பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 09, 2008

இட்லிவடை பதில்கள் - 09-06-08

சில கேள்விகள், சில பதில்கள்...

கேள்விகள் மகேஷ்

1) கிழக்கு பதிப்பகம் என ஏன் பேர்வைத்துள்ளீர்கள் ? மேற்கு / தெற்கு / வடக்கு என்றோ ஏன் வைக்கவில்லை ? (பதில் இங்கே வருமா இல்லை கிழக்கு பிளஸ் தொடரில் வருமா ?)

என்னமோ நான் பேர் வைத்த மாதிரி கேட்கறீங்க ? "கிழக்கே போகும் ரயில்" என்ற சினிமா வந்த போது ஏன் "மேற்கே போகும் ரயில் கிடையாதா?" என்று யாராவது கேட்டார்களா ? அதே போல் இதுவும்.

பா.ராவுக்கு ஏதாவது தொடர் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் போர் அடிக்கும் ( படித்தால் நமக்கு போர் அடிக்கும்). ரிப்போட்டர் தொடர் முடிந்தவுடன் கிழக்கு ப்ளஸ் ஆரம்பித்தார். இப்ப அது முடிந்தவுடன், திரும்பவும் ரிப்போட்டருக்கு ஆரம்பிக்கப் போகிறார்!. என்ன தொடர் என்று 'எண்ணை' கேட்காதீங்க நான் சொல்ல மாட்டேன்!

2) ஐபிஎல் போட்டிகளின் முடிவில் வட இந்திய அணி ஓனர்கள் (உதா ப்ரீத்தி சிந்தா) அல்லது பெண்மணிகள் அணியினரைக் கட்டிப் பிடித்து வாழ்த்துகின்றனரே. ஒருக்கால் நயன் சென்னை சூப்பர் கிங்க்ஸின் அம்பாசடராக தொடர்ந்திருந்தால் சென்னை அணியினருக்கும் கட்டிப்பிடி வைத்தியம் கிடைத்திருக்குமோ ? விஜய் என்றொரு செலிபிரிட்டி இருப்பதாகவே வட இந்திய மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லையே ?

நயன் கட்டிப்பிடித்திருந்தால், சென்னை அணி இறுதி போட்டிக்குச் சென்றிருக்காது, ஆஸ்பத்திரிக்குத் தான் சென்றிருக்கும். ( நமக்கும் வயத்தெரிச்சலாக இருந்திருக்கும் ). விஜய் இருப்பது தமிழ்நாட்டுக்கே கொஞ்ச நாள் முன்பு தான் தெரிந்தது. ஷங்கர், மணிரத்தினம் படங்களில் நடித்தால்தான் வட இந்தியா கண்டுகொள்ளும் இல்லை விஜயகாந்த் போல் டெல்லியில் ஆபீஸ் ஆரம்பிக்கணும். குருவி பருந்தாக இன்னும் நாளாகும்.

3) மங்கையர் மலரில் சுகிசிவம் எழுதும் 'பெண்ணே நீ வாழ்க' தொடர், அதற்கு பின்னூட்டங்களும் (அதாங்க கடிதங்கள்!) நல்லா இருக்குதே பாத்தீங்களா ?

பெண்ணே நீ வாழ்க என்ற தொடரில் வந்த ஒரு குட்டிக் கதை இது....

ஓர் ஆண் அடிக்கடி நோய்களால் பிடிக்கப்பட்டார். மருந்து மருத்துவர் என்று ஓயாமல் அலைந்து கொண்டிருந்தார். அவ ருக்கு உடலில் ஏதோ வியாதி என்பதை விட மனதில் ஏதோ குறைபாடு. அதனால் தான் அவருக்கு ஓயாது இப்படித் தொல்லை நேர்கிறது என்று கண்டறிந்த குடும்ப மருத்துவர், அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தார். அவரது நோய் வெறும் மன நோய் என்று கண்டறிந்த மனநல மருத்துவர் அவருக்கு ஒரு யுக்தியைச் சொல்லிக் கொடுத்தார். நாள்தோறும் காலை எழுந்ததும், “நான் மிகவும் ஆரோக்யமாக இருக் கிறேன்” என்கிற மந்திரத் தைக் கண்ணாடி முன்பு நின்று இருபத்தைந்து முறை சொல் லும்படி யோசனை கூறினார். என்ன ஆச்சர்யம்! மந்திரம் பலிக்கத் தொடங்கியது. நல்ல உடல் நலம் பெற்றார் அவர். எந்த நோயும் அவரை நெருங்கவே இல்லை! ஏக மகிழ்ச்சி அவருக்கு.

