பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 09, 2008

அந்தர்பல்டி ஆதீனம்...

ஜூவியில் வந்த அரசியல்+ஆன்மிக நகைச்சுவை பேட்டி.. Don't miss it !!

மதுரை ஆதீனம் என்றாலே கலகலப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வலுவான கூட்டணியை அமைத்துக் கொடுப்பதற்காக நடிகர் கார்த்திக், தொல்.திருமாவளன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி... ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட ஆதீனம், முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்கு மதுரையிலிருந்து கிளம்பிவந்து வாழ்த்துச் சொல்ல... தி.மு.க-வினரே திடுக்கிட்டுத்தான் போனார்கள். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு கருணாநிதியை நேரில் சந்தித்த மதுரை ஆதீனம், தன் வலதுகரத்தை அவருடைய தலையில் வைத்து ஆசீர்வதிக்க, அந்தப் பரவசக் காட்சி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது.
நாமும் ஆச்சர்யம் அடங்காமல் அந்த 'அடடே!' சந்திப்பு குறித்து மதுரை ஆதீனத்திடம் பேசினோம்....

''கலைஞரை வாழ்த்த கணக்கிலடங்காத பேர் வரிசையில் நின்றார்கள். நான் அங்கே வந்தபோது எழுந்த(?) உற்சாகத்தையும் பரவசத்தையும் நீங்களே பார்த்திருக்கலாமே... (அடேங்கப்பா!) பல வருடங் களுக்குப் பிறகு கலைஞரை அருகில் போய்ப் பார்த்த போது, என்னையும் மீறி உணர்ச்சிகள் பொங்கிக் கிளம்பி விட்டன.

என்னுடைய வலது கரத்தை கலைஞரின் தலையில் வைத்து, 'நீங்கள் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு காலங்கள் வாழ்ந்து, தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும் பக்கபலமாக விளங்கவேண்டும்' என ஆசீர்வாதம் செய்தேன். அவரும் மனப்பூர்வமாக சிரித்தபடி, 'மிக்க மகிழ்ச்சி. மதுரையிலிருந்து எப்போது வந்தீர்கள்?' என பாசத்தோடு கேட்டார். மனதிலிருந்த சில விஷயங்களை கிடைத்த கணத்தில் பேசிவிட்டு, 'நீங்கள் மதுரை வரும்போது அவசியம் மடத்துக்கு வரவேண்டும்' என்றேன். பெருத்த மகிழ்வோடு வருவதாகச் சொன்னார்(அப்படியா!). நான் கலைஞருக்கு வாழ்த்துச் சொன்னது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயமில்லை. அது ஒரு உணர்வுப்பூர்வமான சந்திப்பு, அவ்வளவுதான்'' என்றவரிடம் வரிசையாகக் கேள்விகளை வைத்தோம்.

''நேற்றுவரை ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருந்தீர்கள்... தேர்தல் நேரத்தில் கலைஞரை கடுமையாக விமர்சித்துக்கூட பேசினீர்கள். இப்ப என்னடான்னா... பிறந்தநாளை சாக்கா வெச்சுக்கிட்டு திடுதிப்புன்னு முகாம் மாறி வாழ்த்துப்பா பாடறீங்க... புரிஞ்சுக்கவே முடியலையே..?''

''மற்றவர்கள் ஆச்சர்யப்படுவதில் எனக்கு ஆச்சர்ய மில்லை... நான் கலைஞரோடு களப்பணியாற்றியவன். தி.மு.க-வில் இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். அன்றைக்கும் இன்றைக்கும் பெற்ற தகப்பனைப் போல உடன்பிறப்புகளுக்குப் பக்கபலமாக இருப்பவர் கலைஞர். சில விஷயங்களால் சிலகாலம் நான் விலகி இருந்தது உண்மைதான். நான் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போயிருந்தபோது, தந்தையின் ஸ்தானத்தில் இருந்து என்னை வாஞ்சையோடு பற்றிக்கொண்டார். அவருடைய தங்கமான குணத்துக்கும் பெரிய மனசுக்கும் வேறு யாரையும் ஈடுசொல்லவே முடியாது. மூத்த தமிழறிஞரை, தமிழராகப் பிறந்த யார் வேண்டுமானாலும் வாழ்த் தலாம் (பலே!)''

''உங்களின் இந்த தமிழ் ஆர்வத்துக்கு அ.தி.மு.க. தரப்பின் ரியாக்ஷன் கடுமையாக இருக்குமே?''

''என்னை அ.தி.மு.க-வின் ஆதரவாளராக நான் எப்போது அறிவித்தேன் (ஹையோடா!)? தேர்ந்த அரசியல் பக்குவம் பெற்றவரான எம்.நடராஜனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இணக்கமான சூழலை ஏற்படுத்த நினைத்தேன். அந்த முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. அதன்பிறகு அ.தி.மு.க-வுக்காகவோ, ஜெயலலிதாவுக்காகவோ நான் எந்தவிதத்திலும் பக்க பலமாக நின்றதில்லை. அதனால் நான் கலைஞரைச் சந்தித்ததற்காக ஜெயலலிதா ஏதும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்.''

''இனி ஆதீனத்தை தி.மு.க-வின் ஆதரவாளர் எனச் சொல்லலாமா?''

