பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 16, 2008

விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் - கலைஞர்

திபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கடலூரில் நடந்த திமுக மகளிரணி மாநாட்டில் பேசுகையில், கூறினார்.தை மாதம் வரப் போகும் பொங்கலை எப்படி கொண்டாடப் போகிறோம். மகர சங்கராந்தி என்றா?. சங்கராந்தி தேவி 25 கைகளோடும், 45 கால்களோடும், கோரப் பற்களோடு வருவார் என்று பஞ்சாங்கத்திலே போடுவார்களே அந்தப் படத்தைக்காட்டி, இவர்தான் மகர சங்கராந்தி, இவரை வணங்குவோம் என்று நாமும் வணங்கி, நம்முடைய வீட்டிலே இருக்கின்ற குழந்தைகளையும் வணங்கச் சொல்லப் போகிறோமா?.

அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?.

நம்முடைய ஆண்டுக் கணக்கு என்ன?. வெள்ளைக்காரனுக்கு இருக்கிறது ஆண்டுக் கணக்கு, ஜெர்மனிக்கு, பிரெஞ்சுக்கு, தெலுங்குக்கு, கேரளாவுக்கு ஆண்டுக் கணக்கு இருக்கிறது.

தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது.

சேரன் செங்குட்டுவன் பரம்பரையில் வந்த தமிழன் நீதி கேட்ட கண்ணகியினுடைய சாபத்திற்கு அடிபணிந்த உயிர் துறந்த தமிழன் நெடுஞ்செழிய பாண்டியனுடைய பரம்பரையில் வந்த தமிழன் இன்றைக்கும் இன்னும் அந்த வருடப் பிறப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆண்டு தை முதல் நாள்தான். வள்ளுவன் பிறந்த ஆண்டு தமிழன் ஆண்டு கணக்காக குறிப்பிட்டார்கள். பெண்களான நீங்கள் இந்த செய்தியை எல்லோருக்கும் சொல்லி, வருகிற பொங்கல் திருநாளை தமிழன் திருநாளாக, திராவிட திருநாளாக கொண்டாடுங்கள்.

எப்படி தீபாவளிக்கு புது ஆடை உடுத்திக் கொண்டாடுகிறீர்களோ அது தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, இந்த நாள் தமிழை ஏற்றி வைக்கும் நாள். தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் நாள். அந்த சுயமரியாதை உணர்வோடு தன்மான உணர்வோடு பொங்கலைக் கொண்டாட புறப்படுங்கள் என்றார் கருணாநிதி.
( நன்றி: தட்ஸ் தமிழ் )


இட்லிவடையின் இரண்டு கேள்விகள்:

1. இந்த ஆண்டு முதல் தீபாவளிக்கு(தமிழன் கொல்லப்பட்ட நாள்) கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டா ? இல்லையா ?

2. தீபாவளி போது எல்லா விளம்பரத்திலும், "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"(தமிழன் கொல்லப்பட்ட நாள்) அடிக்கடி சொல்லுவார்கள். காசுக்காக அந்த விளம்பரங்கள் கலைஞர் டிவியில் வருமா? அல்லது கொள்கைக்காக வராதா ?


17 Comments:

Anonymous said...

கலைஞர் டி.வி வியாபாரம்,
அங்கே வாடிக்கையாளர் தேவையை
நிறைவேற்றுவதே கடமை, அதை
கண்ணியம், கட்டுப்பாடுடன் செய்வது
கலைஞர் டி.வியின் தொழில் தர்மம்.
செப் 17 அன்று விளம்பரதாரர் யாரும் ஈவெரா
பிறந்த நாள் விளம்பரம்
தராவிட்டால் கலைஞர் டி.வி என்ன
செய்ய முடியும்.பகுத்தறிவை கைக்காசு போட்டா வளர்க்க முடியும் :)

ஜடாயு said...

நியாயமான கேள்விகள் தலைவா.

அப்படியே இதையும் பாருங்க -

அஸ்ஸாம் அரக்கனைத் தமிழனாக்கும் கருநாநிதியின் அபத்த உளறல்கள்
http://jataayu.blogspot.com/2008/06/blog-post_16.html

நன்றி.