என்னதான் உடல்நலம் பெற்றாலும் மனைவியிடம் அதிக நெருக்கம் வைத்துக் கொள்ளவில்லை அவர். மண வாழ்வின் ஆரம்ப காலத்தில் இருந்ததுபோல் இல்லை. நாளாவட்டத்தில் மனைவியை நெருங்கு வதில் ஆர்வம் குறைந்தவராகவே இருந் தார்.

இதற்கும் அதே மனநல மருத்துவரைச் சந்தித்து வழி கேட்டால் நல்லது என்று மனைவிக்குத் தோன்றியது. கணவரை வற்புறுத்தினாள். கணவனும் மனைவியிடம் நெருக்கமும் ஆர்வ மும் ஏற்பட ஏதாவது மந்திரம் சொல் லித்தர முடியுமா என்று மனநல மருத்துவாிடம் யோசனை கேட்டார். அவரும் ஒரு மந்திரம் சொல்லித் தந்தார். கணவரும் மந்திரம் சொல்லத் தொடங்கி னார்.

என்ன ஆச்சர்யம்... கொஞ்ச நாட்களில் கணவர் திருமணமான புதிது போல மனைவியிடம் அதிக நெருக்கம் காட்டி னார்! மனைவிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. உடனே அவள் இப்போது மனநல மருத்து வர் சொல்லித் தந்த மந்திரம் என்ன என்று தாிெந்து கொள்ள ஆசைப்பட்டாள். ஆனால், நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என்ற மந்திரத்தை உரக்கச் சொல்வது போல, இந்தப் புதிய மந்திரத்தை அவர் உரக்கச் சொல்வது இல்லை. இரகசிய மாகவே சொல்லிக்கொண்டிருந்தார். அவள் அது என்ன மந்திரம் என்று கேட்டால், ஒரு நமுட்டுச் சிாிப்புடன் நழுவி விடுவார். மனைவிக்கோ ஏகப்பட்ட ஆர்வம்.

ஒருநாள் குளியல் அறையில் கணவர் புதிய மந்திரத்தை இருபத்தைந்து முறை சொல்லிக்கொண்டிருந்ததை அவள் யதேச்சையாகக் கேட்க நேர்ந்தது. மந்திரம் என்ன தெரியுமா ? .. “அவள் என் மனைவி அல்ல...”, “அவள் என் மனைவி அல்ல...”... மனைவியை மனைவி அல்ல என்று மனம் நம்பிய பிறகு அவள் மீது அவருக்கு அப்படியொரு ஆர்வம்.


இந்த மாதிரி கதை சொல்லிவிட்டு "பெண்ணே நீ வாழ்க" என்ற டைட்டில். நல்ல கூத்து. கடிதங்கள், பின்னூட்டங்கள் நான் படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. மங்கையர் மலரில் வரும் தயிர் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், வீட்டில் திடீர் விருந்தாளி வந்தால் எப்படி சமாளிக்கலாம் போன்றவை தான் நான் விரும்பி படிப்பேன்.

4) ரஜினிராம்கி ஏன் இப்போதெல்லாம் பதிவுகள் போடுவதில்லை (திருமணத்திற்குப் பின்) ? :-) (அதான் தம்பி ஆயில்யன் போடுகிறாரே என்கிறீர்களா ? ராம்கியின் பதிவுகளில் ஒரு டச் இருக்கும் - அல்லது ராம்கியும் இட்லிவடையில் ஒரு அங்கமோ)

ரிப்போட்டரில் ரஜினிக்குப் பிடித்த பேச்சாளர் பற்றிய கட்டுரைக்குப் பிறகு அவரைக் காணவில்லை. இட்லிவடையில் அவர் ஓர் அங்கமா என்று தெரியவில்லை, எதற்கும் இந்தக் கேள்வியை கூரியரில் சரக்கு மாஸ்டருக்கு அனுப்பி வைக்கிறேன். பதில் வந்தவுடன் சொல்றேன்.

5) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இண்டியா போன்ற ஆங்கில நாளிதழ்களில் அந்த நாளில் இன்று என 50 ஆண்டுக்கு முந்தைய பேப்பரிலிருந்து எடுத்துப் போடுவார்கள். அதே மாதிரி இட்லி வடையில் பழைய குமுதம், விகடன் பக்கங்கள் வருமா ?

50 ஆண்டுகள் அதற்கு முடிந்திருக்க வேண்டும் :-). இட்லிவடை ஆரம்பித்து இந்த அக்டோபர் தான் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அப்போது நினைவுப் படுத்துங்கள். ஆரம்பிக்கிறேன்.

ஜி.சங்கர் கேள்விகள்

1. நிஜமாகவே படித்து பி.எச்.டி பட்டம் வாங்கியிருக்கும் பத்ரி ஏன் டாக்டர் பட்டத்தை போட்டுக்கொள்வதில்லை ? நாகப்பட்டினம் - ஐஐடி - அமெரிக்கா - கிரிக்கின்ஃபோ - நியு ஹொரைசான் மீடியா - தமிழக இளைஞர்களுக்கு பத்ரி ஒரு முன்னோடியா ? முன்மாதிரியா ? (தாய்நாடு , தாய்மொழி பக்தி மற்றும் சேவை வகையில்)

இந்த கேள்வியை பத்ரியிடம் மின்னஞ்சலில் அனுப்பிக் கேட்டதற்கு அவர் தன் கையெழுத்தில் தந்து அனுப்பிய பதில் சைடில். (அருள்மிகு மாரியம்மனைத் தவிர எல்லோரும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் ). டெலிபோன் புகழ் பூங்கோதையுடன் இந்த விழாவில் இருக்கிறார் அதில் டாக்டர் பத்ரி என்று போட்டிருக்கிறார்கள். ஏன் பத்ரிக்கு முன்னால் டாக்டர் பட்டம் போட்டார்கள் என்று என்னை கேட்காதீர்கள், தினகரனைத் கேளுங்க!


2) இந்த முறை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து பல நாட்கள் நல்ல ருசிகர விவாதங்களுடன் நடந்துள்ளதே ? முதல்வரின் அணுகுமுறையும் காரணமோ ?

இல்லை, எதிர் கட்சிகள் ஒத்துழைப்பு தான் காரணம். முன்னாள் முதல்வர் (மற்றும் சிலரைக் கூட) 'நண்பர்' ஓ.பன்னீர்செல்வம் என்று அடிக்கடி முதல்வர் சொன்னார். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


3) ஸ்டாலின் அடுத்தமாதமாவது (ஜூன் 3 க்குப் பிறகு) 'பெரிய' பதவிக்கு வருவாரா ?

நிச்சயம் ஜூன் 3க்கு பின் 'பெரிய' பதவிக்கு வருவார். எந்த வருடம் என்று தான் தெரியவில்லை. தற்போது அவர் பெரியவர் ஆவது அண்ணன் கையில் தான் இருக்கு. ‘அண்ணன் வர்றார்லே’ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.


4) சன் டிவி ஒளிபரப்பிய சிங்கப்பூர் திரைவிழாவில் நவராத்திரி சிவாஜி- சாவித்திரி கூத்துக் காட்சியை பிரபு (+ ராதிகா) இவ்வளவு மோசமாகவா செய்வார்கள். பிரபுவுக்கு சிவாஜியின் ஸ்டைலில் 10% கூடவரவில்லையே ?

மகனாகவே இருந்தும் பிரபுவுக்கு சிவாஜியின் ஸ்டைல் வராததை ஒரு நல்ல தகுதியாகப் பார்க்கவேண்டும். பிரபுவின் ஸ்டைல் சிவாஜிக்கும் வந்திருக்காது. அதை வசதியாக மறந்துவிடுகிறோம்.