''வாழ்த்துச் சொல்ல வந்தவர்களிடம் சில நொடி கள்கூட பேச அவகாசமில்லாமல் பிஸியாக இருந்த கலைஞர் என்னிடத்தில் மட்டும் எவ்வளவு பாசமாகப் பேசினார்! நான் அணிவித்த பொன்னாடையை எவ்வளவு நேரம் தோளிலேயே அணிந்திருந்தார் பார்த்தீர்களா..?. நான் வாழ்த்துச் சொல்ல வந்தவுடன் மத்திய அமைச்சர்களான புதுக்கோட்டை ரகுபதியும், பெரம்பலூர் ஆ.ராசாவும் ஓடோடிவந்து என் கரங்களைப் பற்றிக் கொண்டார்கள். மூத்த அமைச்சர்களான டி.ஆர்.பாலுவும், துரைமுருகனும் மதிப்போடு என்னை வணங்கினார்கள். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது..? தி.மு.க. என்கிற குடும்பத்தில் நான் அங்கம் வகித்த நினைவுளை அவர்கள் யாரும் மறக்கவில்லை. இனி எந்நாளும் கலைஞர்தான்... எப்போதும் கழகம்தான். இதில் எள்ளளவும் மாற்றமில்லை!''

''ஆனால், 'ஆதீனத்துக்கு நேற்று ஜெயலலிதா, இன்று கலைஞர், நாளை விஜயகாந்த்' என சிலர் நக்கலடிக்கிறார்களே?''

''இருக்கட்டுமே... விஜயகாந்த் மட்டும் எனக்கு வேண்டாதவரா என்ன? அவருடைய முதல் மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு வந்தது. 'நீங்க நல்லா வருவீங்க, கேப்டன்!'னு போனிலேயே ஆசீர் வாதம் சொன்னேன் இப்போதும் சொல்கிறேன்... எப்போதும் சொல்வேன்... நான் பாரம்பரிய மதிப்பு வாய்ந்த மடாதிபதி. எல்லோருக்கும் என்னுடைய ஆசீர்வாதங்கள் எப்போதுமே உண்டு. யாருக்குமே நான் எதிரி கிடையாது (அரசியல்வாதிங்க தோத்தாங்க, போங்க!) சமீபத்தில்கூட பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ§ம் நானும் சந்தித்துப் பேசினோம்... இலட்சிய தி.மு.க-வை நடத்திவரும் டி.ராஜேந்தரின் கேசட் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். கட்சிப் பாகுபாடுகள் பார்த்துப் பழகுகிற கெட்ட குணம் எனக்குக் கிடையாது. நான் எல்லோருக்கும் வேண்டியவன், பொதுவான ஆள், அவ்வளவுதான்'' எனச் சொல்லி ஆதீனம் நமக்கும் ஆசீர்வாதம் வழங்க, பேட்டி ஓவர்!

( ஸ்பெஷல் நன்றி: ஜூவி )

2 Comments:

Anonymous said...

இவர் எப்படி இன்னும் சினிமாத் துறைக்குள் வராமல் இருக்கிறார்.
இப்படி ஜால்ரா போடுபவர் இருக்க
வேண்டிய இடம் அதுவல்லவா.
சாரு நிவேதிதாவையும், இவரையும்
சந்திக்க விட்டால் என்ன ஆகும் :).

Anonymous said...

இந்த ஆள் ஒரு [edited]. ருத்ராட்சமும் விபூதியும் பூசிக் கொண்டு திரியும் ஆஷாடபூதி. மடத்திற்கு நிறைய சொத்து இருக்கிறது, அதை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக அரசியல் செய்து கொண்டு இருக்கும் போலிச் சாமியார். இவனுக்கு முன்பாக மதுரையில் ஒரு ஆதீனம் இருந்தார் அவர் இவனைப் போல காமெடிகள் எல்லாம் செய்வதில்லை. ஆவிகளுடன் பேசுவது எப்படி என்று தமாஷான புஸ்தகம் எல்லாம் எழுதியிருக்கிறார். அவருக்குப் பிறகு தினகரன் பத்திரிகையில் நிருபராக/ஏஜெண்டாக வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்த ஆளைப் பிடித்து நீதான் மடாதிபதி என்று அறிவித்து விட்டார்கள். அப்புறம் அந்தச் சொத்தை அனுபவிப்பது தன் ஜாதிக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு ஜாதி அரசியல் செய்வது முதலிய கோமாளித்தனங்களைச் செய்து கொண்டு திரியும் இந்த ஆளை யாரும் மதிப்பது கிடையாது. தமிழ் நாட்டு அரசியலில் கார்த்திக், நடராஜன், டி.ராஜேந்தர் ஆகியோருடன் சேர்ந்து இந்த ஆளும் அடிக்கும் லூட்டி தாங்க முடிவதில்லை. சைவ மதத்தை அழிக்க வந்த அரக்கர்களில் ஒருவன் இந்த டுபாக்கூர் பேர்வழி. இவனுக்கு உருப்படியாக ஒரு தேவாரம் கூடத் தெரியாது. சைவ மதம் பற்றிய அறிவும் கிடையாது. பஞ்சத்துக்கு மடாதிபதியாக வந்தவன். பழைய ஆதீனத்திடம் பழகி முதலில் இடத்தைப் பிடித்து அப்புறமாக மடத்தை எடுத்துக் கொண்ட ஒரு டுப்ளீகேட் சாமியார் இவன். இவனைப் போன்ற ஆதீனகர்த்தர்களால் இந்து மதத்திற்கே கேவலம். இவன் மடத்தில் இருந்து ஒரு முறை நிறைய [edited] எடுத்து வெளியே போட்டார்கள். கருணாநிதிக்கு வாழ்த்துச் சொல்ல சரியான ஆசாமிதான் இவன்
[ edited ]