Bleachingpowder said...

//இந்த ஆண்டு முதல் தீபாவளிக்கு(தமிழன் கொல்லப்பட்ட நாள்) கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டா ? இல்லையா ?//

அதெல்லாம் தூள் கிளப்புவார்கள்...காலை 6 மணிக்கு மங்கள இசையுடன்.. அட அரசியல்ல இதலாம் சாதாரணப்பா

geeyar said...

நீங்க சொல்வதைப் போல நரகாசூரன் அஸ்ஸாமை சேர்ந்த அரக்கனென்றால் அவனை கொன்ற கிருஷ்ணனை தமிழனாகிய நாங்கள் ஏன் போற்ற வேண்டும். கிருஷ்ணன் தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக ஆற்றிய தொண்டினை சற்று விவரமாக விளக்குங்கள். அனைவரும் வருகிறோம் அவன் சன்னதி நோக்கி. பதிலை எதிர் நோக்கி காத்திருக்கும்

irriated soul said...

indhha aaalu yarru, eppo patthaluum, eddhai konddathha, new year aa matthu, deepavalli yya kooopaiala poddhunnu sooolla !! venggayam...

venna, innimme, indhhaa thatha putttarnna, puddhssa orru festival seetthukorrm hindhus !!

ஜயராமன் said...

//// நீங்க சொல்வதைப் போல நரகாசூரன் அஸ்ஸாமை சேர்ந்த அரக்கனென்றால் அவனை கொன்ற கிருஷ்ணனை தமிழனாகிய நாங்கள் ஏன் போற்ற வேண்டும். கிருஷ்ணன் தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக ஆற்றிய தொண்டினை சற்று விவரமாக விளக்குங்கள். அனைவரும் வருகிறோம் அவன் சன்னதி நோக்கி. பதிலை எதிர் நோக்கி காத்திருக்கும் //

ஐயா,

கிருஷ்ணரை வணங்குவதும் வணங்காததும் தங்கள் விருப்பம். அதை யாரும் தவறென்று சொல்ல முடியாது.

ஆனால், தீபாவளி கொண்டாட மறுப்பதன் காரணம் பகுத்தறிவுக்கு உரியதாக இருக்க வேண்டும்.

மாறாக, வெறும் காழ்ப்பு, புரட்டுக்கதை என்று இருந்தால் இது தமிழனுக்கு அழகா?

தீபாவளி இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இறைவனை நம்புவர்கள் கொண்டாடுங்கள். இல்லையேல் நீங்கள் பெரியார் தினத்தையே தீபாவளியாக கொண்டாடுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.

ஆனால், பொங்கல் பண்டிகை கொண்டாட மாட்டோம் என்று கூட்டம் போட்டு தமிழக முஸ்லிம்கள் சமீபத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள், தெரியுமா. தமிழக அரசு தங்களை இந்த பண்டிகை கொண்டாடப்பட வற்புறுத்தகூடாது என்று தவ்ஹீத் ஜமாத்தின் வல்லம் அமைப்பின் தீர்மானம் 10 சொல்கிறது.

இதைக்கேட்க கரு.நா.நிதி அவர்களுக்கு தைரியம் உண்டா?

தீபாவளி கொண்டாடும் பாமர மக்களை மட்டும் வெட்கமில்லாதவன் என்று சொல்வானேன்.

யோசியுங்கள் ஐயா. தமிழன் என்று யோசிக்கிறானோ அன்றுதான் இந்த தலைவர்களை உண்மையாக காண்பான்.

நன்றி

ஜயராமன்
ஜயராமன்

sankar said...

////1. இந்த ஆண்டு முதல் தீபாவளிக்கு(தமிழன் கொல்லப்பட்ட நாள்) கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டா ? இல்லையா ?