5) தந்தை மகன் நடிப்புலகில் - சிவாஜி-பிரபு, எம்.ஆர்.ராதா - ராதாரவி, சத்யராஜ் - சிபிராஜ், முத்துராமன் - கார்த்திக், டி.ராஜேந்தர் - சிம்பு, டி.எஸ்.பாலையா - ஜூனியர் பாலையா, நாகேஷ் - ஆனந்த்பாபு (எப்படி இருக்கார் இப்போ?), எஸ்.வி.சேகர் - அஸ்வின், பாக்யராஜ்- சாந்தனு, விஜயகுமார் - அருண்விஜய், இப்படி எந்த காம்பினேஷன் எடுத்துக்கொண்டாலும் மகன்களின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லையே ? திறமை காரணமா ? உழைப்பா இல்லை தந்தையளவு தொழில்மீது அக்கறை இல்லாதது காரணமா ? திறமை இருந்தும் வீணடித்துக் கொண்டவர்களில் பிரபுவும், கார்த்திக்கும் சேருவர் (எதாக). இட்லிவடை கருத்து என்ன ?

என் பதில் கேள்வி - ஏன் சிவகுமார்-சூர்யாவை இதில் சேர்க்கவில்லை ?

6) நாடுமுழுவதும் தினமும் பயணிக்கும் அரசியல் (டெல்லி) பெருந்தலைகள் எப்படி தங்கள் உடமைகளை எடுத்துச் செல்கின்றனர் ? எங்கு தங்குகின்றனர் ? கூட பெட்டி எடுத்துச் செல்லும் உதவியாளர்களுக்கும் சேர்த்து டிக்கெட் (விமான) செல்வு - பொதுமக்கள் வரிப்பணத்திலா ? இதன் விரிவான தகவல்கள் தரமுடியுமா ? உதாரணம் - வெங்கையா நாயுடு, மொய்லி, வயலார் ரவி, அருண்குமார்...

யார் செலவு செய்கிறார்கள் என்று ஆராய ஆரம்பித்தால் நிறைய பூதம் கிளம்பும், கட்சிப் பணம், அரசாங்கப் பணம் அல்லது சிலர் அவர்களுக்கு ஸ்பான்சர் கூட செய்யலாம். எதற்கு நமக்கு இந்த வீண் வம்பு. நேற்று தான் திடீரென்று தூக்கம் கலைந்து, மன்மோகன் சிங் விமானப் பயணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

7) எத்தனையோ பேர் சொல்லியும், எழுதியும் ஆன பிறகும் ஜெயலலிதா ஏன் சசிகூடவே இருக்கிறார் ? சட்டமன்றத்துக்கும் ரெகுலராக வராமல், பொதுமக்கள் பிரச்னையில் நேரடி களம் இறங்காமலும் ஓய்வு ஓய்வு என எப்படி இவரால் அரசியல் செய்ய முடிகிறது. ? இவரை நம்பி ராஜ்நாத் சிங் எல்லாம் எப்படி கதவு திறந்து வைக்கிறார் ?

எவ்வளவோ பேர் சொல்லியும் பெரியார் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைக்கவில்லையா ? துணை என்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று. அரசியல்வாதிகள் ஓய்வு என்றால் கடமையை விட்டுவிட்டு 'ஆக வேண்டிய காரியங்களில்' கவனமாக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அந்தத் தைரியத்தில் தான்.

8) தமிழக அமைச்சர்களின் பட்டியலை அவர்கள் ஜாதியுடன் வெளியிடமுடியுமா ? இவர்கள் எல்லோரும் க்ரீமி லேயரில் வருவார்களா ?

அடப்பாவமே. உலகின் எந்தக் கோடியில் இருக்கிறீர்கள்? தமிழகத்தில் வட்டம், சதுரம், எம்எல்ஏ, அமைச்சர் ஆவது எல்லாமே அந்தந்தப் பகுதியைப் பொருத்த ஜாதி சார்ந்த தேர்வுதானே. தனியாக போர்டு மாட்டவேண்டுமா என்ன? அன்னார்களும் அவர்களின் சுத்துப்பட்ட அல்லக்கைகளும் க்ரீமி லேயரில் வருவதால் தான் அதை இன்னும் எடுக்காமல் வைத்திருக்கிறோம்.

