பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 03, 2008

கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப் கைது

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்ததாக துபாயில் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆசிப் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி சார்பில் விளையாடினார்.

இந்நிலையில் மும்பையிலிருந்து பாகிஸ்தான் செல்லும் வழியில் அவர் துபாய் சென்றார். துபாய் விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.

முகமது ஆசிப் ஏற்கனவே போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக அவரும், அக்தரும் பிடிபட்டனர். இருவருக்கும் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.

தற்போது முகமது ஆசிப் மீண்டும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 Comments:

முஸ்லீம் said...

இஸ்லாத்தின் கொள்கைப்படி போதைப் பொருள் வைத்திருப்பவன் முஸ்லீமே அல்ல.

அதே போல இஸ்லாத்தை பற்றி இல்லாததும் பொல்லாததும் கூற அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகள் சதி செய்கிறது. அதான் இது.

sriram said...

Why are you just acting as a postman/newspaper boy in your blog when there are 100s of news channels & websites available? You used to write nice posts in your blog and i am surprised that your blog has become more like a RSS feed for the latest news.Request you to write some good stuffs as you used to.

IdlyVadai said...

Sriram,

நீங்க சொல்லுவது சரி. தேர்தலுக்கு பிறகு தான் இப்படி. அதனால் தான் இட்லிவடை has become cheap :-) ( from today )