2. தீபாவளி போது எல்லா விளம்பரத்திலும், "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"(தமிழன் கொல்லப்பட்ட நாள்) அடிக்கடி சொல்லுவார்கள். காசுக்காக அந்த விளம்பரங்கள் கலைஞர் டிவியில் வருமா? அல்லது கொள்கைக்காக வராதா ?////

பதில் தெரிஞ்சும் கேட்க்கப்பட்ட இட்லிவடையின் இந்த கேள்விகள் ( ஆப்புகள்) நன்றாக இருக்கிறது :)

sankar said...

///geeyar said...
நீங்க சொல்வதைப் போல நரகாசூரன் அஸ்ஸாமை சேர்ந்த அரக்கனென்றால் அவனை கொன்ற கிருஷ்ணனை தமிழனாகிய நாங்கள் ஏன் போற்ற வேண்டும். கிருஷ்ணன் தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக ஆற்றிய தொண்டினை சற்று விவரமாக விளக்குங்கள். அனைவரும் வருகிறோம் அவன் சன்னதி நோக்கி. பதிலை எதிர் நோக்கி காத்திருக்கும்///

சூப்பரா கேட்டீங்ணா..தமிழுக்கு கண்ணன் ஆற்றிய தொண்டு அப்படீன்னு.இந்து மதம் என்பதன் பால் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே கண்ணன் கடவுள். தமிழ் நாட்டில் இந்து மதத்தின் மேல் நம்பிக்கை உள்ள 30000000 பேராவது இருக்கிறாங்கண்ணா.நீங்க இதுல இல்லீன்னா ஒத்தி நின்னு தமிழை / தமிழனை வளர்த்த திருமகன் அப்படீன்னு யாரை நினைக்கிறீங்களோ அவங்க பிறந்த நாளுக்கு பாலூத்துங்ணா.தமிழனெல்லாம் உங்க பின்னாடி நிக்கிறா மாதிரி பாவ்லா காட்டுறத உங்க கட்சி மேடையோட நிறுத்திக்கோங்ணா.என்னைப் போன்ற கடவுள் நம்பிக்கை உள்ள தமிழர்கள் இந்த மாதிரி சந்தர்பவாத நாத்திகக் கபோதிகள் சொல்றதெல்லாம் கேக்குறதில்லீங்ணா.

Bleachingpowder said...

//நீங்க சொல்வதைப் போல நரகாசூரன் அஸ்ஸாமை சேர்ந்த அரக்கனென்றால் அவனை கொன்ற கிருஷ்ணனை தமிழனாகிய நாங்கள் ஏன் போற்ற வேண்டும். கிருஷ்ணன் தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக ஆற்றிய தொண்டினை சற்று விவரமாக விளக்குங்கள். அனைவரும் வருகிறோம் அவன் சன்னதி நோக்கி. பதிலை எதிர் நோக்கி காத்திருக்கும்//

ஷ்ரேயா,அசின்,குஷ்பு,சிம்ரன் எல்லாம் தமிழுக்காக என்ன துண்டு சாரி தொண்டாற்றினார்கள்?? அவர்களை எல்லாம் தமிழர்கள் போற்றவில்லையா அது மாதிரி தான் இதுவும்.

சரி இல்லைனா தமிழை வளர்த்த கடவுள்களும் அவர்கள் தமிழுக்காக செய்த தொண்டையும் நீங்க சொல்லுங்க கும்படறோம்.

தீபாவளிக்கு லீவு கிடைச்சுதா பட்டாசு வெடிச்சமா, புது துணி போட்டமா, படம் பார்த்தமானு இருககனும்...அத விட்டுட்டு கிருஷ்ணர் நமக்கு என்ன பன்னுனாரு, ராமர் அந்த காலத்துல இட ஒதுகீட்டை அமுல் படுத்தினாற னு எல்லாம் பாக்க கூடாது

சுருக்கமா சொன்ன ஃரியா உடு மாமே

Anonymous said...