9) ஜெயஸ்ரீயின் வலைப்பதிவு சமையல் குறிப்புகள் புத்தகமாக கிடைக்குமா ?

படத்தை பார்த்து நாம் ஏமாறலாம், பதிப்பகங்கள் ஏமாறாது.

10) தமிழ் நாவல்களில் வரும் துப்பறியும் ஜோடிகளில் எந்த ஜோடி உங்களைக் கவர்ந்தது ? கணேஷ்-வசந்த், விவேக்-இன்ஸ்பெக்டர் கோகுல்நாத், நரேன் - வைஜெயந்தி, சங்கர்லால் - ?, இன்ஸ்பெக்டர் சிங்(காரம்)-(ராம)லிங்க்(கம்), பரத்- சுசீலா (டீஷர்ட் ஸ்பெஷலிஸ்ட்),

(இட்லி-வடை ஜோடிக்கு முன்னால்) யார் இவர்கள்?

கேள்விகள் கானகம்

1). இவ்வளவு அரசியல் ஞானம் உள்ள சுப்ரமனியசாமி ஏன் இத்தனைதூரம் கோமாளிபோல் கருதப்படுகிறார்.. ????அரசியல் வியாதிகள் மேல் அவர் இட்ட வழக்குகள் மட்டுமே நீதியைபெற்றிருக்கின்றன... இருந்தும் ஏன்??

ஷேக்ஸ்பியர் நாடங்களில் கிளவுன் என்ற கதாப்பாத்திரம் வரும், லூஸு மாதிரி பேசினாலும் விஷயம் இருக்கும். அது போல தான் சு.சுவாமியும்.

2) போபர்ஸ் வழக்கின் தற்போதைய நிலை என்ன??

பாபர் மசூதி மாதிரி வருடாந்திர திதி இதற்கும் உண்டு அதனால் பீரங்கிகளை துரு பிடிக்காமல் வைத்திருப்பார்கள்.

3) சாரு மற்றும் ஜெயமோகனின் சண்டை இறுதியில் எங்குபோய் முடியும்?? இதற்கு இனையாக சொல்லப்பட்டக்கூடிய வேறு இலக்கிய சண்டைகள் உண்டா??

அடப்பாவிகளா, இதெல்லாம் சண்டை சரி. ஆனால் இலக்கியம் இதில் எங்கிருக்கிறது? இருவருக்கும் புகழொளியில் மின்னும் தாகம் இருக்கும்வரை, தமிழன் வெட்டி நகைச்சுவையில் வீணாய்போகும் வரை இது முடியாது.

4). டோண்டு கேள்விபதில்கள் அவரே கேள்விகேட்டு பதில் சொல்வதுபோல் தெரிகிறதே.. இட்லிவடையார் என்ன நினைக்கிறார்???

குமுதம் அரசும், கலைஞர் செய்யும் போது டோண்டு செய்தால் என்ன தவறு. அதே வரிசையில் நீங்களும், கேள்வியும் கேட்டு பதிலும் நீங்களே சொல்லிக்கொண்டால் அப்புறம் நான் எதற்கு?

11 Comments:

Anonymous said...

பத்ரி மட்டுமல்ல,வலைப்பதிவர்களில் குறைந்தது 10 பேராவது முனைவர் பட்டம் பெற்றவர்கள், தமிழ் அல்லாத
துறைகளில்.
(உ-ம் வெங்கட்ரமணன், பெயரிலி,சுந்தரவடிவேல்,சுந்தரமூர்த்தி,
பத்மா அரவிந்த்,தங்கமணி,சுடலைமாடன்). ஆனால் இவர்கள் யாரும் வலைப்பதிவுகளில் தங்கள் பெயர் முன் அதைப் போட்டுக் கொள்வதில்லை.ஏனெனில் அதை
எங்குப் போட்டால் பொருத்தமோ
அங்குதான் போடவேண்டும்.வலைப்பதிவுகளில் அதை போட்டுக்கொள்வது நடு இரவில்
வீட்டிற்குள் குடை பிடிப்பது
போலிருக்கும் :).

