பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 08, 2008

தங்கMay தங்கம்

என்னையே பார்க்காமல் கீழே படியுங்கள்...

அக்ஷய திரிதியையன்று நகை வாங்க வேண்டுமா? ( தட்ஸ் தமிழ் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)
அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அக்ஷய திரிதியை ஏழை எளியோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதே. அன்றைய தினம், பசித்தோர்க்கு உணவு படைத்தால் ஆயுள் அதிகரிக்கும். இயலாதோர்க்கு உடை கொடுத்தால் பதவி உயர்வு வரும் என்றெல்லாம் புராணங்களில் சொல்லியுருக்கிறது. தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது பின்னால் வந்த நம்பிக்கையாக இருக்கலாம்.
'அக்ஷய திரிதியை' தினத்தை நாம் 'நல்லுதவி தின'மாய் கொண்டாடலாம். இதற்கு 'மணிமேகலை தினம்' என்றும் பெயர் சூட்டலாம் ( கலைஞர் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு )
[ தட்ஸ் தமிழ் ]

இன்றைய தங்கத்தின் விலை

சென்னை
(22 காரட்)1089(1கி) 8712(8கி)
(24 காரட்)1175(1கி) 11755(10கி)

மும்பை
(22 காரட்)1062(1கி) 8496(8கி)
(24 காரட்)1158(1கி) 11584(10கி)

டெல்லி
(22 காரட்)1067(1கி) 8536(8கி)
(24 காரட்)1162(1கி) 11627(10கி)

தங்கம் ஜோக்ஸ்
"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது;


- * -
"பொண்ணு சுத்தத் தங்கம்'னு சொன்னது தப்பாப் போச்சு!"

"என்ன போச்சு!"

"பையன் 'கொஞ்சம் உரசிப் பார்க்கலாமா'ன்னு கோட்கிறான்!"

தங்கம் வாங்குவது பாவச்செயல்- பசுமைத் தாயகம்

படிக்க ( ஒரு வருடம் பழசு )

வெள்ளைத் தங்கம்

அத்தனையும் பிளாட்டினம்.. என்றுதானே நினத்திருந்தீர்கள்! அதுதான் இல்லை.. எல்லாமே சொக்கத் தங்கம்.. வெள்ளைத் தங்கம். அதில், தக்கனூண்டு சைஸ் முதல் மிளகு சைஸ் வரை பதிக்கப்பட்டு இருந்தவை.. முழுக்க முழுக்க வைரம்!

வெள்ளைத் தங்கம்- வைரம் காம்பினேஷன் நகையில், சென்னையை விடவும் மும்பையில் டிசைன்கள் வெரைட்டியாகக் கிடைக்கும் என்பதால், மும்பையின் பிரபலமான நகைக் கடையில் ஆர்டர் கொடுத்து தயாரிக்கப்பட்டதாம். டிசைன் தேர்வு.. ஜோதிகாதான்!


தங்கம் பற்றி புத்தகம்

உலோகங்களின் ராணி தங்கம். ஏழைகளைப் பணக்காரர்களாக்கவும் குப்பைமேட்டை கோபுரமாக்கவும் இந்த ராணியால் முடியும். தங்கம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? எப்படிக் கிடைக்கிறது? சுத்தமான தங்கம் என்றால் என்ன? தங்கம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது? ஒரு மோதிரம் செய்யக்கூடிய அளவு உள்ள தங்கத்தை எடுக்க, 20 டன் எடையுள்ள மண்ணை வெட்டியெடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? சரி. இப்படியே போனால், பூமியில் தங்கமே இல்லாமல் போகும் நிலை உருவாகுமா? கடலுக்கடியில் தங்கம் கிடைக்குமா? மினுமினுக்கும் மொழியில் தங்கத்தை அறிமுகம் செய்துவைக்கும் நூல் இது. ( கிழக்கு பதிப்பகம், விலை 25/=)
தங்கம் சினிமா
இந்த படத்தை பற்றி எழுதி உங்களை வெறுப்பேத்த விரும்பலை

அரசியல் தங்கம்
ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.( ராமர் சேது பற்றிய பழைய செய்தி )

புரட்சி என்ற அடைமொழியுடன் இயங்கும் தலைவர், தலைவிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டில் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆவேசமாக பேசியுள்ளார்

தங்கக் காசு மோசடி செய்தி
தங்க காசு மோசடி வழக்கில் இதுவரை 2 ஆயிரம் பேர் புகார் பிரபல நடிகர், நடிகை உள்பட 43 ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை போலீசார் முடிவு

தங்கம் பாடல்
தங்கம் பற்றி உடனே நினைவுக்கு வரும் பாடல் "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்"

பாடல் பற்றிய குறிப்பு:
புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு, “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” என்ற பாடலை மருதகாசி எழுதினார்.
( தினத்தந்தி சினிமா வரலாறு )


என்றுமே இவர் தான் 'சொக்கத் தங்கம்' :-)

4 Comments:

Anbezhilan said...

இந்த மொக்கையை போடுவதற்கா இத்தனை நாள் டைம் எடுத்துக்கொண்டீர்கள் ?

Anonymous said...

sema mokkai...
aana sneha vum jo vum romba azhaga irukanga:-)

Anonymous said...

வாளிப்பா ஸ்நேகாவை காட்டிவிட்டு என்னையே பார்க்காம மேல படிங்கனு சொன்னா எப்படி

ரொம்ப மோசமய்யா

R A J A said...

//என்றுமே இவர் தான் 'சொக்கத் தங்கம்' :-)//
ithu thaan idly vadai touch