//நீங்க சொல்வதைப் போல நரகாசூரன் அஸ்ஸாமை சேர்ந்த அரக்கனென்றால் அவனை கொன்ற கிருஷ்ணனை தமிழனாகிய நாங்கள் ஏன் போற்ற வேண்டும். கிருஷ்ணன் தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக ஆற்றிய தொண்டினை சற்று விவரமாக விளக்குங்கள். அனைவரும் வருகிறோம் அவன் சன்னதி நோக்கி. பதிலை எதிர் நோக்கி காத்திருக்கும்//

ஐய்யா சாமி, யாரும் உங்களை வெத்தலை பாக்கு வைத்து அழைக்கவில்லை. வருவதும் வராததும் உங்கள் இஷ்டம்.

மேடை போட்டு கிருஷ்ணனை தாக்கிவிட்டு, பிறந்த நாள் அன்று கொல்லைப்புற வழியாகப் போய் கோபாலபுரம் ஸ்ரி வேணுகோபால்சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யாதீர்கள் என்பதுதான் எமது வேண்டுகோள்

Mani said...

namma kalaigharukku...vayasu earuna buthi thadumaarumnu solvangalla andha maathri aayiduchu ipo...
His main work is at present, hindus and hindu deivaithayum ilivaga pesuradhuthaan...
Pesatuum...vaai valikka...coz he is CM v cannot do anything...Ayya periyavare...kadavul irukkirar engiradhai mattum maranthudaateenga..
Illena vayasana kaalathula vaaya moodikitu chumma irunga...
Pavamya hindu makkal...appavi makkaloda sabam vendamayaa..ungagalukku

Rama Karthikeyan said...

"மேடை போட்டு கிருஷ்ணனை தாக்கிவிட்டு, பிறந்த நாள் அன்று கொல்லைப்புற வழியாகப் போய் கோபாலபுரம் ஸ்ரி வேணுகோபால்சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யாதீர்கள் என்பதுதான் எமது வேண்டுகோள்"

Seriya sonninganovvv!! ;)

I might be missing the point here, but did'nt Karu said that there were no evidences for the existance of lord Ram?
Does his current statement imply that there was indeed Lord Krishna who killed a Tamizhan?

Makkale...ennaku puriya vaiyunga!!

Anonymous said...

"மேடை போட்டு கிருஷ்ணனை தாக்கிவிட்டு, பிறந்த நாள் அன்று கொல்லைப்புற வழியாகப் போய் கோபாலபுரம் ஸ்ரி வேணுகோபால்சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யாதீர்கள் என்பதுதான் எமது வேண்டுகோள்"

;)))))

மாயவரத்தான்... said...

எதா இருந்தாலும் மொதல்ல மஞ்ச துண்டை தூக்கி கடாசிட்டு அப்புறமா பகுத்தறிவை பத்தி பேசலாம்னு சொல்லுங்கய்யா அந்தாளுகிட்ட.

மஞ்ச துண்டு பத்தி மேலதிக தகவல்களுக்கு கூகுளவும்.

உலகிலேயே அதிக ஆண்டுகள் ராஜாவாக இருக்கும் தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ். அவர் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு மக்கள் திங்கள் கிழமை தோறும் மஞ்சள் கலரில் தான் கண்டிப்பாக உடை உடுத்துவார்கள். மஞ்சள் புத்தபிரானுக்கு உகந்த கலராம்.

75 வயதை தாண்டியவர்கள் மஞ்சள் ஆடை அணிந்தால் நீண்ட ஆயுள் கிட்டும் என்று ஒரு ஐதீகம்.

இதெல்லாம் நம்ப மாட்டேன் என்று சொல்பவர் அந்த மஞ்சள் துண்டை தூக்கி கடாச தில் இருக்கிறதா?

வந்து விட்டார்கள் பகுத்தறிவு பேச.

அவரை சொல்லி குற்றமில்லை. அவருக்கும் ஜிங் சாக் போட வலையுலகில் கூட சிலர் அலைகிறார்களே. அவங்களை சொல்லணும்.

kannanS said...

//அவரை சொல்லி குற்றமில்லை. அவருக்கும் ஜிங் சாக் போட வலையுலகில் கூட சிலர் அலைகிறார்களே. அவங்களை சொல்லணும்.//

Repeatae...

ஜயராமன் said...