Hari said...

இட்லி தமிழர் உணவா? விடை இங்கே

Anonymous said...

இந்த பதில்களை எளுதியது பா.ராகவனா?

IdlyVadai said...

இந்த பதில்களை எளுதியது பா.ராகவனா?

:-) இல்லை என்று சொன்னால் நீங்க நம்பவா போறீங்க.

Anonymous said...

ஜி. சங்கர்

நன்றி இட்லிவடை. பதில்கள் அருமை. இதோ அடுத்த செட் (!) கேள்விகள்.

1. சென்னை போலீஸ் கமிஷனராக யாரு பெஸ்ட் ? நாஞ்சில் குமரனா ? லத்திகா சரணா ? நட்ராஜா ? தற்போதைய சேகரா ? ஏன் ?

2. மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் இதுவரை மக்களுக்காக என்ன செய்துள்ளார் ? ஆளுங்கட்சியிலும் அவருக்கு நல்ல பேராமே ? அவர் கேட்டுக்கொண்டால் சில விஷயங்களை செய்து கொடுக்கிறார்களாமே ?

3. ஸ்டாலினுக்கு நுரையீரலில் என்ன பிரச்னை ? அதுக்கு லண்டனில் தான் சிகிச்சை இருக்கிறதா ? சென்னையிலோ இந்தியாவிலோ சிகிச்சை கிடையாதா ? அல்லது அவ்வளவு தீவிரமான பிரச்னையா ? இல்லை இந்த லண்டன் டிரிப்பில் நடுவில் சில நாட்கள் ஸ்விஸ் நாட்டுக்கு பயணம் உண்டா ? வேற எதுக்குங்க.. அதுக்குத்தான்) (இதே நேரத்தில் டி.ஆர்.பாலு ஃபின்லாண்டு செல்ல இருந்ததை பிரதமரின் வேண்டுகோளால் பயணம் செய்யவில்லை என தெரிகிறது - இருவரின் ஐரோப்பிய
ப(ய)ணத்திற்கும் ஏதேனும் கனெக்சன் உண்டா ?)

4. லதா என்ற பெண்ணின் பொறுமையும், வழிநடத்துதலும் இல்லாமலிருந்தால் ரஜினி என்னும் புயல் 80களுக்குப் பிறகு என்ன ஆகியிருக்கும் ?

5. டைம்ஸ் ஆஃப் இண்டியா வரவினால் ஹிண்டுவிற்கு பாதிப்பு உள்ளதா ? இந்த சுமார் 2 மாதங்களில் ஆங்கில நாளிதழ் மார்க்கெட் எப்படி உள்ளது? இண்டியன் எக்ஸ்பிரஸ் வேற எழுத்துரு எல்லாம் மாற்றி படம் போட்டு பாகம் வரைகிறதே ?

6. கம்பராமாயணத்தின் சுவையைப் பருக இணையத்தில் சிறந்த தளம் எது ? எல்லா பாடல்களையும் ஒருவித சொற்பொழிவாளரின் ஆர்வத்துடன் பொருள் தரும் தளம் உள்ளதா ?

7. தி.நகர் உஸ்மான் ரோட்டில் சென்னை சில்க்ஸ் மற்றும் சில கடைகள் மட்டுமே 4 மாடிக்கு மேல் உள்ள தளங்கள் இடிக்கப்பட்டன. சரவணா ஸ்டோர்ஸ் போன்றவை 7 மாடிவரை கட்டியுள்ளனரே ? அதெப்படி ஒரே சாலையில் ஒருவர் கட்டியுள்ளதற்கு அனுமதி மற்றவருக்கு இடி ? எம்.எம்.டி.ஏ ரூல்ஸ் என்ன ?

8. மர்மயோகியில் கஜோலாமே ? அஜய் தேவ்கன் ஒப்புவாரா ?

