ யோசிக்க வைக்கும் அவரது முகவாய் கட்டை.

பஞ்சாபி கமல் - ஜெயப்பிரதாவுடன் நன்றாக நடிக்கிறார். சில சமயம் மூக்கு தனியாக தெரிகிறது.

அமெரிக்க துடிப்பான சயன்டிஸ்ட் கமல் - மேக்கப் இல்லாத வழக்கமான மைகேல் மதன, காதலா காதலா கமல். ரொம்ப நேரம் '+' பிளாஸ்தரியுடன் வருவது, இவர் கிறிஸ்டியனா என்று நினைக்க தோன்றுகிறாது :-)

தெலுங்கு உளவுத்துறை அதிகாரி கமல் - இந்திரன் சந்திரன் கமல் இளைத்தால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார். நடிப்பு, வசனம் நல்லா இருக்கு.

வைணவ நம்பி - கமல் என்ன வேஷம் போட்டு நாத்திகம் பேசினாலும், அவருக்கு உரிய ஐயங்கார் வேஷம் தான் அவருக்கு மிக பொருத்தம். நல்லாவும் இருக்கு :-)

சில கதாப்பாத்திரம் தவிர மேக்கப் ஒரு Fancy dress போட்டி பார்த்த உணர்வு. ஆனால் அவை எல்லாம் தெரியாதபடி கமல் நடிப்பிலும் பாடி லேங்வேஜில் கவர் செய்கிறார்.

அசின் - அட தமிழ் பட கதாநாயகிக்கு நடிக்க கூட தெரிகிறதே என்று சொல்லும் அளவிற்கு நல்ல நடிப்பு. சந்தானபாரதி ஏன் எப்போதும் கமல் படத்தில் நெகடிவ் கேரக்டரில் வருகிறார் ? நாகேஷும் சில சீன்களில் வருகிறார்

ஒளிப்பதிவு - பல இடங்களில் புகுந்து விளையாடுகிறது, சில இடங்களில் சாதாரண தமிழ் படம் போல் இருக்கிறது. நேரு ஸ்டேடியம் காட்சியில் தெரியும் கூட்டம் எல்லாம் ஏதோ வீடியோ கேம்ஸ் கார் ரேஸில் வரும் கூட்டம் போல காண்பித்திருக்கிறார்கள்.

வசனம்: கமல் என்று டைட்டிலில் போடுகிறார்கள். எனக்கு என்னவோ இவர் கிரேஸி மோகனிடம் உதவி கேட்டிருப்பார் என்று தோன்றுகிறது. சில இடங்களில் அன்பே சிவம் மாதவனிடம் பேசுவது போல் அஸினிடம் பேசுகிறார்.

டைரக்ஷன் - கே.எஸ்.ரவிகுமார் கடைசியில் 'உலக நாயகனே' பாட்டுக்கு ஆடுகிறார். அட நம்ம ரவிகுமார் என்று சொல்ல வைக்கிறார்.

கடைசியில் கமலுக்கு எப்படி மேக்கப் போடுகிறார்கள் என்று காண்பிக்கிறார்கள். இண்டரஸ்டிங்!

மொத்ததில் குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்க வேண்டிய நல்ல படம்.

"கங்கிராட்ஸ்... கமல் எப்படியோ உங்க ரசிகர்களின் ஆசைப்படி ஆஸ்கார்(AASCAR) படத்துல நடிச்சுட்டீங்க...."

பிகு: இந்த படத்தில் 75% மல்லிகாஷெராவத் டிரஸ் தள்ளுபடி :-) அதனால் நீங்க கொடுத்த காசு வெறும் 25% :-)

12 Comments:

Anonymous said...

inaikku kalailerndhu refresh panni panni pathuttruken...ennada innum varlaye nnu...
thanks IV
btw,
"கங்கிராட்ஸ்... கமல் எப்படியோ உங்க ரசிகர்களின் ஆசைப்படி ஆஸ்கார்(AASCAR) படத்துல நடிச்சுட்டீங்க...."

indha punch naanga kumudam laye paathutonganna.

IdlyVadai said...

AASCAR - நான் சேர்த்தது :-)

We The People said...

என்ன தல எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவில்லையோ??!! உங்க விமர்சனத்தில் ஒரு சுருதி குறையுதே!!!??? ஒரே கன்பூசனா இருக்குபா!!

VIJI said...

:)

Rama Karthikeyan said...

For some reason, people does not seem to show interest on this movie.
But I am glad you liked it ;)

http://bale-blog-ia.blogspot.com/2008/06/dasavatharam-sivaji-and-reality-check.html

Bleachingpowder said...

ச்சே..ஒழுங்கா தமிழ்மணம் விமர்சணம் பார்த்துட்டு யோசிச்சு முடிவு பண்ணிருக்களம்...

மூன்னூறு ரூபாய் கொடுத்து பெங்களுர் PVR படம் பார்த்த எனக்கே இவ்வளவு கோவம் வருதே...ஐம்பது கோடி செலவு செஞ்ச ஆஸ்கர் ரவிக்கு எவ்வளவு கோவம் வந்துருக்கும்.

உலகதரமாம்...கொடுமை..HUlk மாதிரி முகத்துல மைதா மாவு பூசிட்டா அது உலகதரமாயுடுமா?..

நாயகன் அன்பே சிவம் வேண்டுமானால் உலகதரம் என்று சொல்லலாம்..இது ரொம்ப சாதாரண தமிழ் படம்

இத ஜார்ஜ் புஷ் வேற பார்க்க போறாறம்...பார்த்தா வாயில சிரிக்க மாட்டார்

Anonymous said...

bleachingpowder,

idhu georgebushkku oru punishment maadhiri. Iraq warukku kamaloda retaliation.

mani

Anonymous said...

அன்பே சிவம் கமல் படங்களில் நல்ல படம்...ஜார்ஜ் புஷ் இவ்வளவு மோசமாகவா இங்லிஷ் பேசுவாரு.. இவருக்கு 10 வேஷத்துல நடிக்கனுங்கற ஆச நிறைவேறிடுச்சு போல... பார்க்கறவங்களுக்குதான் பேதியாகுது.....

Anonymous said...

check this blog
http://philanders.blogspot.com/2008/06/dasavatharam-movie-review.html

ராஜ நடராஜன் said...

படம் பார்த்துவிட்டு பதிவர்களின் பார்வைகள் எப்படி இருக்கும் என்று தேடிக்கொண்டு இருந்தேன்.தொகுத்தளித்துள்ளீர்கள்.
நன்றி.

Hearta said...

ஜெயமோகன் சூப்பராக விமர்சனம் எழுதிட்டாருங்க.

தசாவதாரம்
http://jeyamohan.in/?p=517

தசாவதாரம் ஸ்லைடு ஷோ நன்றாக உள்ளது.

தங்கள் ஆதரவுக்கு நன்றி.

கமல் ரசிகர்கள் சார்பாக இட்லி வடையாருக்கு நன்றி!! நன்றி !!!

Anonymous said...

ஜெயமோகன் அப்படித்தான் எழுதுவார்.
இப்படித்தான் பிதாமகனை ஆகா ஒகோ
என்று புகழ்ந்து, எப்படியோ நான் கடவுள் படத்தில் இடம் பிடித்தார்.
கல்லூரிக்கும் புகழ் மாலை சூட்டினார்.
வெயில் படத்திற்கு விருது கிடைத்ததும் புகழ்ந்து தள்ளினார்.அது
அங்காடித் தெரு வாய்ப்பிற்கு தரப்பட்ட நன்றிக்கடன்.
அவருடைய இப்போதைய குறிகளில் கமலும் ஒன்று.
இரா.முருகன் நுழையும் இடத்தில் தான் நுழைய ஜெயமோகன் ஆசைப்படக் கூடாதா என்ன?