//// எதா இருந்தாலும் மொதல்ல மஞ்ச துண்டை தூக்கி கடாசிட்டு அப்புறமா பகுத்தறிவை பத்தி பேசலாம்னு சொல்லுங்கய்யா அந்தாளுகிட்ட///

மஞ்சள் துண்டின் ஆயிரத்தெட்டு மகிமை என்று காவியம் எழுதியவர் எங்கள் முதல்வர்.. அதாவது, அந்த துண்டுக்கு அவர் சொன்ன காரணங்கள் அவ்வளவு.

அதில் ஒரு காரணம், அந்த துண்டு ராமதாசு ஐயா போட்டது என்பதாகும்.

இப்போது மருத்துவர் ஐயாவை தூக்கி கடாசுவதாக வீர வசனம் பேசும் மஞ்சள்துண்டார் அவரோடு இந்த துண்டையும் தூக்கி எறிவாரா?

மஞ்சள் மகிமை என்று கலைஞர் டிவியில் ஒரு பகுத்தறிவுத் தொடர் போட்டு தமிழக மக்களுக்கு புத்துணர்வை ஊட்டும் கலைஞர் வாழ்க.

நன்றி

ஜயராமன்

Hariharan # 03985177737685368452 said...

வர வர தமிழ்நாட்டில் இந்த வாழும் வள்ளுவரின் இம்சை தாங்கலீங்க!

ஒரிஜினல் வள்ளுவர் தான் வாழ்ந்தப்போ மாநாடு நடத்தி தனது அரசியல் இயக்கத்தில் மஞ்சள் துண்டு போட்டு இடம்பிடித்து இது கனிமொழிக்கு, இது கயல்விழிக்கு, இது அழகிரிக்கு, இது இசுடாலினுக்குன்னு இடம் பிடிச்சுவைச்சாராங்க?

தமிழ்நாட்டுல வாயைத்திறந்து பேரைச்சொல்லத் தெரிஞ்சவனென்ல்லாம் வாழும் வள்ளுவராயிட்டாங்கங்க!

சூன் 3ம் தேதி சென்னையில் இருந்தேங்க! வாழும் வள்ளுவர் முகவுக்காக முக்குக்கு முக்கு ஒரே வேண்டுதல் கூழ் ஊற்றுதல்ன்னு அல்லக்கைகள் அட்டகாசம்ங்க... வேளச்சேரி ரோட்டுல வழுக்கைத்தலையோட அரைமணிநேரம் சுத்தினா வாழும் வள்ளுவரே வாழ்கன்னு ஜெ.அன்பழகன், க.கிட்டுன்னு எழுதி வச்சு வள்ளுவரை வீதியில் இருத்தி வைச்சுட்டாங்க!(இளையதளபதி கண்ணுல படணுமாம் )

வாழும் வள்ளுவர் இனி தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் தயாளு, ராசாத்தி, கனிமொழி, கயல்விழி, அழகிரி, அஞ்சாநெஞ்சன், இசுடாலின், மாறன், தயாநிதி( மாறன் மகன் அல்ல) உதயநிதி, முத்து, தமிழரசு, செல்வி, காந்திமதி, துர்கா, கருணாநிதி,அஞ்சுகம் அப்படின்னு தன் குடும்ப நபர்கள் பெயர்களாக வைக்கணும்னு ஆசைபடுகிறார் போலிருக்கு.

வாழும் வள்ளுவர் குடும்பத்தினர் 100க்கும் மேல் எண்ணிக்கையில் இருப்பதால் பகுத்தறிவுப் புரட்சியாக இனி தமிழ் ஆண்டுகள் 100க்கும் மேல் தான் இருக்கும் என்று தமிழின பொதுக்குழுவில் முடிவெடுத்து விட்டதாக ஏற்பாடு செய்த கலக மாநாட்டில் அறிவித்து விட வேண்டியது தானே!

இப்படி ஒரு சுரம் பிசகிய அசுரரை வாழும் வள்ளுவராக்கி அழகு பார்ப்போர் வெட்கப்பட வேண்டும்