9. கமல் ஏன் இப்போதெல்லாம் தனது படங்களில் தனக்கு எஸ்.பி.பியைப் பாடவைப்பதில்லை (கடைசியாக அவ்வை ஷண்முகியில், மகாநதியில் ஒக்கே ஓக்க பாட்டு)

10. எப்டி இருந்த கார்த்திக் ஏன் இப்படி ஆயிட்டாரு ? (பார்க்க சென்ற வார விகடன் பேட்டி). போதை காரணமா இல்லை புள்ளி ராஜா விவகாரமா ?

Anonymous said...

இன்னும் சில:

இட்லி விலை குறைந்திருக்கிறதா இல்லை அளவு குறைந்திருக்கிறதா
இல்லை இரண்டுமா?

இட்லி வடை குழு உறுப்பினர் பாஸடன் பாலா சென்னை வந்தது
பற்றி இட்லிவடையில் ஏன் மூச்சே
இல்லை

Anonymous said...

ஏங்க இட்லி வடை,

உங்க பதிவை தினமும் படிக்கிறேன்,ரசிக்கிறேன்.
ஆனா இந்த ஜெயஸ்ரீ மேடம் மேல உங்களுக்கு என்ன காண்டு ????

உண்மைய சொல்லனும்னா வெறும் இட்லி வடை யா மட்டும் பாத்துட்டு இருந்த எனக்கு கலர் கலரா நெறையா சாப்பாட அறிமுகம் செஞ்சு வெச்சதே நீங்க தாங்க. நீங்க அடுப்படி மாமி னு கூப்பிட்டு அவங்களை கேள்வி கேட்டீங்களே, அப்போலேர்ந்து தான் அவங்க பதிவு படிக்க ஆரம்பிச்சேன்.

எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா .....
நீங்க அவங்களை எதாச்சும் சொல்ல அவங்க பதில் சொல்ல...இப்டி நீங்க நடத்துற இந்த tom-jerry கேம் படிக்கிற எங்களை சுவாரஸ்ய படுத்துறதுக்கு தானே தவிர....இணைய மறைவில் நீங்களும் ஜெயஸ்ரீ யும் செம friends... infact அவங்க இட்லி-வடையில் ஒரு உறுப்பினர் னு நான் நெனைக்குறேன்....
இதற்கு என்ன சொல்றீங்க?

இதை என் சொந்த பெயர் ல தான் அனுப்பனும் னு நெனச்சேன்....ஆனா அவங்க எனக்கு கொஞ்சம் பரிச்சயம்....என்னை தாளிச்சுடுவாங்களோன்னு பயந்து.....அனானி யா அனுப்புறேன்.

IdlyVadai said...

ஏங்க எவ்வளவு பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க ? இப்படியே போனால் கலைஞர், அழகிரின்னு எல்லோரையும் இட்லிவடை உறுப்பினரா சேர்த்துவிடுவீங்க போல :-)

Anonymous said...

அப்படின்னா இட்லி-வடை ல நாங்கல்லாம் தான் இருக்கோம் னு ஒரு பொது மன்னிப்பு கேட்டுட வேண்டியது தானே.....
ஒரு குரூப் போட்டோ போட்டால் இன்னும் உத்தமம்.

இப்படிக்கு,
நீங்கள் அப்பப்போ போடும் நமீ,ஷ்ரேயா stills க்கு பிறகும், உங்களுக்கு மிஞ்சி இருக்கும் பெண் வாசகிகளில் ஒருவர்.
பி.கு. கேள்வி கேட்ட அனானி யும் நானே.

IdlyVadai said...

//நீங்கள் அப்பப்போ போடும் நமீ,ஷ்ரேயா stills க்கு பிறகும், உங்களுக்கு மிஞ்சி இருக்கும் பெண் வாசகிகளில் ஒருவர்.
பி.கு. கேள்வி கேட்ட அனானி யும் நானே.//

உங்களுக்காக பிரியாமணி படம் சைடில் :-)

Anonymous said...

//அப்படின்னா இட்லி-வடை ல நாங்கல்லாம் தான் இருக்கோம் னு ஒரு பொது மன்னிப்பு கேட்டுட வேண்டியது தானே.....
ஒரு குரூப் போட்டோ போட்டால் இன்னும் உத்தமம்.//

இத skip பண்ணீட்டீங்க?
"குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா??"

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ???